தக்ஷிணாமூர்த்தி உள்ளே வரட்டும்

சர்மா ஒரு கிருஷ்ண பக்தர். தினமும் அருகே இருந்த கிருஷ்ணன் கோவிலில் தான் நாள் முழுதும் பாடிக்கொண்டும் பஜனை செய்துகொண்டும் காலம் கழிப்பவர்.மனைவி பெயரில் சாந்தா, குணத்தில் பத்ர காளி. எப்போதும் அவளது ஒரே வேலை கணவர் சர்மாவை துன்புறுத்துவது. ”ஒன்றுக்கும் லாயக்கில்லை. ஒரு பைசா சம்பாதிக்க யோக்யதை இல்லை”’அவர்கள் மகள் ரூபா அப்பாவைபோல் சாந்தமாக இருப்பவள்.எப்போதும் புன்னகையோடு இருப்பவள். அவர்கள் வசித்த வீடு ஒரு சிறியஓட்டுவீடு என்றாலும் சுற்றி நிறைய பூஞ்செடி கொடிகள் ரம்யமாகவளர்த்தார்கள்.அமர ஒரு மர பெஞ்ச் போட்டிருந்ததால் தெருவில் வருவோர் போவோர் கூட சற்று நேரம் அங்கு அமர்ந்து போவார்கள். *

 நாள் மாலை அந்த பெஞ்சில் 3 வயதான வழிப்போக்கார்கள்அமர்ந்திருந்தார்கள். ரூபா அவர்களைப்பார்த்து ”உங்களைப்பார்த்தால் ரொம்பகளைப்போடு இருக்கிறீர்களே. உள்ளே வந்து கொஞ்சம் நீர் மோர்சாப்பிடுகிறீர்களா என்று கேட்டாள்.*”வீட்டில் பெரியவர்கள் யாருமில்லையா”.*”அப்பா கோவிலுக்கு போயிருக்கிறார். வரும் நேரம் தான்.”*அவர் வரட்டும்”**சர்மா வரும்போது அவர்களை பார்த்தார். யார் யாரோ வந்து போகிறார்களே என்பதால் கவனிக்கவில்லை. அவர் எண்ணம் முழுதும் ஸ்ரீ கிருஷ்ண சிந்தனை

ரூபா தன் அப்பாவிடம் அந்த மூவரும்  உங்களுக்காக காத்திருப்பதாக சொன்னதும் ”அவர்களை உள்ளே  கூப்பிடேன்” என்றார் சர்மா.*ரூபா அவர்களை உள்ளே அழைத்தபோது ஒருவர் பதில் சொன்னார்.”குழந்தே…..நாங்கள்மூவரும் ஒன்றாக உள்ளே வரமுடியாது. யாராவது ஒருவர் தான் எங்குமேவீட்டுக்குள் செல்வோம்”*

 *”ஆச்சர்யம். யார் நீங்கள்?”* *”என்பெயர் குபேரன் ,நான் யார் வீட்டுக்குள்ளாவது வந்தால் பணம்கொட்டும்” *நடுவில் இருப்பவர் பிரம்மன் இவர் வந்தால் அங்கு கல்வி மேம்படும்.*அதோ அவர் தான் தக்ஷிணாமூர்த்தி. இவர் நுழைந்த வீட்டில் அன்பும்பாசமும் கொப்புளிக்கும். **யார் வரவேண்டும் என்று உள்ளே போய் கேட்டுக்கொண்டுவா”*சாந்தா ”குபேரனைக் கூப்பிடு இப்போதே. நமக்கு தான் இங்கு உன் அப்பாவின் கைங்கர்யத்தால் வறட்சியாக இருக்கிறதே என்றாள் அம்மா .*’பாப்பா  ரூபா அந்த பிரம்மனையே கூப்பிடுவோம் இங்கு சரஸ்வதியின் கல்வி  கடாக்ஷம் நிரம்பட்டும்” என்றாள்.ரூபா ” எனக்கென்னவோ இந்த வீட்டில் அன்பும் பாசமும் தான் துளியும்இல்லையே . தக்ஷினாமுர்தியே உள்ளே வரட்டும் என்று தோன்றுகிறது.” என்றார் ஸ்ரீ கிருஷ்ண பக்தர் சர்மா.நிறைய பேசினார்கள்… கடைசியில்  ஜெயித்தார் சர்மா . பாப்பா ரூபா வெளியே வந்து ”தக்ஷிணாமூர்த்தி உள்ளே வரட்டும் ” என்றாள் . மற்றஇருவரும் கூடவே எழுந்தார்கள்.*

ஆச்சர்யமாக பார்த்த ரூபாவிடம் மற்ற இருவரும் ஸ்ரீ கிருஷ்ண பக்தனுக்காக நாங்கள் எங்கே  பரந்தாமன் குணங்களான  அன்பும் பாசமும், பரிவும் நிரம்பி இருக்கிறதோ அங்கு நாங்களும் கூடவே இருப்போம் என்று சொல்லி அவர்களும் வீட்டில் நுழைந்தார்கள்

Leave a comment