உழைப்பு உயர்வு தரும்

ஜார்ஜ் ஸ்டீபன்சன் என்றதும் நினைவுக்கு வருவது அவர் கண்டுபிடித்த புகைவண்டி தான்.  அதற்கு பின்னால் துன்ப அனுபவங்கள் பல உண்டு.  வறுமையில் வாடியதான் ஸ்டீபன்சன் ஆடு மாடுகளை மேய்க்கச் சென்றுவிட்டார்.  அதில் வரும் பணத்தைக் கொண்டு இரவு நேரப் பள்ளியில் படித்தார்.  அறிவியல் பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.

செருப்பு தைக்க கற்ற அவர் அதில் கிடைத்த வருமானத்தில் சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செய்து கொண்டார். பின்னர் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் பணிக்கு சேர்ந்து யாருமே செய்ய முடியாத பழுதான இயந்திரத்தை சரிசெய்தார்.  அதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.  அவருக்கு பெருந்தொகை ஒன்றை நிர்வாகம் கொடுத்தது.  அதைக் கொண்டு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  லட்சியத்துடன் பாடுபட்ட ஸ்டீபன்சன் புகைவண்டி என்ஜினைக் கண்டுபிடித்தார்.  உண்மை நேர்மை உழைப்பு கொண்ட மனிதர்களை ஆண்டவர் ஒரு போதும் கைவிடுவதில்லை.

Leave a comment