ஸந்த் ஏக நாதரின்அமுத மொழிகள்

1. நாமத்தின் சுகத்தை அனுபவிக்க பகவான் வைகுண்டத்தை‌  விட்டு மஹாலட்சுமி சகிதம் ஸந்த்கள் கூட்டத்தில் நித்யமாக வசிக்கிறான்

2.பல பூர்வ ஜென்ம சூக்ருதம் இருப்பவர்கள் மட்டுமே நாமத்தின் ருசியை அறிந்து அதில் லயிப்பர

3.ஹரி‌ நாமத்தை ஸ்மரிக்கும் அடியவரின் திருவடியே ஹரி ப்ராப்திக்கு வழி வகுக்கும் சத்தியமான சாதனம் ஆகும்

4.கோபியர்கள் பானையை தலையில் வைத்து தயிர் என்று விற்பதற்கு பதில் தாமோதர என்று தன் வசம் இழந்து விற்க ஆரம்பித்தனர் ஹரியும் நாமத்திற்கு வசப்பட்டு பானையில் வந்து அமர்ந்து கொண்டான்

5.ஹரி‌ நாமத்தை ஸம்ரிப்பவன் வீட்டில் ஹரி நித்ய வாசம் செய்கிறான் ஹரியின் காதை பிடித்து வெளியே விரட்டினாலும் அவன் செல்ல மாட்டான் நாம விசயதத்தில் அவன் மான அவமானம் பார்பது இல்லை

6.கொடுமையான பாவசாகரத்தை கடக்க ஹரி நாமம் ஒன்றே போதுமானது

7.பிரகலாதன்‌ துருவன் சுகர் அஜாமிளன் தத்தர் போன்றோர் ஹரி ‌நாமத்தால் ஹரியுடையவராகி விட்டார்கள்

8.மொட்டை போடுதல் தீர்த்த யாத்திரை செல்லல் பஞ்சாக்கினி சாதனை போன்றவை தேவையற்றது தினமும் வாசுதேவ என்று கூறினால் போதும்

9.நூறு வயது என்பது எல்லாம் பேச்சு வழக்கே நர தேகம் என்பது அதிசியத்திலும் அதிசியமாக கிடைப்பது இதில் தினமும் மது சூதனா என்று சொல்லி காலத்தை கடத்துங்கள் இறப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்

10. இந்த உலகில் ஹரியை அடைவதற்கு நாம சாதனத்தை தவிர வேறு எந்த சாதனையும் தேவை அற்றது

11. ஹரியே அனைவரையும் மயக்க வல்லவன் ஆனால் அந்த ஹரியை மயக்க அவன் நாமமே நமக்கு சாதனம்

12. யம பூத பிரேத பிசாசு ‌ அனைத்தும் ஹரி நாமம் ஸ்மரிக்கும் ‌இடத்தின்‌ திசையை கூட பார்க்க அஞ்சி நடுங்கும்

13. ஹரி நாம ச்ரவணத்தால் பரீட்சித்தும் ‌ஸ்மரணத்தால் பிரகலாதனும் கீர்த்தனத்தால் நாரதரும் அடைந்த நிலையை யாரால் எட்ட இயலும்

14. வாக்கில் ராம கிருஷ்ண என்ற நாமம் இருக்க இந்த சம்சார சாகரத்தை ஒரு நொடியில் வற்ற ‌விடுவேன்

15. காலையில் எழுந்ததும் ராம என்று சொல்லுபவன் பின்னே ராமனும் லட்சுமணனும் வில்லேந்தி அவன் பின்னால் காவாளி போல் திரிகின்றனர்

நாமமே பலம் நாமமே சாதனம்

ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி.  

Leave a comment