சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோயில்

மதுரையிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள குருவித்துறை என்ற இடத்தில் அமைந்துள்ளது குரு பகவானின் சிறப்பு பெற்ற தலம் சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோயில்.

கோயில் சுவாமிகளின் தகவல்:

கோயிலின் பெயர்: சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோயில் மூலவர் – சித்திர ரத வல்லப பெருமாள் அம்மன் / தாயார் – செண்பக வல்லி

.

திருவிழா:

குரு பெயர்ச்சி, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் முக்கியமானவை.

கோயிலின் சிறப்பு:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில், சோழவந்தானுக்கு அருகில் இருக்கிறது குருவித் துறை. குரு, தன் மகன் கசனுக்காக நாராயணனை நோக்கி தவம் செய்த இடம் தான் இது. நாராயணப் பெருமாள்  சித்திர ரத வல்லப பெருமாளாக, குரு பகவானின் பிரச்னையைத் தீர்த்தருளி அவருக்குப் பிரத்தியேகமாகக் காட்சி தந்தார். இதனால், இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்கென்று தனிக் கோயில் இருக்கிறது. அருகிலிருக்கும் வைகை நதியில் நீராடி, சித்திர ரத வல்லப பெருமாளுக்குப் பொங்கலிட்டு வழிபட்டு; குருபகவானை தரிசித்தால், அனைத்து பாவங்களும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. குருப்பெயர்ச்சியின் போது சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் இங்கு குருபகவானுக்கு நடைபெறுகின்றன. இந்த யாகத்தில் கலந்துகொண்டு குரு பகவானை வணங்கினால், தொழில் சிறக்கும்

அத்தி வரதர் எப்படி மரத்தால் செய்யப்பட்ட சிறப்பு பெற்றுள்ளாரோ, அதே போல் இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் சந்தன மரசிலையால் ஆன மூர்த்தியாக திகழ்கின்றார். குருவுக்கு உகந்த திருத்தலமாகத் திகழ்கின்றது.

Leave a comment