அக்ராஹ்யாய நமஹ

அம்மா* ! ! *அந்த தாத்தாவிடம் போய் சண்டை போடு* !” *என்ற மாயக்கண்ணன்* கண்வ மகரிஷி, யசோதையின் தந்தையா ன சுமுகரின் இல்லப் புரோகிதர் ஆவார். அவர் தினமும் சாளக்கிராம வடிவிலுள்ள திருமாலுக்குப் பக்தியுடன் பூஜை செய்து வந்தார். தான் எந்த பொருளை உண்டாலும், அதை முதலில் சாளக்கிராமப் பெருமாளுக்கு அர்ப்பணித்தப் பிறகே தான் உண்பார்.  

நந்தகோபர் கண்வரிடம், “அடியேனுக்கு ஓர் அழகான ஆண்குழந்தை பிறந்திருக்கி றது. நீங்கள் வந்து அக்குழந்தையைப் பார் த்து ஆசீர்வதிக்க வேண்டும்!” என்று நெடு நாட்களாக பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.  கண்ணன் பிறந்து மூன்று ஆண்டுகள் நிறை வடைந்த நிலையில் ஒருநாள் கண்வர் கோகுலத்துக்கு வந்தார். தான் பூஜிக்கும் சாளக்கிராமத்தை நந்தகோபரின் மாட்டுக் கொட்டகையில் வைத்தார். ஏனெனில் மாட்டுக் கொட்டகையில் ஒரு மந்திரத்தை ஒருமுறை சொன்னால், நூறு முறை சொன்னதற்குச் சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அங்கேயே அவர் பெருமாளுக்கு நிவேதனம் செய்ய வேண் டிய உணவுகளைத் தயாரிக்கவும் யசோதை ஏற்பாடு செய்து தந்தாள். காய்கறிகள், விறகு முதலானவற்றை ரோ கிணி தயார் நிலையில் வைத்திருந்தாள்.கண்வர் நீராடிவிட்டுப் பூஜையைத் தொடங்கினார். அவர் பூஜை செய்யும் முறையை நந்தகோபர், யசோதை, பலராமன், கண் ணன் ஆகியோர் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.பெருமாளுக்குப் பிரசாத நிவேதனம் செய்ய வேண்டிய நேரம் வந்தபோது, மற்றவர் களை அவ்விடத்தை விட்டு நகரச் சொல்லி விட்டுப் பிரசாதத்தைச் சாளக்கிராமப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தார். 

பக்திப் பரவசத்தில் கண்வர் ஆழ்ந்திருந்த போது, குழந்தை கிருஷ்ணன் இவர் சமர்ப் பித்த பிரசாதத்தை எல்லாம் உண்டுவிட்டான். கண்விழித்த கண்வர், “என்ன இது அநியாயம்?” என்று கத்தினார். ஓசையை கேட்டுப் பதறிப்போய் நந்தகோபனும் யசோதையும் ஓடி வந்தார்கள். நடந்ததைக் கேள்வியுற்றுக் கண்வரின் திருவடிகளில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரினார்கள். மீண்டும் புதிதாக உணவு தயாரிப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தாள் ரோகிணி.

களைத்துப் போயிருந்தாலும் கண்வர் மீண்டும் உணவு தயாரித்தார். யசோதை கண்ணனை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டாள். மீண்டும் சாளக்கிராமப் பெருமாளுக்கு உணவைச் சமர்ப்பித்தார் கண்வர். பக்திப் பரவசத்தில் மூழ்கிய அவர் கண் விழித்துப் பார்த்தார். “ஐயோ!” என்று கத்தினார். யசோதையும் நந்தகோபரும் ஓடி வந்து பார்த்தார்கள். மீண்டும் கண்ணபிரான் அங்கிருக்கும் பிரசாதத்தை உண்டு கொண்டிருந்தான். 

கடும் கோபம் கொண்ட யசோதை, “கண்ணா! இனியும் என்னால் பொறுமை காக்க முடியாது. உன்னை அடிக்க வேண்டாம் என்று விட்டால், இவ்வளவு தீம்புகள் செய்கிறாயே! எப்படி அறையை விட்டு வெளியே வந்தாய்? பதில் சொல்!” என்றாள்.“என்னைத் திட்டாதே அம்மா! அந்த தாத்தா தான் சில மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி என்னை வாவா என்று அழைக்கிறார். அதனால்தான் நான் வந்தேன்! அந்த தாத்தாவிடம் போய் சண்டை போடு!” என்றான் கண்ணன். 

தன் வாயிலிருந்த பாயசத்தைக் கண்வரின் முகத்தில் உமிழ்ந்தான். அடுத்த நொடியே கண்ணன் யார் என்பதைக் கண்வர் உணர்ந்தார். தான் சாளக்கிராம வடிவில் ஆராதிக்கும் திருமால் வேறல்ல, கண்ணன் வேறல்ல என்று புரிந்துகொண்டார். பேரானந்தத்தில் மூழ்கிய அவர் “அக்ரா ஹ்யாய நமஹ” என்று கண்ணனைத் துதி த்தார். ‘அக்ராஹ்யன்’ என்றால் சிந்தைக்கு எட்டாதவன் என்று பொருள்.கண்வர் பெரிய ரிஷியாக இருந்த போதும், அவராலும் கூடக் கண்ணனை இன்னார் என்று அறிந்துகொள்ள இயலவில்லை. கண்ணன் மனமுவந்து தானே உணர்த்திய பின்னர்தான் அவனை திருமால் என்று கண்வர் உணர்ந்தார். 

எனவே அவன் மனம் வைத்தாலன்றி அவனைச் சிந்தையால் அறியவே முடியாது. அதனால் தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் அவனை ‘அக்ராஹ்ய:’ என்றழைக்கிறது. “அக்ராஹ்யாய நமஹ” என்ற 56-வது திரு நாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், எட்டாத பொருட்களும் நமக்கு எட்டும்படி எட்டெழுத்தின் நாயகனான எம்பெருமான் அருள்புரிவான்.

Leave a comment