நற்பண்பு

ஒரு விருந்தினர் நண்பராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிக்க வேண்டும்

ஓர் எதிரியை வீட்டிற்கு வரவேற்பதென்றாலும் அதை மரியாதையுடன் செய்யவேண்டுமென்பது வேதக் கட்டளையாகும். எதிரியின் வீட்டிலிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் அவரை நன்கு உபசரிக்க வேண்டும்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுடனும், பீமனுடனும் மகத ராஜனான ஜராசந்தனை அணுகியபோது, மதிப்பிற்குரிய எதிரிகளை ஜராசந்தன் ராஜ மரியாதையுடன் வரவேற்றான்.

எதிரி விருந்தினராக இருந்த பீமன் ஜராசந்தனுடன் சண்டை செய்வதாக இருந்தது. இருப்பினும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இரவில் அவர்கள் நண்பர்களைப் போலவும், விருந்தினர்களைப் போலவும் ஒன்றாக அமர்ந்திருப்பது வழக்கம். பகலிலோ வாழ்வா, சாவா என்ற ஆபத்தான சூழ்நிலையுடன் அவர்கள் போர் செய்தனர்.அதுதான் உபசரணை விதியாகும். ஒருவன் பரம ஏழையாக இருந்தாலும், குறைந்தது ஒரு புல்லா(சிறிய )சனம், குடிப்பதற்கு சிறிது நீர் மற்றும் இனிய வார்த்தைகள் ஆகியவற்றையாவது தன் விருந்தினருக்கு அளிக்க வேண்டும் என்பது உபசரணை விதி.

எனவே ஒரு விருந்தினர் நண்பராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்த செலவும் இல்லை. நற்பண்புதான் இதற்குத் தேவை.

Leave a comment