நவவித பக்தி

சிரவணம்* , *கீர்த்தனம்* .. *ஸ்மரணம்* , *பாத சேவை* *என நவவித பக்தி

1.இறைவனின் பெருமைகளைக் காதால் இடை விடாமல் கேட்பது “சிரவணம்”;சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து தாபங்கள் தீர்ந்தான் பாகவதம் கேட்டு!

2.இறைவனின் பெருமைகளை வாயால் இடை விடாமல் பாடுவது “கீர்த்தனம்”;சடகோகர் பாடிய பாடலால்சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லோரும் விஷ்ணு முதல் கொண்டு

3.நாவால் சப்தமாக இறை நாமத்தை மனனம் செய்வதை “ஸ்மரணம்” என்பார்; எத்தனை துன்பங்கள், இடர்கள் வந்தபோதும் பக்த பிரஹலாதன் மறக்கவில்லை ஹரியை.

4.குறையாத பக்தியுடன் இறை பாதங்களுக்கு நிறைய சேவை செய்வதே “பாத சேவை”;பாத சேவை செய்யும் மகத்தானதொரு பாக்கியம் பெற்றவள் லக்ஷ்மி தேவியே.

5.மாசற்ற மனத்துடன் மலர்களைக் கொண்டு ஈசனுக்கு பூஜை செய்வதே “அர்ச்சனை”;பிருது மகாராஜா அர்ச்சனை செய்தவர்களில்பிரசித்தி வாய்ந்து, இறை அருள் பெற்றவர்.

6.எட்டு அங்கங்களும் நன்கு நிலத்தில் படும்படி எண் குணத்தானை வணங்குவது “வந்தனம்” ;கண்ணனை வணங்கித் தனிப் பெருமையைகண் கூடாகப் பெற்றவர் பக்த அக்ரூரர்.

7.தாசானு தாசனாகத் தன்னையே எண்ணி,நேசத்துடன் தொண்டுகள் புரிவது “தாஸ்யம்”;“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதில்அனுமனை யாரால் மிஞ்சிவிட முடியும்?

8.பகவானை நண்பணாக எண்ணிக்கொண்டுஇறைவனிடம் நட்புக் கொள்ளுவது “சக்யம்”; உண்டு , உறங்கி, பேசிப் பழகிய அர்ஜுனன் கண்ணனிடம் கொண்ட பக்தியே சக்யம்.

9.தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும்தயங்காமல் அர்ப்பணிப்பது “ஆத்மநிவேதனம்”;அனைத்தையும் அளித்ததால் அழியாப் புகழ்அரசன் மகாபலி செய்த ஆத்ம நிவேதனத்துக்கு!

வாழ்க வையகம்    வாழ்க வையகம்  வாழ்க வளமுடன்

Leave a comment