தாய் தந்தையரின் முக்கிய கடமை

உண்மையான தாய் தந்தையரின் முக்கிய கடமை தங்களது குழந்தைகளை மீண்டும்..மீண்டும் பிறக்காமல் செய்வதாகும்…..விளக்கும் எளிய கதை*  தாயின் பணி தந்தையை சுட்டிக்காட்டுதல். தந்தையின் பணி குருவை சுட்டிக்காட்டுதல் .குருவின் பணி தெய்வத்தை சுட்டிக்காட்டுதல் என்ற பொருளிலும் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தாயின் கடமை குழந்தையை பெற்றெடுத்து பால் கொடுப்பது மட்டுமல்ல .அந்த குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவும் பொருட்டு அவனது தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்து தந்தையிடம் அக்குழந்தையை ஒப்படைப்பது ஆகும்.

அது போல தந்தையானவர் தனது மகனுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொடுத்து காலப்போக்கில் ஒரு திறன் வாய்ந்த குருவிடம் தனது மகனை ஒப்படைக்கிறார்.

அந்த குருவானவர் ஆன்மீக ஞானத்தின் வாயிலாக தெய்வத்தை அடைவதற்கான பாதையை தனது சீடனுக்கு அறிவுறுத்துகிறார். இதுவே மாதா பிதா குரு தெய்வம் இதன் விளக்கமாகும்.. இதை ஏறுமுகமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்

உண்மையான தாய் தந்தையரின் முக்கிய கடமை தங்களது குழந்தைகளை மீண்டும் பிறக்காமல் செய்வதாகும்..

அதாவது தனது குழந்தையின் வடிவில் உலகில் பிறந்துள்ள ஜீவன் மீண்டும் இந்த உலகில் பிறவி எடுக்காமல் இருப்பதற்கு என்னென்ன உதவிகளைச் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்ய வேண்டியது தாய் தந்தையரின் தலையாய கடமை.

குழந்தைகளுக்கு அளவிற்கு அதிகமாக செல்லம் கொடுத்து உலக வாழ்வில் அவர்களை புகுத்தி .ஆன்மீக பாடங்களை கற்றுக் கொடுக்காமல். சாதாரண மிருகங்களைப் போல உணவு உறக்கம் பாலுறவு தற்காப்பு போன்றவற்றை மட்டும் பயிற்றுவிப்பாளராக பெற்றோர்கள் இருக்கக்கூடாது…

நாம் குரு என்று பார்த்தோமானால் ஆன்மீகக் கல்வியை வழங்கும் ஆன்மீக குருவை குறிக்கிறது .பெற்றோர்கள் எவ்வாறு குழந்தைகள் மறு பிறவி எடுக்காமல் தடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமோ. அதே போன்ற பொறுப்பும் கடமையும் குருவிற்கு உள்ளது.

அதாவது தாயைக் காட்டிலும் தந்தைக்கு பொறுப்பு அதிகம். தந்தையைக் காட்டிலும் குருவுக்கு பொறுப்பு அதிகம். அனைவரை காட்டிலும் கடவுள் மிகுந்த அன்புடன் உள்ளார்.

யாரொருவர் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைகிறாரோ அவர் தனது தாய் தந்தைக்கு உரிய மரியாதை கொடுத்தார் என்பதாகும்.

Leave a comment