நமாமி குருமூர்த்திம் 

குருவுக்கு தெரியும் எதை,  எப்பொழுது,  யாரிடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று.கேட்டு கிடைப்பதை விட அவராகவே அருள்வதை  ஆஸ்ரயிப்பதே  தலைசிறந்தது.நமக்கு  எதையும்  கேட்கும் சாமர்த்தியமோ  புத்தி ஷக்தியோ  கிடையாது. ஒரு  சிஷ்யனுடைய  பக்குவ  நிலைக்கேற்ப பரதேவதையானவள் மனித ருபம் தரித்து, குரு வடிவத்தில் வந்து, அவனை ஆட்கொண்டு அவனுடைய  பக்குவ நிலைக்கு ஏற்ற உபதேஸங்களை அனுக்கிரஹம்  செய்வாள்.குரு  அனுகிரஹித்ததை சிரம்மேற்கொண்டு கடைபிடித்தாலே போதும் ஒருவன்  கரையேறிவிடுவான்.

குருவானவர், சிஷ்யனை பார்த்து  ‘ பூஜை / ஜபம் ஆகிடுத்தா ” என்று  கேட்டாலே போதும், அந்த க்ஷணமே அவனுக்கு  ( சிஷ்யனுக்கு ) பூரணமான   பூஜா பலனும்,  ஜபத்தால்  அடையும்  பலன்களும்  வந்து  சேர்ந்துவிடும் !!! அப்படி இருக்க, அந்த கருணாமூர்த்தியிடம், இதை கொடு  அதை கொடு என்று வியாபாரம் பேசுவது சரியன்று.  *எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்*

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

Leave a comment