பஞ்ச அரங்க தலங்கள்!

 

 பஞ்ச அரங்க தலங்கள்!*

1.*ஆதிரங்கம்*ஸ்ரீரங்கபட்டினம்

2.*மத்தியரங்கம்*ஸ்ரீரங்கம்

3.*அப்பாலரங்கம்*திருப்பேர்நகர் (கோயிலடி

4.*சதுர்த்தரங்கம்*கும்பகோணம்

5.*பஞ்சரங்கம்*திருஇந்தலூர்

1*ஆதிரங்கம்*

ஶ்ரீரங்கபட்டினத்தில் காவிரி நதி இரண்டாக பிரிந்து கோயிலுடன் மீண்டும் ஒன்று சேர்கிறது. இங்குள்ள ரங்கநாதஸ்வாமி கோயிலே ஆதிரங்கம்!சப்தரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்கு தவமிருந்து எம்பெருமானை, புஜங்க சயன திருக்கோலத்தில் காணும் பாக்யம் பெற்றார். முனிவரின் வேண்டுதலின்படி, அதே திருக்கோலத்தில் இங்கு அனைவருக்கும் ஸேவை சாதிக்கிறார்

2.*மத்தியரங்கம்*

காவிரி நதி இரண்டாகப் பிரிந்து, மீண்டும் ஒன்று சேரும் ஶ்ரீரங்கம் *மத்தியரங்கம்!* என்றும் *அந்தரங்கம்* என்றும் அழைப்பதுண்டு! 108ல் முதல் திவ்யதேசமான இங்கே பெரியபெருமாள் புஜங்கசயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கி ஸேவை சாதிக்கிறார்! மதுரகவியை தவிர அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்த ஒரே திவ்யதேசம் இதுவாகும்!

3. *அப்பாலரங்கம்*

இது கொள்ளிடம் இரண்டாகப் பிரியும் இடத்தில் *இந்திரகிரி* என்றழைக்கப்படும் சிறு குன்றின் மேலே அமைந்துள்ளது! உபமன்யுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தைப் பெற்றதால், இத்தல எம்பெருமானுக்கு *அப்பக்குடத்தான்* என்று பெயர்!இங்கு பெருமாள் புஜங்கசயன திருக்கோலத்தில் மேற்கு நோக்கி ஸேவை சாதிக்கிறார்! பெருமாள் இங்கு, இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேய மஹரிஷிக்கு எமபயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபவிமோசனமும் அளித்த தலமாகும்! நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்த தலம்!

4. *சதுர்த்தரங்கம்*

காவிரி- காவிரி, அரசலாறு என்று இரண்டாக பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடமான கும்பகோணம் *சதுர்த்தரங்கம்* ஆகும்!இங்கு பெருமாள் சங்கு, சக்கரம் மற்றும் சார்ங்கம் என்னும் வில் ஏந்தியவாறு கிழக்கு நோக்கி *உத்தான சயனத் திருக்கோலத்தில் ஸேவை சாதிக்கிறார்! எனவே இவருக்கு *சார்ங்கபாணி* என்ற திருநாமம்! ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்த தலம்!

5. *பஞ்சரங்கம்*

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தலூர் திருத்தலம், *பஞ்சரங்கம்* என்றும் *அந்தரங்கம்* என்றும் போற்றப்படுகிறது!இத்தலத்தில் அருளும் *பரிமளரங்கநாதர்* ஆதிசேஷன் மீது சதுர்புஜங்களுடன் கிழக்கு நோக்கி *வீரசயனத்* திருக்கோலத்தில் ஸேவை சாதிக்கிறார்! கோயிலின் இருபுறங்களிலும் ஶ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது விசேஷமாகும்!பரிமளரங்கநாதர் திருவடிகளில் எமதர்மராஜனும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து பூஜித்து வருவதாக ஐதீகம்! *சந்திரன், இங்குள்ள சந்திரபுஷ்கரணியில் நீராடி சாபம் நீங்கப் பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர்* எனப்பெயர் பெற்றது!

Leave a comment