சமுதாயம் பயன் பெறட்டும்

தத்துவ ஞானி ஒருவர் தன்னிடம் சீடராக சேர்பவர்களுக்கு சோதனை வைப்பார்.  தெளிந்த நீரைக் காட்டி தண்ணீருக்குள் என்ன தெரிகிறது சொல் எனக் கேட்பார்.  அவர்களின் பதிலைப் பொறுத்து முடிவெடுப்பார்.

இதை பல முறை கவனித்த மூத்தசீடன் ஒருவன் புதியவர்காலிடம் ஏன் இப்படி கேட்கிறீர்கள்  என்றான். என் கேள்விக்கு இரண்டு விதமான பதில் சொல்வார்கள் என் உருவம் நீரில் தெளிவாக தெரிகிறது  என்பார்கள்.  சிலர் மட்டுமே நீருக்குள் மீன்கள் நீந்துகின்றன. அடியில் செடிகள் முளைத்துள்ளன என்பார்கள்.  முதல் தரப்பினர் தங்களை மட்டுமே சிந்திப்பவர்கள்.  இவர்களிடம் பொது நல எண்ணம் குறைவாகவே இருக்கும்.  சமுதாயத்திற்கு பயன் பட மாட்டார்கள்.  தன்னை தவிர மற்றப் பொருட்களை கவனிப்பவர்களை சீடர்களாக ஏற்கிறேன்.   ஏனெனில் அவர்களால் சமுதாயம் பயன் பெறும் என்றார்.  அவனவன் தனக்கானதை அல்ல பிறருக்கானதையும் நோக்குவானாக என்கிறது பைபிள்.

Leave a comment