மனதை  அடக்க வழியிருக்கு

 காஞ்சி மடத்தில் மகாபெரியவரின் முன்னிலையில் பக்தர்கள் கூடியிருந்தனர்.  அதில் ஒருவர் சுவாமி எத்தனையோ முயற்சி செய்து விட்டேன் மனதை கட்டுப்படுத்த முடியவில்லையே என்றார்.  இந்த பாரத புண்ணிய பூமியில் ஞானிகள் பலர் வாழ்ந்து காட்டி தங்களின் அனுபவத்தை நமக்காக சொல்லியிருக்கிறார்கள். 

 இந்திரிய நிக்கிரகம் ஒன்றே மனதை அடக்கும்  வழி என்பது அவர்களின் முடிவு.  புலன் அடக்கம் என்பது இதன் பொருள்.

 உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து

என திருவள்ளுவரும் புலனடக்கம் பற்றி திருக்குறளில் கூறியுள்ளார். ஐம்புலன்கள் என்னும் யானைகளை அரிவு என்னும் அங்குசத்தால் மனதை அடக்கியவன் வானுலக வாழ்விற்கு விதை போன்றவன்.   மெய் வாய் கண் மூக்கு செவி என ஐம்புலன்களை வரிசைப்படுத்துவர்.  இவற்றை அடக்கினால் மனம் அடங்கும்.  அது சரி… இவற்றில் எதை முதலில் அடக்க வேண்டும். எனக் கேட்டால் வாயைத்தான்.

வாய்க்குத் தால் வேலை அதிகம்.  கண்ணுக்கும்  காதுக்கும் பார்ப்பது கேட்பது என்று ஒவ்வொரு வேலைதான்.  ஆனால் மூக்கிற்கு சுவாசிப்பது வாசனையை நுகர்வது என் இரண்டு வேலைகள் வாய்க்கோ சாப்பிடுவது பேசுவது என இரண்டு வேலைகள் கண் காதுகளை பொறுத்தவரை வலது இடது என இரண்டு கருவிகள் உள்ளன மூக்கு வாய் என்பது ஒன்று மட்டுமே  வாயை கட்டுப்படுத்துவதற்காக சிலர் மவுன விரதம் மேற்கொள்வர். பேசாமல் இருந்தால் மனம் மெல்ல மெல்ல அடங்கும்.  சாப்பிடுவது பேசுவது என இரண்டையும் பாதியாகக் குறைக்கப் பழக வேண்டும்.  ஆனால் நாம் நேர்மாறாக தேவைக்கு அதிகமாக வாய்க்கு வேலை கொடுக்கிறோம்.  எப்போதும் வீணாக பேசிக்கொண்டே இருக்கிறோம்.  மனதைக் கட்டுப்படுத்த  வேண்டுமானால் முதலில் வாயைக்கட்ட வேண்டும்  நாளடைவில் தானாக மனம் அடங்கும் என்றார்.  கேட்டவருக்கு  மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் மகாபெரியவரின் விளக்கம் கேட்டு பயனடைந்தனர்.

Leave a comment