இயல்வது கரவேல்

மஞ்சூர் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்த சிறு கிராமம். பள்ளி வசதி கிடையாது.  சிறுவர் சிறுமியர் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு காட்டு வழியில் நடந்து சென்று படித்தனர்.  அன்று கிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடந்தது.  வேடிக்கை பார்க்க குவிந்தனர் மக்கள். புத்தக பையுடன் முனியனும் கருப்பனும் பள்ளிக்குப் புறப்பட்டனர். வழியில் படப்பிடிப்பை சிறிது நேரம் வேடிக்கை பார்த்தனர். நடிகைக்காக விதவிதமான ஐஸ்கிரீம் வாங்கி வைத்திருந்தது படக்குழு. மலை பிரதேசத்தில் குளிர் அதிகமாக இருந்தது. எனவே அவற்றை நிராகரித்து விட்டார் நடிகை.  வாங்கியிருந்தவற்றை பாதுகாக்க படக்குழுவுக்கு போதிய வசதி இல்லை. எனவே வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு ஐஸ்கிரீமை பகிர்ந்து கொடுத்தனர்.  அடித்துப் பிடித்து பலரும் வாங்கினர்.

முனியன் கையிலும் ஒன்று கிடைத்தது.  புத்தகப்பையில் போட்டுக்கொண்டான். நெரமாகவெ பள்ளிக்குப் புறப்பட்டான்.  பங்கு தரும்படி உடன் வந்த கருப்பன் வழி நெடுக கெஞ்சினான்.  தர மாட்டேன் வேண்டுமானால் படப்பிடிப்பு குழுவிடன் போய் வாங்கிக்கொள்………பிடிவாதமாக மருத்துவிட்டான் முனியன்  கருப்பனுக்கு ஏமாற்றம் தந்தது.  முனியன் மனம் இரங்காதா என பரிதாபமாக பின்னால் சென்றான்.  பள்ளியை அடைந்தனர்.  முதுகில் ஈரம் படுவதை உணர்ந்தான் முனியன்.  உடனே புத்தகப்பையை திறந்தான்.  புதிதாக வாங்கிய புத்தகங்கள் நனைந்து கிழிந்து கிடந்தன.  அதன் மத்தியில் சினிமாக்குழு தந்த ஐஸ்கிரீம் அட்டைப்பெட்டி நசுங்கி கிடந்தது.  கசங்கிய பெட்டியில் ஒன்றும் இல்லாதது கண்டான். ஏமாற்றத்துடன் அதை வீசி எறிந்தான்  மனம் சுருங்கிவிட்டது.  வகுப்புக்கு வந்தார் ஆசிரியர்.  அனைவரும் ஓடி அவரவர் இடத்தில் அமர்ந்தனர்.  பாடத்தை துவக்கினார். ஆத்திச்சூடியில் வரும் இயல்வது கரவேல் என்ற கவிதை வரிகளை எடுத்து விளக்க முயன்றார்  மிகவும் எளிமையாக சுலபமாக தர முடிந்த பொருளை கூட தராமல் மறைத்து வைத்தால் நமக்கே பெரிய எமாற்றத்தை தந்துவிஉட்ம் என்பது இதன் பொருள் என்று விளக்கினார் ஆசிரியர்   தவறை உணர்ந்தான் முனியன்.

Leave a comment