ஸந்த்யாவந்தனம்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேதியூர் சாஸ்திரிகள் குடும்பத்துடன் ரயிலில் பயணிக்கும்போது ஸந்த்யாகாலத்தில் ரயில் மாயவரம் ஸ்டேஷன் அடைந்தது.சாஸ்திரிகளும் ஸந்த்யாவந்தனம் செய்ய ரயிலை விட்டு இறங்கி ஸ்தலசுத்தி செய்து விபூதி இட்டுக்கொண்டு அனுஷ்டானத்தை தொடங்கி காயத்ரி ஜபம் செய்ய தொடங்கினார். ஜபத்தில் லயித்த சாஸ்திரிகள் சூழ்நிலையை மறந்தார்! ரயில் கிளம்பும் நேரம் ஆனதும்  Guard பச்சைக்கொடி காட்ட ஓட்டுநர் ரயிலை ஸ்டார்ட் செய்ய தயாரானார். விசிலும் அடித்தார்.

இதற்குள் ரயில் புறப்படும் நேரம் இது நீங்கள் உங்கள் கணவரின் ஜபத்தை சீக்ரம் முடிக்கச்சொல்லி ரயிலில் ஏறச்சொல்லுங்கள்! இல்லையெனில் ரயிலில் அவர் ஏறமுடியாது  என்று சக பயணிகள் பதற்றபடுத்த மாமியும் ஜபத்தை நடுவில் நிறுத்தமாட்டார் சாஸ்திரிகள் என்று கூறி தானும் பெட்டி சாமான்களுடன் இறங்கி ஜபம் பண்ணும் தன் கணவர் அருகில் போய் நின்றுகொண்டார்!இதற்குள் பலமுறை ப்ரயத்தனம் செய்தும் நின்ற இரயில் கிளம்ப மாட்டேன் என மக்கர் செய்ய Driverம் ஏதோ Technical snag என்று SM / guard ஆகியோரை கலந்து ஆலோசிக்க தொடங்கினார்.இதற்கிடையில் நித்யம் செய்யும் ஆவர்த்தி பூர்த்தியாகி கண் திறந்த சாஸ்திரிகள் தன்னருகில் பெட்டியுடன் நிற்கும் மனைவியை பார்த்து நீ ஏன் இறங்கினாய்? என்று கேட்டு, வா ஏறிக்கொள்வோம்! என்று மாமியுடன் மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்த சில நிமிடங்களில் கிளம்ப மறுத்த ரயிலை start. செய்ய மீண்டும் ஒருமுறை Driver  முயற்சிக்க ரயில் திடுக்கென்று கிளம்பியது!

சாஸ்திரிகள் ஜபத்தை நிறுத்தவில்லை!காயத்ரி மஹிமை ரயிலை மீண்டும் ஓடச்செய்ததுஅதே இடத்தில் நாம் இருந்தோமேயானால் ஐயோ ரெயில் கிளம்பிவிட்டதே என்று அலறி அடித்துக்கெண்டு காயத்ரீயை விட்டுவிட்டு ரெயிலைபிடித்துக்கொள்வோம் ஆனால் அவர் மகான் ரெயிலை விட்டு விட்டு காயத்ரீயைப்பிடித்தால் காயத்ரீ அவரைவிடாமல் காப்பாற்றினாள்.இதிலிருந்துஅவர் நமக்கு சொல்லும் பாடம்நீ எதை விட்டாலும் காயத்ரீயை விடாதேஉன்னை யார் விட்டாலும் காயத்ரீ உன்னை விடாது.

: विप्रो वृक्षस्तस्य मूलं च सन्ध्या

वेदाः शाखा धर्मकर्माणि पत्रम्।

तस्मान्मूलं यत्नतो रक्षणीयं

छिन्ने मूले नैव शाखा न पत्रम् ப்ராஹ்மணனாகிய மரத்தின் வேரானது ஸந்த்யாவந்தனமாகும்.வேதமானது அதன் கிளைகள்.செய்யும் தர்மம் மற்றும் கர்மாக்கள்இலைகளாகும்.அதனால் வேரான ஸந்த்யாவந்தனத்தை காப்பாற்ற ( தினமும் செய்ய ) வேண்டும்.. வேர் இல்லையெனில் கிளையும் இல்லை இலையும் இல்லை

ராம்.   ராம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s