நல்லெண்ண சிறகு களால் அளப்போம்.

நண்பர் வெளியூர் செல்ல Call Taxi ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.அவர் கவனித்தது காரின் பின்னால் ஓட்டியிருந்த ஆங்கில வாக்கியம்.

*Duck or Eagle You decide*

அடுத்து அவர் கவனத்தை கவர்ந்தது (Clean and shiny)பளிச்சென்று சுத்தமாக இருந்த கார்.டிரைவர் நல்ல வெள்ளையுடை அணிந்து பளிச்சென்று புன்னகையுடன் இருந்தார்.அவரே வந்து கார் கதவை திறந்து நண்பரை அன்போடு அமர சொன்னாராம்.அழகான டிரைவிங். கேட்டதற்கு மட்டும் தெளிவான பதில்.நண்பர்  அந்த ஓட்டுனரின் அழகிய செயல்களால் மிகவும், கவரப்படார்.

பொதுவாக Call Taxi டிரைவர்கள் சற்று இறுக்கமாகவே இருப்பார்கள். பயணம் முடிந்தவுடன் அவர் யாரோ? நாம் யாரோ? என்ற கண்ணோட்ட்த்தோடு.இந்த டிரைவர் மிகவும் வித்தியாசமாக கண்ணியமாக நட்போடு இருந்தார்.பட்டதாரியும் கூட.அவரிடம் எப்போதுமே நீங்கள் இப்படித்தானா? என்று நண்பர் கேட்டிருக்கிறார்.இல்லை சார். நானும் மற்ற டிரைவர்ஸ் போல்தான் இருந்தேன். சத்தம் போட்டு கொண்டு.குறை கூறி கொண்டு “என்றார்.

எப்படி உங்களை நீங்களே மாற்றி கொண்டீர்கள்? என்று நண்பர் கேட்டிருக்கிறார்.ஒரு Client seminar ஒன்றிற்கு சென்றார் . சும்மா டாக்ஸியில் அமர்ந்திருப்பதற்கு கேட்கலாமே, என்று உள்ளே நுழைந்தேன். அந்த seminar என்னை மாற்றி விட்டது” என்றார்.என்ன Seminar?உங்களை நீங்களே உயர்த்திக் கொள்வது எப்படி ?என்ன சொன்னார்கள்?

பல அறிவுரைகள். என்னை மிகவும்கவர்ந்தது இதுதான்.காலையில் எழுந்திருக்கும் போதே இந்த நாள் சரியாக இருக்காது என்று எதிர்மறை சிந்தனையோடு எழுந்தால் அந்த நாள் கண்டிப்பாக நன்றாக இருக்காது.”இதையே ஆங்கிலத்தில் சொன்னார்கள்.

அப்போதுதான் அதன் ஆழம் புரிந்தது.*If you get up in the morning expecting a bad day,you will.Don’t be a Duck Be an Eagle*

*The ducks only make noise and complaints.The eagles soar above the group*.

அந்த அறிவுரை என்னைமிகவும் கவர்ந்தது.என்னை நானே சுய பரிசோதனைசெய்து கொண்டேன்.நான் Duck போல இருப்பதை உணர்ந்தேன். ஏன் Eagle போல இருக்க கூடாது என்று எண்ணினேன். என்னை நானே மாற்றி கொண்டேன் என்றார்.எல்லா Customer இடமும் அன்போடு பணிவாக நடந்து கொள்ள ஆரம்பித்தேன்.

மன அமைதி மட்டுமல்ல. என் வருமானமும் பெருகியது. Always my taxi busy.ஒரு முறை பயணம் செய்தவர்கள், என்னையே அழைக்க ஆரம்பித்தார்கள்” என்றார்.நண்பர் சொன்னபோது எனக்கேஅவரை பார்க்க வேண்டும் போல்இருந்தது.அவர் சொன்னது உண்மைதான். எந்த வேலையாக இருந்தாலும்,நாம் நடந்து கொள்ளும் நடத்தையும்,அர்ப்பணிப்பு உணர்வுமே,

(behaviour and involvement) நம்மை உயர்த்தும். உயர உயர வாழ்வில்Eagle போல பறக்க வைக்கும்.இப்பொழுது நம் முன்னால் இருக்கும் ஒரே கேள்வி :நாம் எப்படி வாழ வேண்டும்?Duck or Eagle ?

முடிவு எடுக்க வேண்டியது நாமே.நல்ல நண்பனாக, நல்ல சகோதரனாக, நல்ல அப்பாவாக, நல்ல கணவனாக, நல்ல அம்மாவாக, நல்ல மனைவியாக, குறிப்பாக நல்ல குடிமகனாக மாறுவதுஎல்லாமே நம் கையில்தான்.பயணிக்க போவது சிறிது காலமே. அனைவரிடமும் அன்பை செலுத்துவோம். அன்பை பெறுவோம். நம்மை நாமே உயர் சிந்தனையால் Eagle போல வானத்தை நம் நல்லெண்ண சிறகுகளால் அளப்போம்.

பக்தியின் மேன்மை

குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள்.இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும்.பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.அது சரி…. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்..?

இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள்.அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும்., அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து., நன்கு அலம்பி., துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். அவள்தான்., வசதி படைத்தவள் அல்லவே..! அதனால் நடந்தே செல்லத் தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள்.ஸ்ரமமாக இருப்பினும் “கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே” என்று தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள்.கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலை அடைந்த சமயம்., கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன்., அவன் பக்தியை வெளிப்படுத்த., கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள்., அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி., தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.அதே சமயம்., கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் “என்ன ஆயிற்று..?” என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை.கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே
ப்ரஸ்னம் கேட்டனர்.அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து “நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள்.
என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும்” என்று அசரீரி கேட்டது.

உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை., பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து., அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை ஸகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர்.அவள் ஆசையுடன் குண்டுமணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும்., யானையின் மதம் அடங்கியது.அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான். 

அடை

_கேட்ட மாத்திரத்தில் “அட”  என்று வியக்க வைக்கும் டிபன் “அடை” – அந்தக் காலப் பாட்டிகளின் ஃபேவரிட் பலகாரமும் அடையும் வெல்லமும்தான்!_

_மாலை வேளையில், மத்திய தர ஓட்டல்களின் கரும்பலகைகளில், பச்சை, சிவப்பு, நீலம் என பல வண்ண எல் ஈ டி பல்புகளின் ஒளிர்வில், இரண்டு ஸ்டார்களுடன் மெனுவின் கடைசி ஐட்டமாய் வசீகரிக்கும் சூப்பர் ஸ்டார், “அடை – அவியல்”!_

_இட்லி, தோசை, பூரி போன்ற ஃபாஸ்ட் பெளலர்கள் போரடித்தால், மாற்றுக்கு வரும் ஸ்பின் பெளலர் அடை! ( என்னது, உப்புமாவா? அவர் ட்வெல்த் மேன் – அவசரத்துக்கு கூப்பிட்டுக்கொ ’ல்லலா ’ம்!)_

_காலையில்  ஊறவைத்த அரிசி, து.பருப்பு, க.பருப்பு கலவையை மதியம் காஃபி கடையுடன் (மதிய காபி நேரத்துக்கு செல்லப் பெயர்!) மிக்சியில் (அல்லது  கல் உரலில்) இரண்டு, மூன்று மிளகாய் வற்றலுடன் சிறிது கரகரவென்று, கூழாக இல்லாமல் அரைப்பது, மாலை சற்றே தடிமலான ‘மொறு’’மொறு’ அடைக்கு உத்திரவாதம்!_

_மஞ்சளுக்கும், ஆரஞ்சுக்கும் இடைப்பட்ட ‘பீச்’ கலரில் அடைமாவு – சிறு சிறு புள்ளிகளாக சிவப்பு மிள்காய்த் துகள்கள், எடுத்த கரண்டியில் தளும்பாமல், ஸ்திரமாய் நிற்பது – தோசைக் கல்லில் நடுசெண்டரில் இருந்து மெதுவாகப் பரவத் தோதானது!_ 

_சிறிது தாராளமாக வார்க்கப்படும் எண்ணை, தடிமனான அடையின் மெரூன் கலரில் முறுகலான ஓரங்களுக்கு முக்கியம்!_ *_அவ்வாறே அடையின் நடுவில் கீறப்படும் ஓட்டையில் விடும் எண்ணையும்!_*

_கருவேப்பிலை, முருங்கை இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பல்லு பல்லாய் (சின்ன அழகிய அரிசிப்பல் போல!) தேங்காய்த் துண்டுகள், சிறு கத்தரித் துண்டுகள் சேர்ப்பதில் வேலை மெனக்கெடல் உண்டென்றாலும், அடையின் சுவைக்கு அவற்றின் பங்கு, அலாதியானது!_

*_தோசையைப் போல் ஒல்லியாக வார்ப்பதுவும், ஓட்டல்கள் போல் ஒரு பக்கம் மட்டும் வேக வைப்பதுவும் அடைக்கு விரோதமானவை! மெரூன் கலரில் ‘க்ரிஸ்ப்’பான ஃப்ரில் ஓரங்களும், அங்கங்கே நம்மை முறைத்துப் பார்க்கும் தேங்காய்/ வெங்காயத் துண்டுகளும் நேசமான அடையின் அடையாளங்கள்!_*

*_லாரல் ஹார்டி ஜோடியைப் போல் அடைக்கு இணை, அவியல்தான்!_* 

_காய்கறிகளுடன் ஓடும் அவியலைவிட, வைத்த இடத்தில் நிற்கும் ( ராமன் முதுகில் அம்பறாத்துணியில் சொறுகி வைத்த அம்புகளைப் போல், நீளமாய் வெட்டப்பட்ட உருளை, சேனை, பீன்ஸ், மாங்காய், கேரட் துண்டுகள் துருத்திக் கொண்டு நிற்பது அவசியம்!) அவியலே என் சாய்ஸ்!_

_நல்ல மோர்க்குழம்பு (நீரோட்டமான ‘கடி’ – வடநாட்டு மோ.கு. மாதிரி – இதற்கு உதவாது!),_ *_பல்லில்லாதவர்களுக்கு உதவும் வகையில் அடைக்கு ஏற்ற ஜோடி!_*

_மிளகாய்ப் பொடி – நல்லெண்ணை // வெல்லம் – வெண்ணை // வீட்டில் வைத்த அரைத்துவிட்ட சின்ன வெங்காய சாம்பார் எல்லாம் என்னதான் ஜோடி சேர்ந்தாடினாலும், கொஞ்சம் ’ஆபத்துக்குப் பாவமில்லை’ ரகம்தான்!_

*_கல்லிலிருந்து, நேராகத் தட்டுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகும் அடைகளுக்கு, உடனே வாயில் அடைக்கலம் கொடுப்பதுதான் நாம் அடைக்குச் செய்யும் மரியாதை. ஆறினது, ஹாட் பேக்கில் வியர்த்ததெல்லாம், ‘ஆறின கஞ்சி…..’ கதைதான்!_*

_முதல்நாள் அடை மாவில், வெட்டிய வெங்காயம் சேர்த்து, நல்ல தேங்காய் எண்ணையில் மறுநாள் வார்க்கப்படும் முறுமுறு அடைக்கு ஒரு தனி மவுசும், ருசியும் உண்டு.- தே.எண்ணையுடன் சேர்ந்த மி.பொடியுடன் அந்த அடை உள்ளே செல்லும் ஒவ்வொரு முறையும் காதில் நாரத கானம் கேட்கும் பாக்கியம் பெறக்கூடும்!_

_ஆந்திர அன்பர்களின் அடை, ‘பெசரெட்’ – கொஞ்சம் அரிசியும், நிறைய பயத்தம்பருப்பும் சேர்ந்தது – தோசை போல மெல்லியதாக வார்த்து, மேலே பச்சைமிளகாய் விழுது, வெங்காயம், கொத்துமல்லி மற்றும் பெயர் தெரியா பொடிகள் தூவி ஒரு பக்கம் வேகவைத்த வஸ்து – தேங்காய் அல்லது கொத்தமல்லி கார சட்னியுடன் கண்ணில் நீரை வரவழைக்கும் டூயட்!_ 

_இந்த பெசரெட்டின் நடுவில் ஒரு கரண்டி உப்புமாவை வைத்து மடித்துக் கொடுத்தால்,_ *_அது ’’பெசரெட் உப்புமா”_* _– நன்றாக இருந்ததாக என் சின்னப் பெண்ணின் திருமணத்தில் சாப்பிட்டவர்கள் சொன்னார்கள் – பெண்ணின் தோப்பனார் – எனக்கு பாக்கியம் இல்லை – நான் போனபோது தோசைக்கல்லும், கரண்டியும் மட்டும் கேட்பாரற்றுக் கிடந்தன!_

*_அடையும் வெல்லமும் அந்தநாளைய பாட்டிகளின் பலகாரம் – ஆரோக்கியமானது. பருப்பில் புரதமும், வெல்லத்தில் இரும்புச் சத்தும் சேர்ந்து, ரத்தம் ஊறுகிறது – பாட்டிகளை மிஞ்சும் டயடீஷியன் இனிமேல்தான் பிறக்க வேண்டும்!_*

_தயிர் சாதத்துக்கு, அடையும், மிளகாய்ப் பொடியும் நல்ல சைட் டிஷ் – அறியாதவர்கள், முயற்சித்து முக்தி அடையலாம்!_

*_கொஞ்சமும் அடை ஜாடையே இல்லாத காரடையான் நோன்பு வெல்ல அடைக்கும்,, உப்பு அடைக்கும் அந்தப் பெயர் ஏன் வந்தது?!?_*

_தெரிந்தவர்கள் சந்தேகத்தைத் தீர்த்து, சொந்த செலவில் பக்கத்து ஓட்டலில் அடையுடன் வெண்ணை முழுங்கி பிறவிப் பயன் அடையலாம்!_

*_அடையிடம் அடைக்கலம் அடைந்தோர் சார்பாக………….._*

” – An interesting write-up by the one only Sujatha_*

ஶ்ரீ ராமருக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு:

திருமாலின் அவதாரமான ஶ்ரீராமருக்கு தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான கோயில்கள் பற்றிய பதிவு:

1. #தென்னக_அயோத்தி என்று அழைக்கப்படும் 

கும்பகோணம் #இராமசுவாமி கோயில்:

இக்கோயில் குடந்தை நகரின் நடுநாயகமாக பெரிய கடைவீதியின் தென் கோடியில் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இக்கோயில் பொ.ஊ. 16-ஆம் நூற்றாண்டில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பெற்றது.

இக்கோயிலில் உள்ள மூலவரின் சிறப்பு பட்டாபிசேக நிலையில் இராம பிரான் காட்சி தருவதேயாகும். இராமர், சீதாபிராட்டியார், லட்சுமணர், பரதன், சத்ருகனன்,ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைவருடைய சிற்பங்களை கருவறையில் காணமுடியும். இவர்களுடைய திருமேனிகள் அழகே உருவெடுத்தாற்போல விளங்குகின்றன. ஆஞ்சநேயர் வீணையுடனும், இராமாயண பாராயணத்துடனும் இருக்கும் நிலையில் அபூர்வமாகக் காட்சி தருகிறார். இராமச்சந்திர மூர்த்தியும் சீதைப்பிராட்டியும் ஒரே ஆசனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கின்றார்கள். பரதன் குடை பிடிக்க, சத்ருகன் சாமரம் வீச, இலக்குமணம் கோதண்டத்தை தாங்கிய வண்ணம் கரங்குவித்து இராமச்சந்திரமூர்த்தியின் ஆணையை எதிர்பார்ப்பதுபோல காட்சி தருகிறார். லட்சுமணரே, ராமரின் வில்லையும் சேர்த்துப் பிடித்தபடி இருப்பது வேறு திருத்தலங்களில் காண முடியாத அரிய அமைப்பு.

இக்கோயில் ஒரு சிற்பக்கூடமாகத் திகழ்கின்றது. முன் மண்டபத்தில் உள்ள தூண்களில் நல்ல வேலைப்பாடுகள் உள்ள சிற்பங்கள் திருமாலின் பல அவதாரங்களைச் சித்தரிக்கும் நிலையில் உள்ளன. இந்த முன் மண்டபம் ஒரு சிற்பக் கலைக்கூடம் என்றால் அது மிகையாகாது. இம்மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களிலும் நாயக்க மன்னர்களின் சிற்பக் கலை மிளிர்கிறது. ஒவ்வொன்றும் வரலாற்றுக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களையும் ரதி மன்மதன் சிலைகளையும் இவற்றில் வடித்திருப்பது காண்போரை ஈர்க்கும் வகையில் உள்ளன.

இக்கோயிலின் உள் பிரகாரத்தில் இராமாயணம் முழுவதும் மூன்று வரிசைகளில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இந்த சித்திர இராமாயணம் நாயக்கர் கால ஓவியக்கலைக்கு ஒரு சான்றாகும். இப்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தால் இராமாயணம் முழுவதையும் சித்திரத்தில் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு முறை வலம் வரும்போது ஒவ்வொரு வரிசை என்ற நிலையில் சித்திர இராமாயணம் முழுவதையும் பார்த்து, படித்து அறிந்துகொள்ளலாம்.

2.#திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் கோயில் : (108 வைணவத் திவ்ய தேசம்)

திருவெள்ளியங்குடி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும்.இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம். பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன.

நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தல பெருமானை தவமிருந்து வழிபட்டமையால் இந்த ஊர் வெள்ளியங்குடி என்ற பெயர் பெற்றது. சுக்ரபுரி என்றும் அழைப்பர். வாமனனாக அவதாரம் எடுத்து வந்த திருமாலுக்கு மூன்றடி மண் தானமளிக்க தயாரானார் மகாபலிச் சக்ரவர்த்தி. வந்திருப்பது சாதாரணச் சிறுவன் அல்ல என்று மகாபலிக்கு உணர்த்தினார் சுக்ராச்சாரியார். ஆனால் அதைக் கேட்கும் மன நிலையில் மகாபலிச் சக்ரவர்த்தி இல்லை. மகாபலி நீர் வார்த்து தானம் தரவிருக்கும் கமண்டல பாத்திரத்தின் நீர் வரும் துளையை ஒரு வண்டாக உருமாறி அடைத்து கொண்டார் சுக்ராச்சாரியார். இதை அறிந்த பகவான் நீர் வரும் தூவாரத்தை ஒரு குச்சியால் குத்த ஒரு கண்னை இழந்தார் சுக்ராசாரியர். மீண்டும் இத்தல பெருமானை நோக்கி தவமிருந்து இழந்த கண்னை பெற்றார். அசுரர்களுக்கு தச்சராக இருந்த மயன் தவமிருந்து திருமாலை வேண்ட சங்குசக்கரதாரியாக காட்சி தந்தார். பரமாத்மா இராமபிரானாக காட்சி அளிக்குமாறு வேண்டினார். திருமாலும் இராமபிரானாக காட்சி தந்தார். பராசரன், மார்க்கண்டேயர், இந்திரன், பிரம்மா, பூமிதேவி ஆகியோர் வழிபட்ட புண்னிய தலம். இந்த ஒரு தலத்தை தரிசித்தால் 108திவ்வியதேச க்ஷேத்திரங்களை தரிசித்த புண்ணியம் கிடைத்து விடும்.

3.#புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் : 

(108 வைணவத் திவ்ய தேசம்)

திருபுள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். சோழ நாட்டு பத்தாவது திருத்தலம். திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. சோழர் காலத்தில் கட்டிய கோவிலாகும்.

இக்கோவிலில் வல்வில் ராமன் (சக்ரவர்த்திதிருமகன் ) – பொற்றாமறையாள் (ஹேமாம்புஜவல்லி ) ஆகிய வைணவக்கடவுள்கள் எழுந்தருளியுள்ளனர். இறைவன் வேறு எங்கும் காண முடியாத நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக சயன திருக்கோலத்தில் சோபன விமானத்தின் கீழ் ஸ்ரீ ராமபிரான் காட்சி அளிக்கிறார். இராமாயண காவியத்தில் வரும் ஜடாயு மோட்சம் பெற்ற தலம். புள் என்றால் பறவை. பூதம் என்றால் உடல். உயிர் நீத்த ஜடாயுவிற்கு இராமபிரானே முறைப்படி ஈமகாரியங்கள் செய்தார். எனவே இவ்வூர் புள்ளபூதங்குடி ஆயிற்று. கோதண்டத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பெரியபிராட்டியை பிரிந்த நிலையில் பள்ளி கொண்டு சேவை சாதிக்கிறார். இராமாயண கதையின் படி குடிலுக்குள் இருந்த சீதாதேவியை இராவணன் குடிலுடன் பெயர்த்து செல்வதை கண்ட ஜடாயு சீதாதேவியை மீட்க வான வெளியில் கடும் சண்டை நடந்தது. தனக்கிருக்கும் இறக்கைகளை கொண்டு தானே பறந்து பறந்து சண்டை செய்கிறாய் என இறக்கையை வெட்ட இராமா இராமா எனக் கூறிக்கொண்டே காட்டுக்குள் விழுந்தார் ஜடாயு. சீதையை தேடிய இராமன் இலட்சுமணனிடம் இராவணன் சீதையை தென்திசை நோக்கி தூக்கி செல்வதை கூறி உயிர் நீத்தார். ஜடாயு இராமனின் தந்தை தசரதனுக்கு உற்ற நண்பன். நட்பின்படி பார்த்தால் பெரிய தந்தை. எனவே கரும காரியங்களை செய்து கிழக்கே திருமுகம் காட்டி சயனம் கொண்டார். ஜடாயு மோட்சம் பெற்ற இடம் இதுவே. க்ருத்ர ராஜன் எனும் மன்னன் எம்பெருமானை நோக்கி கடும் தவம் செய்தான். வல்வில் ராமனாக புஜங்க சயனத்தில் பெருமானை தருசித்தான். எனவே இங்குள்ள ஒரு தீர்த்தம் க்ருத்ர தீர்த்தம் ஆயிற்று.

4. #இராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில்:

இராமாயணத்தில், விபீசணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் அறிவுரை கூறினார். ராவணன் அதை ஏற்க மறுத்ததுடன், வீடணனை காலால் மிதிக்கச் சென்றார் .இதனால் வெறுப்புற்ற வீடணன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமரிடம் சரணாகதி அடைந்தார். வீடணனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். வீடணனை பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு அமைக்கப்பட்ட கோயில் கோதண்டராமர் கோயில் ஆகும். இக்கோயிலில் ராமபிரான் அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறார்.

கோதண்டராமர் கோயிலில் ராமர், இலக்குவன், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் உற்சவம் நடைபெறும்.

இராமாயணத் திருவிழாவின் போது, ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், ராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தி காண்பிக்கப்படும்.

5.#வடுவூர் கோதண்டராமர் கோயில்: 

பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் கனவில் ஒரு நாள் பெருமாள் தோன்றி, தலைஞாயிறு என்னும் இடத்தில் ஒரு அரசமரத்தின் அடியில் புதைந்து கிடக்கும் கடவுள் சிலைகளைக் கண்டெடுத்து, பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினார். அவ்வாறு கண்டெடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டதுதான் திருவாரூர் மாவட்டம், வடுவூர் என்னும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்.

மன்னார்குடிக்கு அருகில் உள்ள வடுவூர் ராமர் கோவில் புராண ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு மூலவராக ஸ்ரீ கோதண்டராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர். இங்குள்ள மூலவர் மற்றும் உற்சவர் சிலைகளில் உள்ள ஒற்றுமைகள் கவனிக்கத்தக்கது. இக்கோயில் வகுலாரண்ய க்ஷேத்திரம் என்றும்.

ஆரம்பத்தில் ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் ஸ்ரீ ராஜகோபாலன் சுவாமிகள் இந்த கோவிலின் பிரதான தெய்வங்களாக இருந்தனர். ஸ்ரீராமர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்திக்குத் திரும்பியபோது, விஸ்வகர்மாவிடம் தன்னைப் போன்ற ஒரு சிலையை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டார், அதனால் அவரைத் திரும்பிப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் இந்த சிலைகள் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலைஞாயிறு கிராமத்தில் ரிஷிகளால் புதைக்கப்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இறைவன் ஒரு மன்னன் சரபோஜியின் கனவில் தோன்றி, அந்த இடத்திலிருந்து சிலைகளைத் தோண்டி எடுக்கச் சொன்னார். ஸ்ரீராமர், சீதை, அனுமன் சிலைகளுடன் அரசர் வடுவூர் வழியாகச் சென்றபோது, அங்குள்ள மக்கள், அந்த அழகிய சிலைகளை எடுத்துச் செல்ல விடாமல், ராஜகோபாலன் சுவாமி கோவிலில் உள்ள தெய்வங்களை நிறுவுமாறு வேண்டினார்கள்.

6. #மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்:

ஏரிகாத்த ராமர் கோயில் சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் போது விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். முனிவரின் வேண்டுதல்படி, அயோத்தி திரும்பும்போது சீதையுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. திருமழிசை ஆழ்வார் மற்றும் இராமானுஜர் இக்கோயில் தலத்திற்கு தொடர்புடையவர்கள்.

பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில், மதுராந்தகம் பகுதியில் அடை மழை பெய்து வெள்ளம் சூழ்ந்தது. மதுராந்தகம் ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது. மக்கள் அங்குள்ள கோயிலில் குடிகொண்ட கோதண்டராமரிடம் வேண்ட, மதுராந்தகம் ஏரி மழை வெள்ளத்திலிருந்து காக்கப்பட்டதாகவும் அது முதல் அக்கோயிலுக்கு ஏரி காத்த ராமர் கோயில் என்று பெயராயிற்று என்பது மரபு வரலாறு.

7. #திருநின்றவூர் ஏரிகாத்த ராமர் கோயில்:

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோயிலுக்கும் இருதயாலீஸ்வரர் கோயிலுக்கும் இடையே அமைந்துள்ளது ஏரி காத்த ராமர் கோயில்.

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர் காலத்து அரசனான ராஜசிம்மவர்மன் காலத்தில் கட்டப்பட்டது. கோயிலில் மூலவரான ஸ்ரீராமர் 8 அடி உயரத்தில் காட்சி தருகிறார். ஸ்ரீராமருடன் வலது கையில் வில்லை ஏந்தியபடி லக்ஷ்மணரும், சீதா பிராட்டி கையில் தாமரை மலர் ஏந்திய கோலத்திலும் காட்சி தருகின்றனர்.

இந்த விக்ரகங்கள் அனைத்தும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவை. ஆனால் பார்ப்பதற்குக் கல்லில் வடித்த சிலை போன்ற பிரம்மாண்ட வடிவத்தில் மூவரும் வீற்றிருக்கின்றனர். முன்னொரு காலத்தில் பெரு மழையால் திருநின்றவூர் ஏரி உடைந்து ஊரே அழியக்கூடிய நிலை இருந்ததாகவும், ஊரை வெல்லச் சேதத்திலிருந்து காக்குமாறு ஸ்ரீ ராமபிரானிடம் பக்தர்கள் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.

பக்தர்கள் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட ஸ்ரீராமர், தனது அம்புகளால் ஏரியின் கரை உடையாமல் காத்தருளியதாகவும், அதனால்தான் ராமபிரான் ஏரி காத்த ராமர் என்று அழைக்கப்படுவதாகவும் தல வரலாறு கூறுகிறது.

கோயிலில் மூலவராகவும் உற்சவராகவும் ஸ்ரீ ராமர் விளக்குகிறார். தல மரமாக மகிழமரம் உள்ளது. கோயிலில் சங்கு சக்கர சின்னங்களுடன் அனுமனும், ராம லக்ஷ்மரை தோளில் சுமந்தபடி அரக்கியைக் காலால் மிதிக்கும் கோலத்தில் ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர்.

ஆஞ்சநேயரின் பின்புறம் ராம லக்ஷ்மரின் பாத தரிசனத்தையும் காண முடிகிறது. ஏரி காத்து ராமரை வழிபடுபவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோயிலின் பின்புறம் வருண புஷ்கரணியும் அதன் நடுவே தீர்த்தவாரி மண்டபமும் அழகுற அமைந்துள்ளது.

சென்னைக்கு அருகே திருநின்றவூரில் அமைந்துள்ள அத்திமரத்தினால் ஆன ஏரி காத்த ராமரைக் காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரைத் தரிசிப்பதைப் போன்று அனைவரும் தரிசித்தால் வேண்டிய பலன் கிடைக்கும்.

8.#அயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்:

ராவணன் வதம் முடிந்து ராமன், சீதை, லட்சுமணன், அனுமன், சுக்கிரீவர், விபீஷணர் மற்றும் படை வீரர்களுடன் அயோத்தி திரும்பிய பொது இங்கு தங்கி இரவு ஓய்வெடுத்தனர். அதற்குள் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அயோத்தி செல்வதற்கான காலம் தாமதமானதல் இங்கேயே பட்டாபிஷேகம் நடைபெற்றது.

விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் கோதண்டராமசுவாமி, சீதை சன்னதிகளும், விநாயகர், கருடாழ்வர், ஆஞ்சநேயர், ஆழ்வர்கள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. 

9. சென்னை

#மேற்கு_மாம்பலம் கோதண்டராமர் கோயில்:

இந்த திருத்தலத்தை தக்ஷிண பத்ராசலம் என்று அழைக்கிறார்கள் . பத்ராசலத்தில் திரு பக்தராமதாசர் திருக்கோயிலை கட்டினார் இங்கு அவருடைய வம்சாவழி வந்த ஆதிநாராயண தாஸர் இத்திருக்கோயிலை கட்டினார் .200 வருட பழமை வாய்ந்தது .

 மூலவர் பட்டாபிராமன் அவருடைய இடப்பக்கம் சீதாபிராட்டியை அமரவைத்து வலது புறத்தில் இலக்குவன் குடை பிடிக்க சிறிய திருவடியாக ஹனுமான் ஸ்ரீராமரின் பாதங்களை தாங்கி பிடிக்க இப்படியொரு பட்டாபிஷேகத் திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார்.

10. #நெடுங்குணம் யோக ராமச்சந்திர மூர்த்தி கோயில்:

தமிழ்நாட்டின் வட ஆற்காடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய விஷ்ணு கோவிலில் வில் இல்லாமல் சின் முத்திரை தோரணையில் ராமர் காட்சியளிக்கிறார். 

வந்தவாசிக்கு தெற்கே 24 கிமீ தொலைவில் காஞ்சிபுரம் – சேத்துப்பட்டு – திருவண்ணாமலை வழித்தடத்தில் தீர்கஜல மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நெடுங்குணத்தில் உள்ள 500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான யோக ராமர் கோயில் உள்ளது, இங்கு ராமர் தனது வில் இல்லாமல் வில் இல்லாமல் ‘சின் முத்திரை’ தோரணையில் அமர்ந்திருக்கிறார். வேத பாராயணம். கோயிலின் கிழக்கு நுழைவாயிலில் இரண்டு பெரிய கோபுரங்கள் உள்ளன – 105 அடி ராஜ கோபுரம் மற்றும் 65 அடி கிளி கோபுரம். கல்வெட்டுகள் ராயரின் காலத்தைக் கண்டறியலாம், எனவே கோயில் குறைந்தது 500 ஆண்டுகள் பழமையானது என்று கூறலாம். கிட்டத்தட்ட 90000 சதுர அடியில் அமைந்துள்ளது. அடி பரப்பளவில், வட ஆற்காடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய விஷ்ணு கோயிலும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய ராமர் கோயிலும் இதுவாகும்.

ரிஷி சுகரின் பிரார்த்தனைக்கு பதிலளித்து, ராமர் அவருக்கு தரிசனம் அளித்து, லங்கா மன்னன் ராவணனை வென்று அயோத்திக்குத் திரும்பும் வழியில் ஒரு நாள் இங்கு தங்கியதாக கதை கூறுகிறது.

வீர அச்சுத தேவராயரின் ஆட்சியின் போது ராமர் கோவிலில் திருவிழா நடத்துவதற்காக அருகிலுள்ள கிராமம் நன்கொடையாக வழங்கப்பட்டதை கி.பி 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. இராஜகோபுரத்திற்கு அருகில் உள்ள கல்வெட்டு, கோவில் நடவடிக்கைகள் மற்றும் பூஜைகளை நிரந்தரமாக பராமரிக்க நிலம் வழங்கப்பட்டதாக கூறுகிறது. அதில் ஒரு எச்சரிக்கையும் உள்ளது. கோயில் பூஜைகள்/செயல்பாடுகள் நடைபெறாமல் தடுக்கும் எவரும் கங்கைக் கரையில் பசுவைக் கொன்றதற்குச் சமமான சாபத்தைப் பெறுவார்கள்.

11. #பொன்_விளைந்த_களத்தூர் கோதண்டராமர் கோயில் (சயன கோலம்)

கோதண்டராமர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டுக்கு தெற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் பொன்விளைந்த களத்தூரில் அமைந்துள்ளது. இக்கோவில் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. ஸ்ரீ தூபுல் நிகமந்த மகாதேசிகன் ஒருமுறை திருவஹீந்திரபுரம் செல்லும் வழியில் இந்த கிராமத்தை கடந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த கிராமம் இத்தகைய தெய்வீக செயல்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் பிரபலமானது. படிக்காசு புலவர், அந்தக கவி (பார்வையற்ற) வீரராகவ முதலியார், புகழேந்திப் புலவர் ஆகிய மூவரும் இத்தலத்தில் பிறந்தவர்கள். புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் சேலம் விஜயராகவாச்சாரியாரும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்.

ஒருமுறை வேதாந்த தேசிகர் இந்த கிராமத்தில் தங்கியிருந்தபோது ஹயக்ரீவருக்கு இரவில் அன்னதானம் வழங்க முடியவில்லை. மறுநாள் காலையில் கிராம மக்கள், இரவில் ஒரு வெள்ளைக் குதிரை தங்கள் நெல் வயல்களை அழித்துவிட்டதாக அவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. தேசிகர் அங்கு சென்றபோது குதிரை ஓடிய இடங்கள் தங்கமாக மாறியிருந்தன. எனவே இந்த கிராமத்திற்கு பொன் விளைந்த களத்தூர் என்று பெயர் வந்தது, இதில் பொன் என்பது தங்கத்தை குறிக்கிறது மற்றும் தமிழில் சாகுபடியின் விளைச்சல் என்று பொருள்.

12. ஊட்டத்தூர் கோதண்டராமர் கோயில்

13. காஞ்சிபுரம் பொன்பதர்கூடம் சதுர்புஜ ராமர் கோயில்

14.திருப்புல்லாணி தர்ப்பசயன ராமர் கோயில்

15. புதுச்சேரி பட்டாபிராமர் கோயில்

16. பருத்தியூர் ராமர் கோயில்

17. முடிக்கொண்டான் இராமர் கோயில்

18. பொழிச்சலூர் இராமர் கோயில்

இது போன்று பல இராமர் திருத்தலங்கள் நம் தமிழகத்தில் உள்ளது.

எல்லாவற்றையும் இங்கே விரிவாக குறிப்பிட இயலவில்லை 

இது மட்டுமல்லாமல் 12  ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திவ்ய தேசங்களில் 84 திவ்ய தேசங்கள் நம் தமிழ் மண்ணில் இருப்பது கூடுதல் சிறப்பு 

#கல்வெட்டுக்கள்:

தமிழகத்தில் ராமர் கோவில்கள் என்ற தலைப்பில் குடந்தை சேதுராமன் அவர்களின் கட்டுரை ஒன்று. வாசித்ததில் பெரும் பிரம்மிப்பு. தமிழகத்தில் உள்ள ஸ்ரீராமர் கோவில்களின் பட்டியலை கல்வெட்டில் உள்ளதுபடி பதிவு செய்துள்ளார்.

பொதுவாகவே திருமால் வழிபாடு என்பது தமிழகத்தின் வாழ்வியல் நடைமுறையில் இணைக்கப்பட்ட ஒன்று.

ஏரிகாத்த ராமர், சொன்னவண்ணம் செய்த பெருமாள்.. இதுமாதிரியான பெயர் தமிழகத்தில் மட்டுமே உண்டு. பெருமாளுக்கும் தமிழர்களுக்கும் அப்படியொரு அன்னியோன்னியத் தொடர்பு.

ஆழ்வார் பாசுரங்கள் அனைத்தும் தீந்தமிழ் சொற்களால் பெருமாளைச் சிறப்பிக்கும்.

திருமழிசை ஆழ்வார் சொல்கிற அனைத்தையும் பெருமாள் கேட்கிறார். அதனால்தான் அவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள். ஆழ்வார் பெருமாளைப் பார்த்து எழுந்திரு என்கிறார். பெருமாள் தனது பாம்பு பாயைச் சுருட்டி எழுகிறார். படு என்று ஆழ்வார் கட்டளையிட்டால் பெருமாள் படுக்கிறார்.

ஜெய் ஶ்ரீராம் ராம ராம

நன்றிகள் திரு சந்தோஷ் பாஸ்கரன் ஐயா அவர்கள்

அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தது ஏன்?

ஹனுமான் ஜெயந்தி ஸ்பெஷல் 

ராம தூதரான ஆஞ்சநேயருக்கு.பல பெயர்கள் உண்டு. வாயுபுத்திரன், கேசரி மைந்தன், மாரு தி, அனுமன், சொல்லிச் செல்வன், சுந்தரன் எனப் பல பெயர்களில் அவர் அழைக்கப்படுகி றார். ராமாயணக் காவியத்தின் முக்கிய கதா ப்பாத்திரமே அவர்தானே.

சில கோயில்களில் அனுமார் பஞ்சமுகத்துட னும் காட்சி கொடுத்து அருள்பாலிப்பதைக் கண்டிருக்கிறோம். அவர்  பஞ்சமுகத்துடன் காணப்படுவது எதனால்? காரணம் இல்லாமல் காரியம் இல்லையே.  

உலகின் தலை சிறந்த வீரனான தன் மகன் இந்திரஜித்தின் இறப்பினாலும் படைகளின் தோல்வியாலும் கவலை கொண்ட இராவண ன் தன்னுடைய சகோதரனான அகிராவணனி டம் இதைப் பற்றி கூறினான். தான் நிச்சயம் இராமனையும் இலக்குவனையும் கடத்திச்செ ன்று பாதாள உலகத்தில் சண்டிதேவிக்கு பலியிடுவேன் என்று  வாக்களித்தான்.

ஆனால் வீரமும் விவேகமும் நிறைந்த அனுமா ரை மீறி அகிராவணனால் இராமனையும் லக்ஷ்மணனையும் கடத்த முடியவில்லை. அதனால் தந்திரத்தைக் கையாண்டார். 

விபீஷணன் உருவத்திற்கு மாறினான் அகிரா வணன். இராமனையும் லக்ஷ்மணனையும் மயக்கத்தில் ஆழ்த்தி பாதாள உலகிற்குத் தூ க்கி சென்றான். சற்று தாமதமாக விபீஷணன் மூலம் விவரமறிந்த அனுமன் தான் ஏமாற்றப் பட்டது மட்டுமன்றி இராமனைக் கடத்தி சென்ற தினாலும் கடும் கோபமடைந்தார். அகிராவண னைக் கொன்று ராமனை மீட்பேன் என வானர ப்படைகளுடன் பாதாளம்  புறப்பட்டார்.

பாதாள உலகின் வாயிற்காப்பானாக மகரத்வ ஜன் பொறுப்பேற்றிருந்தான். அனுமானை வணங்கிய மகரத்வஜன், அனுமானை ”நான் அகிராவணனின் சேவகன். வீர அனுமானின் புத்திரன். தாங்கள் யார்?”என்றான். தனக்குத் திருமணமே ஆகவில்லையே. புத்திரன் எப்படி இருக்க முடியும்? எனக் குழம்பினார், அனுமன். ஆனால் மகரத்வஜனின் ஆணித்தரமான பதிலால் எப்படி சாத்தியம் என்பதைத் தியான திருஷ்டியில் அறிந்து கொண்டார். 

(இராவணனால் அனுமானின் வாலில் மூட்டப் பட்ட தீயானது இலங்கையையே தீக்கரையாக் கியது. அந்த உஷ்ணத்தைத் தாங்க முடியாத அனுமார் பெரிய நீர் நிலையில் மூழ்கி உஷ்ண த்தைக் குறைத்துக் கொண்டார். அப்பொழுது உஷ்ணத்தால் வெளிவந்த உயிரணு, ‘மகர்’ என்னும் பெண் மச்சத்தின் உடலுக்குள் சென றது. மகர் கருவுற்று ஒரு புத்திரனை ஈன்றது. அவனே மகரத்வஜன்.

தன் மகன் என்பது உண்மைதான் என்று அறி ந்து கொண்ட அனுமன் தான் மகரத்வஜனின் தந்தையாகிய அந்த அனுமன் என்பதைக் கூறி நடந்த விபரங்களை எடுத்துரைத்து பாதாள அரண்மனைக்கு வழிவிடுமாறு கூறினார். 

”நீங்கள் என் தந்தையானாலும் என்னால் உங்  களை அனுமதிக்க முடியாது. ஒன்று என்னுடன் போர்  செய்யுங்கள் அல்லது திரும்பி செல்லுங்கள்”  என்றான்.

வேறு வழியின்றி தந்தையும் மகனும் போரிட்டி னர். மிகத் தீவிரமாக நடந்த சண்டையில் யார் வெல்வார் என வானரப் படை பயந்தது. அனும ன் தன் பலத்தைப் பலமடங்காக்கி இறுதியில் மகரத்வாசனை தோற்கடித்தார். அனுமன் தனியாகப் பாதாள அரண்மனையின் உள்ளே சென்றார்.

அகிராவணனைக்  கண்டதும் கோபத்தில் பல வாறு தாக்க முற்பட்டார். எவ்வளவு முயற்சித்து ம் மாயைகளை உடைத்து அகிராவணனை வெற்றி  கொள்ள முடியவில்லை. அகிராவண து சக்தியை உடைக்க ஒரே வழி ஐந்து திசைக ளில் உள்ள வெவ்வேறான விளக்குகளை ஒரே நேரத்தில் அணைப்பது மட்டுமே என்று அறிந்து கொண்டார். 

அச்சமயமே அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக (அனுமன், நரசிம்மம், வராகம், ஹயக்ரீவர், கரு டன்) உருவெடுத்து ஐந்து திசைகளில் உள்ள விளக்குகளை ஒரே சமயத்தில்  அணைத்தார்.

அடுத்த கணமே அகிராவணனின் மாயசக்தி குறைந்தது, ஒரே  வீச்சில் அவன் உயிர் பறித் தார் ஆஞ்சநேயர். இராமனையும் லக்ஷ்மண னையும் மீட்டு விபீஷணனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். ராம பக்தன் என்ப தையும் நிரூபணம் செய்தார். 

பஞ்சமுக ஆஞ்சநேயருக்குப் பல இடங்களில் கோயில்கள் அமைந்துள்ளன. இருப்பினும் மந்திராலயம் சமீபத்தில் உள்ள பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் விசேஷமாக்க கருதப்ப டுகிறது. காரணம் என்ன? ஸ்ரீ ராகேந்திரர் இங்கே 12 வருட காலம் கடும் தவமிருந்தார். 

அப்பொழுது  ஸ்ரீ ஹனுமானின் பஞ்ச முகம், ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ வராகர், ஸ்ரீ மகாலக்ஷ்மி , ஸ்ரீ கருட வாகனத்துடன் ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆகியோர் ஸ்ரீ ராகவேந்திரருக்கு இந்தத் தலத்தில் காட்சி கொடுத்ததாக்க கூறப்படுகிறது. இதற்குப்பிற கே ஸ்ரீ ராகவேந்திரர் மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்தார் எனக் கூறப்படுகிறது. 

ஆஞ்சநேயர் பஞ்சமுகி என்னும் இடத்தில் ஒரு பாறையின் மேல் சுயம்பு வடிவமாக எழுந்தரு ளியிருக்கிறார். ஐந்து முகங்கள் கொண்டதால் பஞ்சமுகி என்பதே இத்தலத்திற்குப் பெயரா னது. 

கிழக்கு நோக்கி இருப்பது அனுமன் முகம், தெற்கு நோக்கி இருப்பது நரசிம்ஹர், மேற்கு நோக்கி இருப்பது கருடர், வடக்கு நோக்கி இருப்பது வராஹர், உச்சியில் இருப்பது ஹய க்ரீவர். இம்முகங்கள் நமக்கு அறியப்படுத்து வன என்ன? ஐந்து வகையில் இறை வழிபாடு செய்யலாம். 

இறைவன் நாமாவளி சொல்வது, இறைவனை ஸ்மரித்து கொண்டே இருப்பது, இறைவனைக் கீர்த்தனைகள் மூலம் பாடி துதிப்பது, இறைவ னிடம் யாசிப்பது கடைசியில் இறைவனிடம் சரணாகதி அடைவது. பஞ்சமுகத்தில் உள்ள ஐந்து முகங்களும் இந்த ஐந்து நிலைகளைத் தான் குறிக்கிறது.

ஹனுமத் ஜெயந்தி அன்று ஸ்ரீ அனுமான் சலீஸா படிப்பது மிகவும் மேன்மையைத் தரும். பல மடங்கு பலனைத்தரும். வேண்டிய சௌபா க்கியத்தினைத் தரும்.

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

வாயுபுத்ராய தீமஹி

தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’

ஜெயராம் ஜெயராம் ஜெய ஜெய சீதாராம்…

ஓம் சுந்தர காண்ட நாயகனே போற்றி…

ஓம் சுடர் ஒளித் திருவே போற்றி போற்றி…

இலக்கியங்களில் செங்காந்தள் வெண்காந்தள் 

         

சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகையில்  அனைத்து நூல்களிலும் 64 இடங்களில் இடம் பெற்றுள்ளது காந்தள்மலர் .

பத்துப்பாட்டில், மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, நெடுநெல்வாடை நீங்கலாக மற்ற 7 நூல்களிலும் ,12 இடங்களிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் அரசுமலராகவும் இது ஏற்கப்பட்டுள்ளது.கண்களைப் பறிக்கும் ஒளிரும் வண்ணங்களை உடைய கொடியினம் இது.. இத்தாவரத்தை ‘கண்வலிப்பூ’ என்றும்அழைக்கின்றனர். 

மேலும் இக்கொடியின் வேர்ப்பாகம் கலப்பையைப் போன்றிருப்பதால் இதைக் ‘கலப்பைக்_கிழங்கு’ எனவும் அழைக்கின்றனர்.இத்தாவரத்தின் கிழங்கினை கார்த்திகை மாதங்களில் தோண்டி எடுப்பதால் இதனை ‘கார்த்திகைக் கிழங்கு’ எனவும் அழைப்பார்கள்.

இலக்கியங்கள் காந்தல் மலர்களை அடையாளம் காட்ட  கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றன :

வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள். தீயின் அன்ன ஒண் செங்காந்தள்.செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள். கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள். உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் சங்க இலக்கிய ஆசிரியர்கள்  காந்தள் மலரை அடைமொழியுடன் இருசொல் பெயரில்  கீழ்கண்டவாறுபதிவு செய்துள்ளனர் 

அப்பெயர்களைக் கீழே காணலாம் :*ஒண்செங் காந்தள்        கபிலர்*கமழ்பூங் காந்தள்         கபிலர்*நறவுகுலை காந்தள்      கபிலர்.*நாறுகுலைக் காந்தள்     கபிலர்*போது அவிழ் காந்தள்     மருதனார்.*அலங்குகுலைக் காந்தள்  தங்காற் பொற் கொல்லனார்.சினைஒண் காந்தள் ,மதுரைக் கணக்காயனார்.

*சுடர்ப்பூங் காந்தள்          நக்கீரர்.*முகைஅவிழ்ந்த காந்தள்   கம்பூர் கிழான். *வள்இதழ்க் காந்தள்         பெருங்கௌசிகனார்*தண்நறுங் காந்தள்          பரணர்

சங்கஇலக்கியங்களில் காந்தள் பெயர் உள்ள  பாடல் அடிகள் : பத்துப்பாட்டு 1.குறிஞ்சிப் பாட்டு

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம் – 62விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள் – 196பட்டினப்பாலைகாந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன – 153மலைபடுகடாம் தீயின் அன்ன ஒண் செங் காந்தள் – 145காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஒச்சி – 336வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள் – 5192.பெரும்பாணாற்றுப்படைநாடு பல கழிந்த பின்றை நீடுகுலைக்காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்குப் – 371,3713.திருமுருகாற்றுப்படைசுரும்பும் மூசாச் சுடர்பூங் காந்தட் – 1434.சிறுபாணாற்றுப்படை செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும் – 167 5.பொருநராற்றுப்படைநெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் – 33கொழுங் காந்தள் மலர் நாகத்து – 209

எட்டுத்தொகை

1.அகநானூறு:நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தள் -4-15பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில் -18-15முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் -78-8ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண் -92-9வேங்கை விரிஇணர் ஊதி காந்தள் -132:11பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்  – 108:15திருமணி உமிழ்ந்த நாகம் காந்தள் -138-17கடவுட் காந்தளுள்ளும், பலஉடன் -152-17போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள் -238-17காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது -312-5சினையொண் காந்தள் நாறும் நறு நுதல்- 338:7உயர் வரை மருங்கின் காந்தள்அம்சோலைக்368:82.ஐங்குறுநூறு:நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள் – 226:2நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும் -25:2மலர்ந்த காந்தள் நாறிக் -259:5சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன – 293:1கலித்தொகைகாந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின் -39(3):15எடுத்த நறவின் குலை அலங்காந்தள்  – 40(4):11தகையவர் கைச் செறித்த தாள்போல் காந்தள்  – 43(7):8கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை- 45(9):2உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன – 53(17):5அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் – 59(23):3

3.குறுந்தொகை

குருதிப் பூவின் குலைக் காந்தட்டே  – 1.-4காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் – 76-1வேங்கையும் காந்தளும் நாறி – 84-4காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக் – 100-3முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் – 167:1 கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள் – 185:6 சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் – 239:3

அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள்  –  259:2காந்தள்அம்  கொழு முகை, காவல்செல்லாது – 265:1ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்    – 284:3காலை வந்த முழுமுதற் காந்தள் – 361:4காந்தள் அம் சிறுகுடிக் கமழும் – 373:7

4.நற்றிணை

மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல் – 14:7காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி – 17:10நின்ற வேனில் உலந்த காந்தள் – 29:1பறியாக் குவளை மலரொடு காந்தள் 34-2காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் – 85:10காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப – 161-7மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும் – 173:2 போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் – 176:6அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து – 185:8மெல் விரல் மோசை போல, காந்தள் – 188 -4செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் – 294:7யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள்   கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் – 313:6,7முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்   குலைவாய் தோயும் கொழு மடல் வாழை – 355:2,3அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக – 359:2காந்தள்அம் கொழு முகை போன்றன சிவந்தே – 379:13குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தன்  – 399:2

5பதிற்றுப்பத்து

சிவந்த காந்தள் முதல்சிதை மூதில் – 15:11அலங்கிய காந்தள் இலங்குநீரழுவத்து – 21:36காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் – 30:9மலர்ந்த காந்தள் மாறாதூதிய – 67:19காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர் – 81:22

5.பரிபாடல்

மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற – 8:26சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் – 11:20நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள் – 14:13போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ–கார் தோற்றும்    காந்தள் செறிந்த -18:34-35கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள் – 19:76

6.புறநானுறு

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் – 90:1யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள் – 144:8கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் – 168:2

7.முல்லைப்ப் பாட்டு *

 ‘கோடற் குவிமுகை அங்கை அவிழ’ -முல்லைப் பாட்டு, வரி 95. கோடல்= காந்தள்எனக்கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட ‘காந்தள்’ Gloriosa superba என்னும் தாவரவியல் பெயரைக் கொண்டதாகக்கண்டறியப் பட்டுள்ளது.

காந்தள் மலரை அதன் தோற்றத்தைஒப்பு நோக்கி , கை விரலாகப் பாவித்துகம்பன் தன் இராமகாதையில் இப்படிக் குறிப்பிடுகிறான்.”காந்தளின் மலர்ஏறிக் கோதுவ கவின் ஆரும்மாந்தளிர் நறு மேனி மங்கை நின்மணிக்கைஏந்தின எனல் ஆகும் இயல்பின (2003)

மேலும் சில இடங்களிலும் இந்த ஒப்புமையைக்கையாண்டிருக்கிறான் கம்பன்.காந்தள்மலர் #தமிழ்ஈழத்தின் தேசிய மலராகஅறியப்படுகிறது. மாவீரர்களுக்கு இம்மலர் மூலம்அஞ்சலி செலுத்தப்படுகிறது.தமிழ்நாட்டின் தனிச்சிறப்புமிக்க இம்மலர்கார்த்திகைத் திங்களில் புத்துக்குலுங்குகின்றகுறிஞ்சி நிலப்பூவாகும்.

இம்மலர் மட்டுமல்லாமல் இதன்,செடி, தண்டு , வேர் ஆகியவைமருத்துவ குணம் கொண்டவை என்றும் கூறப்படுகிறது.

.

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி சொன்ன உண்மை வரலாறு

கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார் அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு

ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார் அதற்குக் காரணம் இருந்தது பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார் ஏன்? கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று

குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்

*அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார் விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்*பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான் ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்

அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார் ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்

அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான்

இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள் அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார் ஆமாம். நம் பகவான் அண்ணாமலையார் தான் அந்த இளைஞன் எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது கால்கள் கொடுத்தவர் இறைவன் தான்

கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன? அப்போது என்று இல்லை. இப்போதும் நீங்கள் அண்ணாமலையாரின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள். உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் இறைவன்

இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம் கிரிவலம் சென்றால் இத்தனை நன்மை இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவண்ணாமலையில்? ஈசனே திருவண்ணாமலையாய் இருக்க அவர் மடியில் நாம் தவழ்வது தான் கிரிவலம் அதனால்தான் இத்தனை நன்மையும்

ஓம் அருணாசலேஷ்வராய நமஹ

திருவொற்றியூர் படம்பக்கநாதர்

வருடத்தில்_மூன்று நாட்கள் மட்டுமே கவசமின்றி காட்சி தரும் திருவொற்றியூர் படம்பக்கநாதர் (எ) புற்றிடங்கொண்டார் (எ) ஆதிபுரீஸ்வரர்

சென்னை – திருவொற்றியூரில் அருள்பாலிக்கும் புற்றிடங்கொண்டாரை வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கவசம் சாத்தப்படாமல் தரிசிக்க முடியும். 

வருடத்தில் ஒருமுறை கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று இவருக்கு சாத்தப்பட்ட கவசம் களையப்பட்டு சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்விக்கப்படும். 

இவ்வருடம் வரும் 26/11/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கவசம் களையப்பட்டு, தொடர்ந்து வரும் 28/11/2023 அன்று இரவில் மீண்டும் கவசம் சாத்தப்பட்டுவிடும். 

மேற்கண்ட மூன்று நாட்களில் மட்டுமே சுவாமியை கவசமின்றி நேரடியாக தரிசிக்க முடியும். 

திரும்பிப் பார்க்கிறேன்…!* 

இல்வாழ்வில் அடியெடுத்து வைத்து, பின் நம் குடும்பம் என ஒன்று உருவாகி குழந்தைகள் பிறந்து, அவர்களும் வேகமாக வளர்ந்து விட்டார்கள்.பள்ளி, கல்லூரி என அவர்களுக்குப் பிடித்த கல்வியைக் கற்று, அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் நிலைக்கும் வந்துவிட்டார்கள்.நாம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக முதுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

வயதுக்கேற்ற சின்னச் சின்ன உடல் உபாதைகள் நமக்கு இருந்தபோதும், ஆரோக்கியத்தை காத்துக்கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். *வாழ்வினை திரும்பிப் பார்க்கும்போது, மலைப்பாக இருக்கிறது!* எத்தனையோ மகிழ்வான தருணங்கள், சிரிப்புகள்… எத்தனையோ துக்கங்கள், கண்ணீர் துளிகள்… எத்தனையோ ஏமாற்றங்கள், கோபங்கள்… எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம்! 

நம் மீது அன்பைப் பொழிந்த, நாம் அன்பு செலுத்திய நிறைய பேர் இன்று நம்மிடையே இல்லை. இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள், விபத்துக்கள், கொடிய மற்றும் கொள்ளை நோய்கள், பஞ்சங்கள், போர்கள், தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து இதுவரை தப்பித்துக் கொண்டோம்.நாம் ஆசையாய் நினைத்த சில விடயங்கள் கைகூடாததாலும், நாம் கொஞ்சமும் நினைத்தே பார்த்திராத சில விடயங்கள் நடந்தேறியதாலும் 

மனம், வாக்கு, செயல் என அனைத்திலும் மாற்றங்கள் கண்டோம்.பெரியவர்களின் பல வாழ்த்துகள்,சமயங்களில்  காயப்படுத்திய சில சொற்கள் இரண்டையும் ஏற்றுக் கொண்டோம்.யாரெல்லாம் நம்மை உண்மையாய்  நேசிப்பவர்கள், யாரெல்லாம் உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசுபவர்கள், யாரெல்லாம் பாசமாய் இருப்பது போல நடிப்பவர்கள் என்பதை சற்று தாமதமாகவே என்றாலும், கண்டுகொண்டோம். சில நண்பர்கள், சில உறவுகள் பிரிந்து போனதையும், சில நண்பர்கள், சில உறவுகள் நம்மை மறந்து போனதையும் வேறு வழியின்றி இயல்பாய் எடுத்துக் கொண்டோம்.

புதுப்புது இடங்களைச் சுற்றிப்பார்த்தும், விதவிதமான உணவுகளை உருசித்துப் பார்த்தும் மகிழ்ந்த தருணங்களை நினைவில் பதியவைத்துக்கொண்டோம். வாழ்வின் இக்கட்டான நேரங்களில், ஆத்மார்த்தமான நண்பன் அல்லது தோழியிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று அதிலிருந்து மீண்டு வந்தோம்.வேறு வேறு இடங்களில், வேறு வேறு மனிதர்களுடன், வேறு வேறு சூழ்நிலைகளில் பழகி, நிறைய அனுபவங்களை சேகரித்துக்கொண்டோம்.பிறந்தநாள், திருமண நாள், சுப நிகழ்வுகள், விழாக்கள், புதுவருடம் போன்ற விசேட தினங்கள் மற்றும் திருவிழா நாட்களில் கூடி மகிழ்ந்தோம்.

பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என அறிந்து கொண்டோம்.பணம், பட்டம், பதவி, புகழ், வீடு, தோட்டம், நகை, மகிழுந்து, சொத்து, சுகம், உறவுகள் என எதுவும் நம்முடன் கடைசிவரை வரப்போவதில்லை எனப் புரிந்து கொண்டோம்.நிம்மதியை வெளியில் தேடிப் பயனில்லை, அது நமக்குள்ளேதான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம்.

எல்லாவற்றையும் மன்னித்துவிடவும், சிலவற்றையாவது மறந்துவிடவும் கற்றுக்கொண்டோம்.எல்லாமும் கடந்துபோகும் எனவும், எதுவும் நிரந்தரமில்லை எனவும் புரிந்து கொண்டோம்.புத்தகங்களை வாசிப்பதும், இயற்கையை நேசிப்பதும், இனிய இசை கேட்பதும், இறைவனிடம் பிரார்த்திப்பதும் மனதுக்கு ஆறுதலான நிகழ்வுகள்.

*காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும்!*எனவே,  *இக்கணத்தில் வாழ்வோம்!* *வாழ்க்கையே  திருவிழாதான்!* *நாளும் இயல்பாய் அதைக் கொண்டாடுவோம்…!* 

*வாழ்க வளமுடன், வளர்க நலமுடன்*

சகோதர தீபாவளி

ராதேக்ருஷ்ணா !

இன்று *”சகோதர தீபாவளி” !*

_யம த்விதீயை !_தீபாவளி 5ம் நாள்…தீபாவளி கடைசி நாள்…

வளர்பிறை 2ம் நாள்…சகோதரத்துவத்தை சகோதரியின் அன்பைகொண்டாட அழகான நாள் !

சகோதரனான க்ருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்து வந்த போது,சகோதரி சுபத்ராதிலகமிட்டு வரவேற்ற நாள் !

சகோதரன் க்ருஷ்ணனுக்கு,சகோதரி சுபத்ரா,ஆசையாசையாய்விதவிதமாய் அன்போடு  அன்னமிட்ட நாள் !

சகோதரன் க்ருஷ்ணன்சகோதரி சுபத்ராவிற்குஅற்புதமான பரிசுகள்எல்லாம் தந்த நாள் !சகோதரன் யமதர்ம ராஜனைசகோதரி யமுனா தேவிஆசையாய் வரவேற்று அறுசுவை உணவளித்த நாள் !

சகோதரர்களுக்கு,சகோதரிகள் அன்பாய்7 வண்ண திலகமிட்டு,நன்றாய் வாழபிரார்த்திக்கும் நாள் !

சகோதரர்களுக்குசகோதரிகள் விதவிதபக்ஷணங்களும், பலவித அன்னமும்,ஆசையாய் பரிமாறும் நாள் !சகோதரிகளுக்கு,சகோதரர்கள்பலவிதமானபரிசுகள் தந்து மகிழ்த்தும் நாள் !எல்லாருக்கும்எல்லா ஆசார்யர்களும்சகோதரர்களே ! கொண்டாடுவோம் !சகோதரத்துவத்தைபறைசாற்றுவோம் !

அனைவருக்கும் *”சகோதர தீபாவளி”* ஆசீர்வாதங்கள் !

©குருஜீ கோபாலவல்லிதாசர்

ராதேக்ருஷ்ணா !