சும்மா இருந்தவரின் அரிய கண்டுபிடிப்பு

ஐசக் நியூட்டன்  லண்டனில்  உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் 1665_ 1666 ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார்.  அப்பொழுது ப்ளேக் நோய்த் தொற்றுப் பரவல் வேகமெடுத்திருந்தது. அதனால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்  இரண்டு மாதங்களௌக்கு விடுமுறை அறிவித்தது.

விடுமுறையில் ஜசக்  நியூட்டன் தன் வீட்டுத் தோட்டத்தில் சும்மா படுத்திருந்தார்   அப்பொழுது அங்கிருந்த ஆப்பிள் மரத்திலிருந்து ஓர் ஆப்பிள் பழம் கீழே விழுந்தது.  சும்மா இருந்த ஐசக் நியூட்டனின் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. அதுதான் ஆப்பிள் ஏன் மேலே போகாமல் கீழே விழுந்தது என்கிர உலகை உலுக்கிப் போட்ட கேள்வி.

இப்படி விடுமுறையில் சும்மா இருந்த ஐசக் நியூட்டனால்தான் புவியீர்ப்பு விசை கண்டு பிடிக்கப்பட்டது.

ஐசக் நியூட்டன் கேள்வி கேட்பதற்கு முன்பும் மரத்திலிருந்து ஆப்பிள் கீழேதான் விழுந்தது.  எல்லோரும்தான் பார்த்தார்கள்  அவர்களின் மனதில் தோன்றாத கேள்வி ஏன் ஐசக் நியூட்டன் மனதில் தோன்றியது?  அதுதான் சும்மா இருப்பதினால் கிடைக்கும் பயன்.

போதி மரத்துக்கு அடியில் அமைதியாக அமர்ந்து யோசித்தபோதுதானே புத்தருக்கு ஞானம் வந்தது.

குளியலறையில் இருக்கும்போது நிறைய எண்ணங்கல் தோன்றுவதாகவும் தங்களின் பிரச்னைகளுக்கு விடை கிடைத்தாகவும் சிலர் சொல்வார்கள்  ஆர்க்கிமிடீசீஸீக்கு கூட குளியலறையில்தான் ஆர்க்கிமிடீஸ்  கொள்கைக்கான யோசனை வந்தது.

உங்களை நீங்கள் அறிந்துகொள்ளவும் சும்மா இருக்கக் கத்துக்கணும்   இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு ச் சும்மாஇருக்க  கற்றுக்கொடுங்கல்

நன்றி    திருமதி கல்யாணி ஸ்ரீதர்    சென்னை      சினேகிதி

Leave a comment