மானசி ஜோஷி

மானசி ஜோஷி: தடைகளை தாண்டி சாதித்த தங்கமங்கையின் கதை

30 வயதான மானசி கிரிஷ் சந்திர ஜோஷி இந்தியாவின் மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை. மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

2011ல் ஒரு விபத்தில் சிக்கிய பிறகு, மானசியின் ஒரு கால் பறிபோய்விட்டது. “மைதானத்தில் இருந்து பேட்மிண்டன் விளையாடுவது நான் குணமாவதற்கு உதவிகரமாக இருந்தது” என்றார் அவர்.

மானசி ஜோசி (Manasi Joshi) ஒரு இந்திய மாற்றுத்திறனாளி இறகுப்பந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் எஸ்.எல்.3 நிலை மாற்றுத்திறனாளி வீரர்களில் உலகின் முன்னணி வீரராக உள்ளார். [3] இவரது தந்தை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார். ஆறு வயதிலிருந்து தனது தந்தையுடன் மென்பந்தாட்டம் விளையாடத் தொடங்கினார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கே. ஜே. செளமியா பொறியியல் கல்லூரியில் 2010 ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார் ஆவார். 2011 ஆம் ஆண்டில் ஒரு சாலை விபத்தில் தனது இடது காலை இழந்தார்.[4] தனது உறுப்பிழப்பு இருந்த போதும், 2018 ஆம் ஆண்டில் ஐதராபாத்தில் உள்ள பி. கோபிசந்த் மென்பந்தாட்டக் கழகத்தில் பயிற்சிக்காக இணைந்தார்.[5].2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இங்கிலாந்தில் இசுடோக் மாண்டெவில்லெயில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.. அக்டோபர் 2018 இல் இந்தோனேசியாவின் ஜாகர்த்தாவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (2018) வெண்கலப்பதக்கத்தை வென்றார். 2019 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்தாட்ட உலக வாகையாளர் போட்டியில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை வென்றார். 

கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் தனது இடதுகாலை இழந்தவர் மானசி ஜோஷி.   இவர்  ஜெர்மன் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் விளையாட்டால் ஈர்க்கப்பட்டவர் ஆவார்.   இவர் கடந்த 2015 முதல் ஊனமுற்றோர் பாட்மிண்டன் போட்டிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.   இவர் தற்போது நடந்து வரும் ஊனமுற்றோர் பாட்மிண்டன் போட்டியில் இறுதிச் சுற்றை அடைந்தார்.

கடந்த சனிக்கிழமை நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி இறுதிச் சுற்றில் மானசி ஜோஷி மூன்று  முறை சாம்பியன் பட்டம் பெற்ற பருல் பார்மருடன் மோதினார்.   இவர் இறுதிச் சுற்றை அடைந்த போதிலும் ஏற்கனவே பல போட்டிகளில் வெற்றி பெறாததால் அதிகம் எதிர்பார்ப்பு இன்றி இருந்தார்.     அவர் இறுதிச் சுற்றை அடைவார் எனவே பலர் எதிர்பார்க்கவில்லை.

முதலில் இவர் சாதாரணமாக விளையாடிய போதும் படிப்படியாக இவர் விளையாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  இறுதிச் சுற்றில் மானசி ஜோஷி மூன்று முறை சாம்பியனாக இருந்த பருல் பார்மரை 21 ; 12, 21 ; 7 என்னும் செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன்  பட்டத்தைப் பெற்றுள்ளார்.   தனது வெகுநாள் கனவு இப்போது பலித்துள்ளதாக இவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 உலக அளவில் சாதித்த, மற்ற பெண்களுக்கு முன் மாதிரியாகத் திகழும் பெண்களைக் கொண்டாடும் விதமாக அவர்களின் உருவங்களில் பார்பி பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. மானஸி ஜோஷியின் பொம்மையும் இதே போல் தயாரிக்கப்பட்டு தற்போது விற்பனைக்கு வருகிறது. 

பார்பி பொம்மை தயாரிக்கும் நிறுவனம் என்னைப் போன்ற உருவ பொம்மை தயாரித்து வெளியிட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். இது மற்ற பெண்களுக்கு நிச்சயம் முன் மாதிரியாக இருக்கும். அன்றாடம் சவால்களை எதிர்கொண்டு சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு நிச்சயம் ஊக்கமாக இருக்கும்.பார்பி அடல்ட் பொம்மையாக இருந்தாலும், அந்த பொம்மையால் ஈர்க்கப்படுவது குழந்தைகள்தாம். குறிப்பாக, பெண் குழந்தைகள்.

தகவல் நன்றி தின பத்திரிகைகள்

புதிய யுக்திகளின் மூலம் லாபம் அள்ளும் பெண் விவசாயிகள்

லட்சுமிபாய் என்ற பெண்மணி ஹவுரங்காபாத்திலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ள பிதானோரா கிராமத்தைச் சேர்ந்தவர் கல்வியறிவற்ற 40 வயதான் லட்சுமிபாய்.  தன்னுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த விவசாயத்தையே அந்தப் பழைமை மாறாமல் செய்து வந்தார் லட்சுமிபாய்  எனினும் சில வருடங்கள்  விளைச்சல் பெரிதாக இல்லாததால் விளைவிக்கும் முறையில் சிறிய சிறிய மாற்றங்களை அவ்வப்போது பிரிசோதித்து வந்தார் லட்சுமிபாய்.  அப்படி ஒரு முறை டிசம்பர் மாதம் கரும்பு விவசாயத்தை செய்ய முடிவெடுத்தார்.  சாதாரணமாக பின்பற்றும் நடவு முறையை சற்றே மாற்றி ஒரு தண்டுக்கும் மற்றொரு தண்டுக்கும் இடையேயான தூரத்தை ஒன்று முதல் நான்கு அடிவரை அதிகரித்தார்.  அதேபோல் உலர்ந்த மண்ணில் நடவு செய்யவும்  மிகவும் தைரியமாக முடிவு செய்தார்.  நடவுக்குப் பின்னர் தண்ணீர் பாய்ச்சினார்.  அதேபோல் நேராக நடவு செய்யாமல் ஜிக்ஜாக் முறையில் நடவு செய்தார். இந்த முறைக்கு தேவைப்பட்ட தண்ணீரின் அளவானது.  ஏற்கெனவே பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரின் அளவை விட 50% குறைவு. தவிர ஒரு ஹெக்டேர் நிலத்தில் 35 முதல் 40 டன் கரும்பு விளைச்சலையும் பெற்றார்.

அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு பெண் விவசாயியான காந்தாபாயும் தன்னுடைய விவசாய முறையில் சிறிய மாற்றங்களைச் செய்தார்.  ஜிக்ஜாக் நடவுக்குப் பதிலாக நேராகவே நடவு செய்து 30 % தண்ணீரை மிச்சம் செய்து ஒரு ஹெக்டேருக்கு 60 டன் கரும்பை சாகுபடி செய்திருக்கிறார்.

இப்படியான புதுப்புது யுக்திகளின் மூலம் தங்களுடைய கிராம விவசாயிகளின் விளைச்சலை அதிகரித்து அசத்தி வருகின்றனர்.  இந்த பெண் விவசாயிகள்.

 

தகவல் நன்றி   சினேகிதி

இப்படியொரு காதலா?

 

காதல் மனைவியின் புல்லரிக்க வைக்கும் முடிவு

இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் முதலாவது திருமண நாளை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தார் அந்த இளம் மனைவி. அதற்குள் பிப்ரவரி 14 காதலர் தினம் வர அன்று தன் அன்புக்கணவர் முகத்தை ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா என்ற தவிப்புடன் இருந்தார் அவர் அன்புக் கணவரை அன்று பார்க்க முடிந்தது அவரால்  ஆனால் எப்படி? ரத்தக் களறியுடன் உயிரற்ற நிலையில்.

புல்வாமா தாக்குதலை இன்றும் நம்மால் மறக்க முடியவில்லை. அந்தத் தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்ட நமது 44 ராணுவ வீர்ர்களில் ஒருவர்தான் இந்த இளம்பெண்ணின் காதல் கணவர் மேஜர் விபூதி டவுண்டியால்.

இந்த இளம் தம்பதிக்கு 2018 ஏப்ரலில் தான் திருமணமாகி இருந்தது. திருமணமாகி ஒரு வருடம் கூட நிறைவு பெறாத நிலையில் டேராடூனில் இருக்கும் அவர்கள் வீட்டில் இறுதி மரியாதைக்காக மேஜர் விபூதியின் உடல் வைக்கப் பட்டிருந்தது. இளம் மனைவி நிகிதா கணவரின் உடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.  பிறகு விபூதியின் காதருகே சென்று ஐ லவ் யூ என்று சொல்லி அவருக்கு முத்தமிட்டார்.  கடைசியாக ஜெய் ஹிந்த்  என்று வீரத்துடன் முழக்கமிட்டார்.  அங்கிருந்தவர்கள் மட்டுமல்ல அந்த நிகழ்வை டி வி யில் பார்த்துக்கொண்டிருந்த அனைவருமே அதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கலங்கி விட்டார்கள்.

இப்போது நிகிதா கணவர் பணிபுரிந்த ராணுவத்தில் தானும் பணிபுரிய வேண்டும் என்று முடிவெடுத்து கணவர் இறந்த ஒரு வருடத்துக்குள் அதற்கான பிராசஸை முடித்து இருக்கிறார்.

காஷ்மீரில் பிறந்த நிகிதா டெல்லியில் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.  தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை ராஜினமா செய்துவிட்டு குறுகிய கால பணித் திட்டத்தின் கீழ் ராணுவ அதிகாரியாவதற்கான எழுத்து தேர்வை எழுதினார். இப்போது தேர்விலும் வெற்றி பெற்று தகுதிப் பட்டியல் அறிவிப்புக்கும் ராணுவப் பயிற்சிக்கும் காத்துக் கொண்டிருக்கிறார்.

தாக்குதல் நடந்து ஒரு வருடம் ஆன நிலையில் நிகிதாவின் இந்த முயற்சியும் விடாப்படி கொள்கையும் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.  கணவரின் ராணுவ உடையை அணிந்து அதே ராணுவத்தில் சேர வேண்டும் என்பதை ஒரே லட்சியமாக கொண்டுள்ள நிகிதா நிச்சயம் அவரை நான் பெருமைப்படுத்துவேன். நான் வாழும் வரை எங்கள் காதலும் வாழும் அவர் இருந்த இந்த ராணுவத்தளத்தில் நான் இருக்கும்போது அவர் என் கூடவே இருப்பது போல உணர்கிறேன். என்னுடைய இந்த முடிவுதான் நான் அவருக்கு செலுத்தும் நிஜமான அஞ்சலி என்று சிலிர்க்க வைக்கிறார்.

 

தகவல் நன்றி   சினேகிதி

தடைகளைத் தாண்டி வந்த ஃபேஸ்புக் இந்தியா சி ஈ ஓ

 

இந்தியாவில் பிறந்த வளர்ந்த கீர்த்திகா ரெட்டிதான் இன்று ஃபேஸ்புக் சி ஈ ஓ.

மகாராஷ்டிராவில் கல்லூரி படிப்பை முடித்தவர் கீர்த்திகா. சிறு வயதிலிருந்தே நடுத்தர வர்கத்துக்குரிய பல்வேறு தியாகங்களை செய்தே தன்னுடைய படிப்பை முடித்தார். பின்பு அமெரிக்காவில் எம் பி ஏ மற்றும் எம் எஸ் படிப்பை முடித்து அங்கேயே ஒரு மல்டி நேஷனல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.  அந்த நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு பிரபல ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.  ஃபேஸ்புக்கை பொறுத்தவரை இந்தியாவின் உலகளாவிய செயல்பாட்டில் கீர்த்திகாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.  அதே நேரம் ஒரு இந்தியராக அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதும் தங்குவதும் கீர்த்திகாவுக்கு பெரிய சவாலாக இருந்தது. எனினும் தன்னுடைய குணத்தையும் சுபாவத்தையும் எதற்காகவும் மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய வேலையை மட்டும் குறிக்கோளாக வைத்து முழு ஈடுபாட்டுடன் பணி செய்தார். இதுவே இந்தியாவிற்கான ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியாக இவரை உயர்த்தியது.  ஃபேஸ்புக் இந்தியாவின் சி ஈ ஓ வான கீர்த்திகா இந்தியாவில் மிகவும் செல்வாக்கு மிகுந்த பெண்களில் ஒருவராக இருக்கிறார் இன்று.

தகவல் நன்றி  சகி    சினேகிதி

இந்தியாவை பெருமைப்படுத்தும் இளம் புயல்

 

பதினைந்தே வயது பள்ளி பருவம் என்பதைத் தாண்டி தனது திறமையால் நாட்டைப் பெருமைப்படுத்துவதையே குறிக்கோளாக கொண்டு தந்து கடின உழைப்பால் முன்னேறிக்கொண்டிருக்கிறார் இளம் வீராங்கனை ருத்திகா.

தன்னுடைய கடின முயற்சியால் 20க்கும் மேற்பட்ட தேசிய உலகளாவிய தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெள்ளி வெண்கலப் பதக்கங்கலை வென்றுள்ளார் இந்த இளம் புயல் அவரைச் சந்தித்தோம்.

நான் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பள்ளியில் 10வது படிக்கிறேன்.  என்னோட அக்கா வர்ஷினியைப் பார்த்துதான் எனக்கும் ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் வந்தது. அவங்க இப்போ நேஷனல் லாங் ஜம்பர்.  எங்கப்பா வாலிபால் பிளேயர்.  அவர்தான் அக்காவை ஸ்போர்ட்ஸ்ல் சேர்த்தார்.  அக்காகூட சேர்ந்து நானும் ஓடுவேன். அப்புறம் என்னையும் என்னோட பேரண்ட்ஸ் ரன்னிங்கல சேர்த்து விட்டாங்க   7 வயசுல இருந்து ரன்னிங் போட்டிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன்.

என்னோட முதல் கோச் ராஜசேகர் சார் அவர்தான். என்னைய முதன் முதலா டிரெயின் பண்ண ஆரம்பிச்சாரு. முதன் முதல்ல இது மாதிரி போட்டிகள்ல கலந்துக்கிறப்போ கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. 2018ல நான் ரொம்ப ஷைனாக ஆரம்பிச்சேன்  இப்போ என்னோட கோச் வேன் பெப்பின்ட்.  அவர் முன்னாள் இன்டர் நேஷனல் லாங் ஜம்பர்.  என்னோட இன்ஸ்பிரேஷனே என்னோட கோச்தான்   14 வாய்திற்குட்பட்ட பல ஓட்டப்பந்தய போட்டிகள்ல கலந்துகிட்டு வின் பண்ணியிருக்கேன். சென்னையளவிலான மாவட்ட

100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வெள்ளிப்பதக்கமும் நீளம் தாண்டுதல்ல தங்கப்பதக்கமும் ஜெயிச்சேன்.  அதேபோல் மதுரையில் நடந்த மானில அளவிலான ஓபன் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் தங்கமும் நீளம் தாண்டுதல்ல வெள்ளியும் ஜெயிச்சேன். அடுத்த ஸ்டெப்பாக ராஞ்சியில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் தடகள போட்டியில் வெள்ளியும் நெய்வேலியில் நடந்த மானில அளவிலான போட்டியில் 100 மீட்டர் 200 மீட்டர் மற்றும் ரிலே ஆகிய மூன்று போட்டிகள்லேயும் வெள்ளி வென்றேன்.  அதை தொடர்ந்து தேசிய அளவில் மற்றும் உலகளவில் 20 போட்டிகளுக்கு மேல பங்கு பெற்று தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை ஜெயிச்சிருக்கேன்.  இப்போ கடைசியா அசாமில் நடந்த கேலோ இந்தியா தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெளிப் பதக்கம் வென்றேன்.  இந்தப் போட்டியில் பந்தய தூரத்தை 12.26 நொடிகள் கடந்து புதிய சாதனையை படைச்சிருக்கேன் என்று சொல்லும் ருத்திகாவின் குறிக்கோள் 2022 ஒலிம்பிக்சில் பங்கேற்பதுதானாம். குமுதம் சினேகிதியின்  வாழ்த்துக்கள் ருத்திகா.

 

தகவல் நன்றி   சகி   சினேகிதி

இயற்கை விவசாயத்தில் அசத்தும் பாட்டி

 

அந்தக் காலத்தில் நாங்கேல்லாம்………………… என்று பழம் பெருமை பேசி திரிபவர் அல்ல  இந்த மூதாட்டி   அவருக்கு அதற்கான நேரமும் இல்லை என்று தான் சொல்லணும்.  காரணம் இவர் தனது உடல் உழைப்பால் பூமித்தாயை ரசாயன உரம் என்ற விஷத்தில் இருந்து காத்து வருகிறார் மூதாட்டி கிருஷ்ணம்மா. 70 வயதிலும் சுறுசுறுப்பாக வயலில் இறங்கி நாற்று நடுகிறார்.  களை பறிக்கிறார்.

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த இவர் தனது தந்தை காலத்தில் இருந்தே விவசாயத்தை கவனித்து வருகிறார். 6 ஆண்டுகளுக்கு முன் இவரது பக்கத்து வயலை சேர்ந்த மகேஸ்வரன் வெளி நாட்டில் கை நிறைய சம்பளம் பெற்று வந்த தனது வேலையை விட்டு விட்டு இயற்கை விவசாயம் செய்ய திரும்பி வந்தபோது தான் சுரீர் என தனக்கு வலித்ததாக கூறுகிறார் கிருஷ்ணம்மா.

இது நாள் வரை ரசாயன உரம் கொண்டு தான் நான் விவசாயம் செய்து வந்தேன்.  ஆனால் மகேஸ்வரன் தான் இந்த ரசாயனம் மூலம்  நம் பூமித்தாய்க்கு கெடுதல் செய்து வருகிறோம் என்று எனக்கு உணர்த்தினார்.  நாம் சாப்பிடும் அரிசி மெல்ல சாகடிக்கும்  விஷமாக உள்லது. எனவே ரசாயன கலப்பற்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி உணவு தானியங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நான் உறுதி எடுத்தேன். என்றவர் பாரம்பரிய முறையில் நெல் விவசாயத்துக்கான 2018—19 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் முதல் பரிசை வென்றுள்ளார்.

அதிக மகசூல் மட்டுமின்றி செழிப்பாக பயிர் வளர இயற்கை உரங்களான ஜீவாமிர்தம். பஞ்சகவ்யம்  அக்கினி அஸ்திரம் என்ற பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி நெல் மகசூல் செய்கிறோம்  தொடக்கத்தில் குப்பைகள் அடித்து நிலத்தை வளமாக்குவோம்.  பின்னர் ஆட்டு கிடை வைப்போம்.  எட்டு அடி உயர வளரும் காட்டுயாணம் முதல் கருத்தகார்  பூங்கார் கிச்சடி சம்பா  சொர்ணமயூரி  சொர்ணகிச்சலி போன்ற ரக நெற்பயிர்களை பயிரிட்டு வருகிறேன்  ஆரம்பத்தில் மகசூல் குறைவாக கிடைத்தாலும் ஐந்தாண்டுகளில் நிலம் செழிப்படைந்து விடுவதால் தொடக்கத்தில் இருந்ததைவிட ஐந்து மடங்கு மகசூல் கிடைக்கிறது. ஆர்கானிக் காய்கறிகள்  என்ற பெயரில் சென்னை போன்ற நகரங்களில் மாட்டுச்சாணம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவித்த காய்கறிகளை விற்பது போல் இந்த நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை விற்பனை செய்கிறோம்.  இந்த இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கும் நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி நம் உடலை ஆரோக்கியத்துடன் வாழ வழி செய்யும்.

கடந்த பிப்ரவரி மாதம் சேலம் தலைவாசலில் நடைபெற்ற கால் நடை கண்காட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாரம்பரிய முறையில் அதிக மகசூல் பெற்றதற்கான முதல் பரிசை பெற்றது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்.  எனது சேவையை பாராட்டி நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் எனக்கு பரிசு வழங்கினார்.  நான் உற்பத்தி செய்யும் அரிசியை கிலோ ரூ 70 முதல் 80 ரூபாய்க்கு விற்கிறேன்.  இது தவிர வள்ளியூர் வட்டார மகேந்திர கிரி பாரம்பரிய விவசாயிகள் சங்கம் அமைத்து அதில் நானும் எனது மகன் முருகனும் உறுப்பினர்களாக உள்ளோம். என் போன்று இயற்கை விவசாயம் செய்ய முன்வருவோருக்கு வழிகாட்டியாக  இருக்கிறோம். டாக்டர் எம் ஜி ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் பட்டமும் எனக்கு தமிழக முதல்வர் வழங்கியது என் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார் கிருஷ்ணாம்மாள்.

 

தகவல் நன்றி   கோமதி பாஸ்கரன்  தோழி

பாவையர் போற்றுதும் அறிவிக்கப்படாத தலைவர்

 

ஏஞ்ஜெலா மேர்க்கெல்

2005 நவம்பரிலிருந்து ஜெர்மனியின் உச்சமான வேந்தர் பதவியை வகித்து வருகிறார். ரஷ்ய மொழியில் இவர்  சரளமாக பேசுவது கண்டு ரஷ்யர்களே வியந்த்துண்டு.  ஐரோப்பிய யூனியனின் அறிவிக்கப்படாத தலைவர் என்று இவரைக் குறிப்பிடுவார்கள். உலகின் மிக சக்தி படைத்த பெண்மணி என்றும் இவர் அறியப்படுகிறார்.  2007ல் ஐரோப்பியக் குழுவின் தலைவராக இருந்தபோது லிஸ்பன் உடன்படிக்கை மற்றும் பெர்லின் டிக்லரேஷன் ஆகியவை உருவாவதில் மிக முக்கிய பங்கு வகித்தார்.  அட்லாண்டிக் பகுதியிலுள்ள நாடுகளில் பொருளாதார உறவு மேம்பட மிகவும் மெனக்கெட்டார்.  வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி ஓர் அசாதாரண தைரியம் கொண்ட இவர் சிறு வயதில் சவால்களை எதிர்கொள்ள மிகவும் தயங்குவாராம்  [ ஒன்பது வயதில் ஜிம் வகுப்புகளில் சேர்க்கப்பட்டார். உடலைப் பதப்படுத்தும் வகையில் டைவிங் செய்வதற்காக டைவிங் போர்டில் ஏறியவர் சுமார் 45 நிமிடங்களுக்குத் தண்ணீரில் குதிக்காமலேயே மேலேயே நின்று கொண்டிருந்தாராம். ]

தகவல் நன்றி    மங்கையர் மலர்

பாவையர் போற்றுதும் இரும்புத்தூண்   

சின்னப்பிள்ளை

மதுரை மாவட்டத்தில் உள்ள பில்லுச்சேரி என்ற சிறு கிராமத்தில் வாழும் சின்னப்பிள்ளை தேசிய அளவில் அறியப்பட்டவர். மகளிர் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் ஸ்த்ரீசக்தி எனும் விருதை அவருக்கு வழங்கிய அன்றைய பிரதமர் வாஜ்பாய் சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார் என்பது உலகச்செய்தி. பல பெண்களின் வீடுகளில் ஏழ்மையைத் துடைத்தெறிந்த இரும்புத்தூண் களஞ்சியம் என்னும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கிராமப்புற பெண்களுக்கிடையே சிறு சேமிப்புப் பழக்கத்தை வெற்றிகரமாக நிறுவியவர் சின்னப்பிள்ளை. எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றாலும் இவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அசாதாரணமானவை   நில உரிமையாளர்களைச் சந்தித்து விளை நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து விவசாய கூலியாட்களைத் திரட்டி விவசாயம் செய்து அதன் பலனைப் பங்கிட்டு வழங்கினார்.  சுனாமி தமிழகத்தை தாக்கியபோது சின்னப்பிள்ளை தலைமையில் அணிதிரண்ட மகளிர் மீட்புப் பணி முக்கிய பங்காற்றியது. இன்று தமிழ் நாடு உட்பட 12 மானிலங்களை சேர்ந்த கூட்டமைப்புகளுக்கு இவர் தலைவர்  பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

தகவல் நன்றி    மங்கையர் மலர்.

பாவையர் போற்றுதும் தன்னம்பிக்கை வீராங்கனை

 

மேரி கோம்

உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் ஐந்து முறை தங்கப் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றார்.  தன் சாதனையை மற்றவர்கள் மீறவோ முறியடிக்கவோ முடியாது என்ற தன்னம்பிக்கையின் காரணமாகவோ என்னவோ தன் சுயசரிதைக்கு  UNBREAKABLE என்று பெயரிட்டிருக்கிறார்.  மணிப்பூரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் குத்துச்சண்டை பெண்களுக்கானது அல்ல என்பதில் இவர் அப்பா பிடிவாதமாக இருந்ததுதால் அவருக்குத் தெரியாமல் பயிற்சி எடுத்துக்கொண்டாராம். மானில அளவில் குத்துச்சண்டை சாம்பியன் ஆகி இவர் புகைப்படம் நாளிதழில் வந்ததைப் பார்த்துதான் அப்பாவுக்கு விஷயமே தெரியுமாம். குழந்தையை வச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும் என்று அலுத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஒரு தகவல்  மேரி கோமுக்கு மூன்று குழந்தைகள்.

தகவல் நன்றி    மங்கையர் மலர்.

 

பாவையர் போற்றுதும் மங்கள்யான் மங்கை

நந்தினி ஹரி நாத்

பெங்களூரிலுள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முக்கிய ராக்கெட் விஞ்ஞானிகளில் ஒருவர்.  சிறு வயதில் தொலைக்காட்சியில் வெளியான ஸ்டார் ட்ரெக் தொடர்தான் இவருக்கு அறிவியலில் உந்துதலை அளித்ததாம்.  கடந்த இருபது வருடங்களில் இஸ்ரோவில் பதினான்கு மிஷன்களில் பங்கேற்றிருக்கிறார்.  திட்ட மேலாண்மை ஆளுனர் திட்ட வடிவமைப்பாளர்   செயல்பாட்டுத்துறை துணை இயக்குனர்  என்று மங்கள்யான் தொடர்பான பல நிலைகளில் பணியாற்றி இருக்கிறார்.  மங்கள்யான் என்பது இஸ்ரோவுக்கு மட்டுமல்ல  இந்தியாவுக்கே பெருமை சேர்த்த முயற்சி    வானியலில் இந்தியாவோடு கூட்டமைத்துக்கொண்டு செயல்பட வெளி நாடுகள் தயாராக இல்லை என்பது தவறான கருத்து என்கிறார் நந்தினி.

தகவல் நன்றி     மங்கையர் மலர்