அஜீரணமா    மருந்து இதோ

மாம்பழம் அதிகம் சாப்பிட்டு அஜீரணம் என்றால் பால் சாப்பிடவேண்டும்.

நெய் சாப்பிட்டு அஜீரணம் என்றால் எலுமிச்சைச் சாறு பருக வேண்டும்.

கேக் சாப்பிட்டு அஜீரணம் என்றால் வென்னீர் அருந்த வேண்டும்.

பால் சாப்பிட்டு அஜீரணம் என்றால் வாழைப்பழம் சாப்பிடவேண்டும்.

தேங்காய்பால் அஜீரணம் என்றால் அரிசியை சிறிது மென்று தின்றால் சரியாகும்.

பருப்பினால் அஜீரணம் என்றால் சிறிது சர்க்கரை சாப்பிட வேண்டும்.

பப்பாளிபழம் சாப்பிட்டதால் அஜீரணம் என்றால் தாராளமாக தண்ணீர் குடியுங்கள் குணமாகும்.

Advertisements

*வெந்தயம்*

வெந்த+அயம்
அயம் என்றால் *இரும்பு*

உடலுக்குத் தேவையான அதிகப்படியான இரும்புச் சத்தைக் கொண்டது *வெந்தயம்*   சூடா *வெந்தய_டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?*    வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள். எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை.  அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம். 

அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.  அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது.   சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.      அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும்
*வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உணவில் சேர்ப்பது என நீங்கள்  செய்திருப்பீர்கள்* 

வெந்தயத்_தேநீரை குடித்திருக்கிறீர்களா?
அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?   இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும்,
அதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.
*தயாரிக்கும் முறை*   ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் #வெந்தயத்தை சிறிது சேர்த்து,
மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி,
*தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்*

வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :
*குடலை_சுத்தமாக்க :*குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.  குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.  நச்சுக்களை உடலில் தங்க விடாது.
*ரத்தசோகை_போக்க*  இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள்.
மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த #வெந்தய_டீ அருமருந்தாகிறது.
*மாதவிடாய் வலிக்கு :*மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும். அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும்.   இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

*டீன் ஏஜ் பெண்கள் :*பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.
பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.  *தாய்ப்பால் அதிகரிக்க :*முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது.
தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.  *கொழுப்பு கரைய :*
கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள்.
இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும்.
மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.
*மலச்சிக்கல் :*வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும்.
நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.   *உடல் எடைக்கு :*வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது. அதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது.  *இதய நோய்கள் :*தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம். இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.   *அசிடிட்டி :*அதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.அவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது.
இது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது. இதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கபப்டுகிறது.
*சர்க்கரை வியாதி :*தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம்.  அவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது.  சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
*கூந்தல் வளர்ச்சி :*
இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு. தினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள். முடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது.  *பித்த நோய்கள் :*நிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள். இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

 

நன்றி   வாட்ஸ் அப்

வேம்பு

நிம்பம்  அரிட்டம்  பாரிபத்திரம்  போன்ற சிறப்பு பெயர்களையுடைய வேம்பு வைதீஸ்வரன் கோயிலின் தல விருட்சமாகவும் அம்மன் கோயிலை அலங்கரிப்பதாகவும் உள்ளது.

வேப்பமரம் நோய் தடுப்பானாக இருந்து காற்றை சுத்தப்படுத்தி காற்றினால் பரவும் பலவிதமான விஷக் கிருமிகளிடமிருந்து நம்மைக் காக்கிறது. அது மட்டுமில்லாமல் வேப்ப மரம் மனதிற்கு அமைதியையும் உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.   வேப்ப மரத்திலிருந்து உண்டாகும் காற்று கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தைக் குறைத்து ஈடு இணையற்ற குளுமையை தரவல்லது.  மேலும் காகங்கள் விரும்பிக் கூடு கட்டும் மரமாகவௌம் அவை விரும்பி உண்ணும் பழமாகவும் வேப்பம் பழம் உள்ளது. இம்மரம் விரைவில் தழைத்து வளரக்கூடியதாகவும் நூற்றாண்டு தாண்டி வாழக்கூடியதாகவும் உள்ளது.  கோயில்களில் மட்டுமல்லாமல் சாலையோரங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களான விளையாட்டு அரங்கங்கள் கல்வி நிறுவனங்கள்  மருத்துவமனைகள் அலுவலக வளாகங்கள் போன்ற இடங்களிலும் அதிகமாக வேப்ப மரங்கள் வளர்க்கப்படுவதை காணலாம்.

சீதத்தால் உண்டாகும் விஷ ஜூரங்களைத் தடுக்கும் தன்மை இம்மரத்திற்கு உண்டு என்கிற நம்பிக்கையால் வேப்பமரங்கள் எல்லையோரங்களில் அதிகமாகப் பயிரப்பட்டு வளர்க்கப்படுகின்றன.  நாட்டு வேம்பு மட்டுமல்லாது கருவேம்பு  சர்க்கரை வேம்பு மலை  வேம்பு என்கிற வகைகளும் உண்டு.

மேலும் வேப்ப மரத்தை மஞ்சள் குங்கும்ம் இட்டு தெய்வமாக வழிபடுவதை நம் ஊரில் பார்க்க கூடும்.  அதுமட்டுமில்லாமல் வீட்டின் பூஜை அறையில் வேப்பிலையை மஞ்சள் நீரில் வைத்து பூஜிப்பதும் உண்டு.

மருத்துவ பயன்கள்

வேம்பின் இலை பூ காய் கனி வித்து நெய் புண்ணாக்கு மரப்பட்டை வேர்ப்பட்டை பிசின் ஈர்க்கு ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவ பயனுடையவை\

வேப்ப மரத்தின் துளிர் முதிர்ச்சியான இலை ஆகிய இரண்டையும் இடித்து அதன் அளவிற்கு அரைப்பங்கு ஓம்மும் உப்பும் சேர்த்து பொடித்து காலை மாலை எடுத்துக்கொண்டால் கண்ணிலிருக்கும் படலமறைப்பு  காமாலை புழுவெட்டு முதலிய நோய்கள் தீரும்.

வேப்பிலையை நீர் விட்டு அரைத்து களிபோல் கிளறி மேலுக்குப் போட வீக்கம் நாட்பட்ட புண் தோல் நோய்கள் தீரும்.

வேப்பம் பூவைக் குடினீரில் இட்டுக் குடிப்பது குன்ம  நோய்க்கு சிறந்தது. வேம்பு கசப்பான மூலிகையாயிருந்தாலும் பித்தப்பையில் நிறைந்த பித்த நீரை வெளியேற்றி காமாலையைப் போக்கும்  தன்மையுள்ளது.

வேப்பிலையை மஞ்சள் சேர்த்து வென்னீர் விட்டு அரைத்து சாற்றினை கரப்பான்  சிரங்கு போன்ற தோல் நோய்களுக்குப் போட அவை விரைவில் குணமாகும்.  வேப்பிலை மற்றும் புளிய இலையைச் சுத்தம் செய்து நீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரினைக் கொண்டு புண்களைக் கழுவ புண்கள் விரைவில் ஆறும்.  வேப்பம் பூவை நெய்விட்டு வதக்கு அதனுடன் புளி வரமிளகாய் கல்லுப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட நாவறட்சி  சுவையின்மை குணமாகும்  வயிற்று புழுக்கள் வெளியேறும்.

வேப்பம் பூவை  நெய்யில் வறுத்து பொடி செய்து மிளகு ரசத்தைக் கொதிக்க வைத்து இறக்கி வேப்பம்பூ பொடியைத் தூவி சிறிது நேரம் மூடி வைக்கவும்   இவ்வாறு செய்த ரசத்தை உணவோடு உட்கொள்ள வாந்தி  ஏப்பம் போன்றவை படிப்படியாக குறையும்.  நாட்பட்ட பழைய வேப்பம்பூ மருந்திற்கு மிகவும் உகந்தது

வேப்பம் பூவை வெல்லம் சேர்த்து மாங்காய்ப் பச்சடி செய்வது போல செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் .

நாம் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் உலர்த்திய வேப்பிலை சிறிதும் வசம்புத் துண்டும் போட்டு வைக்க அரிசியை பூச்சிகள் அண்டாது.  வேப்ப எண்ணெயில் இரண்டு பூண்டு பல் தட்டி தாளித்து தலையில் தேய்த்து 10 நிமிடம் ஊறவைத்து குளிக்க பேன் பொடுகு நீங்கும்.

எருக்கன் இலையை வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுக்க நரம்புவலி உடல் குத்து தணியும்.  வேப்பம் புண்ணாக்கை பொடி செய்து சூடாக்கி மூட்டைக்கட்டி ஒத்தடம் கொடுக்க கழுத்து வலி முதுகுவலி தீரும்\

வேப்பிலையோடு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பூச அக்கி மற்றும் அம்மை புண்கள் விரைவில் குணமாகும்  வேப்பங்குச்சியை வைத்து பல் சுத்தம் செய்ய பற்கள் பளிச்சிடும்   ஈறுகள் பலம் பெறும்.

 

நன்றி     இயற்கை மருத்துவர்   எஸ்  நந்தினி

 

சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!!

1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்

2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்

3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்

4. பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும்

5. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.

6. மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.

7. சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.

8. பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும், அம்மன் அரிசி பச்சிலையின் சாறை தினமும் பருக்களின் மேல் தடவி வந்தாலும் பருக்கள் மறையும்.

9. கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.

நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.

நோயும் தீர்வும் 2

 

.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி 

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

நோயும் தீர்வும்  1

 

. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்

ஆகாயத் தாமரை

ஆகாயத்தாமரை என்ற அழகான இந்த மூலிகைக்கு அந்தரத்தாமரை  வெங்காயத்தாமரை குளிர்த்தாமரை குழித்தாமரை ஆகாயமூலி போன்ற பெயர்களும் உண்டு. இந்த்த் தாவரத்தின் தண்டுகளில் காற்று நிரப்பப்பட்டிருப்பதால் இது நீரில் மிதந்தபடியே வாழ்கிறது. ஊதா நிறப் பூக்களைக்கொண்ட இது நீரில் கூட்டம்கூட்டமாக வாழும் சிறு செடி வகை.

ஆகாயத்தாமரையின் இலையை அரைத்து கரப்பான் எனும் சரும நோய்  தொழு நோய் புண்களின் மேல் வைத்துக் கட்டினால் விரைவில் குணமாகும். பத்து ஆகாயத்தாமரை இலைகளை நீரில் போட்டு கொதிக்கவைத்து அதன் ஆவியை ஆசனவாயில் பிடித்து வர மூல முளை மறைந்து விடும்.

வெண்ணெய் அல்லது பசு நெய் அரை டேபிள் ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு டேபுள் ஸ்பூன் ஆகாயத்தாமரை இலைப்பசையை சேர்த்து பச்சை வாசனை  போகும்வரை கொதிக்கவைக்கவும். அதன்பிறகு அதை வடிகட்டி குடித்து வந்தால் கழிச்சல்  ரத்த மூலம் சிறு நீருடன் ரத்தம் க்லந்து போவது போன்ற பிரச்னைகள் சரியாகும்.

ஆகாயத்தாமரை இலைச்சாறு அரை லிட்டர் நல்லெண்ணெய் ஒரு லிட்டர் சேர்த்து சிறு தீயில் மெழுகு பதமாகும் வரை காய்ச்ச வேண்டும். அதனுடன் கிச்சிலிக்கிழங்கு  சந்தனத்தூள்  வெட்டி வேர்  கஸ்தூரி மஞ்சள்  சாம்பிராணி தலா பத்து கிராம் எடுத்து இடித்துப்போட்டு மீண்டும் காய்ச்ச வேண்டும். இதை வடிகட்டி வைத்துக்கொண்டு வாரம் ஒரு நாள் தலையில் தேய்த்து குளித்து வர உடல் சூடு கண் எரிச்சல் மற்றும் மூல நோய் போன்றவை குணமாகும்.

இதன் இலையை சுத்தமாக தேய்த்துக் கழுவி சாறு பிழிந்து 20 மிலி அளவு எடுத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் வெங்காயச்சாறு பிழிந்து இரண்டு வேளை குடித்து வந்தால் சொட்டு மூத்திரம் நீர்க்கடுப்பு கட்டுப்படும்.

ஆகாயத்தாமரையின் நார் போன்ற வேர்கள் தண்ணீரில் கலந்துள்ள உலோக வடிவிலான நச்சுப்பொருட்களை எளிதாக உறிஞ்சி தனக்குள் சேமித்து வைக்கக்கூடியது. இதன் காரணமாக தண்ணீர் மாசுபடாமல் காக்கிறது. மாசு நிறைந்த நீரில் உள்ள ஆகாயத்தாமரையில் ஈயம் ஆர்சனிக் போன்ற நச்சுத் தன்மைகளை நீக்க அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.