நகைச்சுவை இரட்டையர்

அமெரிக்காவில் ஹாலிவுட் சினிமாக்களை நகைச்சுவையால் கலகலக்க வைத்த நடிகர்கள் லாரல்  ஹார்டி இரட்டையராக கலக்கினர்.  இதில் ஹார்டி எதையும் அலட்சியமாக அணுகுவார். சினிமா படப்பிடிப்பு நடக்கும்போதே நண்பர்களுடன் கோல்ப் விளையாட சென்று விடுவார். இருவரும் இணையும் முன்பே 50க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தார் லாரல். 250க்கும் அதிகமான படங்களில் நடித்து பிரபலமாகி இருந்தார் ஹார்டி. இருவரும் 1971 முதல் இணைந்து நடித்தனர்.

நகைச்சுவை மேடை நாடகங்களில் இணைந்து நடித்தனர்.  ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து அயர்லாந்து ஸ்காட்லாந்தில் பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர். மொத்தம் 107 படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.  இணைந்து நடித்த ‘ தி மேஜிக் பாக்ஸ் ‘ என்ற படம் ஆஸ்கார் விருது பெற்றது.  இங்கிலாந்து கீயூம்பிரியா யுல்வர் ஸ்டன் பகுதியில் ஒரு இரும்புத்தூணில் இருவரும் சாய்ந்துள்ளது போல் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தகவல் நன்றி   சிறுவர் மலர்.

நேர்மையான மனைவி

ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார்.அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார்.மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள்.
அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்து விட்டாயா” என்று கேட்டாள்.அதற்கு அந்த நேர்மையான மனைவி, ”அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும்.?
அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன்.அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றாள்.*புத்திசாலி மனைவி.*

கொரோனா கால திருமண வைபவம்

பெண் பார்க்கும் படலம்
*** என்னடா, பொண்ண நல்லா பாத்தியா? அப்புறம், அது சரியில்ல, இது சரியில்லன்னு சொல்லக்கூடாது.
ஆமா, இங்க தெரியறதே கண்ணு மட்டும் தான்.  மாஸ்க்கை எடுக்க சொல்லுங்கப்பா.
***
இங்க உட்கார்ந்திருக்கிறவங்களில் யாரு மாப்பிள்ளைன்னு பொண்ணுக்கு தெரியலையாம்.
மாப்பிள்ளை பையன் எந்த கலர் மாஸ்க் போட்டுருக்கார்னு சொன்னா சௌகரியமா இருக்கும்.
*** என்னடா இது உன்னோட கல்யாண பத்திரிகைல மாஸ்க் குமார் வெட்ஸ் மாஸ்க் ப்ரீதா ன்னு ப்ரிண்ட் பண்ணியிருக்கு?
என்ன பண்றது? கல்யாணத்துக்கு பர்மிஷன் அப்பதான் கிடைக்குமாம்.
**** இந்த புடவை கடைல கல்யாண புடவை வாங்கறவங்களுக்கு புடவைக்கு மேட்சா நாலு பட்டு மாஸ்க்கு ஃப்ரீயாம்.  இங்கயே வாங்கிடலாம்பா.
அப்படியே மாப்பிள்ளை பட்டு வேஷ்டிக்கும் மாஸ்க் இருக்கான்னு கேளு.  இல்லாட்டி அங்க வஸ்திரத்தை கிழிச்சு தைக்க வேண்டியிருக்கும்.
****
மனைவி : என்னங்க, நம்ம பொண்ணு கல்யாணத்திற்காக நகை சீட்டு கட்டியிருந்தோம் இல்ல, அதுக்கு குலுக்கல்ல வெள்ளி மாஸ்க் ப்ரைஸ் கிடச்சிருக்கு.  சீர் வரிசைல இத பாத்து எல்லாரும் மூக்கு மேல விரல் வைக்க போறாங்க!
கணவன் :  மெதுவா பேசு, இப்பத்தான் அந்த கார்ப்பரேஷன் பையன் வந்து, வாய், மூக்கு, கண் மேல விரல் படக்கூடாதுன்னு சொல்லிட்டு போனான், அப்புறம் நம்ம இரண்டு பேரையும் குவாரன்டைன்ல போட்டுற போராங்க.
*** மனைவி :  என்னங்க, நாளைக்கு எதிர் வீட்டு மாலதி பொண்ணுக்கு கல்யாணமாம். Zoom Invite அனுப்பிச்சிருக்காங்க.
அறுசுவை நடராஜன் சாப்பாடு Swiggy-ல ஆர்டர் பண்ணியிருக்காங்களாம்.
இப்பத்தான் மாலதி வாட்ஸப்பில் மெசேஜ் பண்ணா.
கணவன் : அப்போ நான் Google Pay -ல் பணம் கிஃப்ட் பண்ணிடறேன்.
*** வாத்தியார் : சீக்கிரம் பொண்ண மாஸ்க் மாத்திண்டு வர சொல்லுங்கோ. முகூர்த்தத்திற்கு நேரமாரது.
*** பெண்ணின் அம்மா : சம்பந்தி அம்மா, என்ன இது? இவ்வளவு மாஸ்க்கு ஒரே சமயத்தில் கேட்டா, நாங்க என்ன செய்வோம்?  அதுவும் ஒரே கலரில் வேற கேக்கறீங்க!
ரவிக்கை துணி கூட வேற வேற கலரில் தான் கிடைக்கும்.
***
கல்யாண பெண்ணின் அத்தை :
என்னங்க, ரெடியாகிட்டீங்களா? நம்மோட அலாட்டட் டைம் 10:30 டு 10:45, அதுக்குள்ள நாம மாப்பிள்ளை பெண்ணை ஆசிர்வாதம் பண்ணிட்டு ரூமுக்கு வந்துடணும். Social distancing எல்லாம் நல்லா தான் ப்ளான் பண்ணிருக்கா !
அத்திம்பேர் : அது சரிடி, ஆனா,  மாஸ்க் போட்டுண்டு நாம போகும் போது அவா ரெண்டு பேருக்கும் அத்தைனு தெரியுமா இல்ல சித்தினு தெரியுமா?  குழப்பமா இருக்குமே?
****
பெண்ணின் அக்கா தன் கணவரிடம் :
ஏங்க, அங்க மூலையில மாஸ்க் போட்டுண்டு தனியா சேரில் உட்கார்ந்திருக்காரே அவர் யாரு, உங்க ஃப்ரெண்டா? ஜுஸ் எல்லாம் கொடுத்து கவனிக்கிறீங்களே!
கணவர் : அவர் தினமும் நம்ம வீட்டிற்கு காலையில் வந்து “எல்லாரும் நல்லா இருக்கீங்களா”ன்னு கேட்பாரே, அந்த பையன் தான்.  இன்னிக்கு நம்ம வீட்டில் ஸ்பெஷல் ட்யூட்டியாம். அதான், செக் பண்ண வந்திருக்காரு.
***மனைவி : என்னங்க, ரிடர்ன் கிஃப்ட் கொரியர்ல அனுப்பிச்சிருக்காங்க.
ஒரு பாட்டில் சானிடைசர், நாலு மாஸ்க்கு, ஹேண்ட் வாஷ் ஒண்ணு. நல்ல ஐடியா இல்ல !
கணவன் : இரு இரு. அதையெல்லாம் அப்படியே ஓரமா வச்சிட்டு, நீ முதல்ல நம்ம வீட்டு சோப்பில ஹேண்ட் வாஷ் பண்ணு.
****
  நன்றி         Aruna Sathyamurthy

கால் கிலோ காஃபித்தூள்

சிரித்து ரசித்து பகிர்ந்த பதிவு

வேலையிலிருந்து மாலை வீட்டுக்கு வரும்பொழுது கால் கிலோ காபி பொடி வாங்கிவரசொல்லும் மனைவிமார்கள்(கல்யாணம் ஆகி 10-15 வருடங்களுக்கு மேல்இருக்கும்)

ஒருவரியில் சொல்லாமல் ஒரு மெகா சீரியல் போல் சொல்லும்  🏻 🏻 🏻 🏻 ஒரு அலைபேசி உரையாடல்!…

சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே?

ஏன் ரெண்டு தடவையும் எடுக்கல?

ஒரு மீட்டிங்ல இருந்தேன்.

எனக்குத் தோணும் போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, அப்போ எடுக்காதீங்க!

அப்படி ஏதாவது அவசரமான விஷயம்னா வாட்ஸாப் மெசேஜ் அனுப்பி யிருக்கலாமே?

ஆமாம், மெசேஜ்லேயே குடும்பம் நடத்திக்கலாம்! பொண்டாட்டிகிட்ட இருந்து வர்ற ஒரு போன் கூட அட்டெண்ட் பண்ணமுடியாத ஆபீஸ்!

விடுடி, அதுதான் கூப்பிட்டுட்டேன்ல, சொல்லு!

இப்போவாவது ஃப்ரீயா, இல்லையா?

ஃப்ரீதான் தாயே, சொல்லு!

என்ன சொல்ல வந்தேன், ஆ! நியாபகம் வந்துருச்சு!

சொல்லு!

டிகாஷன் போடலாம்னு கிச்சனுக்கு போனேன், காஃபித்தூள் டப்பாவை தேடுனா எங்கேயோ தூக்கி வெச்சுட்டீங்க!

அடியே, நான் அதை கண்டிப்பா இங்க எடுத்துக்கிட்டு வரல! தேடிப்பாரு ப்ளீஸ்!

ஐயோ, என்னை பேச விடுங்களேன், இப்போ உங்களை எடுத்துக்கிட்டு போயிட்டீங்கன்னு யாரு சொன்னா!

வேற என்னதான் சொல்ல வர்றே?

ஒரு நிமிஷம் பொண்டாட்டிகிட்ட பேச பொறுமை இருக்கா உங்களுக்கு? இதே மத்தவங்க கிட்ட மணிக்கணக்குல பேசமுடியுது! உங்க தம்பியெல்லாம் பாருங்க எப்படி இருக்காருன்னு!

சரி, கேட்கறேன், சொல்லு, என்ன?

இப்படி குறுக்க குறுக்க பேசுனா சொல்லவர்றதே மறந்து போகுது!

சரி பேசல, சொல்லு!

என்ன சொல்லிக் கிட்டிருந்தேன்?

ம்ம்ம்.. காஃபித்தூள்!

அதுக்கு ஏன் சலிச்சுக்கறீங்க!

இல்லடி, சொல்லு!

ம், காஃபித்தூள் டப்பாவை தூக்கி மேல வெச்சுட்டீங்க! எட்டி எடுக்கலாம்ன்னு பார்த்தா, இந்த ஆப்ரேஷன் பண்ணுன கால்ல சுரீர்ன்னு வலிக்குது! எதுக்கும் வேற ஒரு நல்ல டாக்டர் கிட்ட ஒப்பீனியன் வாங்கணும்!

அதுக்குதான் ஃபோன் பண்ணுனியா?

இல்லை சாமி, உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகச் சொல்ல நான் என்ன பைத்தியமா? ஆபரேஷன் அன்னைக்கும் விட்டுட்டு ஆபீஸ கட்டிக்கிட்டு அழப்போன ஆள்தான நீங்க!

அதுக்கு இப்போ எதுக்குடி போன் பண்ணி சண்டை போடறே?

ஆமா, என்னப்பாத்தா  சண்டைக்காரி மாதிரிதான் தெரியும் உங்களுக்கு! உங்கள மாதிரியே தான் உங்க புள்ளைகளும்! அம்மான்னாலே அதுங்களுக்கு எளக்காரம்!

சரி, நம்ம சண்டையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் வெச்சுக்கலாம்! இப்போ எதுக்கு கால் பண்ணுனே, அதைச் சொல்லு!

என்னை எங்க சொல்ல விடறீங்க! ஒரு வார்த்தை பேசறதுக் குள்ள குறுக்க பேசுனா மனுஷி என்ன பேசறது?

மறுபடியும் ஆரம்பிக்காதே, சொல்லு, என்ன விஷயம்?

ச்சே, இந்த நைட்டி வேற கால்ல சிக்குது! இந்த அழுக்கு கலர்ல வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே! தொவைச்சுப் போட்டாலும் அழுக்கு மாதிரியே தெரியுது!

எதுக்கு ஃபோன் பண்ணுனே, அதை சொல்லு ப்ளீஸ்! இன்னைக்கு நிறைய வேலை இருக்கு!

சரி நீங்க போய் வேலையைப் பாருங்க, நான் அப்புறமா கூப்பிடுறேன்!

தாயே, வதைக்காதே, எதுக்கு ஃபோன் பண்ணுனே? சொல்லு!

அதென்ன, வீட்டிலிருந்து ஃபோன் வந்தாலே இவ்வளவு சலிச்சுக்கறீங்க?

இல்லம்மா, சொல்லு!

எங்க சொல்லவிடறீங்க? வீட்டுக்கு ஒன்னு வேணும்ன்னா கூட ஃபோன் பண்ணக்கூடாதா?

என்னதான் வேணும் உனக்கு இப்போ!

அதுதான் மறந்தே போச்சு, எத்தனை தடவை குறுக்கே பேசறீங்க! ஞாபகம் வந்ததும் சொல்றேன்!

சரி!

வெச்ச மறுநொடி அடுத்த போன்!

ஏன் கட் பண்ணீங்க?

நீதானடி நியாபகம் வந்ததும் சொல்றேன்னே?

இப்போ நியாபகம் வந்துருச்சு!

சரி சொல்லு!

காஃபித்தூள் டப்பாவை அவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்க வேண்டி இருக்கு! ஏன் மேல தூக்கி வெச்சீங்க? இனிமேல் இப்படி எல்லாத்தையும் கலைச்சு வைக்காதீங்க!

சரி, இனிமேல் வைக்கல! சொல்லு!

அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துப் பார்த்தா, காஃபித்தூள் கொஞ்சம்தான் இருக்குது! காலைல காஃபி நீங்கதானே போட்டீங்க? சொல்லமாட்டீங்களா?

மறந்துட்டேன்! விடு! இப்போ எதுக்கு போன் பண்ணுனே?

ஒரு வார்த்தை பேச விட்றாதீங்க! சரி, மறக்காம சாயங்காலம் வரும்போது கால் கிலோ காஃபித்தூள் வாங்கிக்கிட்டு வந்துடுங்க!

உனக்கே இது நியாயமா இருக்கா? காஃபித்தூள் வாங்கிட்டு வாங்கன்னு ஒரு வார்த்தைல சொல்லமுடியாதா?

ம்க்கும்! தப்புதான் சாமி! ஒரு வார்த்தை எக்ஸ்டரா பேசக்கூடாது!

உங்களுக்கு எதுக்கு தொந்தரவு! நீங்க ஒன்னும் வாங்கிக்கிட்டு வரவேண்டாம், நானே வாங்கிக்கறேன்! நீங்க உங்க ஆபீஸையே பாருங்க!

ஹலோ, ஹல்லோ ……

 

 

ஒண்ணுமே புரியல, போடா மாதவ !!

நேற்றும், இன்றும்!!(நாளை??}

முன்னால வெள்ளிக்கிழமை ஆனா வாசல்ல கல்லுப்பு வித்துண்டு சைக்கிள்லயோ, தள்ளுவண்டிலயோ வருவா! நாலணா குடுத்தா ரெண்டு படி உப்பு. வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினா விசேஷம்னு சொல்லுவா! அதுனால எல்லாரும் வாங்குவா! அப்புறம் சால்ட் புழக்கத்துக்கு வந்துது! அது அயோடைஸ்ட் சால்ட்தான் சாப்பிடணும்னா அப்புறமா!! இப்ப என்னன்னா திருப்பி கல்லுப்பே சிறந்ததுனு லேட்டஸ்ட் தீர்ப்பு! அதுவும் சாதாரண கல்லுப்பு இல்ல!! ஹிமாலயன் கல்லுப்பாம்!!  என்னமோ போடா மாதவா!! ஒண்ணுமே புரியல ஒலகத்துல!!

விறகு வெச்சு அடுப்பு மூட்டி, கரி போட்டு குமுட்டி பத்த வெச்சு சமையல் ஆச்சு அந்த நாள்ல!! அப்புறம் பத்து திரி ஸ்டவ் வந்துது. மண்ணெண்ணெய் தேவை அதிகமாச்சு! ரேஷன் கடை க்யூ நீளமாச்சு!  மண்ணெண்ணெய்க்கு வேற துன்பமான ப்ரயோஜனமும் இருந்துது   அப்புறம் காஸ் ஸ்டவ் வந்துது!! இன்னிவரைக்கும் ப்ரதானமா ஓடிண்டிருக்கு. ஆனா சிலிண்டர் வச்சுக்க முடியாதவா இன்டக்ஷன் ஸ்டவ் வெச்சுக்கறா!! இன்டக்ஷன் ஸ்டவ்ல சுட வெச்சா ஒடம்புக்கு நல்லதில்லைனு ஒரு க்ரூப்பு ப்ரச்சாரம்!!! ஓவன்னு ஒண்ணு! அதுல பாதி சமைக்கலாம். கேக் பண்ணலாம், பேக் பண்ணலாம்னு! அட, ஓவனும் நல்லதில்லையாம்ப்பா!! கோபர்காஸ் கூட நடுப்பற கொஞ்ச நாள் முழங்கித்து!! அதுவும் மெயின்டெய்ன் பண்ண முடியலை!!  இப்ப லேட்டஸ்ட்டா, அட, சமைக்கவே வேண்டாம்ப்பா, இருக்கவே இருக்கு ஸ்விகியும், ஊபர் ஈட்ஸ்ஸும்!! என்னமோ போடா மாதவா!! ஒண்ணுமே புரியல ஒலகத்துல!!

வெண்கலப்பானை, கல்சட்டி உபயோகப் படுத்திண்டிருந்தா அந்த நாள்ல!! அப்புறம் அலுமினியம் வந்துது! எவர்சில்வர் வந்துது!! குக்கர் வந்துது!! குக்கர் வந்த புதுசுல வெயிட்ட போட்டுட்டு, எங்க அம்மா அடுத்த உள்ளேருந்து தலைய நீட்டி மெதுவா எட்டி பாத்துண்டிருப்பா விசில் வரவரைக்கும் பயம்   ப்ளாஸ்டிக்னு ஒண்ணு வந்துதுப்பா! மனுஷாளத் தவிர அத்தனையும் ப்ளாஸ்டிக்ல பண்ணி சூழலை காலி பண்ணிட்டான் மனுஷன்!! அது கெடுதல்னு புரியறதுக்குள்ள எங்கயோ போயிடுத்து அதோட உபயோகம் இப்ப அதை ஒழிக்கணும்னு கோஷம்!! அலுமினியம் நல்லதில்ல, கல்சட்டிதான் நல்லதுனு புரிஞ்சு ஒரு க்ரூப்பு அமெரிக்காலருந்து கூட வந்து வாங்கிண்டு போற காலம் இப்போ!! சாமான் எடுத்து வெக்கற டப்பா கூட க்ளாஸ்ல வாங்கி வெக்கற காலமாச்சு இப்போ என்னமோ போடா மாதவா!! ஒண்ணுமே புரியல ஒலகத்துல!!

தேங்காய ஆட்டி தேங்காயெண்ணைய சகலத்துக்கும் உபயோகப் படுத்தினா அந்த நாள்ல! அப்புறம் கொழுப்புனு க்ளாஸிஃபை பண்ணி அதை ஒதுக்கினா! பாமாயில்னு ஒண்ணு வந்துது! அது ரொம்ப கெடுதல்னு ஆச்சு! அப்றம் சூரியகாந்திக்கு நிகரில்லைன்னா!! அதுல கைக்கு, காலுக்கு, இதயத்துக்குனு தனித்தனியா வ்யாபாரம் பண்ணினா!! இப்போ அதுவும் நல்லதில்லை! போடா செக்குக்கு பழையபடிங்கறா! அதுல கல்செக்கு, மரச்செக்கு வேற!! இப்ப அதான் முழங்கிண்டிருக்கு!! நாளைக்கு என்னவோ!! என்னமோ போடா மாதவா!! ஒண்ணுமே புரியல ஒலகத்துல!!

மாடு கறந்து பால் வாங்கினா முன்னால. அப்பறம் மெஷின்ல வந்துது! பாக்கெட்ல வந்துது!! டெட்ரா பாக்ல வந்துது!! பவுடர் வந்துது!! இதெல்லாம் பாலே இல்ல!! மறுபடி மாட்டுப்பால்தான் பெஸ்ட்டுனு இப்ப பாத்திரத்த தூக்கிருக்கா!! அதுல A1, A2 வேறயாம்!! இந்த பால் வெலய கேட்டா, நேர காசிக்கு போய் பால், தயிர் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடலாம் போலிருக்கு!! என்னமோ போடா மாதவா!! ஒண்ணுமே புரியல ஒலகத்துல!!!

கொசுறு

ஒருத்தரோட ஒருத்தர் அன்பா பழகி சிரிச்சிண்டிருந்த காலம் போய் மெஷின் வாழ்க்கையாச்சு. பக்கத்து வீட்டு மனுஷாளே தெரியாம போச்சு!! இப்ப என்னடான்னா, சிரிச்சாதான் நல்லதுனு ஒரு க்ரூப்பு இடுப்புல கைய வெச்சுண்டு ஹாஹாஹாஹானு சிரிச்சிண்டிருக்கு பார்க்ல, பீச்சுல!! எங்க போய் சொல்றது

 

குழந்தையின் அழுகுரல்

மேற்குத்தொடர்ச்சி மலையின்    அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமம்…

தென்னந்தோப்புகளும்  பாக்கு தோட்டங்களும், ரப்பர் தோட்டங்களும் நிறைந்தபகுதி அது!   நிலத்தை ஒட்டிய பகுதியில்   வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம்  வாழ்ந்துகொண்டு இருந்தது!  நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி,  அவர்களுக்கு பத்து வயதில்   ஒரு பெண் குழந்தை!   ஒரு நாள் அந்த வீட்டை சேர்ந்த   பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடு களுக்கு புல் அறுப்பதற்காக   தென்னந்தோப்புக்கு செல்கிறாள்!   அவள் புல் அறுத்துக்கொண்டு   இருக்கும்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கொஞ்சம்   கொஞ்சமாக கேட்கிறது!   அவள் பதட்டத்துடன் எங்கிருந்து வருகிறது என்று தேட கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தையின் அழுகுரல் நின்று விடுகிறது!    திரும்பவும் மீண்டும் ஒரு முறை   அதே அழுகுரல் கேட்கிறது!  பயத்துடன் அந்த அழுகுரல் வரும் திசையை நோக்கி நடக்கிறாள்!   ஒரு தென்னை மரத்தில் இருந்து அந்த அழுகுரல் வருவதை கவனிக்கிறாள்!   தென்னை மரத்தில் ஏதாவது   குழந்தை இருக்கிறதா என்று மேலே பார்த்தபடி தேடுகிறாள்!    எந்த குழந்தையும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை!  ஒரு நாளைக்கு நாலைந்து முறையாவது அந்த அழுகுரல்   கேட்டுக்கொண்டே இருக்கும்!  பயந்து போய் தன்னுடைய   கணவனுக்கு சொல்கிறாள்!

அவன் முதலில் ஏதாவது  உன்னுடைய பிரம்மையாக இருக்கும்என்று பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்   இருக்கிறான்!  அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டு படுக்கும்போது,  இரவு பத்து மணிக்கு மேல் மீண்டும் ஒரு முறை அந்த குழந்தையின் அழுகுரல்  கேட்கிறது!  அவன் இப்போது தான் மனைவி சொன்னதை நம்புகிறான்!   கையில் பெரிய டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு அந்த தென்னந்தோப்புக்குள்  நுழைகிறான்!   அவனுடைய மனைவி வேண்டாம் என்று மறுக்கிறாள்!   ஆனாலும் அவன் தைரியமானவன் என்பதாலும் அதே கிராமத்தில் சிறுவயதில் இருந்து வாழ்ந்து பழக்கப்பட்ட வன் என்பதாலும் தைரிய மாக தோப்புக்குள் செல்கிறான்!   அவளும் கணவனுக்கு ஏதாவது   ஆகிடுமோ என்று பயந்து   பின்னாலேயே போகிறாள்!  அவளுக்கு கேட்ட அதே அழு குரல்அதே தென்னை மரத்தி லிருந்து கேட்கிறது!  அவன் கீழிருந்தபடி உயரமான   அந்த தென்னை மரத்தில்டார்ச் அடித்து பார்க்கிறான்!   அந்த மரத்தில் இருந்து   ஏதோ ஒரு பறவை மட்டுமே  பறந்து செல்கிறது!  அருகில் வரும் வரை கேட்டுக் கொண்டிருந்த அந்தஅழுகை குரல் இப்போது கேட்க வில்லை!  போலாம் வாங்க என்று மனைவி அழைத்ததால் இருவரும் வீடு திரும்புகிறார் கள்!    அடுத்த நாள் அவளுடைய    அண்ணனுக்கு இந்த தகவலை     சொல்கிறாள்!

மீண்டும் அழுகுரல் வந்தால்   எனக்கு போன் செய்யுங்கள்   நான் ஆட்களோடு வந்து  பார்க்கிறேன் என்று சொல்கிறான்!  அவள் அந்த அழுகுரலுக்கு    பயந்து அந்த தோப்பின் பக்கமே போகாமல் இருக்கிறாள்!   அடுத்த நாள் இரவு எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது எட்டு மணிக்கெல்லாம் அந்த அழுகை குரல் கேட்கிறது!    அவளும் அண்ணனுக்கு போன் செய்கிறாள்!அவளுடைய அண்ணன் நாலைந்து ஆட்களை அழைத்துக்கொண்டு வருகிறான்!    அங்கே இருக்கும் சில மரக் கட்டை களில் துணியை    இறுக்கமாக சுற்றிக்கொண்டு    அவற்றின் மீது மண்ணெண் ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டு அந்த தென்னந் தோப்பிற்கு கிளம்புகிறார் கள்!   வீட்டில் இருக்கும்போது    குறை வாக கேட்கின்ற அந்த

அழுகை சத்தம் அருகேசெல்லச் செல்ல அதிகமாககேட்கிறது!   பின் கொஞ்ச நேரத்திற்கெல் லாம் முழுவதும் நின்றுவிடுகி றது!அந்த குறிப்பிட்ட மரத்தின்     அருகில் சென்று தீப்பந்தத்தை காட்டிமேலே சுற்றி சுற்றி பார்க்கிறார்கள்!   எதுவுமே தெரியவில்லை!  அழுகுரலும் நின்றுவிட்டது!   தீயை பார்த்தால் எந்த பேயாக  இருந்தாலும் பயந்துவிடும் என்றுகூட்டத்தில் இருந்த நாலு பேரில் ஒருவன் உறுதியாக கூறுகிறான்!   அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மீண்டும் அழுகுரல் சத்தமாக கேட்க  ஆரம்பிக்கிறது!   எல்லோருமே பயந்துவிடு கிறார்கள்!அந்த இடத்தை விட்டு    உடனேஓடிவந்துவிடுகிறார்கள்!அடுத்த நாள் ஒரு பெரிய    சாமி யாரை அழைத்துவந்து    அந்த தென்னை மரத்தை சுற்றி   மஞ்சள் கயிறால் கட்டு கட்டி,  ஒரு தென்னங்கன்றுக்கு    பாலாபிஷேகம் செய்து   நிறைய சடங்குகள் எல்லாம்   செய்து, பூஜைகள் எல்லாம்   செய்துவிட்டு, இனிமேல் நிச்சயம்அந்த அழுகுரல் கேட்காது என்றுசொல்லி விட்டு போகிறார்!   அவர்களும் நிம்மதியாக   தூங்குகிறார்கள்!  ஆனால் அடுத்த நாள் விடியற் காலையிலேயே அந்த அழு குரல்கேட்க ஆரம்பிக்கிறது!     இந்த முறை தொடர்ந்து      கேட்டுக்கொண்டே இருக்கிறது!

இடைவெளி இல்லாமல்திரும்ப திரும்ப கேட்கிறது!  தோப்பின் பக்கம் யாரோ   ஆள் நடமாட்டம் இருப்பது போல்அவர்களுக்கு தெரிய  பயமாக இருந்தாலும் யாரென்று பார்ப்பதற்காக,    கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போகிறார்கள்,     அருகில் போகப்போக மரத்தின் மேல் ஏதோ ஒரு உருவம்    இருப்பது போல் தெரிகிறது!     தென்னை ஓலைகளும் மட்டையும்அசைகின்ற சத்தம் கேட்கிறது!  திடீரென்று மரத்திலிருந்து    ஒரு உருவம் சரசரவென இறங்கிகீழே வருகிறது!  இவர்கள் நடுங்கிப்போய் பார்க்க ….மரத்திலிருந்து இறங்கிய மரமேறி,  ஒண்ணும் இல்லம்மா   நாலு நாள் முன்னாடி தேங்காய்  பறிக்க ஏறும்போது போனை    மேலயே விட்டுட்டு வந்துட்டிருக் கேன், எங்கடா காணோம் காணோம்னு நாலு நாளா தேடிட்டு இருந்தேன்,  ஒவ்வொரு தோப்பா போயி   ஊரெல்லாம் போன் பண்ணி    போன் பண்ணி தேடிட்டு இருந்தேன்!

கடைசியில உங்க தோப்புலயே  இருந்திருக்கு!  என்று அவன் சந்தோஷப்பட  அதற்குள் மீண்டும் அந்த  அழுகுரல் ரிங்டோன் ஒலிக்க   அதை அட்டென்டு செய்து  போனு கிடைச்சிடுச்சிம்மா,  கடைசியில நம்ம துர்கா அக்கா   தோட்டத்துல தான் இருந்தி ருக்கு,   போனை பார்த்த பின்னாடி தான்எனக்கு உயிரே வந்திருக்கு,  என்று அவன் பேசியபடி   நடந்துசெல்ல,  பாவம் இவர்களுக்கும் அப்போது தான்   உயிரே வந்தது!

 

ஸ்மார்ட் டாக்டர்

இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று  கிளினிக் ஒன்றைத் திறந்தார்..வாசலில் ஒரு போர்டு எழுதினார்.”எந்த வியாதியாக  இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.உங்கள் வியாதி குணமாகவில்லையெனில்  1000 ரூபாயாக திருப்பி தரப்படும் “இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.

“டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில ..”” நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க ” என்றார் இஞ்சினீர் டாக்டர்     நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு ” அய்யோ டாக்டர் இது  பெட்ரோல் ஆச்சே” என்று அலறினார் இவர்.  ” வெரி குட் .இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது ..500 ரூபாய் ஃபீசை எடுங்கள் ”   உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.

ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.  ” டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க ” என்றார்.  ” நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க ” என்றார் இஞ்சினீர் டாக்டர்.  ” அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே ” என்று அலறினார் இவர்..” வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க ”   இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார் .

” எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்”  ” சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை இந்தாங்க ஆயிரம் ரூபாய் ” என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர்   “இது 500 ரூபாய் நோட்டாச்சே ” என்று பதறினார் இவர்.  ” வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய் ” பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்… படிப்பாவது..கிடிப்பாவது …

நன்றி    வாட்ஸ் அப் குழுமம்.

 

புளியோதரை புராணம்”*….

புளியோதரை எப்பொழுதுமே    All rounder dish… என்னதான் Fried rice, noodles, biryani வந்தாலும் புளியோதரை ever green dish.
அதுவும் ஸ்ரீரங்கம் கோவில் புளியோதரை..    இன்னும் நினைவில். மடப்பள்ளி புளியோதரையோடு, அரங்கனிடம் நிரந்தர அடைக்கலமாகி விடலாமா என்று எண்ணம்    கூட எனக்கு வந்தது கோயில் பிரகாரத்தில்
ரெஃப்ரிஜிரேட்டர் கண்டு பிடிக்கும் முன்பே தமிழன் “வச்சு வச்சு” சாப்பிட்டது    புளி சாதத்தைத் தான்.!
ஒரு வாரம் ஆனாலும் கெடாது.!   அக்காலத்தில் வெளியூர் பயணங்களில் நம் கால்களே டாக்சியாக இருந்த காலத்தில்
நம் பாட்டன்களின் பசியைப் போக்கிய வழிச் சோறு என்பது புளிச் சோறே ! என்பது 100% உண்மை.!
எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில் டாப் 5 இல் இடம் பிடிக்கக் கூடிய ஒரு உணவு புளியோதரை.!
உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் உள்ள உணவு புளியோதரை..!!
இதன் நிறத்திலேயே அதன் தரத்தை அறிந்துவிடலாம்….!  இதன் புராணம் மிகச் சுவையானது !
*புளியோதரைக்கு மணமும் நிறமும் இரு கண்கள்….!*
முதலில் புளியோதரைக்கு *வடிக்கும் சாதத்தின் பதம்* மிக முக்கியம்….!   அது புதுமணத் தம்பதியர் போல பின்னிப் பிணைந்து குழைந்து இராமல்.. ..திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதிகள் போல சற்று ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பதமே சாலச் சிறந்தது…..*அடுத்து நிறம்…!*  புளியோதரை ஆழ்ந்த மஞ்சளில் இருப்பது மிகச்சிறப்பு…! சாதத்தை வடித்து ஆறவிட்டு பயன்படுத்துதல் புளியோதரைக்கு சரியான சமையல் முறையாகும்..!
*அடுத்து எண்ணெய்….!!*
நீங்கள் பில்கேட்ஸ் குடும்பமாக இருந்தாலும் எண்ணெய்க்கு பதிலாக நெய் எல்லாம் சேர்க்கக்கூடாது..! *நல்லெண்ணெய் என்னும் ஏக பத்தினியை மட்டும்..!ஏற்றுக் கொள்வான் இந்த புளியோதரை என்னும் ராமச்சந்திர மூர்த்தி !*
அதிலும் செக்கில் ஆட்டிய எண்ணெய் எனில்   எந்தச் சீரும் வாங்காமல் சிறப்பாக இணைவான் இவன் ! 
*அடுத்து புளி.. !*
நேற்று முளைத்த அரசியல் கட்சிகள் போல புதுப்புளி கூடாது.! *கலைஞர் போன்ற பழம் புளியே* புளிக் காய்ச்சல் செய்வதற்கு மிகச் சிறந்தது..! புதுப்புளியில் புளியோதரை புளிக்கு பிறந்த பூனையாகிவிடும்.! பழம் புளியில்தான்   அது புலியாகும்…!
*அடுத்து மிளகாய்….!*
நல்ல தரமான வதக்கும் போதே நெடியேறும்.. !காரசார காய்ந்த மிளகாய் தான் பெரும் சிறப்பு…,
*அடுத்து இதற்கு மிகுந்த சுவை சேர்ப்பது நிலக்கடலைப் பருப்புகள்.!*   *மோடியும் அமித்ஷாவும் போல நிலக்கடலையும் புளியோதரையும் நல்ல நண்பர்கள் !*  நல்லெண்ணெய் கமகமக்க ஒரு வாய் அள்ளிச் சுவைக்கையில் வாயில் அரைபடும் புளியோதரையின் நிலக்கடலை பத்து பாதாம் பருப்புகளுக்குச் சமம்.!  புளியோதரைக்கு மிகப் பொருத்தமான சாம்பார் எதுவெனில் துவரம் பருப்பு போட்ட மெல் இனிப்பில் சின்ன வெங்காயம்..!!  அல்லது சிவப்பு பூசணி சாம்பார் தான் !
கத்திரிக் காய் சாம்பாரை விட எண்ணெய்/புளிக் கத்திரிக்காய் வதக்கல் இன்னும் பிரமாதம்….!  இஞ்சி, பருப்பு, புதினா, கடலை, நவதானியம்,  இப்படி தேங்காய் சேர்க்காது புளி சேர்த்து அரைக்கும் துவையல்கள் நீண்ட நாள் உபயோகத்திற்கு..!! பொட்டுக் கடலை தேங்காய் வைத்து அரைக்கும் துவையல் இன்ஸ்டண்ட் சுவர்க்கம்….!
*சித்திரான்னங்களுக்கு பேர் போன சவுராஷ்டிரா சமூக நண்பர்களுடன் பழகிய போது அவர்கள் வீட்டில் செய்யும் புளியோதரைக்கு கருப்பு கொண்டைக் கடலை சுண்டலை தந்தார்கள்…. அசுவாரஸ்யாமாக சாப்பிட்டால் சுவை ஆஹா.. !!அள்ளியது..! கூடவே இஞ்சி மிளகாய் சட்னி வேறு…..!!!*முருங்கை, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் தன்மையால் அக்காய்களைக் கொண்டு வைக்கும் சாம்பார்கள் நல்ல புளியோதரை சாப்பிடும் உன்னத உணர்வை கெடுத்துவிடும்..
என் அம்மா இதற்கு மாங்காய் போட்டு சாம்பார் வைப்பார்.. ..!இது புள்ளத்தாச்சி பெண்களுக்கு பிடிக்கும்டா தம்பி என்பார் …!
அம்மாவுடன் வீட்டில் அடிக்கடி வந்து பேசும்   சில கர்ப்பிணி அக்காக்களின் ரகசியம் அப்போது தான் தெரிந்தது.!
ஆயிரம் தான் புளியோதரை வீட்டில் செய்தாலும் பெருமாள் கோவில் புளியோதரையின் தரமே வேறு…..!
ஒரு பெண் புகுந்த வீட்டில் இருந்து தன் தாய்வீட்டிற்கு 1 மாதம் விடுமுறையில் வந்தது போல..!!
*புளியோதரையின் தாய்வீடு பெருமாள் கோவில்….!*அங்கு வந்து விட்டாலே அதற்கு ஒரு தனிக் கு(ரு)சி வந்துவிடும்…..!
*திருப்பதி, மயிலை, திருவட்டார், ஸ்ரீரங்கம் முதலிய பெருமாள் கோவில் புளியோதரைகளுக்கு நான் ஹேமநாத பாகவதர் பாண்டிய நாட்டிற்கு அடிமை என எழுதித் தந்தது போல எழுதித் தரச் சொன்னால்.. கொஞ்சமும் தயங்காமல் மனதார எழுதித் தருவேன்…..!*என் பாட்டியின் ஸ்டைல் சிறிது சுண்டை வத்தல் நன்கு வதக்கி அதை இடித்துத் தூவுவது…! பெருமாளே வந்து கையேந்தும் பக்குவத்தில் மிகப் பிரமாதமாகச் செய்வார்….!புளியோதரையை புண்ணியச் சோறு என்பார்…!
கல்யாண சமையல் சாதம் என்ற மாயாபஜார் படப் பாடல் வரிகளில்….!புளியோதரையில் சோறு ! மிகப் பொருத்தமாய் சாம்பாரு…! ” போல    *அருமையான புளியோதரை கிடைத்துவிட்டால் நாம் எல்லாருமே கடோத்கஜன்கள் தானே…!!!!!!*
_*என்னைப் பொறுத்தவரை, புளியோதரைக்கு சிறந்த Combination தேங்காய் துண்டுகளே.*_
நன்றி    வாட்ஸ் அப் குழுமம்

உங்க சிரிப்புக்கு நான் கேரன்டி

இறந்துவிட்டான் சேகர்…..ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்…..இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான்.

.சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க ஒரு வார்த்தைக்கு spelling சொல்லணும்.

.சேகர் : சாமி… என்ன வார்த்தைங்க ?

சித்ரகுப்தன் : லவ்

.சேகர் : L O V E

.சித்ரகுப்தன்: சரியான விடை உள்ளே வாங்க.

.சேகரையும் கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது சித்ரகுப்தனின் போன் ரிங் அடித்தது?..

.சித்ரகுப்தன் : கடவுள் என்ன ஏதோவொரு காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்….நான் திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும்

. .சேகர் : சரிங்க சாமி !!

.சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது வந்தால்   இதே கேள்வி அவங்ககிட்ட கேளு. கரெக்டா ஸ்பெல்லிங் சொல்லிட்டாங்கனா அவங்கள நீ சொர்க்கத்துக்குள்ள அனுப்பிவிடு. தவறாக கூறினால் நீ அவங்களுக்கு அடுத்த கேட் போகச்சொல்லு. அது நரகத்துக்கு போற கேட்.. நீ பயப்படாத அங்க போனவங்க மறுபடியும் திரும்பி வரமாட்டாங்க. கேட்கிட்ட போனதுமே அவங்க நரகத்துல விழுந்திருப்பாங்க. … இதைக்கேட்டதும் சேகர் நடுங்கிப் போயிட்டான்….

.சேகர் : சரிங்க சாமி !!

.சித்ரகுப்தன் போன கொஞ்ச நேரத்துல ஒரு பெண் அங்கு வருவதை சேகர் பார்த்தான்!

சேகர் அதிர்ச்சி அடைந்தான்…..

.காரணம் அது சேகரின் மனைவி.

.சேகர்: நீ எப்படி இங்க வந்த ? !

.மனைவி : அதாங்க… உங்க பிணத்த எரிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழியில என்ன ஒரு பஸ் இடிச்சிட்டு. பின்ன நான் பார்க்கிறது இந்த இடந்தான். சொர்க்கத்திற்குள் ஓடிவந்து நுழையப்பார்த்த மனைவியை தடுத்து நிறுத்தி சேகர் சொன்னான்..

நில் நில் இங்கவுள்ள சட்டப்படி நீ சொர்க்கத்துக்கு போகணும்னா ஒரு வார்த்தைக்கு SPELLING சொல்லணும் . கரெக்டா spelling சொன்னாமட்டும்தான் சொர்க்கத்துக்குள்ள போக முடியும் . இல்லைனா அடுத்த கேட் வழியா நீ நரகத்துக்குத்தான் போகணும்.

.மனைவி : என்ன வார்த்தை ?

.சேகர் : செக்கோஸ்லோவாகியா.

 

பாஷை பலவிதம்

பாரீஸ் நகரில்…ரயில் நிலையம் அருகில்  ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு  சம்பவம் நடந்த்து…..தாக்குதல் நடத்திய குற்றவாளிகள்   அனைவரும் தப்பித்தனர்….  ஆனால் அவர்களுடன்….இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி…நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது…  ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை….  காரணம் அது எந்த முறையில்….எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது   என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை…..!

(உதாரணத்திற்க்கு….. யானைக்கு ..சமஸ்க்கிருத மொழி விளங்கும் என்று பலரும் சொல்ல கேட்டதுன்டு அதைப்போல….ஒரு ஹிந்திகாரன் வீட்டில் வளரும் நாய்  பைட்டோ பைட்டோ என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்….இதைப்போல…) எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து…அவர்களை கைது செய்ய   முடிவெடுத்தனர்  எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக…ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்…..அவருக்கு…60மொழிகள் வரை அத்துப்படி…… அவர் ஒரு புரஃபெஸரும் கூட… அவரும் வந்து…. வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை…அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை….கடைசியில்…. பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்…அவர்  பயிற்சியை துவக்கியதும் …நாய்க்கு புரிய ஆரம்பித்தது…..உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு….உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்……

அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது…..அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது… பெரிய விருந்து ஒன்றையும்  ஏற்பாடு செய்தது  விருந்தில் அவரிடம் கேட்கப்பட்டது  உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது… …உங்களுக்கு என்ன வேண்டும்   கேளுங்கள் வழங்கபடும் என்றனர்…. பணம் வேண்டுமா…..? விலை கூடிய கார்கள் வேண்டுமா..?மாளிகை வேண்டுமா….?அரசாங்க பணிகள் வேண்டுமா…?என்று…அவர் மறுத்துவிட்டார்…எனக்கு உதவியாக இருந்த அந்த…நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்…என்றார்…அதை கேட்டு அங்கிருந்த  அனைவருக்கும் ஆச்சர்யம்….சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்….ஒரு அதிகாரி கேட்டார்….. ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்….. என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.  

..அதற்கு அவர்…சொன்னார்….இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்….என் மனைவி முன் நிறுத்தவேண்டும்….. ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்….அவள் சொல்வாள்…””எந்த நாய் கேட்க போகுதுன்னு…இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு..”.”..அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னுசொன்னவுடன் அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..