ஆயில் பெயின்டிங்

ஓவியக்கலையில் ஆயில் பெயின்டிங் முறையும் ஒன்று  இதை கி பி 15ம் நூற்றாண்டில் உருவாக்கினார்.  ஜான் வான் ஐக்.  ஐரோப்பிய நாடான பெல்ஜியம் பிளாண்டர்ஸ்  நகரத்தைச் சேர்ந்தவர்.  முட்டைக்கரு  அல்லது தண்ணீரில் வண்ணங்களைக் கலக்கி ஓவியம் வரைவது அப்போது வழக்கமாக இருந்தது. இவை தண்ணீரால் அழிந்தன.  அழியாத வகையில் ஆயில் பெயின்டிங் முறையைக் கண்டு பிடித்தார் ஜான் வான் ஐக்.

ஆளி விதையில் எடுத்த எண்ணெயில் வண்ணங்களைக் குழைத்தார்.  அதை பயன்படுத்தி தீட்டிய ஓவியங்கள் நீரில் அழியாமலும் ஒளி மங்காமலும் துலங்கின.  இந்த வகை ஓவியமாக இயற்கையாக தத்ரூபமாகக் காட்சியளிக்கும். ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் பாமியன் மலைத்தொடரில் ஆயில் பெயின்டிங் முறையில் பழங்காலத்திலே ஓவியங்கள் வரைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.

தகவல் நன்றி    சிறுவர் மலர்.

வேதனை தந்த விளைவு

ஆசிய நாடான வியட்நாம் மீது அமெரிக்கா போர் நடத்தி முடித்திருந்த நேரம்.  யுத்தம் வியட்நாமை நார் நாராக கிழித்துப்போட்டிருந்தது.  வீடுகளை இழந்த மக்கள்  பெற்றோரை இழந்த குழந்தைகல் கணவனை இழந்த மனைவி என ரத்தக் கண்ணீரால் நனைந்திருந்தது. வியட்நாம்

போர் விளைவுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க செய்து ராணுவத் தளபதிகள் இருவரை அனுப்பியது அமெரிக்க அரசு.  கை கால்கள் சிதைந்து துடித்தவர்கள் பிணங்களுகு அருகே கதறிய பெண்கள் என கொடுங்காட்சிகளைக் கண்டார். ஒரு தளபதி.  அவரது மனம் தாங்க முடியாத துயரத்தில் தவித்தது. மன பாரத்தால் வாழ்வை முடித்துக்கொண்டார்.  இதே காட்சிகளைக் கண்ட இன்னொரு தளபதியும் வெதும்பினார்.  வியட்நாமில் மக்கள் படும் துயரங்களை அமெரிக்கர்களிடம் எடுத்துக்கூறினார்.

போரின் கொடூர விளைவை ஹார்ட் அண்டு மைன்ட் என்ற தலைப்பில் ஆவணப் படமாக உருவாக்கினார். ஓர் அமெரிக்கர் அது உலகையே உலுக்கியது.  அட்டூழியத்தை தோல் உரித்துக் காட்டியது.  போருக்கு தலைமை வகித்த அமெரிக்க ராணுவ தளபதி வில்லியம் வெஸ்ட்மோர் பேட்டியும் அதில் இடம் பெற்றது.  இதனால் பலத்த சர்ச்சை ஏற்பட்டது.  படத்தை திரையிடவிடாமல் தடுக்க முயன்றது அமெரிக்க அரசு.

எல்லாவற்றையும் மீறி உலகின் மிகச்சிறந்த ஆவணப்பட அகாடமி விருதை 1974ல் வென்றது அப்படம்.  உலகின் முக்கிய சினிமா பிரதிகளை பாதுகாக்க நேஷனல் பிலிம் ரெஜிஸ்ட்ரி என்ற சர்வதேச அமைப்பு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது.  அந்த காப்பகத்தில் இந்த படத்தின் முகப்பிரதி 2018 முதல் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாக போற்றப்படுகிறது.  இந்த படத்தை இயக்கியவர் பீட்டர் டேவிஸ் இவர் நான்கு புத்தகங்கள் எழுதியதுடன் ஒன்பது படங்களை இயக்கியுள்ளனர்.

தகவல் நன்றி   சிறுவர் மலர். 

சிறுவனுக்கு நினைவுச் சின்னம்

ஆங்கிலேய சிறுவன் நினைவாக 300 ஆண்டுகளுக்கு முன் கட்டிய நினைவுச் சின்னம் சென்னை சட்டக்கல்லூரி வளாகத்தில் உள்ளது. தமிழக புராதனக் கட்டட கழகம் பராமரித்து வருகிறது.  அந்த சிறுவன் பெயர் டேவிட யேல். அவனது தந்தை எல்ஹூ யேல் சென்னையை ஆண்ட ஆங்கிலேய கவர்னர்களில் முக்கியமானவர். புனித ஜார்ஜ் கோட்டை தலைவராகவும் இருந்தார். அங்கு ஆங்கிலேய் கொடியை 1687ல் முதன்முதலில் ஏற்றினார். அமெரிக்காவில் பிரபலமான யேல் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்.

இவர் அமெரிக்காவில் பிறந்தார்.  ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் வளர்ந்தார். அடிமை வாணிகத்தில் பொருள் குவித்தார். இந்தியாவிற்கு 1672ல் வந்தார்.  சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள புனித மரியா தேவாலயத்தில் நவம்பர் 4 1680ல் அவரது திருமணம் நிகழ்ந்தது.   மணப்பெண் விதவையான காரின் ஹின்மர்ஸ்க்.  அந்த ஆலயத்தில் முதலில் பதிவாகியுள்ள திருமணம் அது தான்.  இந்த தம்பதிக்கு இரண்டு  மகன் ஒரு மகள்  மூத்த மகன் தான் டேவிட் யேல். சிறுவயதில் இறந்தவனுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.

தகவல் நன்றி  சிறுவர் மலர். 

என்னால் முடியும்

உடல் குறைபாடுகளை பொருட்படுத்தாமல் என்னால் முடியும் என செயல்பட்டவர்கள் பல துறைகளில் வெற்றி பெற்றுள்ளனர். இப்படி உழைத்து சாதித்த சிலரை பற்றி படிப்போம்

ஸ்டீபன்  ஹாக்கிங்

கடுமையான ஆம்யோ டிரோபிக் லேடரல் சிலிரோசிஸ் என்ற தசையூட்டமற்ற பக்க மரப்பு நோயால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புக்கள் செயல்பாட்டை இழந்தவர். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் இயற்பியலில் மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.  கருந்துளை பற்றிய ஆய்வில் அரிய உண்மைகள் உலகுக்கு தந்தார்.

பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

இளம் வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டவர்.  மனம் தளராமல் அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார்.  அமெரிக்க குடியரசு தலைவராக நான்கு முறை பதவி வகித்தார்.

லுட்விக் வான் பிதோவன்

கேட்கும் சக்தியை 26 வயதில் முழுமையாக இழந்தவர்.  பல பாடல்களுக்கு வியக்கும் வண்ணம் இசை அமைத்தார்.  இவரது இசையில் பிரபலமான பாடல்கள்  அனைத்துமே கேட்கும் சக்தியை இழந்த பின் உருவாக்கப்பட்டவை.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இயற்பியல் கண்டு பிடிப்புகளின் முன்னுதாரணமாக கருதப்படுவர்  மூன்று வயது வரை பேச்சே வரவில்லை. கற்பதில் குறைபாடு உள்ளவராக கருதப்பட்டவர். அதை எல்லாம் புறந்தள்ளி அறிவியல் உலகில் வியக்க வைக்கும் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினார். உலக புகழ் பெற்றார்.

ஸ்டீவ் ஒன்டர்

பிரபல் பாடகர் பிறக்கும்போதே பார்வைத்திறன் இல்லை. ஆனால் முடங்கிவிடவில்லை பல பாடல்களை இயற்றி பாடி இசைத்தட்டுக்கள் தயாரித்தார்.  இசைக்கருவிகளை வாசித்து அசத்தினார். 20ம் நூற்றாண்டில் சிறந்த இசை கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

ஜான் மில்டன்

பிரபல ஆங்கில எழுத்தாளர் மற்றும் கவிஞர்.  43 வது வயதில் பார்வைத் திறனை இழந்தார். அதன்பின் விடாமுயற்சியால் அதன்பின் விடாமுயற்சியால் பல புத்தகங்கள் எழுதி புகழ் பெற்றார்.

நன்றி   சிறுவர் மலர்.

ஒரு அழகிய கலாம் காலம்.

“அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ?
என்ன ஜான் சொல்றே ?””ஆமா. அந்தப் பெண்ணின் பெயர் சரஸ்வதி.””எப்போ நடந்தது இது ?எதுக்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?”நண்பரிடம் விளக்கமாக நான் அதை சொன்னேன்.ஆம்.
அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.அப்போதுதான் திருச்சியில் இருந்த உயர் அதிகாரி கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.”சொல்லுங்க சார்” என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.
கலாம் சொன்னார் அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.
காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.மாப்பிள்ளைக்கு 47.இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.கலாம் தொடர்ந்தார் : “கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம்அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது.அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை…”
“அதை நாங்க பாத்துக்கிறோம் சார்” என்றார் கலியபெருமாள்.”பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?”ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார்.
ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள்.”சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்.””நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்றோம்.”சொன்னாள். கவனமாக
குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.”ஓகே, நாங்க புறப்படறோம்.அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்.”
“என்ன சார் ?””உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே.
அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?””நான்தான் சார்.”ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.
 “எப்படீம்மா ?”
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை.அதற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : “உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.Only four students…”
கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்.”இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்.”
அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.
அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?
சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி.அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.யார் இந்தப் பெண் ?எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !மேடையில் நின்ற அந்தப் பெண்
மூச்சு வாங்க சொன்னாளாம். “நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்.”யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்?
எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.”கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம்.நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?””தெரியவில்லை” என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.
அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :”ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள். படிக்க வைக்கப்பட்டவள்.நான்தான் துறையூர் சரஸ்வதி.”இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.”உங்களுக்கும் நன்றி.உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி.”சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.
ஆச்சரியம்தான்.அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது.தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.
ஆம்.
அது ஒரு அழகிய கலாம் காலம்.
John Durai Asir Chelliah.

கைலாஷ் யாத்ரா இனி கனவல்ல நிஜம்

 எவன் ஒருவன் கைலாயத்தை கண்டு தரிசனம் செய்கின்றனோ  அவனுடைய 21 தலைமுறைகள் முக்தி அடைகின்றன.*முன்னோர்கள் பலர் செய்த புண்ணியத்தின் பலனாகவே ஒருவருக்கு இந்த ஜன்மத்தில் கைலாய மானசரோவர் தரிசனம் கிட்டும் என்கிறது புராணங்கள்இந்தியாவிற்கும் திபெத்திற்கும் நடுவே இருக்கிறது கைலாஷ் எனும் கைலாயமலை. உலகின் மிக பெரிய சிவலிங்கம் கைலாயமலை என்கிறது ஆன்மிகம். கூகுளின் சாட்டிலைட் படங்கள் இது உண்மை என்பதை உணர்த்துவது போல அமையப்பட்டிருக்கிறது

உலகின் மைய அச்சுப் பகுதி இந்த மலை யில் தான் உள்ளதாக அறிவியல் ஆய்வுகள் சொல்கிறது. பூமியில் இருந்து 6,638 மீட்டர் உயரத்தில்  சுமார் 22,000 அடி உயரத்தில் இம்மலை உள்ளது. கைலாயமலை யை சுற்றியுள்ள கிரிவலப்பாதை மொத்தம் 52 கிலோ மீட்டர் (32 மைல்) நீளம் கொண்டது. *கைலாய மலையின் வடக்கு முகம் வாமதேவமுக தரிசனம் என்றும்., தெற்கு முகம் அகோரமுக தரிசனம் என்றும்., மேற்கு முகம் சத்யோஜாத முக தரிசனம் என்றும்., கிழக்கு முக தரிசனம் தத்புருஷமுக தரிசனம் என்றும் அழைக்கபடுகிறது. இதில் தெற்கு முகம் தான் இந்தியாவை நோக்கி உள்ளது. தேவ லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கங்கை இறங்கிய ஜடா முடியும்   சிவபெருமானின் மூன்று கண்களும் உள்ள முகம்.*மேலும் இம்முகத்தில் அடாத செயல் செய்த இராவணன் திருக்கயிலை மலையை கட்டி இழுத்த அக்ஷ்ய வட கயிற்றின் தழும்பும் உள்ளது. இந்து மதம்., புத்த மதம்., சமண மதம்., பொம்பா மதம் ஆகிய நான்கு மதத்தினருக்குப் புனிதத் தலமாக கைலாயமலை விளங்குகிறது. இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை.

பல அமானுஷ்ய ஆற்றலைக் கொண்ட இம்மலையில் ரகசியங்களை அறிய இம்மலையில் ஏறிய பல மலையேற்ற வீரர்கள்., மீண்டும் உயிருடன் திரும்பவில்லை என இம்மலையின் ஆற்றலைப் பற்றி உணர்ந்தவர்கள் கூறுகிறார்கள். வேறு சில மலையேற்ற வீரர்கள் இம்மலையின் ஒரு மர்மமான பகுதியை அடைந்த போது., பல ஆண்டுகள் முதுமையடைந்தவர்களாக மாறிவிடுகிறார்களாம்.இந்த மலைத் தொடர்களின் ஒரு பகுதியில் ஷெம்மலா எனும் ரகசிய நகரம் இருப்பதாகவும் அங்கே வாழ்பவர்கள் சாகா வரம் பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது. இமயமலைக்கு அருகே இருக்கும் கொங்காலா பாஸ் எனும் இடம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இருக்கிறது. இந்திய சீன சண்டையில் இந்த இடம் இரண்டாக பிரிக்கப்பட்டு பாதி சீனாவிற்கும் மீதி இந்தியாவிற்கும் சொந்தமாகிறது. இந்த இடத்தில் ஏலியன்கள் வந்து போவதாகவும் பூமிக்கு அடியில் ஏலியன்கள் தங்கும் தளம் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.ரஷ்ய நாட்டு கண் மருத்துவரும்., மலையேற்ற வீரருமான டாக்டர் *எர்ன்ஸ்ட் முல்டஷேவ்* “கயிலாய மலை உண்மையில் இயற்கையாக தோன்றிய மலையே இல்லை, என்றும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம்மை விட அனைத்து வகையிலும் முன்னேறிய நாகரிகத்தை சார்ந்த மனிதர்களோ அல்லது வேற்றுலக வாசிகளோ கட்டிய மிகுந்த ஆற்றல் வாய்ந்த பிரமிடு என்கிறார்.”1999 ஆம் ஆண்டு இக்கயிலாய மலையின் அடிவாரத்தில் அவர் தங்கியிருந்த போது., ஒரு இரவு நேரத்தில் இம்மலைக்குள் இருந்து மனித நடமாட்டத்தை காட்டும் வகையிலான சத்தங்களை தான் கேட்டதாக கூறுகிறார் அந்த ரஷ்ய மருத்துவர் முல்டஷேவ்

கைலாய மலைப்பகுதியில் புகழ்மிக்க இரண்டு ஏரிகள் உள்ளன. அவை மானசரோவர் ஏரியும்., ராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள  நல்ல நீர் உள்ள ஏரியாகும். இது பிரம்மாவினால் உருவாக்கப்பட்டது என்கிறது புராணம்.இன்றளவும் தேவர்கள் அதிகாலை வேளையில் தேவலோகத்தில் இருந்து இங்கு தேவர்கள்., சித்தர்கள்., முனிவர்கள் தினமும் ஒளி ரூபத்தில் வருவதாக கூறப்படுகிறது.மானசரோவர் நதிக்கு வெகு அருகே ராட்சஷ தால் எனும் ஏரி இருக்கிறது. மானசரோவர் நீர் இனிப்பாகவும்., இதற்கு வெகு அருகே இருக்கும் ராட்சஷ தால் நீர் உப்பாகவும் இருப்பதன் மர்மங்கள் இன்னமும் விளங்கவில்லை. தவிர மானசரோவர் மிக அமைதியாக இருக்கிறது அங்கே   பறவைகள் பறக்கின்றன.

ஆனால் ராட்சஷ தாலோ அலையடிக்கும் ஆர்ப்பாரத்துடன் திகழ்கிறது. இந்த ராட்சஷ தாலுக்கு பறவைகள் வருவதில்லையாம். காரணம் என்னவென்றால் இந்த இடத்தில் தான் ராவணன் தவம் செய்ததால் உண்டான  அதிர்வுகள் இன்னும் இருப்பதால் ஏரியில் அலை அடித்துக் கொண்டு இருக்கிறதாம்.இப்படி அற்புதங்களும்  அதிசயங்களும்நிறைந்த கைலாய மலையையும் மானோசரோவர் ஏரியையும் தரிசிப்பது இந்துக்களின் பிறவிப்பயன் என்றாலும் ஆபத்தான பாதைகளில் பயணம் செய்தால் மட்டுமே கைலாய மலையை அடையு முடியும் என்பதால் நிறைய பேர் செல்வதில்லை.இதனால் நிறைய இந்துக்களுக்கு  கைலாஷ் யாத்திரை ஒரு கனவாகவே வாழ்வில் முடிந்து விடுகிறது. ஆனால் ஒவ்வொரு இந்தியனின் கனவையும் நனவாக்கி வரும் மோடி அரசு இந்துக்களின் கைலாய யாத்திரை கனவையும் நனவாக்க ஒரு புதிய பாதையை உருவாக்கி இருக்கிறது.தற்போது., ​​கைலாஷ் மானசரோவர் யாத்ரா உத்தரகாண்ட் சிக்கிம் அல்லது நேபாள வழிகள் வழியாக பயணித்து வந்தது. இதில் உத்தரகாண்ட்  வழி மிகவும் கஷ்டமான பாதையாகும். ஆனால் அதுதான்இந்திய வழிப் பாதையாகும்.ஏனைய சிக்கிம் நேபாள வழிப்பாதைகளில்20 சதவீதம் தான் இந்திய நிலப்பரப்பில்இருக்கிறது., மீதி 80 சதவீதம் சீனாவின் வழிப் பாதைகளில் தான் இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஏழாம் பொருத்தம். இந்த நிலையில் மாற்று வழிகளை தேடியது மோடி அரசு.

உத்தரகாண்டு மாநிலத்தில் உள்ள மிக உயரமான அதாவது சுமார் 9000 அடி முதல்  17000 அடி உயரமான மலைப் பகுதிகளில்  வெடிவைத்து தகர்த்து ஒரு புதிய பாதையை உருவாக்கியது *இந்தியாவின் பார்டர் ரோடு ஆர்கனிசேஷன் அமைப்பு (பி.ஆர்.ஓ.)*டெல்லியில் இருந்து கைலாஷ் மானஸ்ரோவர் இனி 750 கிலோமீட்டர் மட்டுமே.பிரதமரின் முதல் கனவுத்திட்டத்தை நனவாக்கியது இந்திய இராணுவம் .பாட்டன் டேங்கிகளையும்., பீரங்கிகளையும் கயிறு கட்டி மலை உச்சிக்கு எடுத்து சென்று பாறைகளை உடைத்து பளிங்கு போன்று சாலை அமைத்து விட்டது இந்திய இராணுவம்.*இனி தில்லியில் இருந்து சொந்த காரிலேயே  புலிலேக் (654 KM )வரை சல்லுன்னு சாரி சில்லுனு போய்விடலாம் … அங்கிருந்து மானஸரோவர்க்கு திபெத் வாகனத்தில் வெறும் 97 கி மீ பயணம் செய்தாலே போதும் ஈசனை தரிசித்து விடலாம்.*இந்த சாலையை உருவாக்கியதன்  மூலமாக கைலாஷ் யாத்ரா 84 சதவீதம் இந்திய மண்ணிலேயே நடைபெற இருக்கிறது. இந்த  சாலையை உருவாக்க பிஆர்ஓ வீரர்கள் சில பேர் இறந்துள்ளார்கள். நிறைய பொருட்களை பிஆர்ஓ இழந்துள்ளது. இருந்தாலும் மனம் தளராது உழைத்துசாதனை செய்துள்ளது பிஆர்ஓ.*பிஆர்ஓ கட்டியுள்ள இந்த 80 கிலோ மீட்டர் தொலைவு உடைய கட்டியாப்கர் டூ லிபு லேக் புதிய சாலையின் மூலமாக சுமார் 10 நாட்கள் கைலாஸ் யாத்திரையின் காலம் குறைவாகும்* என்பதால் இனி வரும்

காலங்களில் கைலாஷ் யாத்திரைக்குபயணம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை  மிக அதிகமாகும்.

 

*ஓம் நமசிவாய*

 

இமயம்  தேடிய இதயம்

 

வளங்கள் நிரம்பியது இந்தியா.  பூமியில் புதைந்துள்ள கனிமங்களைக் கண்டறிந்து நாட்டை செல்வச் செழிப்பு மிக்கதாக மாற்ற கடுமையாக உழைத்தவர். தரஷா நாஸ்ஷர்வான் வாடியா   பல்துறைகளில் சாதனை நிகழ்த்திய விஞ்ஞானி

குஜராத் மானிலம் சூரத்  நகரில் அக்டோபர் 25 1883ல் பிறந்தார்.  உயிரியல் புவியியல் துறைகள் இந்தியாவில் வளர அரும்பாடுபட்டார். தாவரவியல் மற்றும் புவியியல் துறையில் முதுகலை முடித்தார். நம் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜம்மு நகரில் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார்.

பாறை தொல்படிமம் தாவரம் என பல துறைகளில் ஆராய்ச்சி செய்ய இமயமலை பொருத்தமான இடம் என கண்டார்.  மலையின் அபூர்வத் தோற்றம் இயல்பு பனிப்பாறை தன்மை புவியியல் அமைப்பு தாவர வளர்ச்சி என பல து/றைகளில் கவனம் செலுத்தினார்.

ஆராய்ந்து தெளிந்தவற்றை கட்டுரைகளாக வெளியிட்டார்.  அவற்றை அறிவியல் ஆய்வுலகம் ஏற்றுக்கொண்டது. இமயமலை பகுதியில் புதையுண்ட உயிரனங்களின் தொல் படிமங்களை தேடி கண்டெடுத்தார்.  அவை எத்தனை ஆண்டு பழமையானவை என துல்லியமாகக் கணித்து ஆராய்ந்தார். அவர் சேகரித்தவற்றில் ஸ்டிகோடான் கணேசா என்ற யானை வடிவமும் விலங்கு வடிவத் தாவரமும் மிக முக்கிய தொல்படிமங்களாக கருதப்படுகின்றன.

இமயமலையில் உள்ள பாறைகளின் தன்மையை ஆராய்ந்தார். அவை எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை என்பதை கணித்தார்.  புவியின் கற்பவர்களுக்கு உதவும் வகையில் இந்தியா பர்மா புவியியல் என்ற நூலை எழுதினார்.  புவியியல் துறை வளர்ச்சிக்காக ஜியோலாஜிகல் சர்வே ஆப் இந்தியா என்ற அமைப்பை 1920ல் உருவாக்கினார்.  இந்தியாவில் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளைக் கண்டறிந்து அரசின் கவனத்துக்கு வைத்தார்.

புதைந்துள்ள கனிம வளங்களை பயன் படுத்தினால் இந்தியா குபேரபுரியாக மாறும் என்றார்.  அண்டை நாடான இலங்கை அரசின் அழைப்பை ஏற்று  1938ல் சென்றர்.  அதன் புவியியல் அமைப்பு கனிம வளங்களை ஆராய்ந்து கூறினார். ஆசியாவின் பாகிஸ்தான் பகுதியில் உள்ள நங்கபர்வதம் மலை பற்றியும் ஆய்வு செய்தார்.  கல்வெட்டுகளின் கால தொன்மையை ஆராய்ந்து கூறினார்.  பழமையான ஓலைச்சுவடிகளையும் ஆராய்ந்தார்.  புவியியல் ஆராய்ச்சிக்காக விருதுகளும் பட்டங்களும் நாடி வந்தன. இந்திய அரசின் பத்ம விபூஷன் உட்பட பல கௌரவங்களைப் பெற்றார்.  ஆராய்ச்சியில் சாதனைகள் படைத்த வாடியா 1969ல் மறைந்தார்.  இந்திய கனிம வள வரலாற்றில் அவர் புகழ் என்றும் நிலைக்கும்.

தகவல் நன்றி    சிறுவர் மலர்.

ஆங்கிலத்தில் அசத்தும் பாட்டி

 

சமீபத்தில் ஆங்கிலம் பேசும் மூதாட்டி பற்றிய வீடியோ ஒன்று வெளியானது. 36 செகண்டுகல் ஓடும் அந்த வீடியோவில் மூதாட்டி ஒருவர் தேசத்தை காந்தியை பற்றி அச்சரம் பிசகாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். உலகின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர் மகாத்மா காந்தி.  இந்தியாவின் தந்தை என அழைக்கப்படும்  அவர் மிக எளிமையான மனிதராக வாழ்ந்தார்.   அவரது அகிம்சை இந்தியாவை ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றுத் தந்தது. என அந்த உரை நீள்கிறது.

ஐ பி எஸ் அதிகாரி அருண் போத்ரா என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகியுள்ளது. மிக சரளமாக ஆங்கிலம் பேசும் காங்கிரஸ் எம் பி யான ச்சி தரூருக்கு சவால் விடுவதாக அமைந்துள்ள அந்த வீடியோவை இதுவரை மூன்று லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். நூற்றுக்கணக்கில் அவரை ஊக்கப்படுத்தி கருத்துக்களும் பதிவிடப்பட்டுள்ளன.

அந்த குரலுக்கு சொந்தக்காரர் ராஜஸ்தான் மானிலம் ஜூன்குனு மாவட்டத்தை சேர்ந்த பக்வானி தேவி என்ற மூதாட்டி வெள்ளை சட்டையும் சிவப்பு மேலாடையும் அணிந்துள்ள அந்த பாட்டி தனது பொக்கை வாயால் பேசும் ஆங்கிலம்  நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் மகளிருக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது.  அந்த வீடியோவின் கீழே பாட்டிக்கு எத்தனை மதிப்பெண்கள் போட்டு ஐ பி எஸ் அதிகாரி போத்ரா அந்த மூதாட்டியை ஊக்கப்படுத்தியுள்ளார். இத்தனைக்கும் அந்த பாட்டி பள்ளி படிப்பை மட்டும் முடித்தவராம்.  பாலைவனத்தில் ஒரு ரோஜாவாக மிளிர்கிறார் பக்வானி தேவி.

 

தகவல் நன்றி  கோமதி பாஸ்கரன்     தோழி

 

முதன்மை சொகுசு கார்

சுகமான பயணம் என்றாலே நினைவிற்கு வருவது ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு கார் தான்.  இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய ராய்ஸ்.  ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள அல்லல்டன் கிராமத்தில் மார்ச் 27 1836ல் ஏழை குடும்பத்தில் பிறந்தார்.  இரண்டு ஆண்டுகள் தான் பள்ளியில் படித்தார்.  10 வயதி தந்தையை இழந்தார்.

பத்திரிக்கை விற்றுப் பிழைத்தார்.  பின் ரயில் பணிமனையில் தொழில் கற்று லண்டன்  மின்விசை நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார்.  அந்த பணியில் நிபுணத்துவம் பெற்றார்.  நண்பருடன் இணைந்து ராய்ஸ் அண்டு கம்பெனி என்ற நிறுவனத்தை 1884ல் இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் நிறுவினார்.  அது கார் தயாரிப்பு நிறுவனம் அல்ல.6294_4_0

அந்த காலத்தில் ஓடும் கார்களில் கட……………………முடா ……….. என சத்தம் வரும். இது அவருக்கு எரிச்சலை ஊட்டியது. பயணிக்கும் போது சத்தமின்றி ஓடும் காரைத் தயாரித்தார். அது சொகுசு மிக்கதாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. பெரும் பொருட்செலவில் உருவாகியிருந்தது.  பெரும் செல்வந்தர்களுக்கு அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த தொழிலதிபர்கள் சார்லஸ் ஸ்டொவர்ட் ரோல்ஸ் 1904ல் ராய்ஸை சந்தித்தார்.  இருவரும் இணைந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற பெயரில் ஒரு வாகன தொழிற்சாலையை இங்கிலாந்து டெர்பி நகரில் நிறுவினார்.  அங்கு 1906ல் உருவாக்கிய சில்வர் கோஸ்ட் என்ற சொகுசு கார் பெரும் புகழ் பெற்றது.  விலை உயர்ந்த வசதிமிக்க கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது.

ஊழியர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொண்ட ரோல்ஸ் கடுமையான உழைப்பாளி.  தன் தயாரிப்பு பற்றி ரோல்ஸ் ராய்ஸ் கார்   ஸ்டியரிங் பிடிக்கும் யாரும் உலகிலேயே மிக உயர்ந்த ரக வாகனத்தை ஓட்டுகிறோம் என்ற உணர்வை பெற வேண்டும். அந்த தரம் குறையவே கூடாது என்று ஊழியர்களிடம் வலியுறுத்தினார்.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ்  பாரீஸ் நகரில் நடந்த வாகன கண்காட்சியில் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்த அனுபவத்தை இந்த காரில் பயணிக்கும்போது இஞ்சின் ஓசை துளி கூட கேட்கவில்லை. சாலையில் பயணிக்கும் உணர்வே ஏற்படவில்லை……….என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிக்கை ஆசிரியர் எழுதியுள்ளார்.

தகவல் நன்றி     சிறுவர் மலர்.

2019  சாதனை பெண்கள்

உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை 11 தங்க பதக்கங்களை வென்றிருந்த சாதனையை 12 தங்க பதக்கங்களை வென்று முறியடித்தார் அலிசன் ஃபெலிக்ஸ் இச்சாதனையை இவர் முறியடித்திருந்தாலும் இந்த இடத்துக்கு ஃபெலிக்ஸ் வந்தது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் தனதுமகள் கேம்ரினை பெற்றெடுத்த 10வது  மாதத்திலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  2020 ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அலிசன் ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வென்ற பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.

லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் உலகின் முன்னணி வீராங்கனையான வீனஸ் ஆட்டத்திற்கு நிகராக ஈடுகொடுத்து விளையாடிய காஃப் 6—4  6—4 என்ற நேர்செட் கனக்கில் வெற்றி வாகை சூடினார். விம்பிள்டன்னில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீனஸை முதன்முதலில் எதிர்கொண்ட காஃப் எந்தவித பயமின்றி ஆக்ரோஷமாக விளையாடி வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

23வது சர்வதேச ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதே லட்சியம்.

ராஜஸ்தான் ராஜ்ஸமந்த பகுதியைச் சேர்ந்த 20 வயது சுமன் ராவ்  2019க்கான மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் சென்றார். வெற்றியாளர் சுமன் ராவ்.  கோதுமை நிறம்  5’8” உயரம் சிரித்த முகம் என ஒரே நாளில் இந்திய இளைஞர்களின் ஹாட்சாய்ஸ் இந்தக் கண்ணம்மா தான்.   பிறப்பு ராஜஸ்தான்  வளர்ப்பு மும்பை.  மஹாத்மா கல்வி அமைப்பில் பள்ளிப்படிப்பு  இன்ஸ்டிடியூட் ஆஃப் சாட்டர்ட் அக்கவுண்ட்  டெல்லியில் கல்லூரி படிப்பு  பி காம் மற்றும் சாட்டர்ட் அக்கவுன்ட் முடித்திருக்கும் சுமன் படிப்பிலும் கொஞ்சம் கெட்டி.

மேற்கு வங்க மானிலத்தின் நாடியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதற்காக பிரபல் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை ராணு மோண்டால் என்ற பெண்மணி சிறப்பாக பாடியுள்ளார்.  அதை ஒருவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியதை அடுத்து ஒரே இரவில் வைரலானார். அதன்பின்னர் பிரபல் தொலைக்காட்சி ஒன்று அவருக்கு மேடை அமைத்து தந்தது   தற்போது தொழில் முறை பாடகியாக விஸ்வரூபமெடுத்துள்ள  அவருக்கு தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் பாடல் பாட வாய்ப்பு தந்துள்ளார் பிரபல பாடகர் சங்கர் மஹாதேவன்.

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்தார் கீர்த்தி சுரேஷ். அந்த படத்தில் சாவித்ரியாகவே மாறிய கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் டெல்லியில் நடந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு கீர்த்தி சுரேஷூக்கு விருதை வழங்கி அவரின் நடிப்பைப் பாராட்டினார்.

தென் ஆப்பிரிக்க அழகியான ஸோசிபினி டன்சி  2019ம் ஆண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றார்.  பெண்களிடையே இயற்கை அழகை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல் பாலியல் குறித்த நிகழ்வுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.  அவரிடம் போட்டியின் நீதிபதிகல் பெண்களுக்கு முக்கியமாக கற்றுக்கொடுக்கவேண்டிய பண்பு எது? என்று கேட்டதற்கு அவகளுக்குத் தலைமை பண்பை கற்றுத்தரவேண்டும் என்று இவர் கூறிய பதில்தான்  இவருக்கு மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை பெற்றுத் தந்தது.

சுவிட்சர்லாந்தில் ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெற்ற உலக பேட்மின்டன்  சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் பி வி சிந்து  இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரை இறுதி ஆட்டத்தில் பி வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நஸோமி ஒருஹாராவிடம் மோதினார்.  போட்டி தொடங்கிய முதல் 38 நிமிடங்களிலேயே நஸோமி ஒருஹாராவை 21—1  21—7  என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சிந்து.

தகவல் நன்றி    தோழி