தித்திக்கும்  திராட்சை

புளிப்பும் சற்றே இனிப்பும் கொண்ட திராட்சை பழத்தில் ஊட்டச்சத்துக்கல் நிறைந்துள்ளன.  கருப்பு பன்னீர் காஷ்மீர் ஆங்கூர்  காபூல் விதையில்லா திராட்சை என்று பல ரகங்கள் உள்ளன. சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. உலர் திராட்சை அதிகச் சத்துக்கள் நிறைந்து.  திராட்சை கொடி வகை தாவரம்  படரும் தன்மையுடையது.  வேரில் வளர்ச்சி கண்டு கிளை பரப்பும் தன்மையுடையது. தாய்க்கொடியிலிருந்து கிளை வெட்டி அல்லது வேர்த்துண்டுகளை துண்டாக்கி நடலாம்  திராட்சையில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லா வித சிகிச்சைகளின் போதும் திராட்சைப் பழம் உண்ணலாம்.

திராட்சை பழம்……………… ரத்தத்தை சுத்தப்படுத்தும்  நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது.  செரிமான உறுப்புக்கள் சோர்வடையாத வகையில் ரத்தத்தில் எளிதாக கலக்கும்.  திசுக்களுக்கு புத்துயிர் அளிக்கும்.  பதற்றத்தைக் குறைப்பதில் பிரதான பங்காற்றும்.  சிறு நீரகம் நன்கு செயல்பட உதவும்  கல்லீரலை சுத்தப்படுத்தும். உடல் கழிவை வெளியேற்றும்  ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும்  நரம்பு மண்டலத்தை சமன்படுத்தும். திராட்சையை வயது வித்தியாசமின்றி  எல்லாரும் சாப்பிடலாம்  பசியில்லாதவர்களுக்கு  மிகப்பெரிய வரப்பிரசாதம்  ஜீரணக்கோளாறு உள்ளவர்களுக்கு நிவாரணம் தரும்.  உடல் வசதி பயணத்தின்போது  ஏற்படும் உஷ்ணத்துக்கு திராட்சை மிகவும் ஏற்றது.  திராட்சை பயிரில் அதிக அளவு பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுவதால் சந்தையில் வாங்கும் பழத்தை உப்பு கலந்த நீரில் கழுவி பயன்படுத்துவது நல்லது.

அகத்திக்கீரை

சத்து மிகுந்தது அகத்திக்கீரை. இதில் வைட்டமின் ஏ என்ற உயிர்ச்சத்தும் புரதம் இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்துக்களும் ஏராளம் உள்ளன.  ரத்த கொதிப்பால் அவதியுறுவோர் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர குறையும். உடலில் உஷ்ணம் அதிகரித்தால் வறட்டு இருமல் தும்மல் போன்றவை வரக்கூடும். அகத்திக்கீரையை உண்டால் இவை சீராகும்.

கடும் வயிற்று வலி ஏற்பட்டால் அகத்திக்கீரையை வேக வைத்து அதன் சாற்றுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். அகத்திக்கீரையில் அரிசி கழுவிய நீர் கலந்து சூப் தயாரிக்கலாம்  சாம்பர் செய்யலாம்.  அகத்திக்கீரையை நன்றாகக் கழுவி வேக வைத்து உண்ண வேண்டும். வாயிலிட்டு நன்றாக மென்ரு தின்ன வேண்டும். அரைக்குறையாக சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும். இந்த கீரைக்கு விஷத்தை முறிக்கும் சக்தி உள்ளது. வயிற்றிலுள்ள புழு பூச்சிகளை அகற்றும்.

தகவல் நன்றி   சிறுவர் மலர்.

பேரரத்தை தாவரம்

இந்திய மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்றது பேரரத்தை தாவரம். புல்வெளி சார்ந்த இஞ்சி இன செடி வகையை சேர்ந்தது.  தும்ரஷ்டகம் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது.  ஆங்கிலத்தில் காலங்கல் என்பர்  தாவரவியல் பெயர்  அல்பினியா காலங்கா இரண்டு மீட்டர் வரை வளரும்.  விரும்பும் நறுமணம் தரும்.

இலை நீண்ட ஈட்டி வடிவானது.  ஒரு போக்கு நரம்புடையது.  மேல்பகுதி அடர் பச்சையாகவும் கீழ்ப்பகுதி சாம்பல் பச்சையாகவும் ஓரம் வெண்மையாகவும் காணப்படும். நடு நரம்பு வலிமையானது.  மலர் பச்சை கந்த வெண் தொகுப்பாக அமைந்திருக்கும்.  பூ இதழ் வெண்மையாக சிவப்புக் கீற்றாக காணப்படும்.

பழம் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். வேரில் உள்ள கிழங்கு காரச் சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டது.  தென் கிழக்கு ஆசியாவை தாயகமாக கொண்டது. பேரரத்தை.  தரையடி தண்டை துண்டித்து நட்டால் வளரும்.  ஆசியா முழுவதும் பயிரடப்படுகிறது.  இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை இமயமலையின் கிழக்கு சரிவுகளில் விளைகிறது.

அண்டை நாடுகளான சீனா வங்க தேசத்தில் வாணிக ரீதியாக பயிரிடப்படுகிறது பேரரத்தை.   கிழக்காசிய நாடுகளில் உணவில் பெருமளவு சேர்கிறது.  வீட்டுத்தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம்.

தகவல் நன்றி   சிறுவர் மலர்.

பசை உள்ள ஆளு

பசை ஒட்ட உதவும். பணம் நிறைய வைத்திருப்பவரை பசை உள்ள ஆளு என்பர்   கடையில் மட்டுமல்ல உடலிலும் பசை உண்டு.  கொலாஜன் என்பது மனித உடலில் தசை எலும்பு தோல் ரத்தக்குழாய் ஜீரண உறுப்புகளில் உள்ள ஒரு வகை புரதம்  இது எலும்பு தோல் போன்றவற்றை இறுக்கமாகவும் துடிப்பான சக்தியுடனும் வைத்திருக்க உதவுகிறது. மூட்டு இணைப்புகலுக்கு ஒட்டும் பசைத்தன்மையைத் தருகிறது.  வயது முதிரும் போது இந்தப் புரத உற்பத்தி உடலில் குறையும். அதனால் தான் முதியோருக்கு சருமத்தில் சுருக்கம் தசை தளர்ந்து போதல் மூட்டுக்கள் இயங்குவதில் தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இனிப்பு அதிகம் உண்ணுதல் புகை பிடித்தல் வெயிலில் அதிக நேரம் சுற்றுதல் போன்ற பழக்கங்களால் உடலில் கொலாஜன் உற்பத்தி குறைய வாய்ப்பு உண்டு. எனவே இவற்றை தவிர்க்க வேண்டும். இன்றியமையாத கொலாஜன் உற்பத்திக்கு உதவும் உணவுப் பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம்…..

முட்டைக்கோள்  சிவப்பு கோஸ் அவகேடோ பழம்  மீன் மாதுளை ஸ்ராபெர்ரி சிவப்பு முள்ளங்கி பீட்ரூட் கேரட்  முளை கட்டிய பயறுவகைகள் பூண்டு சாத்துக்குடி எலுமிச்சை  ஆரஞ்சு ஆளி விதை  கீரை வகைகள் சோயா பால்  சோயாவில் தயாரிக்கும் உணவுகளால் உடலில் கொலாஜன் அதிகம் உற்பத்தியாகிறது.

உடலில் பசைக் குறைவு ஏற்பட்டால்………….. இளவயதிலேயே முதிர்ந்த தோற்றம்  வயிற்று உபாதைகள்  அஜீரணம்  அடிக்கடி மலம் கழித்தல்  உணவு உண்ட உடனே மலம் கழித்தல்  கடும் சோர்வு  மூட்டுவலி போன்ற உபாதைகள் வரக்கூடும்.  உடலுக்கு இந்த புரதத்தின் ஒரு நாளைய தேவை பற்றி சரியாகப் பரிந்துரைக்கப்படவில்லை.  எனினும் ஆரோக்கியத்தில் இன்றியமையாத இந்தப் புரதம் நிறைந்த உணவுப் பொருட்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

தகவல் நன்றி   சிறுவர் மலர்,

கருப்பு எள்

எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்ட சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுனு தெரியல. ஆனா, இத சாப்பிட்டதுனால வகை வகையான நோய்களில் இருந்து தப்பிச்சிகிட்டோம்னு சொல்லலாம்.

ஆமாங்க, இந்த எள்ளுக்குள்ள எவ்வளவு அற்புதங்கள் இருக்குனு தெரிஞ்சால் நீங்க இனி இத விட்டு வைக்க மாட்டீங்க..! முக்கியமாக, எள்ளு சாப்பிடறதலா புற்றநோய் வராமல்இருக்குமாம். அது மட்டுமில்லாம, புற்றுநோய் வந்தவருக்கும் இது அருமருந்தாக இருக்கும்னு இப்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிருக்காங்க..!

*முன்னோர்களின் பாதை..!*

எள்ளு சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு முறுக்கு, சீடை, ஓட்டவடை, எள்ளுருண்டை… இப்படி வித விதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றோம்.

*எள்ளு- உயிர் காக்கும் நண்பன்..!*

இப்படி பலவித உணவு பொருட்களில் எள்ளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பதே. நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு பிடி எள்ளே போதுமாம்.

*எதிர்ப்பு சக்தி கொண்ட எள்..!*

எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயிற்கும் வழி செய்யுமாம். இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..?

*காரணம் என்ன..?*

இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம்.

*தாய்லாந்தின் ஆராய்ச்சி..!*

தாய்லாந்தின் Chiang Mai University, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டது. அதில் கருப்பு எள் புற்றநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும், மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம் ‘Sesamin’ தான்.

*Sesamin அப்படினா என்ன..?*

Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த Sesamin வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து தருகின்றது.

*பெண்களுக்கு எப்படி..?*

பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோயிற்கும்..!

மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றுநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது.

*கருப்பா..?வெள்ளையா..?*

எந்த எள்ளு அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில், கருப்பு எள் தான். எள்ளை பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம்.

அட, இதுக்கூடவா..?

நீங்கள் எள் சாப்பிடுவதால் இந்த பயனும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது. இதில் இருப்பு சத்து, வைட்டமின் பி, எ, ஆகியவை நிறைந்துள்ளதால் இளம் நரையை தடுக்கும். மேலும் முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.

*அழுக்குகளை வெளியேற்ற*

எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடுமாம். குறிப்பாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். முக்கியமாக செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இதை நன்கு உதவும். எவ்வளவு சாப்பிடலாம்..? தினமும் அரை ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது சிறந்தது. இதை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும். உடலில் ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிட்டால் நல்லது.

 *Tamil Traditional Food*

பழங்களும் மருத்துவ குணங்களும்

குற்றாலத்தில் கிடைக்கும் சீஸனல் பழங்கள் சப்புக்கொட்ட வைக்கும் சுவையுடன் ஆரோக்கிய பலன்களையும் கொடுக்கக்கூடியவை. 

மங்குஸ்தான்

குற்றால பழங்களின் ராஜா மங்குஸ்தான். இது பார்க்க நுங்கு போல இருக்கும். இதில் விட்டமின் சி நிறைந்துள்ளது. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் உடல் எடை கூட வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம்.

 ரம்புட்டான்

குற்றால சீஸனல் பழங்களில் அதிக ஆரோக்கிய பலன்கள் கொண்டது ரம்புட்டான்   ரம்புட் என்ற வார்த்தைக்கு மலாய் மொழியில் முடி என்று அர்த்தம். இப்பழத்தின் வெளிப்புறம் முடி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளதால் இந்தப் பெயர். இதில் அதிக நீர்ச்சத்து உள்ளது சருமத்துக்கு நல்லது.

முள் சீத்தா

சிறு நீரக பிரச்னைகள் குடல் நோய் சர்ம நோய்களுக்கு நிவாரணம் அளிக்க கூடியது. கேன்சர் நோய்க்கு அரு மருந்தாக தற்பொது பரிந்துரைக்கப்படுகிறது.

டிராகன் பழம்

இது பார்க்க கள்ளிப்பழம் போல இருக்கும்.  பார்வைத் திறன் கோளாறு உள்ளவர்களுக்குப் பரித்துரைக்கப்படுகிறது. இதய நோய் உள்ளவர்களுக்கு இது உகந்த பழம். முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்களுக்கு கேசத்தின் வேர்க்கால்களைப் பலப்படுத்தி தீர்வு தரும்.

நட்சத்திர பழம்

ஸ்டார் பழம் என்று மக்களால் அழைக்கப்பௌட்ம் இந்தப் பழம் உடலில் உள்ள கெட்டகொழுப்பைக் குறைக்கக் கூடியது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும். இது புளிப்பு கலந்த இனிப்புச்சுவையுடன் இருக்கும். மேலும் தனித்த வாசனையைக் கொண்டிருக்கும்.

துரியன் பழம்

மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக் கூடியடு துரியன் பழம். பார்ப்பதற்கு பலாப்பழம் போல இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வல்லது.  பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை கோளாறுகளுக்கு நல்ல மருந்து. எலும்புகளுக்கு வலு சேர்க்கும். கருத்தரித்தல் பிரச்னைகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது    மலைக்காட்டு பழங்கள் ஆரோக்கியப் பெட்டகங்கள்.

தகவல் நன்றி   அவள்  விகடன்.

வெள்ளைப் பூண்டு

வெள்ளைப் பூண்டில் மரபு ரீதியாகவே நிறைய தாதுக்கள் வைட்டமின்கள்  நோய் எதிர்ப்பு மற்றும் சத்துப் பொருட்கள் உள்ளன.  நூறு கிராம் பூண்டில் 5.346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன  தயோ சல்பினேட் என்னும் உயிர்பொருள் பூண்டில் உள்ளது இது பிற உயிர் மூலக்கூறுகளுடன் இணைந்து ஆலிசின் எனப்படும் நோதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும்.

சமையல் அறையில் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகை பொருட்களில் ஒன்று.  இதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிர்ப்பு ஆற்றல் தரவல்லது.  பூண்டு செடியின் வேர் தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளை பூண்டு. ஆலியேசியே தாவர குடும்பத்தை சேர்ந்த வெள்ளைப்பூண்டின் அறிவியல் பெயர்.  ஆலிவம் சட்டைவம்.   கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உற்பத்தியை தடுக்கும் ஆற்றல் ஆலிசின் மூலக்கூறுகளுக்கு இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.  ரத்த தட்டுக்கள் உறைந்து விடாமல் பாதுகாப்பதிலும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் ஆலிசின் உதவுகிறது.

ரத்தக் கட்டிகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் உருவான ரத்தக்கட்டிகளை நீக்குவதிலும் பங்கெடுக்கிறது.  இச்செயலால் கரோனரி தமனி பாதுகாக்கப்படுகிறது.  மேலும் இதய பாதிப்புக்கள் முடக்குவாதம் போன்ற வியாதிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இரைப்பை புற்று நோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் பூண்டிற்கு உள்ளது.  பாக்டீரியா வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நோய் தொற்று நுண் கிருமிகளை ஒடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன.  ஆலிசின் சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகும்  பொட்டாசியம் இரும்பு கால்சியம் மாங்கனீசு மக்னீசியம் துத்த நாகம் செலீனியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புகள் உள்ளன்.

செலினியம் இதயத்திர்கு ஆரோக்கியம் வழங்கும் தாதுவாகும்   நோய் எதிர் நொதிகள் செயல்பட ஹ்கிறந்த துணை காரணியாகவும் இது செயல்படும்.  மாங்கனீசு  நொதிகளின் துணை காரணியாகவும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியில் இரும்பு தாது பங்கு பெறுகிறது.  பீட்டா கரோட்டின் ஸி சான்தின் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்களும் வைட்டமின் சி யும் உள்ளன. வைட்டமின் சி நோய் தொற்றை தடுக்கும். தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் ப்ரீ ரேடிக்கல் களை விரட்டியடிக்கும் தன்மையும் கொண்டது பூண்டு.

தகவல் நன்றி    சிறுவர் மலர்.

நோய் தீர்க்கும் முள் சீத்தா

 உண்ணும் உணவே உயிர் காக்கும் மருந்தாகிறது.  அதில் பிரதான இடம் பிடிப்பது பழங்கள். அனைத்து வகை பழங்களும் மருத்துவதன்மை வாய்ந்தவை தான்  அமெரிக்க ஆய்வகங்களில் 1970 முதல் தொடர்ந்த ஆராய்ச்சியில் புற்று நோயை கட்டுப்படுத்தும் சக்தி பழவகைகளில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அப்படி கட்டுப்படுத்தும் ஒன்று பிரிக்லி கஸ்டர்டு ஆப்பிள் என்ற முள் சீத்தா பழம் இது. சோர்சாப் என்றும் அழைக்கப்படுகிறது. பலாப்பழத்திற்கு மேல் உள்ளது போல் முள்தோல் தோற்றம் உடையது.  இந்த இனத்தில் 120 ரகங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.  இந்தியாவில் நான்கு ரகங்கள் விளைகின்றன. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் வளர்கிறது இந்த மரம்.  வட அமெரிக்காவில் உள்ள மேற்கிந்திய தீவுகளை தாயகமாக கொண்டது இந்த தாவரம். மித தட்பவெப்ப நிலையில் வளரக்கூடியது.  பழத்தின் எடை மூன்று முதல்  ஐந்து கிலோ வரை இருக்கும். மரத்தின் தண்டு பகுதிகளில் தான் காய்க்கும்.

இந்த பழம் புற்று நோயை தடுப்பதாக ஆராய்ச்சி முடிவுகளில் தெரிய வந்துள்ளது. சிறு நீரகம் செயலழிப்பை இதன் இலை மற்றும் பூ தடுக்கிறது.  தொடர் இருமல் கண் புரை நோயை கட்டுப்படுத்த இதன் மொட்டுக்கள் பயன்படுகின்றன.  இலையிலிருந்து காய்ச்சி வடிக்கும் கஷாயம் நரம்பு தளர்ச்சியை போக்கும். நாள்பட்ட காயங்களுக்கு மருந்தாக பயன்படும். காயத்தால் ஏற்படும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் எடை குறைதல் தலைமுடி உதிர்தல் தொடர் வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவர். முள்சீத்தா பழம் பயன்படுத்துவன் மூலம் புற்று நோய் செல் வளர்ச்சி தடுக்கப்பட்டு உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் பரவாமல் தடுக்கவும் செய்கிறது.  குழந்தைகளுக்கு ஏற்படும் சளி காய்ச்சல் தொந்தரவுகளையும் சரி செய்யும்.  பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னையை குணப்படுத்தும். முள்சீத்தா இலைகளை  1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க விடவேண்டும். அது அரை லிட்டராக வற்றியதும் காலை மதியம் இரவு என குடிக்கலாம்.   

பழத்தை முறையாக சுத்தம் செய்து அளவாக பயன்படுத்த வேண்டும் தவறினால் நரம்பு தொடர்பான பாதிப்பு ஏற்படக்கூடும். மருத்துவரின் ஆலோசனை பெற்றே பயன்படுத்தவேண்டும்.  அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் பெருங்குடல் புற்று நோய் மார்பு புற்று நோய் கணைய புற்று நோய்  சிறு நீர் வழித்தட புற்று நோய் நுரையீரல் புற்று நோய் கணைய புற்று நோய் உள்ளிட்டவற்றுக்கு முள் சீத்தா தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் நன்றி    சிறுவர் மலர்.

காலும் நலமும்

மனிதர்களை தவிர எல்லா உயிரினங்களும் புவியில் நலமாக வாழ்கின்றன. ஆனால் பல சுவைகளில் விதவிதமான உணவுகலை சாப்பிடும் மனிதன் அல்லல்படுகிறான்  நலமாக வாழ மூன்று வகை உணவுகல் அவசியம் தேவை. அவை பெரும் உணவு நுண்ணுணவு நுட்ப உணவு என்பவையாகும்.

பெரும் உணவு என்பது உடல் நிறைய சாப்பிடுவது  காற்றை தான் அதிகம் சாப்பிடுகிறோம்.  நீரிலும் காற்றுதான் அதிகம் உள்ளது.  மூக்கால் மட்டுமல்ல  தோல் மூலமும் சுவாசிக்கிறோம். வாயால் மட்டுமல்ல தோல் மூலமும் நீரை உறிஞ்சுகிறோம்  இவற்றை எப்போதும் இயற்கையிடம் இருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறது உடல். இதனால் தான் பெரும் உணவு எனப்பட்டது.  வாய் வழியாக சாப்பிடும் சோறு  இட்லி தோசை சப்பாத்தி போன்ற திட உணவுகளும்  நுண்ணுணவு எனப்படும்.  இந்த உணவில் கரிமம் பிராணன் ஹைட்ரஜன் தாது உப்புக்கள் வைட்டமின்கள் கொழுப்பு நார்ச்சத்து போன்றவை இருக்கும். இந்த சத்துக்களின் விகிதம் உணவுக்கு ஏற்ப மாறுபடும்.

 மூன்றாவது நுட்ப உணவு எல்லா விலங்குகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த உணவு தான் காரணம்  அது மேக்னட்டிக் எனப்படும் காந்த சக்தியாகும்.  இந்த உலகம் அளப்பெரிய காந்த சக்தியை கொண்டுள்ளது.  உடலிலும் காந்த சக்தி உள்ளது. இது குறைந்தால்   பூமியிலிருந்து கிரகித்து கொள்ளும் உடல். இதற்கு நிலத்துடன் தொடர்பு இருக்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு தாயின் அரவணைப்பு எவ்வளவு முக்கியமோ அது போன்று மனிதனுக்கு பூமியே தாய். அளப்பறிய ஆற்றல் மிக்க அதன் தொடர்பில் இருந்தால் நுட்ப உணவு எனப்படும் காந்த சக்தி தாராளமாக கிடைக்கும். இதற்கு மழையில் நனைந்து வெயிலில் குளித்து வெட்டவெளியில் நடக்க வேண்டும். 

ஆரோக்கிய உணவுகளை உண்டாலும் அது செரிமானம் ஆனால் தான் சத்தாக மாறி உடலில் சேரும். உண்ட உணவு செரிமானம் ஆக பூமியில் கிடைக்கும் காந்த சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது.  அது போதிய அளவில் கிடைத்தால் தான் சுரப்பிகள் வேலை செய்யும்  உணவை செரிமானம் செய்து ஆற்றலை உறிஞ்ச வைக்கும் காந்த சக்தி கிடைக்காத போது செரிமானம் மந்தமாகி உண்ட உணவே நஞ்சாச மாறிவிடும்.  கூடுமானவரை பூமியுடன் தொடர்பில் இருக்க பழக வேண்டும். அதற்கு வெறுங்காலுடன் மணல் பாறைகளில் நடக்கலாம்ல்  பசும்புல்வெளியில் நடப்பது மிகவும் நல்லது.  நுட்ப உணவு எனப்படும் காந்த சக்தியை பெற அமெரிக்க செல்வந்தர்கள் வார விடுமுறை தினங்களில் கிராமபுற வேளாண் பண்ணைகளில் குடும்பத்துடன் விவசாய வேலைகள் செய்கின்றனர் தண்ணீர் பாய்ச்சுவது களை எடுப்பது போன்ற பணிகளை செய்து இழந்த காந்த சக்தியை பெறுகின்றனர். இது போல் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

தகவல் நன்றி   சிறுவர் மலர்.

குட்டிப்பூ

சிறிய உருவத்திற்கு தனி சிறப்பு உண்டு. அதனினும் கோடானு கோடி மடங்கு குட்டி உருவமான அணு மற்றும் சமையலில் பயன்படுத்தும் கிராம்பு எல்லாம் சிறியதில் சிறப்பு பெற்றவை.  கிராம்பில் கார்போஹைட்ரேட் ஈரப்பதம் புரதம் வாலடைல் எண்ணெய் கொழுப்பு நார்ப்பொருள் கால்ஷியம் பாஸ்பரஸ் ரிபோ பிளேவின் நயாசின் வைட்டமின் சத்துக்கள் உள்ளன.

கிராம்பு செடியில் மொட்டு இலை மற்றும் தண்டிலிருந்து  எண்ணெய் எடுக்கப்படுகிறது.  இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பெரும்பாலும் உடலைத் தூண்டும் மருத்துவ பொருளாக பயன்படுகிறது.  உடலில் ஏற்படும் வலிகளைப் போக்குகிறது. வயிற்றுப்பொருமல் வாயு தொல்லை போன்றவற்றை சரி செய்யும் மிகச்சிறந்த நிவாரணி.

உடல் வளர்ச்சிதை மாற்றத்தில் மிகவும் உதவும். உடல் சூட்டை சமப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஜீரண உறுப்புக்களில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக் கோளாறு நீங்கி புத்துணர்வு ஏற்படுகிறது.  சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பி சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் கரகரப்பு நீங்கும்.தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க சுட்ட கிராம்பு மிகச் சிறந்த நிவாரணி வாய் துர் நாற்றம் ஈறு வீக்கம் பல்வலியையும் கிராம்பு குணமாக்கும்.  உணவு வகைகளில் எல்லாரையும் கட்டிப் போடுவது பிரியாணி பிரிஞ்சி இவற்றில் சுவையை அதிகரிப்பது கிராம்புதான்.

தகவல் நன்றி   சிறுவர் மலர்.