ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.   இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.   விட்டமின் பி  மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.  பனங்கருப்பட்டி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.  பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து உளுத்தங்களி கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்   குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல் நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும் மினரல்களும் உள்ளன.  கருப்பட்டி இயற்கையாகவே உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள கிளைசீமி இன்டெக்ஸ் உடலில் கலக்கும் சர்க்கரை அளவை வெள்ளை சர்க்கரையை விடபாதிக்கும் கீழாக்க் குறைக்கிறது.  கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.  ஓமத்துடன் சாப்பிட வாயுத்தொல்லை நீங்கும்.

உணவில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும் எலும்புகளும் உறுதியாகும்.  நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசிச் சாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வர சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறு நீர் போவதும் குறையும்.

சுக்கு கருப்பட்டி பெண்களின் கருப்பைக்கு மிகவும் ஏற்றது.  சுக்கு மிளகு கலந்து கருப்பட்டியை பிரவித்த பெண்கள் சாப்பிட பால் நன்றாகச் சுரக்கும். தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைக்கும் நல்ல ஊட்ட சத்து கிடைக்கும்.

தகவல் நன்றி   கவிதா சரவணன்   ஸ்ரீரங்கம்  மங்கையர் மலர்

Advertisements

நிறங்கள் தீர்க்கும் நோய்கள்

நிறங்களுக்குத் தனி மகிமை உண்டு.சில நிறங்களைப் பார்த்தால் நமக்கு உற்சாகம் பொங்கும்.  சில நிறங்கள் மன நிம்மதி அளிக்கும். அமைதிக்கு வெண்மையும்  துக்கத்துக்கு கறுப்பையும் தேர்ந்தெடுத்தற்கு பின்னால் மனவியல் காரணங்கள் உண்டு.  ஆனால் நிறங்கள் நோய்களைத் தீர்க்கும் என்பதும் அந்த மருத்துவ பிரிவுக்கு க்ரோமோதெரபி என்று பெயர் என்பதும் உங்களுக்கு தெரியுமா?  நம் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் ஒளியை வெளிப்படுத்துகிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  அதாவது  நம் உடலிலேயே பெரும் சக்தி உள்ளது.  வண்ணங்கள் நம் ஒவ்வொரு செல் மற்றும் தசை ஆகியவற்றில் சில விளைவை ஏற்படுத்துகின்றன.  அப்படியானால் பலவித நிறங்களைக் கொண்டு மேற்படி நோய்களைக் குணப்படுத்தலாம் என்றாகிறது அல்லவா?

நோய்க்கு ஏற்ற  நிற ஒளியினை உடலில் பாய்ச்சுவதே சரியான சிகிச்சைமுறை என்று சில விஞ்ஞானிகள் கருதினர். இது ஏதோ புதிய கண்டுபிடிப்பு அல்ல.  சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் சீன இந்தியா எகிப்து போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்ட முறைதான். அப்போது நோயாளிகளை அவர்களின் நோய்க்கு ஏற்றவாறு நிறம் பூசப்பட்ட அறைகளில் இருக்க வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

தற்கால நிறச் சிகிச்சையின் முன்னோடி டென்மார்க்கைச் சேர்ந்த பின்சென் என்பவர் புற ஊதாக்கதிர்கள் பாக்டீரியாவுடன் சேர்ந்து செயல்படுவதால் உண்டாகும் நோய்களைப் பற்றி அவர் 1877 ல் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.  அம்மைத் தழும்புகளை மறையச் செய்யத்தான் இவரது ஆராய்ச்சி அதிகம் பயன்பட்டது.

1932 ல் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெரார்டு மற்றும் ஹெஸ்ஸே ஆகிய விஞ்ஞானிகள் நீல நிற ஒளி அமைதியைத் தருவதையும் சிவப்பு நிற ஒளி உணர்ச்சிகளைத் தூண்டுவதையும் விஞ்ஞான பூர்வமாக  நிரூபித்தனர்.  மருத்துவ அறிவியலின்படி சூரிய ஒளி புகாத இடத்தில் நோய் எளிதில் புகும். சூரிய ஒளியினால் பல தொற்று நோய்கள் நம் உடலில் ஏற்படாமல் உள்ளன.  சூரிய கிரனத்தில் பலவித நிறங்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.  ஒவ்வொரு வண்ணத்துக்கும் ஓர் அதிர்வு எண் உண்டு.  தீவிர ஆராய்ச்சியின் மூலம் எந்த வகை வண்ணத்தை செலுத்தினால் நம் உடல் மற்றும் மன நலத்தை சமன் செய்து நோய்களிலிருந்து விடுவிக்கும் என்பதை பாப்போம்.

சிவப்பு

சூடு நெருப்பு மற்றும் கோபம் முதலியவற்றைக் குறிக்கும் உடல் சக்தியைத் தூண்ட உதவும்   இந்த நிற ஒளி குறைந்த ரத்த அழுத்த நோய் மூட்டுவலி  முடக்குவாதம் ரத்தசோகை மற்றும் காச நோய் ஆகியவற்றைக் குணப்படுத்த பயன்படும்.

ஆரஞ்சு

வலிமை மற்றும் கர்வத்தைக் குறிக்கும். நரம்புகளுக்கு சக்தி அளிக்கக்கூடியவை.  சிறு நீரக நோய்கள் தாய்ப்பால் சுரப்பது  முதலியவற்றிற்குப் பயன்படும்.

ஊதா

மனது பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படும் நரம்பு மண்டல நோய்களுக்கும் நல்லது.

மஞ்சள்

மகிழ்ச்சி உற்சாகம் முதலியவற்ரின் அடையாளம்.  மூளை சுறுசுறுப்பின்மை  கல்லீரல் நோய் அஜீரணம் ஆண்மைக் குறைவு தொண்டை மற்றும் கண் நோய்களைக் களைய உதவும்.

ரோஸ்

ரத்தத்தை சீராக்கும்  சிவப்பின் குணமும் நீல நிறத்தின் குளிர்ச்சியும் ஒருங்கே கொண்டது.  வயிறு தொடர்பான நோய்கள்  கண்புரை கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் போன்றவற்ருக்கான சிகிச்சைக்கு ஏற்றது.

பச்சை

நீலமும் மஞ்சளும் கலந்தது. உறக்கம் அளிக்கவல்லது.  நரம்புதளர்ச்சி புண் ஃப்ளூ மலேரியா உடல் உறவுக் குறைபாடுகள் புற்று நோய் ஆகியவற்றின் சிகிச்சைக்குப் பயன்படும் கண் பார்வை குறைபாடுகளுக்கு மிக ஏற்றது.

நீலம்

இதமானது.  உறக்கம் அளிக்க்க் கூடியது.  வலி நீக்க கூடியது.   ரத்தப்போக்கை நிறுத்த தீப்புண்களுக்கு நிவாரணம் அளிக்கவல்லது.

 

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து  3 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவேண்டும்.  பின் அதை வடிகட்டி தேன் சேர்த்து கலந்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்

இதனால் ஏற்படும் நன்மைகள்

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்றுவலி மற்றும் பிடிப்புகளைச் சந்திப்பார்கள்  இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் இதனை அருந்தினால் இது ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

சர்க்கரை நோய் மற்றும் டைப் 2 சர்க்கரை நோயின் தாக்கத்தை தடுக்கலாம்.

உயர் கொலஸ்ட்ரால் பிரச்னை குறைவதோடு ரத்த சர்க்கரை அளவும் குறையும்.

மலச்சிக்கல் பிரச்னைக்கு அருமருந்து.

உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைத்து அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது.

குடல் மற்றும் சிறு நீரகங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும்.

இதய நோயின் தாக்கத்தை தடுக்கிறது.

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரிபெரி நோயின் தாக்கத்தை குறைக்கிறது.

பிரவத்தை நெருங்கும் கர்ப்பிணி பெண்கள் இந்த டீயை குடித்தால் பிரசவ வலியைத் தூண்டுவதோடு எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளன.  ஆகவே மூட்டுவலி முழங்கால் வலி உள்ளவர்கள் இதை தொடர்ந்து குடித்து வரலாம்.

வெந்தயம் மிக சிறந்த கரைப்பான்   ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித்தொல்லை அதிகம் இருந்தால் தினமும் ஒரு தம்ளர் இந்த டீயைக் குடிக்கலாம்.

ரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும்.  அடிக்கடி சிறு நீர் கழிக்க உதவும்

காய்ச்சல் அடிக்கும் போது கண்ட கண்ட மாத்திரைகளைப் போடாமல் ஒரு தம்ளர் வெந்தய டீ பருக உடனே காய்ச்சல் குறைந்துவிடும்.

தொண்டைப் புண்ணைக் குணப்படுத்துகிறது இந்த டீ

 

 

நன்றி   ஜோ   ஜெயக்குமார்  சிவகங்கை   மங்கையர் மலர்

பருவகால உணவு

 

சித்திரை வைகாசி

நெய்ப்பசை கொழுப்பு குறைந்ததும்  கசப்பு காரம் துவர்ப்பு சற்று கூடியதாகவும் உள்ள உணவு ஏற்றது.

ஆனி ஆடி

நெய் முதலிய கொழுப்புச் சத்துக்கள் கூடியதும் குளிர்ச்சி இனிப்பு சேர்ந்ததுமான உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது.

ஆவணி புரட்டாசி

புளிப்பு உப்புச்சுவை கூடியதும் கொழுப்புச் சத்துக்கள் மிதமான உணவு வகைகள் நல்லது.    ஜீரணம் ஓரளவு மிதமாகவே இருக்கும்.

ஐப்பசி கார்த்திகை

கொழுப்பு சத்து  இனிப்பு புளிப்பு கூடிய உணவு வகைகளே ஏற்றவை.  வென்னீரைக் குடிப்பது நல்லது.

மார்கழி தை

கொழுப்பு சத்து அதிகமில்லாத குளிர்ச்சியுடைய உணவு வகைகள் ஏற்கலாம்.  துவர்ப்பு கசப்பு நல்லவை.

மாசி பங்குனி

குளிரும்  வெயிலும் மிதமாக இருக்கும்   விரைவில் ஜீரனம் ஆகும் கொழுப்பு சத்தும்  நெய்ப்பசையுள்ள உணவை ஏற்கலாம்.  இனிப்பு புளிப்பு உப்புச் சுவை கொண்டவற்றை உண்ணலாம்.

[ அறுபதிலும் ஆனந்த வாழ்வு  என்ற நூலிலிருந்து   சரஸ்வதி  பஞ்சு   திருச்சி  ]

 நன்றி   மங்கையர் மலர்

இரண்டாம் இன்னிங்கஸ்

இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் கற்பிதம் செய்து கொள்கிறார்கள்.

50 வயதிலேயே ரிட்டயர்மென்ட் மனநிலையை நோக்கி பயணிக்கற பலரை இப்போது பார்க்க முடிகிறது.   50 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கறோம்.    10,000 கி.மீ பதவுசா வண்டியை ஓட்டுங்க, அதுக்கப்பறம் வண்டி ஸ்மூத்தா இருக்கும் என்பார்கள்…..  50 வயதும் அப்படிதான்….. பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான்!!!

50 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்

புதியதை தேடுங்கள்: சிலர் “பார்ன் வித் ஏ சில்வர் ஸ்பூனாக” இருக்கலாம்….. 50களில் வாழ்க்கையில் ஓரளவு செட்டில் ஆகியிருந்தால் இந்த உந்துசக்தி குறைந்து போகும்….. சோம்பேறித்தனம் சொம்போடு உட்கார்ந்து மொக்கை போடும்…… எனவே புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான ஒன்றைக் கையிலெடுங்கள்…… உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள தோதாக ஒன்றைச் செய்யுங்கள்.

இளைஞர்களோடு பழகுங்கள்: 50 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து அங்கிள் அசோசியஷனை உருவாக்காதீர்கள்…… உங்களை விட வயதில் குறைவானவர்களோடு பழகுங்கள்!!!!! உங்களுக்கு 25 வயதில் இருந்த, அவர்களிடம் இருக்கும், அந்த எனர்ஜி உங்களுக்கும் கிடைக்கும்…..அங்கிள் அசோஷியனில் உட்கார்ந்தால் இன்னும் வயசாகும்!!!

அழகாக உடை உடுத்துங்கள்: அழகான உடைகளை தேர்வு செய்யுங்கள்….. காமா சோமா என்று ஒரு காம்பினேஷனில் உடை போட்டுக் கொண்டு திரியாதிர்கள்!!!!! 50 வயதில் நரையும் வழுக்கையும் அழகுதான்!!!!! உலகின் அழகான நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+கார்கள்தான் அதிகம்!!!!

பயணம் செல்லுங்கள்: உடனே 50+ ஆட்கள் பத்துபேரை கூட்டிக் கொண்டு கோயில் கோயிலாக கிளம்பிவிடாதீர்கள்!!!!! இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்…… வித்தியாசமான இடங்களுக்கு செல்லுங்கள்!!!!! வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்….. திசையறியா பயணங்கள் செல்லுங்கள்….. இல்லையென்றால், 50 வயதில் அங்கிள் ஆன நீங்கள், 60 வயதில் கிழவனாகி விடுவீர்கள்!!!றைய படியுங்கள்:  மூளைக்கு தீனிபோட, நிறைய படியுங்கள்….. தேர்வு செய்து படியுங்கள்!!!  புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களை வாசியுங்கள்….. அவர்கள் பேச்சை கேளுங்கள்.   அறிவுப் பகிர்தல் நடக்கும் இடங்களில் எல்லாம் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்!!!

மேற்சொன்ன விஷயங்களை செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை!!!!!மூளையும் மனசும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வரப் போகிறது?????எப்போதுமே முதல் இன்னிங்கசை விட இரண்டாம் இன்னிங்கஸ்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்    பெரும் பங்கு வகிக்கறது….. நீங்கள் 50+ கார்ராக இருந்தால் தாமதிக்காதீர்கள்!!!!

இது உங்கள் ஆட்டம்….. துவங்குங்கள்!!!!!

 

உற்சாகம் தரும் கிராம்பு

நாட்டு மருத்துவத்தில் கிராம்பு எனப்படும் லவங்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  மலராத மொட்டுக்கள் தான் கிராம்பு எனப்படுகிறது.  கிராம்பை நீர்விட்டு நன்றாக காய்ச்சினால் கிராம்புத் தைலம் கிடைக்கும். இது பல் வலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.  மூன்று கிராம் கிராம்பை எடுத்து இடித்து நன்றாக தூளாக்கி ஒரு குவளை கொதிக்கிற வென்னீரில் இட்டு நன்றாக ஆறியபின் இரண்டு தேக்கரண்டி வீதம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வாய்வு வயிற்று நோய்கள் பசியின்மை களைப்பு அனைத்தும் நீங்கும்.

குடலில் சேரும் சூட்டு வாயுவைப் போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.  கிராம்பு 50 கிராம் மிளகு சித்தரத்தை அதிமதுரம் ஓமம் கருஞ்சீரகம் 10 கிராம் என எல்லாவற்றையும் மண் சட்டியில் போட்டு இளம் சூட்டுடன் வறுத்து இடித்து தூளாக்கி வைத்துக்கொள்ளவும். [ இதில் சித்தரத்தை ஓம்ம் இரண்டையும் தனித்தனியே பாலில் கழுவி காய வைத்துக்கொள்ளவும்.]  மூன்று நாட்கள் கழித்து அரைத்தேக்கரண்டி தூளில் தேன் கலந்து சாப்பிடவும்.   பகலில் கால் மாலை அரை தேக்கரண்டி உண்ணலாம்.  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மெல்ல மெல்ல குணமாகும்.  ஏலம் கிராம்பு இரண்டையும் கொஞ்சம் எடுத்து தூளாக்கி வாயில் வைத்துக்கொண்டால் அதிக எச்சில் சுரப்பது குறையும்.  வெற்றிலை பாக்குடன் கிராம்பை மென்றால் நன்றாக பசியெடுக்கும்.  நல்ல உற்சாகத்தைத்  தரும்.

நன்றி   ஆர் கீதா  சென்னை   மங்கையர் மலர்

அஞ்சும் உறுப்புக்கள்

 

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றன என்று தெரியுமா?

சிறு நீரகம்

நீண்ட நேரம் கண் விழித்தல்   உறக்கமின்மை

வயிறு

குளிரூட்டப்பட்ட உணவுகள்

ஈரல்

அதிகப்படியான கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள்

நுரையீரல்

தூசு  புகை

இதயம்

உப்பு நிறைந்த உணவு வகைகள்

கணையம்

உணவுகளை மிகுதியாக உண்பது

கண்கள்

மிக அதிக நேரம் டி வி பார்ப்பது    செல்போனில் பேசுவது

பித்தப்பை

காலை உணவை தவிர்ப்பது

உறுப்புகள் அனைத்தும் நம்மைப் பாதுகாக்கின்றன.  நாமும் அதனைப் பாதுகாப்போம்.

நன்றி    மங்கையர் மலர்    வா  ஹரிராம்   சென்னாவரம்