முள் பல்லி

முள் பல்லி என்பது ஆஸ்திரேலியக் காடுகளில் காணப்படும் ஒரு வகை பல்லி இனம்.   மலைப் பிசாசு அல்லது மோலோச் எனப்படும்.  இதன் உடலில் முட்கள் இருப்பதால் இதை முள் பல்லி என்று அழைப்பர்.  இது வறண்ட மலைப்பகுதிகளில் பாறைகளில் உள்ள பிளவுகளில் மறைந்து வாழும் தன்மை கொண்டது. இதன் உடல் முழுவதும் மிக மெல்லிய துளைகள்  உள்ளன.  இதன் மூலம் இவை தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கும்.  உதாரணமாஅக இப்பல்லி தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் இது தனது கால் பாதத்தை தண்ணீருக்குள் வைத்தால் போதும்  சில வினாடிகளில் இதன் காலில் உள்ள துளைகள் வழியாகத் தண்ணீர் அதன் உடலுக்குள் சென்றுவிடும்.

Advertisements

சொர்க்கத்து பறவை

 

பேர்டு ஆஃப் பேரடைஸ் என்னும் இந்த சொர்க்கத்து பறவைகள் நியூகினியாவிலும் அதன் அருகாமையிலுள்ள தீவுகளிலும் காணப்படுகின்றன.  பூலோகத்துப் பறைவைகளிலேயே இப்பறவையின் தோற்றப்பொலிவை ஒப்பிட வேறெந்தப் பறவையும் கிடையாது.  இந்த அளவிற்கு இவை ஆர்னமெண்டல்   இத்தகைய அதீத அலங்காரங்கள் ஆண் பறவைகளோடு சரி

இந்த ஆண் பறவைகளின் தலையும் கழுத்தும் கண்ணைப் பறிக்கும். பளீர் மஞ்சள் நிறத்தில் மொசு மொசுவென்று அடர் கறுப்பிலிருக்கும். இடைப்பட்ட தொண்டைப்பகுதி மட்டும் எமரால்டு பச்சை உடலின் பிற பாகங்கள் செஸ்ட் நெட் நிறத்தில் இருந்தாலும் இறக்கைகளின் விளிம்பில் தக தகவென்று ஜொலிக்கும். தங்க நிறச் சிறகுகள் தொங்கிக்கொண்டிருக்கும். இச்சிறகுகளின் முனை மட்டும் ஒயின் நிறத்தில் இருக்கும். சிவந்திருக்கும் இத்தகைய அபூர்வ மேக் அப்பில் ஒரு பறவையை அனேகமாக யாரும் பார்த்திருக்க முடியாது.  எனினும் இப்பறவையின் வண்ணச் சிறகுகளோடு பதப்படுத்தப்பட்ட தோல் பல நாடுகளில் பிரசித்தம்.  இப்பறவை சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்ததென்றும் அது தரை தொடாமலேயே வாழ்ந்ததாகவும் பல தேசங்களில் நம்பப்படுகிறது.  எனவே தான் சொர்க்கத்து பறவை என அழைக்கப்படுகிறது.

*சிவ ரகசியம்* அதிசய சிவன்கோயில்கள்.

*பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.*
 *ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்த போது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ‘ரத்தினகிரீஸ்வரர்’ என்ற பெயருடன் காட்சி தருகிறார்.*
 *கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.*
 *கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.*
 *அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.*
 *காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.*
 *ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்’டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம்.*     *ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.*
 *பெங்களூரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடம் சிவகங்கா என்கிற கிராமம். அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார். ஐந்து அடி உயர, நல்ல பருமனான லிங்கம். சுவாமியின் மிக அருகிலிருந்து தரிசனம் செய்யலாம். கவிகங்காதீஸ்வரர் என்று இறைவன் பெயர். ஆச்சரியம் என்னவென்றால், அந்த கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள். அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார். அந்த நெய் வெண்ணையாக மாறி இருக்கும்.*     *பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.*
 *தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.*
*தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.*  *காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் “ஜ்வரஹரேஸ்வரர்’ என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார்.* 
  *வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.**மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திபருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.*
 *ஈரோடு ஜில்லாவில், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன் கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது. இது இந்த காலத்திலும் நடக்கும் ஒரு அதிசயம். அந்த குளத்தை சிவபெருமான் தன் விரல் நகத்தால் மண்ணில் கிழித்து உருவாக்கினாராம். மிக உயரமான கல் விளக்கு இந்த கோவிலில் காணப்படுகிறது.*
 *சித்தநாத் ஆஸ்ரமத்தில் உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் நிறுவப்பட்டுள்ளது. பாதரசத்தை சுத்தப்படுத்தி கேட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம். உண்மையில் இது சித்தர்களுக்கு கை வந்த கலை. சித்த மார்கத்தில் செல்பவர்களுக்கு, இந்த லிங்க தரிசனம், அதன் அருகாமை மிக நல்ல பலன்களை தருகிறது. இந்த ஆஸ்ரமம் புனே, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.*
*கேரளா மாநிலம் , திருச்சூரில் இருக்கும் வடக்கும்நாதர் சிவன் கோவிலில் எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது. உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும். எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்த சூட்டிலும், வெயில் காலத்தின் சூட்டிலும் அந்த உறைந்த நெய்யானது உருகுவதில்லை. இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்தவித வியாதியையும் மாற்றுகிற அருமருந்தாக திகழ்கிறது.*
*காசி “விஸ்வநாதர் கோயிலில் சாயங்கால பூசையின் போது நூற்றி எட்டு “வில்வ” இலைகளால். தீபாராதனைக்கு முன்பு அர்ச்சனை செய்கிறார்கள். இதில் விசேஷம் என்ன வென்றால், அந்த நூற்றி எட்டு “வில்வ” இலைகளிலும் சந்தனத்தால் “ராமா” என்று எழுதி பின்னர் அர்ச்சனை செய்கிறார்கள். அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தும் செயல்.*
*கேரள மாநிலம், திருச்சூர் – எர்ணாகுளம் பாதையிலுள்ள ஊர் ‘திருக்கூர்’. இங்குள்ள சிவன் கோவிலில் ஆஸ்துமா போன்ற மூச்சுக் கோளாறு உள்ளவர்கள் நோய் குணமாக தாம்புக்கயிறு துலாபாரம் கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார்கள். இப்படி வழங்கப்பட்ட தாம்புக்கயிறுகள் கோவில் மண்டபத்தில் கட்டி தொங்க விடப்படுகின்றன.*
 *மதுரையிலிருந்து சோழவந்தான் பேருந்து பாதையில் 18 கி.மீ. தொலைவில், திருவேடகம் இருக்கிறது. இறைவன் ஏடகநாதர், மந்திர மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். அனைத்து பில்லி, சூன்யங்களும் இவ்வாலய மூர்த்தியைத் தரிசித்ததும் நீங்கி விடுகின்றன. இங்கே எழுந்தருளி அருள்பாலிக்கும் அம்பாள் ஏலவார் குழலி, பெண்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நீக்கித் தருகிறாள். இங்குள்ள ஸ்தல விருட்சமான வில்வ மரம் சக்தி படைத்தது. இத்தலத்தில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்து நீரையே இறைவனுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்துகிறார்கள்.*
 *மதுரை நகருக்குள் செல்லூரில் இருக்கிறது, திரு ஆப்பனூர் கோயில். இறைவன் பெயர், திரு ஆப்புடையார். இறைவி, குரவங்கமழ் குழலி. சம்பந்தர் பாடிய இத்தலத்திற்கு வந்தால், வாத நோய்கள் குணமாவதாகச் சொல்லப்படுகிறது.*
 *சிவகங்கை, திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை சமேத திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது. தனது குறைகளை போக்க வேண்டி இறைவி இத்தலத்தில் துளசி தளங்களால் ஈசனை வழிபட்டாளாம். அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது. மணப்பேறு கிட்டவும் பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரவும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பயனடைகின்றனர். இங்கு பிரதோஷ காலங்களில் மட்டும் இரு மரகத லிங்கங்கள் வெளியே எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.*
அன்பர்கள் சிவனை வணங்கி எல்லா நலன்களையும்  அடைவார்களாக!
*தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*

உலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா?

கோயில் என்று சிறப்புப் பெயர் பெற்ற சிதம்பரத்தில் உள்ள ஆலயமணியே உலகில் உள்ள மிகச் சிறந்த மணியாகும். 
சிகண்டி பூரணம் என்று சித்தர்களால் அழைக்கப்படும் இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி எளிதில் நம்மை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்தி விடும் தன்மை உடையது.   தியானத்தில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் இந்த சிகண்டி பூரண மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருத்தல் நலம்
 வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி அனுகிரகம் அளித்த மணியே தில்லை சிதம்பர தலத்தில் விளங்கும் சிகண்டி பூர்ணம் என்ற ஆலய மணியாகும்.   உலகிலேயே சிறந்த ஆலய மணி, இதற்கு இணையான மணி உலகத்தில் வேறெங்கும் கிடையாது.
சீவனைச் சிவமாக்கும் ஒப்பற்ற இறைச் சக்தியுடன் பூரிக்கும் மணியே சிகண்டி பூர்ணமாகும்.   இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவரவர் ஆன்ம அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். 
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது
சிதம்பரம் ஸ்ரீநடராஜர்
சன்னதியில் ஒலிக்கும்
உலகிலேயே மிகச் சிறந்த ஆலயமணி சிகண்டி பூரணத்தின் ஓசையாகும்.
59 நொடி ஒலிக்கும் இந்த
சிகண்டி பூரண மணி சத்தத்தைக் (தேவகானத்தைக்) கேட்டால் உங்கள் ஆயுளில்12 விநாடிகள் அதிகமாகும்.

விலங்கியல் விசித்திரங்கள்

சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது.  பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.

ஒட்டகப்பறவை என்று நெருப்புக்கோழி அழைக்கப்படுகிறது.  ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக்கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர்.

எறும்புகள் மண்ணில் அழகான மணல் மெத்தைக்களை உருவாக்கி மல்லாந்த நிலையில் உடலோடு கால்களை ஒட்டிவைத்து ஒய்யாரமாய் உறங்கும்.  சுறுசுறுப்பான எறும்புகள் சுமார் 3 மணி நேரம் ஓய்வெடுக்கும்.  

உலகிலேயே மிக்ச் சிறிய பாலூட்டி தாய்லாந்தில் காணப்படும் பம்பிள்பீ என்ற வவ்வால் இனமாகும்.

நீலத்திமிங்கலம்   எழுப்பும் ஒருவித விசில் ஒலி 188 டெசிபல்கள் விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும்.

யானைக்குட்டி 6 மாதங்கள் வரை தாய்ப்பாலை மட்டுமே குடிக்கிறது.  யானைக்கு 4 பற்கள் உள்ளன.  இவை சுமார் நூறு தடவை விழுந்து முளைக்கின்றன.

ஆஹா தகவல்

ராஜா தேசிங்கு ஆற்காடு நவாபுக்கு கப்பம் கட்ட மறுத்ததால் செஞ்சி அருகே போர் நடந்தது.  நவாபின் படையில் 85000 குதிரைப்படை வீர்ர்கள் தேசிங்கடமோ 350 குதிரைப்படை வீர்ர்களே இருந்தனர்.  ஆனாலும் வீரமாகப் போரிட்ட ராஜா தேசிங்கு வீர மரணம் அடைந்தார்.    அப்போது அவர் வயது 22 தான்  அவரது இளம் மனைவி ராணிபாய் கணவருடன் உடன்கட்டை ஏறியது கண்டு நவாப் அசந்து வியந்தான். ஆற்காடு அருகில் அவளது  நினைவாக ஒரு ஊரையே உருவாக்கினான்  அது தான் ராணிப்பேட்டை.

ஒரு முறை புத்தரிடம் கேட்டார்கள்  தியானம் செய்து நீங்கள் என்ன பெற்றீர்கள்?  அவர் சொன்னார் எதையும் பெறவில்லை  ஆனால் நிறைய இழந்திருக்கிறேன் கோபம் பதற்றம்  மரணபயம் பொறாமை இப்படி நிறைய…..

புகழ்வாய்ந்த மோனலிசா ஓவியத்தில் உள்ள மோனலிசாவிற்கு கண் புருவங்கள் கிடையாது  மறுமலர்ச்சி காலத்தில் புருவங்களை மழிப்பது நாகரிகமாக் கருதப்பட்ட்து

நாம் சூரியகாந்திப் பூ என்று அழைப்பது ஒற்றைப் பூவை அல்ல இரண்டாயிரம் சிறு பூக்கள் சேர்ந்து ஒரே சூய்யகாந்திப் பூவாக காட்சியளிப்பவற்றை.   உக்ரைன் நாட்டின் தேசியமலர் சூரியகாந்தி

மின்மினிப் பூச்சி லூசி ஃபெரின் என்ற ரசயனப் பொருளைச் சுரக்கிறது. அது ஒளிவீசுவதற்கு இந்த ரசாயனமே காரணம் மின்மினிப்பூச்சிகல் மிக பிரகாசமாக ஒளி வீசினால் மறு நாள் கடுமையான வெயில் இருக்குமாம்.

ஹோமா என்ற வானப்பறவை பூமியில் வந்து அமராது  வானத்திலேயே வட்டமிட்டு வாழ்க்கை நடத்தும். இதன் முட்டை வானத்திலிருந்து தரையில் வந்து விழுவதற்குள் குஞ்சுகள் வெளிக்கிளம்பி மீண்டும் வானத்தில் சிறகடிக்கும்.

சூட்டி டேன் என்ற கடல் பறவை தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டுகள் வரை பறந்துகொண்டேயிருக்கும் திறன் பெற்றதாம்.

 

தஞ்சை பெரிய கோவில்

சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர்    ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில்   கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..  கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..  கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்.  பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்.

இது ஒரு கல்லோ,  அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர  கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்.. அந்த சதுரக்   கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம்  எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன்.   ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்..  இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்..

இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..?  நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது,  கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால்  4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்..   பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட  கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்..  இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு  அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல   அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும்    புகை மண்டலமாகத்தான் இருக்கும்..   ஆனால் .. பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும்   5 அடிதான்..   மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..?

இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு  அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..  பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள்   இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள்.   அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது,   ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்.. எதற்க்காக..?

நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை    நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பினைப்பு  லூஸாகத்தான் இருக்கும்.. அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்.. கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது..  இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் ..   லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று,  அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை    அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி   மிக பலமான இணைப்பை பெறுகின்றன…  இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட,  ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி..  அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற   அதிசயம் இது..   எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது.   எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று   இருக்கும்..

*சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும்* *இருக்கும்… என்ற நம் இராஜராஜ சோ ழ மன்னரின் நம்பிக்கை எந்த* *காலத்திலும் பொய்க்காது..*

 

படித்ததில் பிடித்தது

 

ஓம் நம சிவாய