மனதை வென்ற மனம்

 மகத நாட்டின் தலை நகர் ராஜகிருஹத்தில் வாழ்ந்து வந்தார் புத்தர்   ஒரு நாள் அவர் மனதில் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.  அதனால் அங்கு ஆட்சி செய்து வந்த பிம்பிசாரன் மன்னரிடம் தெரிவித்தார்.  மன்னரும் உடனே நன்கொடை அளிக்க முன்வந்தார். மன்னரின் மகனான் அஜாதசத்ருவும் தன்பங்கிற்கு உதவி செய்ய முன்வந்தார்.  இப்படி நன்கொடை அளித்து புத்தரின் ஆசியைப் பெற்றனர். அந்த நாட்டு செல்வந்தர்களும் வாரி வழங்கிக் கொண்டிருந்தனர்.  புத்தர் அவற்றை ஒரு கை மட்டும் நீட்டி பெற்றுக்கொண்டார்.

அப்போது ஒரு ஏழை மூதாட்டி தயக்கத்துடன் வந்தாள். அவள் கையில் மாதுளம்பழங்கல் இருந்தன. அவள் புத்தரிடம் சுவாமி ஏழையான என்னிடம் பணம் இல்லை.  என் வீட்டு தோட்டத்தில் உள்ள மாதுளம் செடியில் பறித்த இந்தக் கனிகலைக் கொண்டு வந்தேன் என்றார்.  அவற்றைப் புத்தர் மறுக்காமல் இரண்டு கைகளையும் நீட்டிப் பெற்றுக்கொண்டார்.

புத்தரின் செயல்பாடு பிம்பிசாருக்கு வியப்பைத் தந்தது.  விலை உயர்ந்த ஆபரணங்களைக் கொடுத்த நம்மிடம் புத்தர் ஈடுபாடு காட்டவில்லை. ஒரு கையால் வாங்கிக்கொண்டார். ஆனால் இந்த மூதாட்டி தந்த சாதாரணப் பொருளை இரு கைகளாலும் வாங்கி பரவசப்படுகிறாரே என எண்ணினார். 

மன்னரின் உள்ளக்குறிப்பை உணர்ந்த புத்தர் பிம்பிசாரா விலை மதிப்புள்ள ஆபரணங்களை கொடுத்தாலும் உன்னுடைய மொத்த உடமையில் அது ஒன்றும் பெரிதல்ல.  இங்கு கூடியிருப்பவர்கள் அனைவரும் பெருமைக்காகவே தானம் செய்தார்கள்.  இவள் இந்த பழங்களை வெளியில் விற்றிருந்தால் அவளுக்கு பணம் கிடைத்து பசி தீர்ந்திருக்கும்.  ஆனால் தன் பசியை விட பிறர் பசி தீர்க்க முன் வந்தாளே இவளல்லவா உயர்ந்தவல்  அதனால் தான் என் இரண்டு கைகளும் நீண்டன.  உதவி செய்வதற்கு பணம் முக்கியமல்ல….. மனம் தான் முக்கியம். என்றார்.  புத்தரின் மனம் பற்றிய பேச்சு மன்னரின் மனதை வென்றது.

பழி வாங்கவேண்டும்

“நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்?எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்?எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்காமல் ஓயமாட்டேன்” என்று பரசுராம்  சாமியார் முன் வந்து பொருமினான் சீடன் பக்தவசலம்.“ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான் பக்தவசலம்.

பரசுராம்  சாமியார் யோசித்தார்.“சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி. “நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு  உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா” என்றார் பரசுராம் சாமியார்.“ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு  மூன்று பெயர்களை செதுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க  வேண்டும்”“சரி… அப்புறம்?”“நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்”..“ப்பூ, இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்” என்று சீடன் பக்தவசலம் எழுந்து போனான்.

அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான்.ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்று பெரிய சிரமமாய் தெரியவில்லை. ஆனால் நாளாக …..நாளாக, அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.இதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது. பக்தவசலம் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் – நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள்.பக்தவசலத்திடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை. சீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான்.“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..?” என்றான் பக்தவசலம்.

“என்ன புரிந்தது?” என்றார் பரசுராம்  சாமியார்.“பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக்கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும். துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விலக்கத்தானே இப்படி செய்தீர்கள்?” என்றான் சீடன். “ம்… சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை” என்றார் பரசுராம்  சாமியார்“புரியலையே…?”“உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா?”“ஆமாம்”“சரி… அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா?”

“ஆமாம்.”“மகனே, பிரச்சனை உருளைக்கிழங்கில் இல்லை. கோணிப்பை. ?!கோணி இருப்பதால் தானே அதில் உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்?

எனவே,உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி.

உனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்.. நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா.”..என்றார் பரசுராம் சாமியார்..

ஆம்,நண்பர்களே.. நாம் கைவிடவேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனதையும் கூடத்தான்… எல்லாம் நம் மனதில் மறக்க ஸ்ரீ கிருஷ்ண மந்திரமே உன்னத மருந்து. அதை சொல்ல சொல்ல நம் மனம் விரிவடையும், எதிரிகள் நண்பர்கள் ஆவர், வறுமை விலகும்.இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம்:-“மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்……..மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் “. நம் மனதில் என்றும்  நினைக்க வேண்டியது பரந்தமான் ஸ்ரீ கிருஷ்ண மந்திரமே

மூன்று வித சுகங்கள்

கீதையில் மூன்று வித இன்பங்களை பற்றி உபதேசிக்கிறார் பகவான் கிருஷ்ணர்.  அவை  தாமஸ சுகம்   ராஜஸ சுகம்  சாத்விக சுகம்.

உருப்படியாக எதுவும் செய்யாமல் வெகு  நேரம் தூங்குவோருக்கும் கவனக் குறைவுடன் ஏனோதானோவென்ரு செயல் புரிபவர்களௌக்கும்  அந்த செயல்பாடுகள் ஏதோ சுகமாக இருப்பது போலத் தோன்ரும்  ஆனால் உண்மையில் அது சுகமல்ல. தனக்கோ சமுதாயத்துக்கோ எந்தப் பயனும் தராத  கேடு விளைவிக்கும் இது போன்ற சுகத்தை மூன்றாம் தர சுகமாக தாமஸ சுகம் என்று குறிப்பிடுகிறார் பகவான்.

ஹ்கிலர் அதிகாலையில் எழுவார்கள் சுறுசுறுப்பாக செயலாற்றுவார்கள். ஆனால் இவர்களது செயல்பாடு பயனற்றதாக இருந்தால்? இந்திரிய சுகங்களை அனுபவிக்கும்போது ஒரு சுகம் தோன்ரும்.  அதாவது உண்ண ஆரம்பிக்கும்போது சுகமாகத் தோன்ருவது  சாப்பிட்டு முடிந்ததும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வு கலந்த துக்கத்தை தரும். இப்படி பயனற்ற செயல்களால் கிடைக்கும் சுகத்தை இரண்டாம் தரமாகக் கருதி ராஜஸ சுகம் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

சுகங்களில் முதல் தரமானது சாத்விக சுகம்  பயிற்சியால் மட்டுமே வளரக் கூடியது.  அதிகாலையில் கண் விழித்து வாழ்க்கைக்கௌ பயனுள்ள செயல்களைச் செய்பவர்களுக்கே கிடைக்கும்  இந்த சுகம் ஆரம்பத்தில் கசக்கும் முடிவில் இனிக்கும்.  தர்மத்தை கடைப்பிடிப்பது ஆரம்பத்தில் கடினம்  போகப் போக இன்பமாகவும் சுலபமாகவும் இஉர்க்கும். ஒழுக்கமாக வாழ்பவன் சாத்விக சுகத்தை அனுபவிக்கிறான். அவன் வாழ்வில் துக்கத்துக்கே இடம் இல்லை.

தகவல் நன்றி    பூஜ்யஸ்ரீ சுவாமி ஓங்காரா நந்தரின் அருளுரைகள்.    சக்திவிகடன்.

புண்ணியம் செய்தால் தானே கிடைக்கும்

ஆசிரியர் ராமகிருஷ்ணன் உயர் நிலைப் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தார். திடீரென அவரை ஆரம்ப வகுப்புக்களுக்கு ஆசிரியராக மாற்றிவிட்டனர். உயர் நிலை வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பித்தது போய் குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி கற்பிக்க வேண்டிய சூழல்  தன் கவுரவத்திற்குக் குறை ஏற்பட்டது போல் வருந்தினார்.  புதிய பணியில்  சேர்வதா வேண்டாமா என குழம்பினார்.   அவருக்கு கோகுல் என்ற நண்பர் இருந்தார்.  இருவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காஞ்சி மஹாபெரியவரை தரிசிப்பது வழக்கம். ஒரு முறை விஜயவாடாவில் முகாமிட்டிருந்தார் மகாபெரியவர். அவரை தரிசிக்க கோகுல் சென்ற போது எங்கே உன் நண்பன் ராமகிருஷ்ணன் எனக் கேட்டார். அவனை ஆரம்பப் பள்ளிக்கு மாற்றம் செய்துவிட்டதால் மனசு சரியில்லை என்று சொல்லி வீட்டிலேயே இருந்து விட்டான். என்றார் கோகுல்.

மகான் அப்பய்ய தீட்சிதரின் பரம்பரையில் வந்தவன் அவன். ஒரு முறை ஊமத்தங்காயை சாப்பிட்டு வேண்டுமென்றே தன்னை பைத்தியமாக மாற்றிக் கொண்டார் தீட்சிதர்.  அந்த  நிலையிலும் அம்பாளை நினைக்கிறோமா என்பதை அறியவே அப்படி செய்தார். அப்போது அவரால் பாடப்பட்டது தான் அம்பாள் துதியான உன்மத்த சாதகம் அப்பேர்ப்பட்ட தெய்வீக பரம்பரையில் வந்த ராமகிருஷ்ணனுக்கு கடவுள் அருளால் கிடைத்த வாய்ப்பு தான் இது.  குழந்தைகலௌக்கு கல்வி கற்பிப்பதைப் போன்ற புனிதப்பணி வேறுண்டா   குழந்தைகளின் மனதில் அறம் செய விரும்பு போன்ற அற நெறிகளை கற்பிப்பது எவ்வளவு பெரிய தொண்டு.  அற நெறிகளை கற்கும் குழந்தைகள் நல்லவர்களாக வளர்ந்தால் ராமகிருஷ்ணனுக்கு எத்தனை புண்ணியம் சேரும்.  இதையெல்லாம் யோசித்துப்பார்க்கச் சொல்.  இந்தப் பணி முந்தைய பணியை விட உயர்வானது என அறிவுறுத்து.   பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே ஆரம்பப்பள்ளி ஆசிரியராகும் பாக்கியம் ஒருவருக்குக் கிடைக்கும். குழந்தைகளை நல்வழிப்படுத்துவதன் மூலம் எதிர்கால இந்தியாவை நிர்மாணிக்கும் பொறுப்பை ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நிறைவேற்றுகிறார்கள்.  அந்தப் பணியைக் கட்டாயம் ஏற்கும்படி நான் சொன்னதாகச் சொல் என அறிவுறுத்தினார்.

சுவாமிகள் சொன்ன விளக்கத்தை கேட்ட ராமகிருஷ்ணன் உடனடியாக பணியில் சேர்ந்தார். பின் மகாபெரியவரை சந்தித்து ஆசி பெற்றார். வாழ்வில் மிக நல்ல காரியம் செய்தாய் என வாழ்த்தினார் மஹா சுவாமிகள்.

பரத்துக்கும்-இகத்துக்கும் வழிகாட்டிய பெரியவா

பெரியவாளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்தவும் தெரியும்;……. எம்.ஏ. வகுப்புப்பாடமும் எடுக்கத் தெரியும்!”.பரமசாதுவான ஒருத்தர் தரிசனத்துக்கு வந்தார். பெரியவா முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். பேச முயன்றார். தொண்டை அடைத்துக் கொண்டது, சமாளித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி சொல்லத் தொடங்கினார்.”நான் ஒண்ணுமே செய்யலே… இகத்துக்கும் வழி செய்யலே. சம்பாத்தியம் கிடையாது. பரத்துக்கும் ஒண்ணும் பண்ணலே .கோயில் குளத்துக்கும் போனதேயில்லை. சந்தியாவந்தனம் கூடப் பண்ணினதில்லை இப்போ நினைச்சாலே பயமாயிருக்கும்…”

பெரியவாசொன்னார்கள்:

“ஆறு பக்கத்திலுள்ள ஒருகிராமத்தில போய்த்தங்கு. எத்தனையோவீடு, சும்மா பூட்டிவெச்சிருக்கா. ஒருவீட்டை புடிச்சு, நன்னா பராமரிக்கிறேன்னு சொல்லு.“தினமும் ஆற்றில் ஸ்நானம்செய்து ஸஹஸ்ரகாயத்ரி ஜபம் பண்ணு. இது பரத்துக்கு.“அந்த கிராமத்திலுள்ள போஸ்டாபீஸிலே போய் உட்கார்ந்த்துக்கோ. லெட்டர் எழுதத்தெரியாதவா, மணியார்டர் பாரம் எழுதத்தெரியாதவா, ரெஜிஸ்டர்-சேவிங்க்ஸ் செய்யத் தெரியாதவா நிறையப்பேர் வருவா. நீ எழுதிக்கொடு. அவா எதாவது கொடுப்பா. அதுபோறும், இகத்துக்கு…“கூடியவரை தப்புப் பண்ணாமலும், பொய் பேசாமலும் முடிந்தஅளவு மெளன விரதம் இருந்துண்டுவா…”வந்த அடியார்க்கு ரொம்பவும் திருப்தி. தன்னால் செய்ய முடியாத பரிகாரங்களை செய்யச்சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் மறைந்தது.பெரியவாளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்தவும் தெரியும். எம்.ஏ. வகுப்புப்பாடமும் எடுக்கத் தெரியும்

இந்த ரகசியம் எங்களுக்குத் தெரியும்

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

மரமாக மாறிய சிறுவன்

காஷூ என்னும் அனாதை சிருவன் ஒருவன் இருந்தான்.  மூன்று நாளாக பட்டினியால் வாடினான். பசி பொறுக்க முடியாமல் ஆற்றில் மூழ்கி உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்தான்   அப்போது நாரதர் தோன்றி ஒரு அட்சய பாத்திரத்தைக் கொடுத்து நீ விரும்பும் போதெல்லாம் அறுசுவை உணவு கிடைக்கும் என்றார் அவனும் தேவையான போதெல்லாம் விரும்பியதைச் சாப்பிட்டான்.  இந்த நிலையில் ஒரு நாள் காஷூவுக்கு பேராசை ஏற்பட்டது.  ஆற்றில் மூழ்குவது போல நடித்து நாரதர் மூலம் பணக்காரனாக மாற நினைத்தான்.  ஆனால் நாரதர் காட்சி தரவில்லை. அவனது பாத்திரத்தையும் காணவில்லை.  வருந்திய அவன் துன்பம் தீர கிருஷ்ணரை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தான்  அவனது நிலை கண்ட மகாலட்சுமி அவனுக்கு விரைந்து அருளும்படி கேட்க பகவானும் சம்மதித்தார்.  காட்சி கொடுத்த கிருஷ்ணரை சரணடைந்தான்.  சிறுவனே …………. கலியுகத்தில் நீ வாகை மரமாக குருவாயூரில் பிறப்பாய்  அப்போது எனக்கு தினமும் அபிஷேகம் முடிந்ததும் வாகை மரத்தூளைத் தேய்த்து என்னைத் தூய்மைப்படுத்துவர். அந்த வகையில் எனக்கு சேவை செய்யும் பேறு பெறுவாய்.

இந்த வாகை சார்த்துபடி மூலம் பக்தர்களின் தோல் நோய் தீரும் என ஆசியளித்து மறைந்தார்.  குருவாயூர் குருவாயூரப்பனுக்கு வாகை சார்த்து வழக்கம் இன்ரும் தொடர்கிறது.  

பஞ்சமுக லிங்க தரிசனம்

ஆந்திராவிலுள்ள காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு விஜயம் செய்திருந்தார் காஞ்சி பெரியவர். தேவஸ்தான அதிகாரிகளிடம் அவர் கேட்ட கேள்வி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.  பல ஆண்டுகளுக்கு முன் வந்த போது அப்பகுதியில் பஞ்சமுக லிங்கம் ஒன்றைத்தான் தரிசித்ததாகத் தெரிவித்தார்.  அந்த கோயில் எங்கே இருக்கு தெரியுமா? எனக் கேட்டார். தாங்கள் அறிந்தவரை அப்படி ஒரு பஞ்சமுக லிங்கம் இருப்பதாக அவர்கள் யாருக்கும் தெரியவில்லை.  மகா பெரியவரின் ஞாபக சக்தி உலகப் பிரசித்தம்.  அவர் சொன்னால் கோயில் நிச்சயம் இருக்கும் அதை எப்படி கண்டுபிடிப்பது என யோசித்தனர்.

 ஊரிலுள்ள பெரியவர்களை அழைத்து விசாரித்தார் மகாபெரியவர்.  அவர்களில் சிலர் அருகிலுள்ள பிரம்மகுடி என்னும் குன்றின் மீது கோயில் ஒன்று இருந்தது. நீண்ட காலமாகப் பராமரிக்கப்படாத அக்கோயிலில் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்றனர்.  பிரம்ம குடிக்குச் சென்ற மகாபெரியவர் குன்றின் உச்சிக்கு செல்வதற்கு அருகிலுள்ள ஊர்களைச் சேர்ந்த இளைஞர்களை உதவிக்கு அழைத்தார்.  மகா பெரியவரின் விருப்பத்தை அறிந்த இளைஞர்கள் உடனடியாக பணியில் இறங்கினர்.  அவர்களுடன் ஊர் மக்களும் சேர்ந்து புதர் வெட்டும் பணி தொடங்கியது.

மகாபெரியவரின் மேற்பார்வையுடன் இரண்டே வாரத்தில் பாதை அமைத்தனர்.  முள்புதர் சூழ்ந்திருந்த கோயிலின் உள்ளே சென்றார் மகாபெரியவர்.  கருவறையைக் கண்டதும் அவரது விழிகள் பளபளத்தன.  அங்கு கம்பீரமாக காட்சியளித்தது பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் தரிசித்த பஞ்சமுக லிங்கம். அக்கம்பக்கத்து கிராமத்து மக்களை எல்லாம் அன்புடன் அழைத்து இனி கோயிலை பராமரிப்பது உங்களின் கடமை என்பதை மகாபெரியவர் வலியுறுத்தினார். நித்ய பூஜை செய்யவும் ஏற்பாடு செய்தார்.  அபூர்வமான அந்த பகுதியே வளம் பெருகும் என்றார்.  மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

குருதட்சணை

 குரு குல வாசம் முடித்து ஊருக்கு புறப்பட தயாராக இருந்தனர் சீடர்கள். அப்போது அவர்கள் குருதேவா தங்களுக்கு  குருதட்சணை தர விரும்புகிறோம். விரும்பியதைக் கேளுங்கள்.  எல்லாம் கற்றுக் கொண்டோம்  தெரியாதது ஏதுமில்லை என அலட்சியமாக தெரிவித்தனர்.  இதைக் கேட்ட குரு நாதர் அவர்களுக்கு பாடம் புகட்ட விரும்பினார்.

சீடர்களே…..நீங்கள் இங்குள்ள காட்டிற்குச் செல்லுங்கள்  அங்கிருந்து யாருக்கும் எதற்கும் பயன்படாத பொருள் இருந்தால் எனக்கு கொண்டு வாருங்கள் என்றார்.  போயும் போயும் பயனற்ற பொருளை குரு நாதர் கேட்கிறாரே என அலட்சியத்துடன் காட்டிற்கு புறப்பட்டனர்.  மரத்தடியில் குவிந்து கிடந்த சருகுகளை பயனற்ற பொருள் என கருதி ஒரு கூடையில் அள்ளத் தொடங்கினர்.  அப்போது அங்கு வந்த ஒருவர் இதை நான் சேகரித்து வைத்திருக்கிறேன். இதை வயலுக்கு உரமாக போடுவேன் என்றான்   சருகுகள் இப்படியும் பயன்படுமா என வியந்து நடக்க ஆரம்பித்தனர். ஓரிடத்தில் பெண்கள் சிலர் உலர்ந்த சருகுகளைப் பொறுக்குவதைக் கண்டனர். அவர்களிடம் அம்மா……………. என்ன செய்கிறீர்கள்.எனக் கேட்டனர். 

மூலிகை மரமான இதன் சருகுகளில் இருந்து மருந்து தயாரித்து விற்போம் என்றனர்.    அப்போது பறவை ஒன்று சருகு ஒன்றை அலகில் எடுத்துக்கொண்டு பறப்பதைக் கண்டனர்.  ஓ பறவைக்கு கூடு கட்டவும் சருகு பயன்படுகிறதே என  ஆச்சரியப்பட்டனர்.  அப்போது தாகமாக இருக்கவே  தண்ணீர் தேடி குளத்திற்கு சென்றனர். நீரைக் கையால் அள்ளிக் குடித்தபோது சருகு ஒன்ரு மிதந்து வந்தது.  அதில் இரண்டு எறும்புகள் இங்கும் அங்கும் ஓடுவதைக் கண்டனர்.  எறும்புகள் நீருக்குள் மூழ்காமல் இருக்க சருகு பயன்படுகிறது என்பது புரிந்தது.  வெறும் கையுடன் குருகுலத்திற்கு திரும்பினர்.  சீடர்களைக் கண்ட குரு நாதர் புன்னகைத்தார். 

வாருங்கள் குழந்தைகளே …………….பயனற்ற பொருள் கிடைத்ததா? என ஆர்வமுடன் கேட்டார். குருவே……………பயனற்றது என்று ஒன்றும் உலகில் இல்லை.  உலர்ந்த சருகு கூட பலவிதங்களில் பயன்படுவதை நேரில் கண்டோம் என ஒவ்வொரு நிகழ்ச்சியாக விளக்கினர்.  உலர்ந்த சருகே இத்தனை வழிகளில் பயன்படுமானால் நீங்கள் பிறருக்கு எந்த வகையில் உதவலாம் என்று எண்ணிப்பாருங்கள்  இதை உணர்த்தவே இப்படி ஒரு அன்பளிப்பை கேட்டேன்.  நான் சொல்லிக் கொடுத்ததை பிறருக்கும் சொல்லித் தந்து அனைவரையும் முன்னேற்றுங்கள் அதுவே எனக்கான குருதட்சணை. என்று சீடர்களுக்கு குரு ஆசியளித்தார்.

வாழ்க்கையை வெற்றிக் கொள்ள வேண்டும்.

பவளவண்ணன்  வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருந்தான். தொடர்வண்டி எப்போது சரியான நேரத்துக்கு வந்தது.?அப்படிப் படுத்திருக்கும் போது எங்கோ ஒலிபெருக்கியில் யாரோ பேசுவது இவன் காதில் கேட்டது.தொடர்வண்டிக்காகக் காத்திருக்கும் நேரத்துக்கு அந்த சொற்பொழிவைக் கேட்டு வரலாம். அப்போது வண்டி வர நேரம் சரியாக இருக்கும் என்ற முடிவெடுத்து அந்தப் பேச்சைக் கேட்கச் சென்றான் பவளவண்ணன்சொற்பொழிவைக் கேட்டவன். தன் தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டான். அவன் மனதில் நினைத்துக் கொண்டான்.

“பொருளே இல்லாம இவ்வளவு நேரம் பேசும் இந்தச் சொற்பொழிவாளன் உயிரோடு இருக்கிறான்.ஒன்றுமே புரியாவிட்டாலும் கை தட்டிப் பாராட்டும் இத்தனை மக்களும் உயிரோடு இருக்கிறார்கள்”.நான் மட்டும் ஏன் வாழக் கூடாது? என்று தன்னம்பிக்கையோடு வீடு நோக்கி நடந்து சென்றான் பவளவண்ணன்..

*வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் துன்பம், துயரம் இவை போன்றவைகள் கண்டிப்பாக வரும்.இது இயற்கை. இயற்கையில் மேடு பள்ளங்கள் இருப்பது போல, மனிதனுக்கும் இன்ப, துன்பங்கள் இரண்டுமே மாறி மாறி வருவது இயற்கை.*இவற்றிலிருந்து எப்படி புத்திசாலித்தனமாக, சமயோசிதத்துடன், துக்கத்தை உள் வாங்காமல், இயற்கையாக, இயல்பாக நமது மனத்தை மாற்றி வெளியே வர வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். அதற்கு நாம்  இடயறாது ஸ்ரீ கிருஷ்ண நாமம் மனதில் சொல்ல வேண்டும் மேலும் ஒவ்வொரு  துன்பத்தையும்  ஒரு அனுபவப் பாடமாக எடுத்துக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி நினைக்க  வேண்டும்.*வாழ்வில் வெற்றிப் பெற ஒவ்வொரு கணமும்  பரந்தமான் திருவடியை  என்றும்  சிந்திக்க வேண்டும்.*ஸ்ரீ பரந்தமான்  செயல்களை செய்து கொண்டு  வெற்றிப் பாதையை நோக்கிச் சென்று வாழ்க்கையை வெற்றிக் கொள்ள வேண்டும்.

நல்லெண்ண சிறகுகளால் அளப்போம்.

*Duck or Eagle**It’s upto you.*

நண்பர் வெளியூர் செல்ல *Call Taxi* ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.அவர் கவனித்தது காரின் பின்னால் ஓட்டியிருந்த ஆங்கில வாக்கியம்.

*Duck or Eagle**You decide.*

அடுத்து அவர் கவனத்தை கவர்ந்தது *Clean and shiny* கார்.டிரைவர் நல்ல வெள்ளையுடை அணிந்து பளிச்சென்று புன்னகையுடன் இருந்தார்.அவரே வந்து கார் கதவை திறந்து நண்பரை அன்போடு அமர சொன்னாராம்.அழகான டிரைவிங். கேட்டதற்கு மட்டும் தெளிவான பதில்.*நண்பர் மிகவும் impress ஆகி விட்டார்.*பொதுவாக *Call Taxi* டிரைவர்கள் சற்று இறுக்கமாகவே இருப்பார்கள். பயணம் முடிந்தவுடன் அவர் யாரோ? நாம் யாரோ? என்ற கண்ணோட்டத்தோடு.*இந்த டிரைவர் மிகவும் வித்தியாசமாக கண்ணியமாக நட்போடு இருந்தார். பட்டதாரியும் கூட.*அவரிடம் எப்போதுமே நீங்கள் இப்படித்தானா? என்று நண்பர் கேட்டிருக்கிறார்.இல்லை சார். *நானும் மற்ற டிரைவர்ஸ் போல்தான் இருந்தேன். சத்தம் போட்டு கொண்டு. குறை கூறி கொண்டு “* என்றார்.*எப்படி உங்களை நீங்களே மாற்றி கொண்டீர்கள்?* என்று நண்பர் கேட்டிருக்கிறார்.

ஒரு *Client seminar* ஒன்றிற்கு சென்றார் . சும்மா டாக்ஸியில் அமர்ந்திருப்பதற்கு கேட்கலாமே, என்று உள்ளே நுழைந்தேன். *அந்த seminar என்னை மாற்றி விட்டது”* என்றார்.*என்ன Seminar?**Who you are Makes a difference ?* அதில் ஒரு கருத்தை ஆங்கிலத்தில் சொன்னார்கள்.

*If you get up in the morning**expecting a bad day, you will.**Don’t be a Duck**Be an Eagle.*

*The ducks only make noise and complaints.**The eagles soar above the group.*

அந்த அறிவுரை என்னைமிகவும் கவர்ந்தது.*என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்டேன்.**நான் Duck போல இருப்பதை உணர்ந்தேன். ஏன் Eagle போல இருக்க கூடாது என்று எண்ணினேன்.* என்னை நானே மாற்றி கொண்டேன் என்றார்.எல்லா Customer இடமும் அன்போடு பணிவாக நடந்து கொள்ள ஆரம்பித்தேன்.*மன அமைதி மட்டுமல்ல. என் வருமானமும் பெருகியது.* Always my taxi busy. ஒரு முறை பயணம் செய்தவர்கள், என்னையே அழைக்க ஆரம்பித்தார்கள்” என்றார்.நண்பர் சொன்னபோது எனக்கே அவரை பார்க்க வேண்டும் போல்இருந்தது.அவர் சொன்னது உண்மைதான்.

எந்த வேலையாக இருந்தாலும், *Office staff, maintenance, teacher, executive, employee, professional, or taxi driver,**நாம் நடந்து கொள்ளும் விதமே, behaviour, நம்மை உயர்த்தும். உயர உயர வாழ்வில் Eagle போல பறக்க வைக்கும்.*இப்பொழுது நம் முன்னால் இருக்கும் ஒரே கேள்வி :

*Are you want to become Duck or Eagle ?**The Decision is Yours.*

*நல்ல நண்பனாக, நல்ல சகோதரனாக, நல்ல. அப்பாவாக, நல்ல கணவனாக, நல்ல அம்மாவாக, நல்ல மனைவியாக, குறிப்பாக நல்ல குடிமகனாக மாறுவது எல்லாமே நம் கையில்தான்.*நமது எண்ணங்களைசரியான பாதையில் பயணிக்க வைக்க வேண்டும்.*பயணிக்க போவது சிறிது காலமே. அனைவரிடமும் அன்பை செலுத்துவோம். அன்பை பெறுவோம். நம்மை நாமே*உயர் சிந்தனையால் *Eagle* போல வானத்தை நம் நல்லெண்ண சிறகுகளால் அளப்போம்.