ஒவ்வோர் அவதாரத்திலும் ஒரு குறை உண்டு

.*

 கிருஷ்ணாவதாரத்திலே திரௌபதியை உடனடியாக ரக்ஷிக்காதது என் குறை…” என்கிறார்.‘திரௌபதிக்கு ஆடை சுரந்ததே… உன்னாலன்றி வேறு யாரால் அது சாத்தியமானதாம்…?’ என்று கேட்டால் பகவான் சொல்கிறார்:*‘நானில்லை;  என் கோவிந்த நாமம்* அவளை ரக்ஷித்தது…’பகவானின் நாமமே நம்மை ரக்ஷிக்கும். அவனை விட நம்மிடம் அதிகப் பரிவுடையது அவன் நாமம்.

பாண்டித்யம் இல்லாவிட்டாலும் பகவான் நாமத்தைச் சொல்லலாம். ஆனால் அதை இடைவிடாது சங்கீர்த்தனம் பண்ணணும்.இதற்குத்தான் நாம சங்கீர்த்தனத்தை நமக்கு வாழ்க்கை முறையாகவே வைத்திருக்கிறது.பெருமாளை எழுந்தருளப் பண்ணுகிறவர்களுக்குத் தோளிலே காய்த்துப் போயிருக்கும். அதுபோல நாம சங்கீர்த்தனத்தைப் பழக்கமாகப் பண்ணிக் கொள்ளணும். ‘நாவிலேயே தழும்பு ஏற்பட்டுப்போகும் அளவுக்கு திருநாமத்தை உச்சாடணம் பண்ணணும்; எத்தனை முறைன்னு கேட்கக் கூடாது’ என்கிறார், திருமங்கையாழ்வார்.தழும்பு எப்படி உண்டாகும்? மீண்டும் மீண்டும் சொல்வதால். அதற்குத்தான் நியமம் ஏற்பட்டிருக்கிறது.

எழுந்திருக்கும் போது – துயிலெழும்போது; ‘ஹரிர் ஹரி:, ஹரிர் ஹரி:’ என்று ஏழு முறை சொல்ல வேண்டும்.உரக்க, பெரிசாச் சொல்லணுமா? மனசுக்குள்ளே சொன்னால் போதாதா? மனசுக்குள்ளே சொன்னால் பலன் நமக்கு மட்டும். பெரிசா சொன்னா அக்கம் பக்கத்திலே இருப்போரும் அதைக் கேட்ட படி எழுந்திருப்பார்கள். பரோபகரமாகவும் இருக்கும்.வெளியிலே கிளம்பிப் போகும்போது ‘கேசவா’ என்று உச்சரிக்கணும்.திருவனந்தபுரத்து அனந்த பத்மநாபசுவாமி குறித்து நம்மாழ்வார் பாடுகிறார்.‘கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன..’

‘கேசவா’ என்று சொன்னால் இடர்களெல்லாம் கெடுமாம். அதனால்தான் ஒரு காரியமாகப் புறப்படும்போது ‘கேசவா’ என்று அழைப்பது.ஆண்டாள் இந்த அனுஷ்டானத்தைக் கடைப்பிடித்திருக்கிறார்.“கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோதேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்…”என்கிறது திருப்பாவை. ‘கேசவா கேசவா’ என்று பாடிக் கொண்டு புறப்பட்டுவிட்டோம். நீ அதைக் கேட்டும் கிடந்துறங்குகிறாயே..’ என்று துயிலெழுப்புகிறார்.

அடுத்தது உணவு கொள்வதற்கு முன்னால் கோவிந்தா என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்தவனை இப்படி அழைப்பதன் மூலம் நித்ய அன்னம் கிடைக்க உத்தரவாதம் செய்து கொள்கிறோம்.சிரமம் இல்லை, கஷ்டமான நியமமில்லை. ஹரீ, கேசவா,கோவிந்தா, மாதவா என்று எளிய நாமங்களை நாம் தினமும் செய்கிற காரியங்களோடு சேர்த்து விட்டிருக்கறதாலே எந்தவிதக் கூடுதல் முயற்சியுமில்லாமலே நாம சங்கீர்த்தனம் நடைபெற்று விடுகிறது.ஆனால் சொல்கிற அந்த நேரத்திலே மனசு அளவு கடந்த பக்தியிலே நிரம்பியிருக்கணும். ‘சொல்லிப் பார்ப்போமே, பலனிருக்கிறதாவென்று…” அப்படின்னு பரீட்சார்த்தமாகச் சொல்லக் கூடாது.காரணம் அவனது நாமங்கள் சர்வ உத்தமமானவை:

ஒவ்வொரு ஜீவனும் பரந்தாமனின் சொரூபம் 

ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன.அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால்  நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.முதலில் இருந்த மரம் முடியாது என்றது.அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது. குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம், அன்று பலத்த மழை, ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச் சென்றது .

தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து  குருவி சிரித்து கொண்டே சென்னது, எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று.அதற்கு அந்த மரம் கூறிய பதில்,எனக்குத் தெரியும், நான் வலு இழந்துவிட்டேன், எப்படியும் இந்த மழைக்குத்  தாங்க மாட்டேன், தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவேன் என்று.

ஹே…குருவியே, நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எண்ணித்தான் உனக்கு இடம் இல்லை என்றேன்.என்னை மன்னித்து விடு என்றது.

உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால் தவறாக நினைக்காதீர்கள். அவரவர்  சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்.

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்..

மகாபாரத போரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் செய்த செயல்கள் யாவும் அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான போர், தர்மம் வெல்ல அவர் எதிர் கொண்ட சூழ்நிலைகள் அவருக்கு மட்டும் தான் தெரியும்.நாம் நம்முடன் வாழும் ஒவ்வொருவரையும் மதித்து, அனுசரித்து,  அன்புடனும், நல்ல எண்ணங்களுடணும், ஒவ்வொரு ஜீவனும் பரந்தாமனின் சொரூபம்  என எண்ணி வாழ்வோம்

மனசை வைச்சுக்கோ கண்ணாடி போல

பக்கத்து வீட்டு பாட்டி அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பாள். பிறகு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திடுவாள். இதைக் கண்ட இளம்பெண் கமலாவுக்கு அவள் மீது குறுகுறுப்பு  கண்ணாடியை உற்று உற்றுப் பார்க்கிறாளே  ஒரு வேளை மாயஜாலக் கண்ணாடியோ  ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  பாட்டியை நெருங்கினாள்  

பாட்டி  …………. என்ன கமலா/  உங்கள் கையில் இருப்பது கண்ணாடி தானே?  ஆமாம்  அதில் என்ன தெரிகிறது? நான் பார்த்தால் என் முகம் தெரியும்  நீ பார்த்தால் உன் முகம் தெரியும். அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது/  ஆமாம்.  பிறகு ஏன் அதையே பார்க்கிறீர்கள்?  புன்னகைத்த பாட்டி சாதாரண கண்ணாடிதான்  ஆனால் அது சொல்லௌம் பாடங்கள் நிறைய   ………….. பாடமா  கண்ணாடியிடம் என்ன பாடம் இருக்க முடியும்/  அப்படிக்கேள்  ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு கண்ணாடி போன்றவர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை  ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படி தட்டிக் காட்ட வேண்டும் எப்படி சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை கண்ணாடி தெளிவு படுத்துகிறது.  எப்படி   நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையை உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?  ஆமாம்  அதே போல உன் சகோதரியிடம் சினேகிதியிடம் எந்தளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் சுட்டிக்காட்ட வேண்டும்  துரும்பையும் தூணாகவோ கடுகை மலையாகவோ சொல்வது கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்.

அடுத்து.

கண்ணாடிக்கு முன் நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் அது மவுனமாகி விடும் இல்லையா?  ஆமாம்  அதே போல் மற்றவரின் குறைகளை நேரடியாக சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாதபோது முதுகுக்குப் பின்னால் பேசுவது கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாம் பாடம்.

அப்புறம்?  ஒருவருடைய முகத்திலுள்ள கறையை கண்ணாடி காட்டியதால் அவர் கண்ணாடி மீது கோபமோ எரிச்சலோ கொள்கிறாரா?  இல்லையே……………. மாறாக அதைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்/  சரியாகச் சொன்னாய்  அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினால் கோபமோ எரிச்சலோ கொள்ளாமல் நன்றி கூற வேண்டும்.  குறைகள் நம்மிடம் இருக்குமேயானால்  திருத்திக் கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாம் பாடம்  பாட்டி……………… அருமையான விளக்கம்  நீங்கள் கூறிய கண்ணாடியில் இத்தனை கருத்துக்களா…………….அம்மம்மா…………யோசித்தால் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும் என்றாள்.  இனி கண்ணாடியில் முகம் பார்க்கும்போது இந்த அறிவுரைகளை மறக்காதீர்கள்.  அது போல மனசையும் தெளிவாக வைத்திருங்கள்.

வாரியார் சொன்ன கதை

 பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான் அர்ச்சனை செய்வதற்காக தேங்காய் வாழைப்பழம் கற்பூரம் வாங்கினான். அவை ஒன்றுக்கொன்று பேசத் தொடங்கின.  நம் மூவரில் நானே கெட்டியானவன்  பெரியவனும் கூட என்றது தேங்காய்.  அடுத்து வாழைப்பழம்  மூவரின் நானே இளமையானவன் மிக இனிமையானவன் என பெருமைப்பட்டுக்கொண்டது  கற்பூரமோ எதுவும் பேசாமல் மவுனம் காத்தது.

பக்தன் சன்னதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது.  பழத்தோல் உரிக்கப்பட்டது.  கற்பூரமோ ஏற்றியதும் கரைந்து போனது.  பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்  தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால்  ஒரு நாள் நிச்சயம் உடைபடுவோம். இனிமையாக இருந்தாலும் வாழைப்பழம் போல தற்பெருமை பேசினால் ஒரு நாள் கிழிபடுவோம்.  ஆனால் கற்பூரம் போல அமைதி காத்தால் வாழும் வரை ஒளி வீசி இறுதியில் கடவுளோடு இரண்டறக் கலப்போம்.

தன்னை மறந்தாள் தலைப்பட்டாள் தலைவன் தாளே

அவள் முதலில் அவருடைய *பெயர்* என்ன என்பதை தெரிந்து கொண்டாள். பிறகு அவருடைய   *உருவம்,* தோற்றம், ஆடை, ஆபரணம் போன்ற விபரங்களை அறிந்து கொண்டாள். பிறகு அவர் வாழும் *ஊர்* எது? அந்த ஊருக்கு எப்படி போவது? என்பதை எல்லாம் அறிந்து கொண்டாள். அதன் பிறகு அவர் ஒருவரை *அடைவதை* மட்டுமே தனது வாழ்க்கை*லட்சியமாகக்* கொண்டாள். உற்றார், உறவினர், பெற்றோர், பிறந்த ஊர் என்று *அனைத்தையும் துறந்தாள்.* ஊர் வழக்கங்களுடன் ஒத்துப் போவதை நிறுத்திக் கொண்டாள். தனக்கென ஒரு *தனிப் பாதையை* வகுத்துக் கொண்டாள். தன்னை, தன் உடலை, ஏன், தன் *பெயரையே மறந்தாள்.* *தன்னை மறந்து* அவர் மயமாகவே ஆகி விட்ட அவள் *அவரையே அடைந்தாள்.*

இதனை *அப்பர்* பெருமான் சொல்லும் அழகு பாருங்களேன்.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் /

மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் / பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் /

பெம்மான் அவனுக்கே பிச்சி ஆனாள் /

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்/

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை /

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் / தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

*நாமும் நம்மை மறப்போம். நம் நாமம் கெடுவோம். தலைவன் தாள்* *தலைப்படுவோம். பேரானந்தத்தில் திளைப்போம்.*

அன்பின் அடையாளம்

எங்கும் ராமநாம கோஷம் ஒலித்துக் கொண்டிருந்தது. வானர சேனைகள் மளமளவென்று பெரிய கற்களை கடலில் தூக்கிப் போட்டுப் பாலம் அமைத்துக் கொண்டிருந்தன. அவர்களின் வேகத்திற்கு ஈடாக காற்றும் இதமாக வீசி உதவிக் கொண்டிருந்தது. அப்போது பாலத்தின் நடுவே சிறு அணில் ஒன்று இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அதை வானர வீரர்கள் கவனித்தபடியே நின்றனர். அதனால் பாலம் கட்டும் பணி சற்று நேரம் ஸ்தம்பித்தது. அணில் வந்த காரணத்தை அறிய அனைவரும் விரும்பினர்.அணிலே! இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய். உன் ஓட்டத்தைப் பார்த்து எங்கள் கவனம் சிதறுகிறது. பாறைகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளாதே. ஒதுங்கிப் போய்விடு என்றனர். ஆனால் அணில் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மற்றொரு விஷயத்தைச் சொன்னது வானர வீரர்களுக்கு ஆச்சரியத்தை ஊட்டியது.

ராம சேவகர்களே! எனக்கொரு உதவி செய்வீர்களா? நான் ராம பிரானைச் சந்திக்க வேண்டும் என்று கூறியது தான் அதற்கு காரணம். இந்தப் பதிலைக் கேட்ட சில வானர வீரர்கள் அந்த அணில் மீது சந்தேகமும் அச்சமும் கொண்டன.இந்த அணில் ஏன் ராமபிரானைச் சந்திக்க வேண்டும்? ஒருவேளை மாயாவி அரக்கன் அணில் வடிவில் இங்கு மாயாஜாலம் செய்து கொண்டிருக்கிறானோ! அவனால் ராமபிரானுக்கு ஆபத்து ஏற்படுமோ! பாலத்தைத் தகர்க்க வந்துள்ளதோ என்று சந்தேகப்பட்டனர்.

வானரவீரர்கள் அணிலிடம் பேசிக் கொண்டிருந்ததை அஞ்சனை மைந்தன் அனுமன் கவனித்து விட்டார். அவரது கண்களில் அனல் பறந்தது. ஏ வானரங்களே! காலம் பொன்னானது. கடமை கண்ணானது. பாலம் கட்டும் புனிதப்பணியின் போது நேர விரயத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அணிலிடம் என்ன வீண்பேச்சு! என்று கர்ஜித்தார்.அந்த அணிலைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு அணிலே! ஏன் குறுக்கும் நெடுக்குமாக ஓடி எங்கள் பணிக்கு இடையூறு செய்கிறாய்? உன் எண்ணம் தான் என்ன? நீ உண்மையில் அணிலா? அரக்க சக்தியா? உண்மையைச் சொல்! என்று ஆவேசமாகக் கேட்டார். அணில் சிறிதும் அச்சம் கொள்ளவில்லை. சொல்லின் செல்வரே! எளியேனின் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்! உங்களைப் போல எனக்கும் ராமபிரானுக்கு சேவை செய்ய ஆவல். ஆனால் உருவில் சிறியவன். உங்களைப் போல எனக்கும் பெரிய பாறைகளைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்று தான் எண்ணம்.

ஆனால் அந்த வலிமை எனக்கில்லை என்பதை தாங்களும் அறிவீர்கள். அதனால் அனுமனே…..உங்களை போல நானும் கடற்கரை மணலில் புரண்டு என் உடலில் ஒட்டும் மணலை சேதுவில் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இதையெல்லாம் விட பேராசை எனக்கொன்று இருக்கிறது. சத்திய சொரூபமான ராமனைக் கண்குளிரத் தரிசிக்கவேண்டும்.அண்ணல் என்னைத் தொட்டால் போதும்! பிறவி எடுத்த பெரும்பயனை அடைவேன் என்று கூறியது கண்ணீருடன்! அணிலின் கண்களில் ததும்பிய அந்த கண்ணீர் அனுமனின் கரங்களைத் தீண்டியது. அணிலின் பேச்சைக் கேட்ட அனுமனின் கோபம் நொடியில் மறைந்தது. அர்ப்பணிப்பு உணர்வுடன் அணில் செய்த அந்த சிறுபணி மலைபோல அனுமனுக்குத் தோன்றியது. கருணை பொழியும் ராமச்சந்திர மூர்த்தியிடம் அணிலை ஒப்படைத்த அனுமன் நடந்த விபரத்தை ஒன்றுவிடாமல் தெரிவித்தார்.

அன்புணர்வோடு அணிலை தன் மடியில் வைத்துக் கொண்ட ராமன் தன் கரங்களால் மென்மையாக வருடிவிட்டார். அந்த அன்பின் அடையாளத்தை அதன் சந்ததிகள் இன்றும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன. பிறரது நலனுக்காக நம்மால் முடிந்த உதவியை  என்றும் செய்ய வேண்டும் என்ற உண்மையை உணர்த்திய அணிலை வானர வீரர்கள் போற்றி மகிழ்ந்தனர்.

தந்தையை தண்டித்த நாயன்மார்

அன்பே சிவம் என்கிறார் திருமூலர்.  சிவம் என்பதற்கு வீரம் என்றும் பொருள் உண்டு.  நாயன்மார்களில் பலர் உள்ளம் உருகி பக்தியில் ஈடுபட்டனர்.  இதற்கு மாறாக சியர் சிவ வழிபாடு சிவன் அடியார்களுக்கு இடையூரு செய்பவர்கள் மீது கோபம் கொள்ள தயங்கியதில்லை.

இவர்களுக்கு அரசு ஆட்சி அதிகாரம் பற்றிய பயம் கிடையாது.  சிவபக்தி மட்டுமே பெரிதாக தோன்றியது. சிவனை  நிந்திப்பவர்களை  முரட்டுத்தனமாகத் தண்டித்தனர்.  இவர்களின் வீரன் கண்ட சிவன் வீடு பேறு அளித்து மகிழ்ந்தார்.  அவர்களில் ஒருவரே சண்டேஸ்வர நாயனார் எனப்படும் விசார சருமர்.

 சோழ நாட்டில் திருசேய்ஞலூரில் வாழ்ந்த எச்சதத்தன் என்னும் அந்தணரின் மகனாக பிறந்தார்.  முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் இளமையிலேயே வேதங்கள் கற்றார்.  ஏழுவயது சிறுவனான விசார சருமன் ஒரு நாள் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.  அங்கு ஒருவன் பசுக்களை முரட்டுத்தனமாக அடிப்பதைக் கண்டு வருந்தினார். சிவ பூஜைக்கு தேவையான பஞ்ச கவ்யம் என்னும் பால் தயிர் வெண்ணெய் நெய் சாணம் என பொருட்களைத் தரும் பசுக்களை வதைப்பது பாவம் என பசுக்களின் உரிமையாளரிடம் தெரிவித்ததோடு அவற்றை மேய்க்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

புல்வெளியில் பசுக்களை மேயவிட்டு தண்ணீர் காட்டி அன்பைப் பொழிந்தார்.  விசாரசருமர் அருகில் நின்றாலே பசுக்கள் தாமாக பாலைச் சொரிந்தன. ஆற்று மணலில் சிவலிங்கத் திருமேனி அமைத்து பால் அபிஷேகம் செய்து தினமும் வழிபாடு செய்தார்.  ஔர் நாள் இதைக் கண்ட முட்டாள் ஒருவன் விசார சருமன் பசும்பாலை மண்ணில் ஊற்றி விளையாடுகிறான் என எச்சதத்தனிடம் தெரிவித்தான். மறு நாள் காலையில் அவர் மகனுக்கு தெரியாமல் மாடுகளைப் பின் தொடர்ந்தார்.  ஆற்றங்கரையில் இருந்ட குரா மரத்தின் பின்புறம் ஒளிந்து நின்ரார்.  வழக்கம் போல் விசாரசருமர் மண் லிங்கம் அமைத்ஹ்டு அபிஷேகம் செய்ய தொடங்கினார். எச்சதத்தன் ஒரு கோலால் மகனின் முதிகில் அடித்ததோடு பால் இருந்த பானியயை காலால் உதைத்தார்.  வெகுண்டு எழுந்த விசாரசருமர் பூஜைக்காக இஉர்ந்த பாலிய எட்டி உதைத்த உம்மை தண்டிப்பேன் என்று கையில் கோலை எடுத்தார். அது மழு என்னும் ஆயுதமாக மாறவே தந்தைய்ன் கால்களை வெட்டி எறிந்தார்.  அந்த இடத்திலேயே எச்சதத்தன் இறந்தார். பின் சிவ பூஜையை தொடர்ந்தார்.   அப்போது சிவ்ன அம்மையப்பராக காளை வாகனத்தில் காட்சியளித்து  பிள்ளாய் இனி யானே உமக்கு தந்தையானோம்.

சிவனடியார்களுக்கு நீயே தலைவன் ஆவாய்.  யான் உண்பன உடுப்பன அணிவன அனைத்தும் உனக்கே ஆகுக   உனக்கு சண்டேஸ்வரர் என்னும் பதவியும் அளித்தோம்  என வரம் கொடுத்தார்.  தன் சடையில் சூடிய கொன்றை மாலையை விசாரசருமரின் தலை மீது சூட்டினார். தந்தை எச்சதத்தனும் சிவனருளால் உயிர் பெற்றார்.

சிவன் கோயில்களில் கருவறைக்கு அருகில் சண்டேஸ்வரர் சன்னதி இருக்கும்.  திருவிழா காலங்களில் பஞ்சமூர்த்தி புறப்பாட்டின் போது சண்டிகேஸ்வரர் சுவாமியோடு வீதிகளில் எழுந்தருள்வார்.  கோயிலில் சிவனுக்கு தினமும் சாற்றப்படும் பூமாலைகள்  ஆடைகள்   நிவேதனங்கள் இவருக்கு உரியதாகும்.

உடம்பு மண்‌ கும்பம்‌

குரு வையாபுரி  தன்‌ சீடர்கள்‌ சிலருடன்‌ பேசியபடி,ஆற்றின்‌ கரையோரம்‌ நடந்து சென்று கொண்டிருந்தார்‌திடீரென குரு வையாபுரி கால்‌ வழுக்கி, நிலை தடுமாறிஆற்றில்‌ விழப்போனார்‌அப்போது அருகிலிருந்த  சீடன் குமரன் ‌, “சட்‌’டென்று குருவின்‌ கையைப்‌ பிடித்து இழுத்து, அவரை ஆற்றில்‌ விழாமல்‌ காப்பாற்றினான்‌.அவன்‌ அவரைக்‌ காப்பாற்றாமல்‌ இருந்திருந்தால்‌,ஆற்றில்‌ விழுந்து  அவர்‌, பெருக்கெடுத்து ஓடும்‌வெள்ளத்தால்‌ அடித்துச்‌ செல்லப்பட்டிருப்பார்‌.குருவும்‌ மற்ற சீடர்களும்‌ காப்பாற்றிய சீடன் குமரனுக்கு,நன்றி தெரிவித்தனர்‌.இதனால்‌ அந்த சீடனுக்குத்‌ தற்பெருமை அதிகமாகிவிட்டது.பார்ப்பவர்களிடமெல்லாம்‌, “ஆற்றில்‌ விழ இருந்த குருவை நான்தான்‌ காப்பாற்றினேன்‌.இல்லாவிட்டால்‌, இந்நேரம்‌ குரு ஆற்றில்‌ அடித்துச்‌ செல்லப்பட்டு இறந்திருப்பார்‌’ என்று கூறத்‌தொடங்கினான்‌.இந்த விஷயம்‌ குருவின்‌ காதுக்கு எட்டியது.ஆனாலும்‌ பொறுமையைக்‌ கடைப்பிடித்தார்‌.

மறு நாள்‌ குரு வையாபுரி அதே சீடர்களை அழைத்துக்‌கொண்டு, அதே ஆற்றின்‌ கரையோரம்‌ நடந்துஅன்று சம்பவம்‌ நடந்த இடம்‌ வந்ததும்‌, முன்புதன்னைக்‌ காப்பாற்றிய சீடன் குமரனிடம்‌,“என்னை ஆற்றில்‌ தள்ளிவிடு !” என்றார்‌.அந்த சீடன்‌ திகைத்தான்‌.”ம்‌! தள்ளு!” என்றார்‌ குரு.”அது‌ வேண்டாம்‌ குருவே!” என்றான்‌ சீடன்‌.”இது குருவின்‌ உத்தரவு. கேட்டு நடப்பது உன்‌கடமை, ‌ என்னை ஆற்றில்‌ தள்ளு !” என்றார்‌.மிரண்டு போன சீடன்‌ அவரை ஆற்றில்‌ தள்ளி விட்டான்‌மற்ற சீடர்கள்‌ என்ன நடக்கப்‌ போகிறதோ? என்றுதிகிலுடன்‌ பார்த்தனர்‌.ஆற்றில்‌ விழுந்த குரு, எந்தவித பதட்டமும்‌ படாமல்‌,அமைதியாக நீந்திச்‌ சென்று மறுகரையைத்‌தொட்டு விட்டுத்‌ திரும்பி வந்தார்‌அதைப்‌ பார்த்தசீடர்கள்‌ அனைவரும்‌ திகைத்தனர்‌.

குரு கரை மேலே ஏறி வந்தார்‌.தள்ளி விட்ட சீடனைப்‌“இப்போதும்‌ நீ தான்‌ என்னைக்‌ காப்பாற்றினாயா?’”என்று கேட்டார்‌. அந்த சீடன்‌ தலை குனிந்தான்‌.”ஆபத்து நேரத்தில்‌ ஒருவரைக்‌ காப்பாற்றுவது,ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ளசெயல்‌. ஆனால்‌, அதை விளம்பரப்படுத்திபெருமையடித்துக்‌ கொள்வது அந்த மனிதாபிமானகுணத்துக்கே இழுக்கத்‌ தேடத்‌ தரும்‌. அந்த மனிதன்‌ஒருநாளும்‌ சான்றோனாக முடியாது !” என்றார் ‌குரு.தற்பெருமை கொண்ட சீடன்‌, குருவிடம்‌ மன்னிப்புக்‌ கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக்‌கைவிட்டான்‌… “எனக்குத்‌ தெரியும்‌ ” என்பதற்கும்‌,எனக்குமட்டும்தான்‌ தெரியும்‌” என்பதற்கும்‌ நிறைய வேறுபாடுகள்‌ உள்ளன.எல்லாம்‌ தெரிந்த மனிதனும்‌ இல்லை, எதுவும்‌ தெரியாத மனிதனும்‌ இல்லை” என்ற உலக உண்மையைமறந்த மனிதன்தான்‌ ,இந்த தற்பெருமை வலையில்‌விழுந்து அவமானப்‌ படுகிறான்‌.மனதில்‌ ஏற்படக்கூடிய களங்கங்களில்‌,பிறருடைய வெற்றியைக்‌ கண்டு பொறுத்துக்‌ கொள்ளமுடியாதிருப்பது ஒன்று.

பொறாமை குணமே மிகவும்‌ கொடியது. வீண்‌, கர்வம்‌, பொறாமை, அகம்பாவம்‌ என்பன  கெளரவர்களையே  அழித்தது இவைகள் மனிதனுடைய உண்மையான இயல்பின்‌ வேர்களை வெட்டிவிடும்‌…நாம்‌ மலையாக இருப்பினும்‌ இந்த உடம்பு மண்‌ கும்பம்‌ என உணர்வு கொண்டு ஸ்ரீமந் நாராயணன் பதம் சரண் அடைவோம்  ‌.

நாச்சியார் திருமொழி

“காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக்

கட்டி அரிசி அவல் அமைத்து

வாயுடை மறையவர் மந்திரத்தால்

மன்மதனே உன்னை வணங்குகின்றேன்

தேய முன் அளந்தவன் திரிவிக்கிரமன்

திருக்கைகளால் என்னைத் தீண்டும்வண்ணம்

சாயுடை வயிறும் என் தடமுலையும்

தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே”

ஆண்டாள் தொடர்ந்து தன் திருமொழியினை பாடி தொழுகின்றாள், “காய்ந்த நெல்லோடு விளைந்த செங்கரும்போடு, வெல்லமும்,  நல்ல அரிசியில் செய்த அவலோடும் உனக்கு படையலிட்டு வேதியர் சொன்ன நல்ல மந்திரங்களால் உன்னை வணங்குகின்றன்  உலகலளந்த திருமாலின் திருகைகளால் என் வயிறும் மார்பகமும் தீண்டபெறும் அந்த பாக்கியத்தை எனக்கு நீ தருவாயாக” என பாடுகின்றாள்இப்பாடலை பாடிமுடித்ததும் ஆண்டாள் அந்த அணங்கதேவன் சிலையினையும் அந்த நெல் கரும்பு வெல்லம் அவலையும் பார்த்து கொண்டே இருக்கும் பொழுது ஒரு மூதாட்டியின் குரல் வாசலில் கேட்டதுயாரோ யாசககாரி என நினைத்து ஆண்டாள் தானம் செய்ய முயன்றபொழுது ஆண்டாள் பாடிய பாடலினை திரும்ப பாடி குலுங்கி சிரித்தாள் யாசககாரிஆண்டாளுக்கு நாணம் கூடிற்று, முகத்தை மூடி கொண்டாள் ஆனால் யாசககாரி விடவில்லை தொடர்ந்து கேட்டாள், “கண்ணன் மேல் இவ்வளவு காதலா?”கையினை முகத்தில் இருந்து எடுக்காமலே தலையினை மேலும் கீழும் ஆட்டினாள் ஆண்டாள்”அவனோ மாயன், இன்னும் எத்தனை எத்தனை லீலைகளோ அவனுக்கு உண்டு, அவன் உன்னை வந்து மணப்ப்பான் ” என எண்ணுகின்றாயா என கேட்டாள் யாசககாரி”அவன் வருவான் என காத்திருக்கின்றேன், இந்த பிறவி முடிந்தாலும் பிறவி பிறவியாய் அவனுக்காய் காத்திருப்பேன்” என தழுத்தழுத்த குரலில் சொன்னாள் ஆண்டாள்”நீ பைத்தியகாரியடி, அவனாவது வருவதாவது, வீணாக காலம் கடத்தாமல் வேறு திருமணம் செய்து கொள்” என்றாள் யாசகாரி”யாசகம் பெற வந்தவளுக்கு என் கண்ணனை பற்றி பேச அருகதை இல்லை” என்றாள் ஆண்டாள்”இப்படி உன்னை ஏமாற்றி கொண்டிருப்பவன் நல்லவனோ, அந்த மாய ஏமாற்றுவித்தைகாரனை சொன்னால் உனக்கேன் கோபம் வருகின்றது, அவன் உனக்கு மட்டுமா சொந்தம்” என்றாள் யாசககாரி

“இல்லை, அவன் எனக்கும் சொந்தமாக வேண்டும் என்பதுதான் என் ஆசை, அவனை பழிக்காதே” என குரலை உயர்த்தினாள் ஆண்டாள்”முட்டாள்தனமான ஆசை, அந்த கண்ணன் ஏமாற்றுக்காரன்” என யாசகாரி சொல்ல “அவன் யாராய் இருந்தாலும் என் மணாளன், உனக்கு யாசகமுமில்லை ஒன்றுமில்லை” கிளம்பு என விரட்டினாள் ஆண்டாள்”ஆண்டாளே, என்னையா விரட்டுகின்றாய்” என யாசககாரி சொல்லும் பொழுதே அவள் குரல் மாறிற்று, ஆண்டாள் ஏறேடுத்து பார்த்தால் அங்கே கண்ணன் நின்று கொண்டிருந்தான்அவனை கண்டதும் வெட்க சிரிப்போடு வீட்டுக்குள் ஓடி ஒரு தூணின் மறைவில் நின்று கொண்டாள், கண்ணன் வந்து ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான்ஆண்டாளுக்கு நாணம் கூடிற்று

ஆண்டாளே என்றபடி அவளை நோக்கி சென்றான் கண்ணன், ஆண்டாள் நகர முற்பட்டாள் அவளின் கையினை பிடித்து கொண்டான் கண்ணன்அவன் முகத்தை ஏறேடுத்து பார்த்தாள் ஆண்டாள், கண்ணன் சிரித்தான், அந்த பாடல் வரிகளை சொல்லி அவ்வளவு ஆசையா என்றான்அவள் சிரித்து கொண்டே விலகினாள் கண்ணன் விடவில்லைஅவன் மேலும் நெருங்கினான், அவள் இம்முறை விலகவில்லை கைகளை விடுவித்து கொண்டாள், கண்ணன் செல்ல கோபம் கொண்டு முகத்தை திருப்பி கொண்டான்

“என்னாயிற்று” என கேட்டாள் ஆண்டாள், “பின் எதற்காக பாடினாயாம்” என அலுத்து கொண்டான் கண்ணன்கண்ணா இப்பாடலின் பொருள் உனக்குமா புரியவில்லை என்றாள் ஆண்டாள், “ஆமாம் புரியவில்லை” என போலி கோபம் காட்டினான் கண்ணன்”கண்ணா நாற்றாக நடபட்ட நெல் விளைந்து வீட்டுக்குவந்தாயிற்று, நடபட்ட கரும்பும் வெட்டபட்டாயிற்று அது அது விளைந்து இருக்க வேண்டிய இடத்துக்கு செல்ல நான் மட்டும் இன்னும் விளைந்தும் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லவில்லையே கண்ணாபார் நெல் அவலாக மாறிற்று, கரும்பு வெல்லமாக மாறிற்று, எல்லாம் அதன் அதன் பலனை கொடுக்க தொடங்கிவிட்டது ஆனால் நான் இன்னும் உன்னை எண்ணி அப்படியே இருக்கின்றேனே” இது உனக்கு புரியவில்லையா கண்ணா என்றாள்புரிந்துதான் நீபாடிய அடுத்த வரிக்காக ஓடிவந்தேன் என சிரித்தான் கண்ணன்

கண்ணா, எல்லாம் புரிந்த உனக்குமா அந்த வரி புரியாது? அது என்ன லவுகீக சிற்றின்ப ஏக்கம் என்றாய் நினைத்தாய்?இந்த பூமி எவ்வளவு உயிர்களை அனுதினமும் பிறப்பித்து கொண்டு அவற்றுக்கு தாய் குழந்தைக்கு தாய் பாலூட்டி வளர்ப்பது போல் வளர்க்கின்றது, இதற்கு என்ன காரணம் கண்ணா?

என்ன காரணம்? என தெரியாமல் கேட்டான் கண்ணன்?நீ மூன்று மண்டலங்களையும் உன் காலால் அளந்தாய் அல்லவா? அதனால்தான் வானம் கொட்டுகின்றது, பூமி விளைகின்றது, பாதாளம் இன்னும் அள்ளி அள்ளி கொடுக்கின்றதுகண்ணன் புன்னகைத்தான்ஆண்டாள் தொடர்ந்தாள் “கண்ணா நீ மாபெரும் தெய்வம் இந்த பிரபஞ்சத்தையே இயக்குபவன், மூவுலகமும் உன் கால்பட்டே இவ்வளவு அள்ளி கொடுக்கின்றது என்றால் உன் கைபட்டால் நானும்  ஒரு பூமாதேவி ஆகிவிடுவேன் அல்லவா? அப்பொழுது நானும் எவ்வளவு உயிர்களை பிறபிப்பேன், நானும் நதி, மழை, மேகம், நீரூற்று என உயிர்களுக்கு பாலூட்டி வாழவைப்பேன், அதை நினைத்து கொண்டுதான் பாடினேன்கண்ணா நீ இயக்குபவன் என்றால் நான் இயக்கபடுபவள், மூவுலகை அளந்த நீ என்னையும் ஒரு உலகமாக்கு, அந்த உலகம் உன் கையால் படைக்கபட்டதென்று பெயர் வரட்டும், ஆயிரமாயிரம் ஆயிரமாயிரம் உயிர்கள் அதில் ஜனிக்கட்டும் எல்லாம் உன்னால் என உலகம் சொல்லட்டும், உன்னால் வாழ்கின்றது இந்த பூமி என பெயர் நிலைக்கட்டும்

கண்ணா இந்த பூமி உன்னால் இயங்குகின்றது, அப்படி நானும் உன்னால் பெரும் அடையாளமாகி உன் பெயரை பெருமைபடுத்த எனக்கு வரமருள்வாயா? என சொன்னபடி அவன் நெஞ்சில் புதைந்தாள்கண்ணன் புன்னகைத்தான், அவளின் மிக பெரிய பரோபகார மனமும், பூமிக்கே தாயாகும் அந்த தயாள குணமும் அவனை அவளின் பூர்வீகத்தை சொல்ல வைத்தன‌”ஆண்டாளே, நீ பூமாதேவியின் அம்சம் என்பதால் உனக்கு அந்த வாசனையும் ஆசையும் வருவதில் ஆச்சரியமென்ன, இந்த பூமிக்கு நான் சொந்தம் என்பது போல் நீ எனக்கு சொந்தம் என உலகம் உணரும் காலம் வரும்” என சொல்லி மெல்ல மறைந்தான்ஆன்டாளுக்கு மனமெல்லாம் சந்தோஷத்தில் நிறைந்தது, அடுத்த நாள் பூஜைக்கு அப்பொழுதே தயாரானாள்

(இப்பாடலின் பொருள் இதுதான்

இந்த நிலத்தில் விளைவிக்கபடுபவை எல்லாம் விளைந்தவுடன் வீடு சேர்வது போல, மானிட ஆத்மா பக்குவம் பெற்றபின் கடவுளை அடைய வேண்டும் அதற்கு அவல் இடிபடுவது போலவும், கரும்பு பிழியபட்டு காய்ச்சபடுவது போலவும் மிக இன்னல் பட்டு இறைவனை அடைய பக்குவபடுகின்றதுஅப்படி பக்குவபடும் ஆன்மா இறைவனில் கலந்துவிடுகின்றது பக்குவபடாத ஆன்மா மறுபடியும் குழந்தையாய் தாய் வயிற்றில் பிறந்து பால் குடித்து வளர்கின்றது”அந்த ஆன்மா வாழ்வினை முடித்து நன்மை தீமை பலன்களுக்காக மறுபடியும் பிறக்கும், அதன் ஆன்மா ஞானத்தை உணருமட்டும் இச்சுழற்சி நடந்து கொண்டே இருக்கும்

அந்த ஆன்மாக்கள் இறைவனை உணரவேண்டும் என்பதால் இந்த பூமி உயிர்தன்மை கொண்டதாய் அவனால் படைக்கபட்டு உயிர்கள் ஞானம் பெற ஆன்மாக்களுக்கு இடமளித்து உடலுக்கு உணவளித்து வளர்க்கின்றதுமூவுலகமும் அவன் அருளால் நிறைந்திருகின்றது, இந்த பூமியும் அதன் உயிர்தன்மையும் அவன் அருளால் நடந்து கொண்டிருப்பது அவன் பெயரால் இயங்கி கொண்டிருக்கின்றது )

மானிட பிறவியின் அர்த்தம்

ஒரு கால் இல்லாத இளைஞன் பிரபு . அம்மாவுடன் வசித்து வந்தான்.கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை எப்பொழுதும் வாட்டும்.

ஒரு சமயம், பிரபு, தன் அம்மாவோடு பேருந்தில் போகும்போது பெண்கள் அமரும்  சீட்டில் உட்கார்ந்திருந்தான்  ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டினாள் அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் ‘மன்னிப்பு  கேட்டாள்.அது பிரபுக்குப் பெரிய துயரத்தைத் தந்தது ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடந்தான் ரயில் வருகிற நேரம்…ஒரு ‘குஷ்டரோகி’ பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விட்டான்  அந்த குஷ்டரோகி பிரபுவிடம் சொன்னான், “நான் ஒரு குஷ்டரோகி… எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா… இப்படிதான் ஒரு வாரத்துக்கு முன்னாடிகூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் நான் காப்பாத்தினேன்…

அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு எனக்கு நன்றி கூட  சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க… ஏனா நான் அவ்வளவு அருவருப்பா இருக்கேன்.  அப்படிப்பட்ட நானே உயிரோட இருக்கும் போது… உனக்கெல்லாம் என்னப்பா தம்பி? இந்த கால் ஊனம் என்ன பெரிய குறையா?…’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு துவங்குகிறான் ஊனமுற்ற பிரபு காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பதை நினைத்து நம் மகன் பிரபுதான் செத்துப்போய் விட்டான் என பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.

“அம்மா… நான் இருக்கிறேன் அம்மா…” என பிரபு  கத்திக்கொண்டே வருகிறான். ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடந்தான்.முந்தைய இரவு அந்த குஷ்டரோகி தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் “இப்படிப்பட்ட ஊனமானவனே  இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக்கிறான்…  நாம ஏன்  இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே…

” என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான் போல…செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான்,

***அம்மா…! அந்த குஷ்டரோகி எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்…****நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேனே …!”* என கதறி அழுதான் பிரபு .**ஆகவே நாம், நம்மால் முடிந்த வரைக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்  கூறிய  கீதை உபதேசங்களை படித்து, உணர்ந்து, வாழ்ந்து, வாழ வைத்து,  நம்மிடையே வாழும் சக மனிதர்களுக்கும்  மதிப்பு கொடுத்து,  நம் மானிட பிறவியின் அர்த்தம் உணர்வதே நம் வாழ்க்கையின் லட்சியம்  !