அரண்டவன் கண்ணுக்கு

சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான் ராவணன்.   அடுத்தவன் மனைவியை அடைய நினைப்பது கூடாது என புத்தி சொன்னான் தம்பி விபீஷணன்.    ஆனால் தம்பியின் பேச்சை ராவணன் பொருட்படுத்தவைல்லை.   அண்ணா என் பேச்சை ஏற்க மறுத்தால் உன்னைவிட்டு பிரிவேன் என்று சொல்லிய விபீஷணன் கதாயுதம் தாங்கியபடி ராமனைச் சந்திக்கப் புறப்பட்டான்.   அவனுக்கு ஆதரவாக நான்கு ராட்சஷர்கள் கூட வந்தனர்.  தூரத்தில் இவர்கள் வருவதைக் கவனித்த வானர அரசன் சுக்ரீவனுக்கு பயம் உண்டானது.

பார்த்தாயா ராமா.  நம்மைக் கொல்லும் நோக்கத்துடன் ராவணன் தன் தம்பி விபீஷணை  ஏவி விட்டிருக்கிறான். நான்கு ராட்சதர்களையும் சேர்த்துக்கொண்டு பல ஆயுதங்களைத் தாங்கியபடி வருகிறார் பார் என்ரான்.  ஒரே ஒரு கதாயுதத்துடன் தானே வருகிரார்ன்.  ஏன் அவனைத் தவறாக நினைக்கிறாய் எனக் கேட்டார் ராமர்.

உண்மையில் நடந்தது என்ன தெரியுமா  ஒரு கதாயுதம் கூட சுக்ரீவன் கண்களுக்கு பல ஆயுதங்களாகத் தெரிந்தது.  பரம்பொருளான ராமர் அருஇல் இருந்தும் கூட அவன் மனம் பலமடையவில்லை.  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே………..அது இதுதான் போலிருக்கிறது.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s