
ஏழு கிருஷ்ணரும் ஏழு காளையைப் பிடித்துக் கயிறு பூட்டி, அதை ஒரு விளையாட்டுப் பொருளாக அடக்கினார்கோசல நாட்டு மன்னன் நக்னஜித் கிருஷ்ணரிடம் உரையாடுகிறார்,
“நீர் பகவான் கிருஷ்ணர், வீராதி வீரர், நீர் எவ்வித சிரமமுமின்றி இந்த ஏழு காளைகளையும் அடக்கக் கூடியவர் என்பதை நான் அறிவேன்.எந்த அரசகுமாரனாலும் இதுவரை இவற்றை அடக்க முடியவில்லை. இவற்றைப் பணியச் செய்ய முயன்றவர்களெல்லாம் அங்கங்கள் முறியப் பெற்றுத் தோற்றுப் போனார்கள்.நீர் தயவுசெய்து இந்த ஏழு காளைகளுக்கும் கயிறு பூட்டி அடக்க வேண்டும். அப்போது நீர் என் அன்பு மகள் சத்யாவின் கணவராக அறிவிக்கப்படுவீர்.”
இதைக் கேட்ட கிருஷ்ணர், மன்னர் தன் பிரகடனத்தை மாற்ற விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டார். எனவே, மன்னரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக அவர் காளைகளுடன் சண்டையிடுவதற்கு ஆயத்தமானார்.உடனடியாக, அவர் தம்மை ஏழு கிருஷ்ணர்களாக வியாபித்துக் கொண்டார், ஏழு கிருஷ்ணரும் ஏழு காளையைப் பிடித்துக் கயிறு பூட்டி, அதை ஒரு விளையாட்டுப் பொருளாக அடக்கினார்.கிருஷ்ணர் தம்மை ஏழாகப் பிரித்தது குறிப்பிடத்தக்கது. அவள் கிருஷ்ணரிடம் பிரியம் கொண்டிருந்தாள். அவளின் விருப்பத்தைப் பூர்த்திசெய்வதற்காக அவர் ஏழு வடிவங்களில் தம்மை வியாபித்துக் கொண்டார்.
கிருஷ்ணர் ஒருவரேயானாலும் அவர் எண்ணற்ற உருவங்களில் வியாபிக்க வல்லவர் என்பது கருத்து. ஏழு காளைகளையும் கிருஷ்ணர் கயிறிட்டு அடக்கியபோது அவற்றின் பலமும் பெருமையும் நொறுங்கிப் போயின. அவற்றிற்கு ஏற்பட்டிருந்த பெயரும் புகழும் உடனடியாக மறைந்தன.
கிருஷ்ணர் அவற்றிற்குக் கயிறிட்டு, ஒரு குழந்தை மரத்தாலாகிய பொம்மை காளையைக் கட்டி இழுப்பது போல பலமாக இழுத்தார். கிருஷ்ணரின் மேன்மையைக் கண்ட நக்னஜித் ஆச்சரியமடைந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் மகளான சத்யாவை வரவழைத்து கிருஷ்ணரிடம் ஒப்படைத்தார். கிருஷ்ணரும் அவளை ஏற்றுக் கொண்டார்.