
கம்போடியா என்பது ஒரு வெளி நாடு அவ்வளவுதானே அதைப் பற்றி விசேஷமாக தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது இப்படிக் கேட்டால் பல விஷயங்களை பதிலாக அளிக்க வேண்டியிருக்கும்
இந்தியாவுடன் புராண காலத்திலிருந்தே தொடர்பில் இருந்த நாடு இது. அது அப்போது காம்போஜம் என்று அழைக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஹிந்துமத கோயில் எங்கே இருக்கிறது. மதுரை திருவண்ணாமலி ஸ்ரீ ரங்கம் இல்லை. உலகின் மிகப்பெரிய ஹிந்துமதக் கோயில் இருப்பது கம்போடியாவில்தான் அந்த நாட்டின் தேசியக் கொடியில் இந்தக் கோயில் இடம் பெற்றிருக்கிறது என்ரால் அதன் பெருமையை வேறு எப்படி சொல்ல? ஹிந்து மதத்தை இன்னும் அங்கே போற்றுகிறார்கள் சொல்லப்போனால் ஹிந்து மதமும் புத்த மதமும் அங்கே சகோதர மதங்களாக இருக்கின்றன.

மிக மிக பிரம்மாண்டமான கோயில்கள் மட்டுமே இடம் பெறுவதற்காக ஒரு நகரையே நிர்மாணித்திருக்கிறார்கள். ஹிந்து மதத்தில் பற்ரு கொண்டவர்கள் அதுவும் தொன்மையான கோயில்களைக் காணவேண்டும் என்ற துடிப்பு மிக்கவர்களும் கலை உணர்வு கொண்டவர்களும் வெளி நாடு செல்ல தீர்மானித்தால் கம்போடியாவை விட்டுவிடாதீர்கள்
களிப்பு கலக்கம் கம்போடியா என்ற நூல் படிக்கச் சுவையான பயணக் கட்டுரையாக விரிகிறது. அங்கோர் வாட் ஆலயத்தை எழுப்பிய மன்னன் இரண்டாம் சூரியவர்மன் மூன்று லட்சம் பணியாளர்களும் ஆறாயிரம் யானைகளும் இதைக் கட்டி முடிக்க தேவைப்பட்டார்களாம் வெளிச்சுவர் 1025 மீட்டர் நீளமும் 800 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கிறது. 85 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் குலேன் மலையிலிருந்து பாறைகள் கொண்டு வரப்பட்டன. உலகில் மிகப்பெரிய ஹிந்து கோயிலான இதன் முக்கிய வாயில் மேற்கு நோக்கி அமைந்திருப்பது ஆச்சர்யம் தருகிறது. கோயிலைச்சுற்றி பிரம்மாண்டமான நூலகங்களின் மிச்சங்கள் காணப்படுகின்றன. நுழைவு வாயிலின் அருகிலும் வளாகத்தின் உள்ளேயும் என்று பல நூலகங்கள் உள்ளன.
அங்கோர் வாட் கோயில் நான்கு யுகங்களைக் குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது. நுழைவு வாயிலைத்தாண்டி பிரகாரங்களைக் கடந்து கருவ்றையை அடையும் போது பிரபஞ்சத்தின் தொடக்கப் புள்ளிக்கே சென்றதாக அர்த்தமாம். முக்கிய நுழைவு வாயிலில் நுழைந்தவுடன் வலது புறத்தில் மூன்றே கால் மீட்டர் உயரத்தில் காட்சி தருகிறது ஒரு தெய்வ உருவம். சிகையைப் பார்த்து அது புத்தர்தான் என்று நினைத்திருக்க திருமால் என்கிறது அங்கிருக்கும் ஒரு குறிப்பு. ஒரே பாறையில் உருவாக்கப்பட்ட சிலை எட்டு கரங்கள் கதை ஈட்டி சக்கரம் சங்கு என்று ஒவ்வொரு கரத்துக்கு ஓர் ஆயுதம்.

தேவ கன்னிகைகளின் கோயில் என்று இதைக் குறிப்பிட்டாலும் தவறில்லை. கோயில் சுவர்களில் எங்கு பார்த்தாலும் அப்சரஸ்கள். மூவாயிரத்திற்கும் அதிகம் என்கிறார்கள். அவர்களின் சிகை அலங்காரம் நாகரீக அழகிகளுக்கு பலவித புதுக் கருத்துக்களைக் கொடுக்கவல்லது. கருவறைக்குச் சற்றே முன்புள்ள மைய சன்னதியில் புத்தரின் உருவம் சயன கோலத்தில் காட்சி தருகிறது. அங்கோர் வாட் கொயைலின் வெளிப்புறச் சுவர் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அதன் நீளத்தால் மட்டுமல்ல அதில் காணப்படும் அழகிய சுதைச் சிற்பங்களாலும்தான்.
உங்களுக்குத் தெரியுமா? உலகமகா கொடூரன் ஒருவன் கையில் சிக்கிச் சீரழிந்த நாடு கம்போடியா. ஹிட்லர் இடி அமீன் போன்றவர்களுக்கு சற்றும் குறையில்லாத கொடூரனாக அவன் விளங்கினான். அதற்கு சாட்சியாக கம்போடியாவில் மீதமிருக்கும் காட்சிகள் மனதை கலங்க வைக்கின்றன.