இராஜா வீரவர்மன்

இளவரசனே போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே

தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாதே.

ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசன் முருகனை உயிரோடு பிடித்து இராஜா வீரவர்மன் முன்பு நிறுத்தினர். 

இளவரசன் முருகன் ஸ்ரீ கிருஷ்ண பக்தன், எப்பொழுதும் ஸ்ரீ கிருஷ்ண மகாமந்திரத்தை மனனம் செய்து கொண்டு இருப்பான், அந்த சமயம் இராஜா வீரவர்மன் முன்பு  தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான்.  அதற்க்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா வீரவர்மன்..விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்.” 

அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மையில் தூரம் கொண்டு செல்ல வேண்டும். கூடவே உருவிய பட்டையத்தோடு எனது வீரர்கள் வந்துக்கொண்டு இருப்பார்கள். ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் உன் தலையைச் சீவிவிடும். வெற்றியோடு முடித்துவிட்டால் விடுதலை” என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.

குறிப்பிட்ட நேரம் வந்தது. இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர்.  போர் வீரர்கள்  சாலையை  ஒழுங்கு செய்து கொடுத்தனர். பேரரசர் வீரவர்மன்  முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின்  கைகளில் கொடுக்கப்பட்டது. ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து  உற்ச்சாகப் படுத்தினர். மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர். இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாளோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக்கொண்டிருந்தனர்.  பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டான் இளவரசன் முருகன்  நடக்க  சுற்றுப்புறத்திலிருந்து கூச்சலும், பரிகாசமும், ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.  

எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி மனதில் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் உச்சரித்து கொண்டே  தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை  வெற்றியோடு ஓடி முடித்தான் இளவரசன் .இளவரசனை பாராட்டிய பேரரசர் வீரவர்மன் இளவரசனே உன்னை கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம்.  உன்னை உற்சாக படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம். அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா என்று கேட்டார்.?என்னை போற்றுபவர்களை நான் கவனிக்கவில்லை, தூற்றுபவர்களையும் நான் பார்க்கவில்லை. 

“எனது கவனமெல்லாம் ஆழ் மனதில் ஸ்ரீ கிருஷ்ண நாமத்திலும், வெளிபுரத்தில்  தண்ணீரிலும்   அல்லவா இருந்தது.” விடுதலையோடு  கூட அரசர் ஒரு ஆலோசனை தந்தார். இளவரசனே..போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே..தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாதே…கீதையின்  கூற்றுபடி ‘உன் கடமையை மட்டும் பார்’ என்று..முடித்தார் இராஜா வீரவர்மன்

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s