ஸ்ரீதர ஐயாவாள் மடம்

திருவிசநல்லூர் – கங்கை நீர் பொங்கிவரும் ஸ்ரீதர ஐயாவாள் மடம் – இன்று பக்தர்கள் புனித நீராடல்!

ஆண்டு தோறும் கார்த்திகை அமாவாசை நாளில் கும்பகோணம் அருகேயுள்ள திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் இல்லக் கிணற்றில் கங்கை நீர் பொங்கி வருவதாகவும், அதில் புனித நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இன்று அந்தப் புனித நீராடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கங்கை நதிகங்கை நதி

கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் ஸ்ரீதர ஐயாவாள். இவர் தன் பதவி சொத்துக்களைத் துறந்து விட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் குடியமர்ந்து விட்டார். 

தினமும் அருகேயுள்ள  திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார். அர்த்தஜாம பூஜையும் காண்பார். சிவன் மேல் அபார பக்தி கொண்டவர்.

இவரது தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும். அத்தகைய ஒரு நாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் செய்ய ஏற்பாடு செய்து விட்டுக் காவிரியில் நீராடச் சென்றார். நீராடி இல்லம் திரும்பும்போது எதிரே வந்த வயதான ஏழை ஒருவர், ஐயாவாளிடம், “சுவாமி ரொம்ப பசிக்கிறது. ஏதாவது சாப்பிடக் கொடுங்களேன்” எனக் கேட்டார்.

அவர் மீது இரக்கம்கொண்ட ஸ்ரீதர ஐயாவாள் அவரை இல்லத்திற்கு அழைத்து வந்து, பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவைக்கொடுத்துப் பசியாற்றினார்.சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள். அந்த நியதியை மீறினார் ஐயாவாள். அதனால் கோபமடைந்த அந்தணர்கள் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.”பரிகாரம் செய்தால்தான் நாங்கள் திதி கொடுப்போம்” என்றனர்.”என்ன பரிகாரம்?” என்று வினவிய ஐயாவாளிடம், “நீ இப்போதே கங்கையில் நீராடி வரவேண்டும்” என்று கூறி சென்று விட்டனர்.

‘இங்கேயே வருவாள் கங்கை!’ திருவிசநல்லூர் சிவபெருமானின் அருளாடல்’இங்கேயே வருவாள் கங்கை!’ திருவிசநல்லூர் சிவபெருமானின் அருளாடல் ஒரே நாளில் எப்படி தூரத்திலுள்ள காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு அன்றே திரும்ப முடியும்? மகாலிங்க சுவாமி இதென்ன சோதனை?” என நினைத்து வருத்தத்துடன் படுத்தவர் அசதியில் உறங்கக் கனவில் சிவன் காட்சி கொடுத்து, “உன் இல்லக் கேணியில் கங்கையைப் பிரவேசிக்கச் செய்வேன்” என உறுதியளித்து மறைந்தார். இக்கனவை ஐயா எல்லாரிடமும் சொன்னார். கார்த்திகை மாத அமாவாசை. ஊரே திரண்டு ஐயாவாள் வீட்டு முன் கூடிவிட்டது. ஐயாவாள் கிணற்றடியில் நின்றபடி மனம் உருக கங்காஷ்டகம் பாடினார். ஐந்தாம் பாடல் பாடியவுடன் கேணியில் கங்கை பொங்கி வழிந்தது. திருவிசநல்லூர் சாலை முழுவதும் கங்கை வெள்ளமாய்ப் பாய்ந்தோடினாள். அந்தணர்கள் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு கங்கை நீராடினார்கள்.

இன்றைக்கும், கார்த்திகை அமாவாசையன்று 300 ஆண்டுகளுக்கு முன் கங்கை பொங்கி வந்தது போல ஸ்ரீதர ஐயாவாள் இல்லக் கிணற்றில் நீர் பொங்கி வருவதைக் காணலாம். 

கார்த்திகை அமாவாசை திதியான இன்று (23-.11-.2022 ) கங்கை பொங்கும் கிணற்று நீரில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட போகிறார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s