புனர்வஸூ- ஶ்ரீ ராமர்

ராமாவதாரம் முடியும் தருவாயில், எமதர்மன் ராமரை ரகஸ்யமாக சந்தித்துப்பேச வருகிறான். அப்போது ராமர், லக்ஷ்மணனைப் பார்த்து “நாங்கள் பேசும் சமயத்தில் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம்” எனக் கட்டளையிடுகிறார்!

அவ்வமயம் துர்வாச மஹரிஷி ராமரை தரிசிக்க வருகிறார். லக்ஷ்மணன்  உள்ளே நடப்பதைக்கூறி, இப்போது அனுமதிக்க இயலாது என்கிறான். கோபம் கொண்ட மஹரிஷி, “என்னை இப்போது அனுமதிக்காவிட்டால் அயோத்தியே அழிந்துபோக சபித்து விடுவேன்” என்கிறார்!அயோத்திக்கு ஆபத்து நேரிடுமே என்ற பயத்தில் லக்ஷ்மணன் மஹரிஷிக்கு வழிவிடுகிறான். 

ஆனால் தம் கட்டளையை மீறிய லக்ஷ்மணன் மீது கோபம் கொண்ட ராமர், *நீ மரமாகப் போவது* என்று சாபமிட்டார்.லக்ஷ்மணன் கண்ணீருடன், அண்ணா! “தங்களின் சாபத்தை நினைத்து வருந்தவில்லை. தங்களுக்கு சேவை செய்யாமல் எப்படி வாழ்வேன்?” என்றார்.லக்ஷ்மணா! எல்லாம் விதிப்படியே நடக்கிறது. இதைத்தான் எமதர்மன் சொல்ல வந்தான். *சீதையை கானகத்திற்கு அனுப்பிய பாவத்திற்காக நானும் பூலோகத்தில் பதினாறு ஆண்டுகள் ஜடமாக தவ வாழ்வில் ஈடுபட வேண்டியிருக்கிறது. மரமாக மாறும் நீயே எனக்கு நிழல்தரும் பேறு பெறுவாய்! என்றார்.

அதன்படியே ஆழ்வார்திருநகரியில் “நம்மாழ்வாராக” ஶ்ரீ ராமர் அவதரித்தபோது, லக்ஷ்மணன் “புளியமரமாக” நின்று சேவை செய்தார்! இந்த மரத்தை “உறங்காப்புளி” என்பர்! அதாவது, இதன் இலைகள் எப்போதும் மூடுவதில்லை. லக்ஷ்மணன் கண் இமைக்காமல் ராமரைப் பாதுகாப்பதாக ஐதீகம்!

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s