ஜோதிடம் பொய்தானே

ஹரே…கிருஷ்ணா ஜோதிடம் பொய்தானே  என்று  கேள்வி எழுப்பிய  சகாதேவன் சகாதேவன், தனக்கு ஜோதிடக்கலை தெரியும் என்ற ஆணவத்தில் சற்று கர்வம் அதிகமாகிவிட்டது. துரியோதனன், பாண்டவர்களை அழிப்பதற்கு , போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க , சகாதேவனும் நல்ல ஒரு  நாளைக் குறித்துக்கொடுக்கிறான்.

அந்தளவிற்கு தன் கலையில் உண்மையாக இருந்தான். போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான் கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை தெரியவருகிறது.இதனால் தான் கற்ற கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடிய வில்லையே என்று ஜோதிடத்தில் நம்பிக்கை இழக்கிறான். 18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்தபின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா ஜோதிடம் என்பது பொய்தானே என்று கேட்கிறான்.

அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படி கூறலாமா என்று கேட்கிறார்.  ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணித திறமையால்  தெரிந்து கொண்டேன், ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் கணிதத்தில் வரவில்லை அப்படி யென்றால் ஹரே…கிருஷ்ணா….ஜோதிடம் பொய்தானே  என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன். இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னார்.

அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்து கொண்டால் பிறகு நான் எதற்கு??? இந்த பதிலை கேட்டவுடன் சகாதேவனுக்கு தூக்கிவாறிப்போட்டது. அடங்கியது அவன் கர்வம். எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும். மீதி 1% ஸ்ரீ கிருஷ்ணன்  பிடியில்…

வாழ்க வையகம்  வாழ்க வையகம்  வாழ்கவளமுடன்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s