
மிக கம்பீரமான கோபுரங்களுடன் தோற்றமளிக்கிறது கோயில். பெரிய உருவம் கொண்ட பாபஹரேஸ்வரருக்கு அருகே, சிறிய அளவிலான சிவலிங்கம் ஒன்றும் இருக்கிறது. இந்த சிறிய சிவலிங்கத்தை பற்றி பின்வருபவையில் காண்போம்.
கோவிந்தபட்டரும் சிவலிங்கமும்:
இந்த கோயில், மகான் ராமானுஜர் காலத்தில் கட்டப்பட்டதாகும். ராமானுஜரின் பெரியம்மா மகன் கோவிந்தபட்டர். இவர் வைணவராக இருந்தாலும், இஷ்ட தெய்வமான சிவனின் மீது அதிதீவிர பக்தி கொண்டார்.இதன் காரணமாக, சிவபூஜை செய்தும், ஒவ்வொரு சிவஸ்தலங்களுக்கு சென்றும் வழிபாடு செய்துவந்துள்ளார்.இப்படி ஒருமுறை காசிக்கு சென்றார் கோவிந்தபட்டர். அங்குள்ள கங்கை நதியில் நீராடினார். நீராடி எழுந்தவுடன் அவரின் உள்ளங்கையில் ஒட்டியவாறு சிறியளவிலான சிவலிங்கம் ஒன்று இருந்தது. இதனை கண்டு ஆச்சரியப்பட்ட கோவிந்தபட்டர்,

உள்ளங்கையில் ஒட்டியிருந்த சிவலிங்கத்தை பலமுறை உதறினார். ஆனால், சிவலிங்கம் அவரின் கையைவிட்டு விலகவில்லை. இதனாலேயே “உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனார்’’ என்கின்ற பெயரும் கோவிந்தபட்டருக்கு உண்டு. சிவலிங்கத்தை சிறிது காலம் பூஜை செய்துவந்தார் கோவிந்த பட்டர். அதன் பின், கூடுதலாக வைணவ நிர்வாக பொறுப்புகளை கோவிந்தபட்டருக்கு, ராமானுஜர் வழங்க, அவர் வைத்திருந்த சிவலிங்கத்தை சரிவர பூஜிக்க முடியாமல் போகிறது.ன்னன் கட்டித்தேவன் யாதவராயன்: ஆதலால், `கட்டித்தேவன் யாதவராயன்’ என்னும் சோழ மன்னனை தொடர்புக்கொண்டு விவரங்களை மன்னனிடம் தெரிவித்து, தான் வைத்திருந்த சிறிய அளவிலான சிவலிங்கத்தை வழங்கி, கோயில் ஒன்றை கட்ட வேண்டினார். அதன் படி மன்னன், கோவிந்தபட்டர் வழங்கிய சிறிய சிவலிங்கத்தோடு ஒரு பெரிய சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்கிறார். இதுவே இக்கோயில் உருவான காரணமாகும். சுமார் 1000 ஆண்டுகளாக சிதிலமடைந்துள்ள இந்த ஆலயத்தின் மூலவர், அருள் மிகு பாபஹரேஸ்வரர். இவரை ஒரு முறை தரிசித்தாலே நம் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம்.

மேலும், இங்கு விசேஷமாக கோயிலின் உள்ளே அஷ்ட கைகளை (எட்டு) கொண்ட பைரவர் இருக்கிறார். மரகதவல்லி என்னும் தாயார் சந்நதி உள்ளது. வெளிப்பிரகாரத்தில் விநாயகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, மஹாவிஷ்ணு, பால முருகன், என தனித்தனியே சந்நதிகள் உள்ளன. இவ்வாலயத்தின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது.பக்தர்களுக்கு அருளிய பாபஹரேஸ்வரர்: மீள முடியாத கடன் பிரச்னைகளில் இருப்பவர்கள் பாபஹரேஸ்வரரை அனுதினமும் தரிசித்து தனது துயரங்களை நீக்க வேண்டினால். சிறிது நாட்களிலே வேண்டுதலின் படி கடன் பிரச்னை தீர்த்து, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்.
அதே போல், திருமணமாகாத பலரும் பாபஹரேஸ்வரரை வேண்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு மிக விரைவாகவே திருமணம் கைகூடி, திருமணம் நடைபெறுகிறது. திருமணம் நடந்த பின்னர் திருமணக்கோலத்துலேயே வந்து பாபஹரேஸ்வரரை தரிசித்து செல்கிறார்கள்.விசேஷ பூஜைகள்: சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. முதல்காலமாக காலை 6.00 மணி முதல் 9.00 மணிவரை பஞ்சகவ்ய அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகமானது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அபிஷேகம் முடிந்த பின், பாபஹரேஸ்வர ருக்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்யப் படுகிறது. இரண்டாம் காலமாக காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்யப்படுகிறது. அடுத்ததாக மூன்றாம் காலத்தில், பிற்பகல் 12.00 மணி முதல் 3.00 மணி வரை, 108 முறை சங்கினால் தேனாபிஷேகம் செய்யப்படுகிறது. கடைசியாக, நான்காம் காலத்தில் பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்பொழுது நைவேத்தியமாக சக்கரைப்பொங்கல் செய்யப்படுகிறது.

அதே போல், கார்த்திகை சோமவாரம்(திங்கள்கிழமை) இக்கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், கார்த்திகை தீபம், ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், ஐப்பசி பவுர்ணமி போன்ற விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும் நடைபெறுகின்றன.சென்னையில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள “அருள் மிகு மரகதவல்லி சமேத பாபஹரேஸ்வரர்’’ சுவாமி திருக்கோயிலாகும். இக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், வடதில்லை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
ஓம் சிவாய நம
