மயிலாடுமலை கோயில்

உலகிலேயே மிகப்பெரிய முருகப்பெருமான் திருமேனி உடைய கருவறை கொண்ட தலமான #மேல்மாயில் என்ற#மயிலாடுமலை#சக்தி_முருகன் திருக்கோயில் வரலாறு:

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் இருந்து குடியாத்தம் போகும் வழியில் கே.வி.குப்பம் வழியாக மேல்மாயில் கிராமத்தில் அமைந்துள்ள  மயிலாடுமலை கோயிலுக்கு செல்லலாம். இம்மலை கோயிலுக்கு படிகள் மற்றும் மலைப்பாதை சாலை வழியாகவும் செல்லலாம். இயற்கை எழில் கொஞ்சும் அழகான சூழ்நிலையில் இக்கோயில் அமைந்துள்ளது. 

மூலவர்: சக்தி முருகன்அம்மன்: வள்ளி மற்றும் தெய்வானை மலை அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக மேலே சென்றால் முதலில்  பஞ்சமுக விநாயகப் பெருமான் அருள்பாலிக்கிறார். விநாயகர் கோயில் கடந்து சென்றால் படிக்கட்டுகள் முடிந்து மலைப்பாதையாக செல்லும். 

வரலாறு:

இத்திருக்கோயில் 1920 ஆம் ஆண்டு கிருபானந்த வாரியார் சுவாமிகளால் அடிக்கல் நாட்டப்பட்டது.  1994 ஆம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இத்திருக்கோயில் முழுமையாக உருவாக காரணமாக அமைந்தவர் மிளகாய் சித்தர் சுவாமிகள் .அவரது ஜீவசமாதி இத்திருக்கோயில் அடி ஓரத்தில் அமைந்துள்ளது. 

தல சிறப்பு:

உலகிலேயே மிகப்பெரிய 9 அடி முருகப்பெருமான் திருமேனி கொண்ட கருவறை இங்கு தான் உள்ளது. இங்கு கருவறைக்கு உள்ளே கருவறை என சூட்சுமமான வகையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் முக்கிய நேர்த்திக்கடன் தேங்காய் கட்டுதல் ஆகும். வேண்டுதல் வைத்து தேங்காயில் அவர்களது பெயர் எழுதி கட்டினால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். மற்ற முருகன் கோயில்களில் இல்லாத வகையில் வள்ளி மற்றும் தெய்வானை அம்மன் தனி தனிச் சன்னதியில் அமைந்து அருள்பாலிக்கின்றனர். இங்கு தைப்பூசம் மற்றும் கிருத்திகை நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

அமைவிடம்: 

வேலூர் மாவட்டத்தில் இருந்து காட்பாடி To குடியாத்தம் போகும் வழியில் கே. வி. குப்பம் தாலுகா மேல்மாயில் கிராமத்தில் உள்ள மயிலாடுமலையில் அமைந்துள்ளது. 

*நன்றிகள் திரு தமிழ் பிரியன் ஐயா அவர்கள்*

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s