சப்த கோடி மஹா மந்திரம்

சப்த கோடி மஹா மந்திரம் என்றால் என்ன?சப்த கோடி மஹா மந்திரம் என்று சொல்லப்படுகின்ற நமஹ, சுவாஹா, சுவதா, வௌஷட், வஷட், பட், ஹும் என்பதன் அர்த்தம் என்ன?நமது பெரியவர்கள் சொல்லும் ஒரு வாக்கியம் உண்டுஅந்த வாக்கியம்”மந்திரத்தின் பலன் அதன் கோடியில்” என்பார்கள்.இங்கே கோடி என்பது எண்ணிக்கை அல்ல கடைசி என்று பொருள்படும். தெருக் கோடி சொல்வோம்ல அப்படி.பொதுவாக கடவுளின் மந்திரத்தை நாம் பல முறை உரு ஏற்றினால் அது கடைசியில் ஒரு கட்டத்தில் சித்தி அடைந்து அந்த மந்திரத்தின் பலன் வெளிப்படும்எதுவும் தெரியாத வேடன் கண்ணப்ப நாயனார் என்ன மந்திரம் சொன்னார்னு நமக்கு தெரியாதுஇப்ப நம்ம சப்த கோடி மந்திரத்துக்கு வந்துருவோம்

சப்த – ஏழு கோடி – கடைசி,

இங்கே கோடி என்றால் எண்ணிக்கை கிடையாது. கடைசி இறுதி என்ற பொருளில் வருகிறது“நம:, ஸ்வஸ்தி, ஸ்வாஹா, ஸ்வதா, ஹீம், வஷட், வௌஷட்” ஆகிய இந்த ஏழு மந்திரங்களும் வாக்கியங்களின் கடைசி முனையில் வந்தமர்வதால் சப்த கோடி மந்திரங்கள் என்று பெயர் பெற்றன.இவை வெறும் ஏழு வார்த்தைகள்தானே தவிர ஏழுகோடி என்ற எண்ணிக்கை கிடையாது.என்றாலும் இந்த ஏழு வார்த்தைகள் இல்லையென்றால் எந்த ஒரு மந்திரமும் முழுமை அடையாது.ஒரு வாக்கியத்தை முழுமை அடையச் செய்வதோடு அதற்குண்டான முழுமையான பலனையும் தருகின்ற சக்தி இவற்றிற்கு உண்டென்பதால் இந்த ஏழும் சப்தகோடி மந்திரங்கள் என்ற பெயரில் சிறப்பு பெறுகின்றன.

சமஸ்கிருதத்தில் மமஹ என்ற சொல்லிற்கு எல்லாம் என்னுடையது என்று பொருள். இந்த மமஹ என்ற சொல்லிற்கு முன்னால்  ந என்ற எழுத்தைச் சேர்த்தால் நமஹ என்று எதிர் அர்த்தத்தை குறிக்கும் பொருளாக அமைந்துவிடும். அதாவது எதுவும் எமக்குச் சொந்தமில்லை என்று பொருள். எல்லாம் பகவானுடையதே என்று அர்த்தம்.அர்ச்சனையின் போது சமர்ப்பிக்கப்படும் பூஜை பொருட்கள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தமானது, வழிபடும் நாமும் இறைவனுக்கே சொந்தம் என்ற பொருள் படத்தான் இறைவனின் திருநாம மந்திரங்களோடு நமஹ என்று உச்சரிக்கப்படுகிறது.நமஹ – வணங்குகிறேன் என்று பொதுவான அர்த்தம் உண்டு.வேறு பொருளும் உண்டு.’நமஹ’ என்ற வடமொழிச்சொல்லிற்கு ‘போற்றி’ என்றோ ‘வணங்குகிறோம்’ என்றோ பொருள் கூறலாம்.மற்றும் அச்சொல்லிற்குள் ஒரு பெரிய வேதாந்த தத்துவமே அடங்கியிருக்கிறது.’ந’ என்றால் ‘இல்லை’ என்று பொருள்.’ம’ என்ற மெய்யெழுத்து ‘மம’ என்ற சமஸ்கிருத சொல்லின் பொருளான ‘எனது’ ‘என்னுடையது’ என்ற எண்ணத்தைக் குறிக்கிறது.அதனால் ‘நமஹ’ என்று உச்சரிக்கும்போது ‘என்னுடையது இல்லை’ என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறோம்.

அதாவது, நம்முடையது என்று ஒன்றுமில்லை, எல்லாம் ஆண்டவனுடையது என்று பொருள்.எவ்வளவு எளிமையான அழகான தத்துவம்இப்பொருள் செறிந்த சொல்லாகிய நமஹ என்பதைச்சேர்த்து ஆண்டவனின் திருநாமத்தைச் சொல்லும்போது அது இன்னும் ஏற்றமுடையதாகிறது என்பது இந்து மதநூல்களின் கொள்கை.அடுத்துஸ்வாஹா – என்றால் அர்ப்பணம் என்று அர்த்தம்.ஸ்வாகா என்பது யாக சாலையில் குண்டத்தில் யாக பொருட்கள் நிவேதனங்களாக இடும் போது கூறப்படும் சொல் ஆகும்.இந்து மற்றும் பௌத்த மதங்களில் அதிலும் குறிப்பாக பௌத்தத்தில் சுவாகா(ஸ்வாஹா स्वाहा) என்பது மந்திரங்களின் இறுதியில் சொல்லப்படும் சொல்லும் ஆகும்.ஸ்வாகா என்பது சு(सु) மற்றும் ஆ ஆகியவற்றில் இருந்து தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.இதில் சு என்றால் நன்மையை குறிக்கும் சொல் ஆ என்பது அழைப்பைக் குறிக்கும். இறைவனை அழைப்பது.என பொருள்படும்.

சுவாஹாதேவி என்பது பெண் தெய்வத்தின் பெயர். தக்ஷனின் மகளாக கருதப்படுகிறார். நான்கு வேதங்கள் இவரது உடலாகவும், வேதத்தின் ஆறு அங்கங்கள் ஆறு கரங்களாகவும் உள்ளது. யாக குண்டங்களில் சமர்ப்பிக்கப்படும் பொருட்களை சுவாஹாதேவி பெற்று அக்னிதேவனிடம் சமர்பிப்பதாக சாஸ்திரம். அக்னி தேவன் மூலம் கடவுளுக்கு சமர்ப்பணம் ஆகிறதுஆக யாகத்தில் போடப்படும் பொருள் யார் அந்த யாகத்தை செய்கிறார்களோ அவர்களுக்கு நன்மையைக் கொடுக்கட்டும்.சுருக்கமாக “நன்மை உண்டாகட்டும்” என்ற அருமையான தத்துவம்.ஸ்வாகாஇந்த அர்ப்பணம் தேவதைகளுக்குச் செய்வதற்கு மந்திர முடிவில் ‘ஸ்வாஹா’ என்று சொல்ல வேண்டும்.ஸ்வதாஇந்த அர்ப்பணம் பித்ருக்களுக்குச் செய்யும் போது மந்திர முடிவில் ‘ஸ்வதா’ என்று சொல்ல வேண்டும்.ஹந்தாஇந்த அர்ப்பணம் மற்ற ஜீவன்களுக்கு செய்யும் போது மந்திர முடிவில் ‘ஹந்தா’ என்று சொல்ல வேண்டும்.வஷட்தீயசக்தியினை அழிக்கும் மந்திரம் இது தெய்வசக்தியாக இந்த மந்திரம் மாறி பயன்தரும்.கடவுள் ஒன்னும் செய்ய மாட்டார். இந்த மந்திரமே இப்படி மாறி நமக்கு நல்லதை செய்யும்னு வேதம் சொல்லுது.வௌஷட்இது எதிர் சக்திகளை குழப்பி சாதகனிற்கு அமைவாக மாற்றும்.பட்சாதகனுக்கு எதிரான சக்தியினை விரட்டும்.ஹும்இது எதிரிகள் மேல் கோபசக்தியினை உருவாக்கும்.இதில் சாதகன் என்பவர் தான் 

இந்த யாகம் நடத்த செலவு யாகம் நடத்துபவர்களுக்கு கூலி என அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்பவர்.இறைவனை மந்திரங்களால் அர்ச்சிக்கும் முன் இறைவனை எழுந்தருளச் செய்வதில் பங்கு வகிக்கும் சுவதா, வௌஷட், வஷட், பட், ஹூம் என்பது ஆச்சாரியாரின் முத்திரைகளும், பாவனைகளும் ஆகும்.அஸ்த்ராய பட் என்று சொல்லி இரு கைகளையும் துடைத்துக்கொள்வதுஓம் சௌம் சக்தயே வௌஷட் என்று சொல்லி இரு கைகளையும் புனித நீரால் சுத்தப்படுத்திக் கொள்வது.ஓம் ஹம் நம என்று , கட்டை விரல் தவிர்த்த எட்டு விரல்களை தாமரையாகப் பாவித்து கட்டை விரலை புத மேட்டில் வைத்து இறைவனுக்கு மங்கள ஆசனம் கொடுத்து இறைவனை எழுந்தருளச செய்வது.

ஓம் ஹூம் அகோர ஹ்ருதாய நம என்று சொல்லி சின் முத்திரை, யோக முத்திரை செய்து நியாசம் செய்வது. நியாசம் செய்வதில் இன்னும் பல முத்திரைகள் உண்டு. பஞ்ச பிரம்ம மந்திரம் என்று கூறப்படுகிறது.அடுத்து ஓம் ஹௌம் என்ற மந்திரங்களின் மூலம், இறைவனுக்கு தேகம், கண்கள் இப்படியாக இறைவனுக்கு உருவம் கொடுப்பது.நிறைவாக, ஓம் ஹாம் ஹௌம் சிவாய வௌஷட் என்று சொல்லி இறைவனை பரமீகரணம் அதாவது சிரசில் இரண்டு கைகளையும் குவித்து இறைவனை வந்தனம் செய்வது.இப்படியாக , பல பாவனைகள், முத்திரைகளினால் இறைவனுக்கு உருவம் கொடுத்து , ஆசனம் கொடுத்து அமரச் செய்து மலர்களால் இறைவனுடைய மகா மந்திரங்கள் சொல்லி நாமங்களை செபித்து , நிவேதனங்களை சமர்ப்பித்து ஆராதனை செய்வது தான் இறை வழிபாடு. 

கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களும், அனைத்து ஆத்மாக்களும் கடவுளுக்கே சொந்தம் என்ற தத்துவத்தை நிரூபிக்கிறது சப்தகோடி மந்திரங்களினால் செய்யப்படும் வழிபாடும் ,ஆராதனைகளும்.அதனால் தான் கடைசியில் அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம் சொல்லி நிறைவு எய்துகிறது.

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம். 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s