முப்புரம் எரித்த முதல்வன்

சிவபெருமானுக்கு பல திருநாமங்கள் உண்டு. அவற்றில் திரிபுரம் எரித்தவர் அல்லது முப்புரம் எரித்தவர் என்ற பெயர் பிரசித்தம். வடமொழியில் த்ரிபுர ஸம்ஹாரி அல்லது புராரி என்று அழைப்பர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அடிக்கடி போர் நடப்பது வழக்கம். ஒருமுறை தேவர்கள், அசுரர்களுக்குப் பயந்து ஓடி அக்னிக்குள் ஒளிந்து கொண்டனர். பின்பு அக்னியை தங்களது பாதுகாப்பு அரணாக அமைத்துக்கொண்டு அசுரர்களுடன் போர்புரிந்து வென்று வந்தனர். அசுரர்கள் தொடர்ந்து தோல்வியே அடைந்து வந்தனர். இதனால் அசுரர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். தங்களுக்கும் ஒரு பாதுகாப்பு அரண் அமைத்துக்கொள்ள முடிவுசெய்து மூன்று புரங்களை (மூன்று கோட்டைகளை) அமைக்கத் திட்டமிட்டனர். அவைதான் திரிபுரம் ஆகும். மயன் என்ற சிற்பி இந்த மூன்று கோட்டைகளையும் கட்டிக் கொடுத்தான். ஒவ்வொரு கோட்டையையும் ஒரு பெரிய நகரம் போன்றது. இந்த மூன்று கோட்டைகளும் அடுத்தடுத்து பக்கவாட்டில் அமையாமல், ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்திருந்தது. பூமிக்குக் கீழே இரும்புக் கோட்டையும், அதற்கு மேல் வெள்ளிக் கோட்டையும், அதற்குமேல் தங்கக்கோட்டையும் அமைந்திருந்தது. இந்த மூன்று கோட்டைக்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டு தேவர்களை எதிர்த்துப் போர் செய்தனர் அசுரர்கள். இப்போது தேவர்களால் அசுரர்களை வெல்ல முடியவில்லை.

தேவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். அசுரர்களுக்கு பெரிய பலமாக உள்ள அந்த மூன்று கோட்டைகளைத் தகர்க்க சக்திமிக்க தேவர்கள் அந்த அம்பின் அடிப்பாகமாக சோமனையும், நடுப்பாகமாக அக்னியையும். நுனிப்பாகமாக வலிமைமிக்க தனி வீரன் என்ற பெயரில் விஷ்ணுவையும் வைத்து அம்பை உருவாக்கினர். மேலும், போர்புரிய வில்லும் ரதமும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. சக்திமிக்க அந்த அம்பை எடுத்து வில்லில் பொருத்திப் பிரயோகம் செய்வது சிவபெருமான்தான் (ருத்ரன்) என்று முடிவுசெய்து தேவர்கள் அவரிடம் சென்று வேண்டினர். அதற்கு சிவபெருமான், நீங்கள் என்னைப் பசுக்களின் (சகல ஜீவராசிகள் – மனிதர்கள்) தலைவனாக்குவதாக வாக்களித்தால், அந்த அம்பை அசுரர்கள்மீது நான் பிரயோகம் செய்கிறேன் என்று கூற, தேவர்களும் அதற்குச் சம்மதித்தனர். இதனால் சிவபெருமானுக்கு பசுபதி என்று பெயர் வந்தது. பின்பு, சிவபெருமான் ரதத்தில் ஏறி அந்த சக்திமிக்க அம்பை வில்லில் பொருத்தி முப்புரக் கோட்டைகள் மீது பிரயோகம் செய்தார். இதனால் அக்கோட்டைகள் தீப்பற்றி எரிந்தன. அசுரர்கள் அழிந்தனர். உயிர்களைப் பற்றியிருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைச் சுட்டெரிப்பவன் சிவபெருமான் ஒருவனே என்னும் தத்துவத்தை விளக்குவதே இக்கதை, தைத்திரீய ஸம்ஹிதையில் இக்கதை உள்ளது

முப்புரமெரித்தல்:

மனிதருக்கு மூன்று சரீரங்கள் உண்டு. அவை ஸ்தூலம், சூக்குமம், காரணம் எனப்படும். அம்மூன்று உடலங்களுக்கும் மூன்று மலங்கள்காரணமாயிருப்பவை அவைகளே ஆணவம், கன்மம், மாயை எனப்படும். இம்மூன்று மலங்களையும் அழிப்பதற்காகவே ஆண்டவன் மும்மல காரியத்தை மேற்கொண்டார். எனவே, ‘முப்புரமாவது மும்மல காரியம்’ என்று திருமந்திரம் கூறுகிறது. மும்மலங்களுக்கு மோகம் முதலிய பதின்மூன்று காரியங்கள் உண்டு. 

தேரூர்ந்த திரிபுராந்தகன், புன் சிரிப்பாலேயே முப்புரங்களையும் எரித்தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s