किं दुष्करं त्वयि मनोविषयं गतायां

கிம் துஷ்கரம் த்வயி மனோ விஷயம் கதாயாம்உன்னை மனத்தால் நினைப்பவனுக்கு கஷ்டம் என்பது உண்டோ ? துஷ்கரம் என்றல் கஷ்டம் அல்லது துன்பம் என்றுபொருள். எவனொருவன் வாராஹியின் திவ்யமங்கள சரணங்களை சதா ஸ்மரித்துக்கொண்டு இருக்கின்றானோ அவனுக்கு வாழ்க்கையில் கஷ்டம் / துன்பம் என்பதே வராது. அப்படியே முன்வினையின் காரணமாக ஒருவன் கஷ்டத்தை அனுபவிக்க நேரிட்டாலும், அதை இலகுவாக கடந்துவிடும் வல்லமையை தந்துவிடுவாள்.
किं दुर्लभं त्वयि विधानवदर्चितायाम् ।கிம் துர்லபம் த்வயி விதான வதர்சிதாயாம்
உன் திருவடியை சதா அர்ச்சிப்பவனுக்கு, முடியாத கார்யம் உண்டோ ? துர்லபம் என்றால் அசாத்தியமான கார்யம். அடைவதற்கு கடினம் என்று அர்த்தம் . வாராஹியை நித்தம் பூஜிப்பவனுக்கு அசாத்தியம் என்றோ முடியாதது என்று ஒன்றுமே கிடையாது! அவளுடைய அருளால் அனைதையும் எளிதில் சாதிப்பான். முடியாததையும் முடித்து கொடுப்பவள் அன்னை வாராஹி.
किं दुर्भरं त्वयि सकृत्स्मृतिमागतायां கிம் துர்பரம் த்வயிஸக்ருத் ஸ்ம்ருதி மாகதாயாம்
கருணை கடலே, உன்னை சதா சிந்திப்பவனுக்கு பூர்த்தியாகாதது என்று ஏதேனும் உண்டோ ? துர்பரம் என்றால் பூர்த்தியாகாத லக்ஷியம், லக்ஷியத்தை அடைவதில் வரும் பெரும்தடைகள் மற்றும் சோதனைகள், ஈடேறாத எண்ணங்கள் என்று அர்த்தம். இந்த தேவியை மனத்தால் பக்தியுடன் நினைத்த மாத்திரத்தில் நம் லக்ஷ்யத்தை / எண்ணத்தை அடைவதற்கு உண்டான அத்தனை தடைகளையும் கஷ்டங்களையும் இமைப்பொழுதில் போக்கியருளுவாள். துர்பர என்றால் கடுமையான, தாங்கமுடியாத சோதனை என்றும் அர்த்தம். இவள் அருள் இருந்தால் ஒருவனுக்கு எதையும் தாங்கிக்கொள்ளும் வல்லமை ஏற்படும் , அதன் பயனாக அத்தனை சோதனைகளையும் சாமர்த்தியமாக கடந்து பெரும்சாதனையை அடைவான் ( தன்னுடைய லட்சியத்தை அடைந்து விடுவான் ).
किं दुर्जयं त्वयि कृतस्तुतिवादपुंसाम् கிம் துர் ஜயம் த்வயி க்ருத ஸ்துதி வாதபும்ஸாம் உன்னை ஸ்துதிப்பவனுக்கு தோல்வி எது ?
துர்ஜயம் என்றால் ஜயிக்க முடியாதது ,அல்லது வெல்ல கடினமானது என்று அர்த்தம். வெல்லமுடியாதவனையும், தன்னைவிட அறிவிலும் பலத்திலும் அதிகாரத்திலும் பராக்ரமசாலியாக இருந்தபோதிலும், வாராஹியின் அருள் அவனை எளிதில் வெல்ல செய்யும் .வாராஹியை உள்ளன்புடன் உபாஸிப்பவனுக்கு எங்கும் எதிலும் வெற்றியே!!