நாம்தேவ்.

விட்டலா* …. *நீ சாப்பிடவில்லை எனில் என்தலையை உன் பாதத்தில் மோதி என் உயிரை மாய்த்து கொள்வேன் என சொன்ன குழந்தை – 

பண்டரிபுரத்தில் வயதான தாமாஜி என்ற ஒரு டெய்லர். தினமும் சந்திரபாகா நதியில்  காலையில் சென்று குளித்துவிட்டு அப்படியே விட்டலனை  தரிசித்து விட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு துணி தைக்க உட்காருவார். கோனை என்ற அவர் மனைவியோ “பதி” சொல் தவறாத பாவை. குழந்தை பாக்கியம் இல்லையாகையால் கோனை- தாமாஜி விட்டலனை நம்பிக்கையோடு வேண்டினார்கள். 

ஒருநாள் விட்டலன் கனவில் வந்தார். ” நாளை காலை நீ குளிக்க போவாயல்லவா, அப்போது  பார் உன்  மகன் உன்னை தேடி வருவான்”  என்றார். தாமாஜிக்கு ஆச்சர்யம் கனவில் நடந்ததை தன் மனைவியிடம் கூற கோனை அதை நம்பவில்லை.மறுநாள் ஆற்றில் குளித்து கொண்டிருக்கும்போது ஆற்றின் போக்கிலே ஒரு மரப்பலகையின்  மேல் ஒரு சிறு ஆண் சிசு மிதந்து வந்தது. விட்டலனின் பரிசு அல்லவா இது!!  குதித்து கொண்டு  ஓடினார் குழந்தையோடு  தாமாஜி.  “நாம்தேவ்” என்ற பெயர் சூட்டப்பட்டு அவன் வளர்ந்தான். அமைதியான, ஆன்மிக சிந்தனையோடு அப்பாவோடு தினமும்  விட்டலன் கோவிலுக்கு  தவறாமல் செல்வான்.

ஒரு நாள் தாமாஜி  துணி  வாங்க பக்கத்து  ஊருக்கு  செல்லவேண்டியிருந்ததால் அன்று நாமதேவிடம், கோனை  பிரசாதம் செய்து  விட்டலனுக்கு  கோவிலில் இதை காட்டி நெய்வேத்யம் அர்ப்பணித்து விட்டு வா ” என்றுகொடுத்து அனுப்பினாள். தட்டை தூக்கிக்கொண்டு நாம்தேவ் விட்டலனிடம் சென்றான். எதிரே வைத்தான். “இது உனக்கு தான்..சாப்பிடு.. என்று  சொல்லி  தட்டுக்காக காத்திருந்தான். கடவுளுக்கு “நெய்வேத்யம் அர்ப்பணம்” என்றால் அவர் அதை சாப்பிடுவார் அது தான்  வழக்கம் போலிருக்கிறது” என்று  நாம்தேவ் நினைத்தான். 

ரொம்ப நேரம் ஆகிவிட்டது இன்னும்  தட்டில் அப்படியே இருக்கிறது பிரசாதம். ஒருவேளை நான்  லேட்டாக  வந்ததால் விட்டலனுக்கு கோவமோ? ஏன் இன்னும் சாப்பிடலை? நான் என்ன செய்வேன். அப்பா ஊருக்கு போய்ட்டா. அம்மா லேட்டா தான் உனக்கு சாப்பாடு கொடுத்தா, நான்  நடந்து வரதுக்கு வேறே லேட்டாஆயிட்டுது. மன்னித்து‌ கொள் கோவிச்சுக்காதே “சாப்பிடேன்”. பையன் அழ ஆரம்பிக்க  விட்டலன்.

விட்டலா…. நீ சாப்பிடவில்லை எனில் என்தலையை உன் பாதத்தில் மோதி என் உயிரை மாய்த்து கொள்வேன் என சொன்னான் பையன். அந்த  பிஞ்சு உள்ளத்தின் பரிசுத்த பக்தியை மெச்சி அவனெதிரே வந்து அவனை அணைத்து முத்தமிட்டு பின் தட்டை காலி பண்ணினான். விட்டலோ இதை யாரிடமும் சொல்லாதே” என்று வேறே  சொன்னான்வீடு சென்றதும் வெறும் தட்டை பார்த்த கோனை ” எங்கேடா பிரசாதம் எல்லாம்?” என்றாள்.” *உம்மாச்சி சாப்டாச்சு”* “படவா பொய்யா சொல்றே, நீயே முழுங்கிட்டு” நாலு சாத்து சாத்தினாள் கோனை.மறுநாள் தாமாஜி வந்தவுடன் விஷயம் சொன்னாள். அவர் விவரம்  கேட்க,  நடந்ததையே சொன்னான் நாம்தேவ். 

நாம தேவரை நைய புடைத்தார் தந்தை ஆயினும் அழுது கொண்டே தான் சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னான் நாம் தேவ். “என்னடா இது, என்னால் நம்ப முடியவில்லையே. எத்தனை தடவை  கேட்டாலும்  அதையே சொல்கிறாயே. நாளை மறுபடியும் இது நடக்கிறதா என்று  பார்ப்போம்”தாமாஜி நாமதேவர் இருவரும் மறுநாள் பிரசாதத்தோடு விட்டலனிடம் செல்ல, தாமாஜி மறைந்து கொண்டார். நாம்தேவ் ” விட்டலா வா வந்து சாப்பிடு” என்றழைக்க,  “நான் உன் கண்ணுக்கு மட்டும் தான்  தெரிவேன்”  என்று விட்டலன் சொல்ல, “இல்லை,  நீ  சாப்பிடறதை  அப்பாவும் பார்த்தாதான்  நான்  சொன்னதை  நம்புவா ”  என்று நாம்தேவ் சொல்ல, விட்டலன் வந்து சாப்பிட,  அதிசயத்தில்  அதிர்ச்சியுற்று தாமாஜி வந்து  வீட்டில் கோனையிடம்  இதை  சொல்ல இந்த அதிசய குழந்தை  நாம்தேவ்  “விட்டலனின் வாரிசு” என்று அவர்கள்  ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்.

ஜெய் விட்டலா  ஜெய்..ஜெய் விட்டலா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s