தனபாக்கியத்தை அள்ளித்தரு பொங்கு சனி ஆலயம்

சனியை போல் கொடுப்பாரும் இல்லை,கெடுப்பாரும் இல்லை என ஒரு சொற்றொடர் உண்டு.நாம் வேண்டினால் நமக்கு செல்வத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் ஒரு ஆல்யம் உண்டு தெரியுமா?அதுதான்“திருக்கொள்ளிக்காடுஅக்கினீஸ்வரர்”ஆலயம்.”கொள்ளி”என்றால் நெருப்பு அந்த நெருப்பாகிய “அக்னி”வழிபட்ட தலம் இது.இந்த திருத்தலத்தில் மூலவர் அகினீஸ்வரராக இருந்தாலும் அந்த கோயில் வீற்றியிருக்கும் சனீஸ்வர பகவ்ான் மிகவும் தன்த்தை கொடுக்க கூடியவர்.

பொதுவாக, ஆலயங்களில் சனி பகவான் கையில் சூலம், வில், அம்பு என்று ஏதேனும் ஆயுதம் இருக்கும். ஆனால் இத்தலத்து சனி பகவானின் கைகளில் எந்த ஆயுதமும் கிடையாது. குபேரேன் வைத்திருப்பதுபோல் வலது மேல் கரத்தில் ஏர்கலப்பைத் தாங்கி அருள்பாலிக்கும் கடவுளாக, அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகிறார்.இங்கு சனி பகவான் இங்கு மகாலட்சுமி ஸ்தானத்தில் அமர்ந்து சகல செல்வங்களையும் அளிக்கிறார்.தம்மை நம்பி வழிபடுவோருக்கு தன பாக்கியத்தை அள்ளித் தருபவர் இவர். திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்ட நளனுக்கு சனி தோஷம் நீங்கியது. ஆனால் அவன் இழந்த நாட்டையும் செல்வத்தையும் திருக்கொள்ளிக்காடு சனி பகவானை வழிபட்ட பிறகே திரும்பப் பெற்றான் என்கிறது ஆலய வரலாறு.*சனியினால் பாதிக்கப்பட்டவர்கள்,சனி இரண்டாவது சுற்று நடப்பவர்கள்,ஏழரை சனி,அஷ்டம சனி,அரிஷ்டாடம சனி,ஜீவன சனி பீடித்திருப்பவர்கள்  இந்த ஆலயம் சென்று வழிபடலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s