
அமெரிக்க அதிபராக 1857 முதல் 1861 வரை பதவி வகித்தவர் ஜேம்ஸ் புக்கன் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. சில பரிசுப்பொருட்களும் அதில் இருந்தன. அந்த பரிசுகள் யானை தந்தத்தில் அழகுற செதுக்கப்பட்டிருந்தன. சயாமில் இருந்து அந்த கடிதம் வந்திருந்தது. ஆசிய நாடான தாய்லாந்தின் பழைய பெயர் தான் சயாம்.
அந்த கடிதத்தில்………………… அமெரிக்காவுக்கு சில யானைக்குட்டிகளை அன்பளிப்பாக தர விரும்புகிறோம். அவற்றை சிறப்பாக வளர்த்து முறையாக பராமரித்தால் சில வருடங்களில் குட்டிகள் போட்டு பெருகும். அவற்றை கொண்டு அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்கலாம் கனமான சுமைகளை ஏற்றி செல்ல பயன்படுத்தலாம்
இவ்வாறு குறிப்ப்டப்பட்டிருந்தது. கடிதத்துக்கு ஜேம்ஸ் புக்கான் பதில் ஏதும் தரவில்லை. அவருக்கு பின் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றார். ஆபிரகாம் லிங்கன். அந்த கடிதத்துக்கு அவர்தான் பதில் அனுப்பினார். தாய்லாந்து நாடு அனுப்பியிருந்த பரிசுகளுக்கு நன்றி தெரிவித்துடன் எங்கள் நாட்டு யானை குட்டிகள் எதுவும் அனுப்ப வேண்டாம். வலுவான பொருட்களை சுமக்கவும் தூக்கவும் ஆவியில் இயங்கும் ஆட்டோமொபைல் இயந்திரங்களை எங்கள் தொழில் நுட்ப வல்லுனர்கள் துணையால் கண்டுபிடித்துள்ளோம் அவை கனமான பொருட்களை சுலபமாக சுமக்கும் எளிதாக தூக்கும். எனவே யானைகள் தேவையில்லை என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிலால் தாய்லாந்து யானியக் குட்டிகள் அமெரிக்கா போகும் பாக்கியத்தை இழந்தன.