வார்கரீ(போய்வருதல்)

ஆலந்தியில் மாவுலி ஞானேஸ்வரர் சஞ்ஞீவன சமாதி உயிரோடு சமாதியாவது இன்றும் சரீரத்தோடு இருக்கும். சித்தேஸ்வரர் ஆலயம் கலசம்  அதிமுக்கியம் பெற்றது, கலசம் எப்போது அசையும் எதிர்பார்ப்புமாகக் கலசத்தையே கவனித்து கொண்டிருப்பர்.  அங்குக் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானவர்களும் அந்தக் கலச அசைவுக்குத்தான் காத்திருகப்பர். அது ஒரு மகா பேரதிசியம் அந்தஅசைவுதான் “ஞானேஸ்வரரின் அனுமதி” கலசம் அசைந்த அடுத்த நொடியே வாரக்ரீ” யாத்திரை தொடங்கிவிடும்.

வாரக்ரீ யாத்திரையை ‘வாரீ’ என்றும் சுருக்கமாக அழைத்திருக்கிறார்கள். பூனாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆலந்தி, அங்குதான் சித்தேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. வாரீ யாத்திரையில் ஆலந்தியிலிருந்து கிளம்பும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தே பண்டரிபுரத்தை அடைவார்கள். இந்த யாத்திரைக்கு சுமார் எவ்வளவு நாட்கள் பிடிக்கும் ?” 

ஆலந்தியிலிருந்து பண்டரிபுரம் சுமார் 150கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. யாத்திரையை முடிக்க 17லிருந்து 20 நாட்கள் வரை ஆகும்” கிளம்பும் நாளிலிருந்து சேரும் நாள்வரை கணக்கு உண்டு. ஆஷாட மாதத்தில்-தோராயமாக ஆடிமாதம் என வைத்துக் கொள்ளலாம்.  கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் கிளம்பி, சுக்லபட்ச தசமி திதியில் பண்டரிபுரத்தை அடைய வேண்டும். ஒருவரையொருவர் தாண்டிக்கொண்டு செல்வதில்லை. இதற்கு முக்கியக் காரணம் பக்காவான ஏற்பாடுகள்தான். திண்டிதிண்டியாகத்தான் நடக்க வேண்டும்” திண்டி என்பது ஒரு பகுதி. ஒரு திண்டி மற்றொன்றோடு கலக்கக்கூடாது. இப்படி சுமார் 2500 திண்டிகள் ஆலந்தியிருந்து கிளம்புகின்றன என்றாலும், திண்டிகளுக்கு மட்டும் ஒரு சிறப்பிடம் உண்டு. முதலில் பதிவு செய்யும் இந்த திண்டிகள் ரதத்துக்கு முன்னால் செல்ல, மற்ற ஆயிரக்கணக்கான திண்டிகள் ரதத்தைப் பின் தொடரும். அந்த வெள்ளி ரதத்தில் மையமாக இருப்பது “ஞானேஸ்வரர்” பாண்டுரங்கனின் பரம பக்தர்.ரதத்தில் ஞானேஸ்வரரின் உருவம் இருக்கும்” பாதுகைகள் இருக்கும் ஊனக்கண்ணில் பார்த்தால் அது பாதுகைகள்தான். ஆனால், ஞானேஸ்வரரே ஆலந்தியிலிருந்து தன் அன்பு பாண்டுரங்கனைக் காண பண்டரிபுரம் செல்வதாகத்தான் ஆழமான நம்பிக்கை.

அதுமட்டுமல்ல ஞானேஸ்வரரின் குதிரை ஒன்று யாத்திரையில் இடம் பெறும், கூடவே இன்னொரு குதிரையும் வரும், இந்த இரண்டாவது குதிரை சோப்தார்” என்பவருடையது. அதாவது ஞானேஸ்வரரின் பாதுகாவலர் உடலோடு வாழ்ந்த போது அவருக்குப் பாதுகாவலராக இருந்தவரின் வாரிசுகளுக்குத்தான் வாழையடி வாழையாக இந்தச் சிறப்பு அளிக்கப்படுகிறது.”இந்த இடத்தில் ஆலந்தியைப் பற்றிய வேறு சில தகவல்களையும்  அறிந்துகொள்வது நலம். ஆலந்தி என்றால் மராத்தியில் கடவுளின் இடம் என்று பொருள். ஞானேஸ்வரர் சில வருடங்கள் இங்குத் தங்கினார். அந்த நகரம் முழுவதும் பாண்டுரங்கப் பக்தியைப் பரப்பினார்.இந்திராணி நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த நகரம், பூனாவிலிருந்து நிறைய பேருந்துகள். முக்கால் மணி நேரத்தில் அடையலாம். 

பாண்டுரங்கசரிதத்தில், பக்தி விஜயத்தில் ஞானேஸ்வரருக்கு மிகச் சிறப்பான இடம் உண்டு. அவர் ஒரு ஞானக்கடல். பகவத் கீதையை மராத்தியில் மொழிபெயர்த்தார். இது ஞானேஸ்வரி” என்று அழைக்கப்படுகிறது. ஞானேஸ்வரர் பிறந்தது பைடண்” என்ற இடத்தினருகே (நம் பண்டரி விஜயத்தில் அங்கும் சென்றோம் அந்த விவரங்கள் பிறகு) எனினும் ஆலந்தியிலுள்ள குகையில்தான் அவர் சமாதி அடைந்தார் அங்குள்ள ஆலயம்தான் சித்தேஸ்வரர் கோயில். ரதத்துக்கு முன்னால் 28 திண்டிகள் செல்லும் என்றேன் இல்லையா, அவற்றிற்கெல்லாம் ஒவ்வொரு எண்ணைக் கொடுத்திருப்பார்கள். 

அந்த வரிசையில்தான் கலந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு திண்டியிலும் கட்டாயம் இடம்பெற வேண்டிய சில பொருள்கள் உண்டு. அவற்றில் மிக முக்கியமானது வீணை. இதைச் சுமந்திருப்பவர்தான் அந்தத் திண்டியின் மிக முக்கியமான நபர். இவரது வழிகாட்டுதலில்தான் அந்த திண்டி இயங்கும், அபங்களில் மிகவும் பரிச்சயமுள்ளவராக இவர் இருப்பார். வீணையை ஏந்தி வருபவர் வீணாக்ரி” என்று அழைக்கப்படுகிறார். ஹரி பஜனையைச் செய்வதில் சமர்த்தர்களான இவர்களுக்குப் பரம்பரையாக இந்தச் சிறப்பு அளிக்கப்படுகிறது. 

ஒரு திண்டியில் மேற்படி பொருள்கள் எந்த வரிசையில் இடம்பெறவேண்டும் என்பதற்கும் ஒரு நியதி உண்டு. முதலில் பதாகா, இரண்டாவாதாக தால், மூன்றாவது வீணை, நான்காவது பக்வாஜ், ஐந்தாவது துளசிமாடம், கங்காஜால் திண்டியின் முன்புறம், பின்புறம் ஆகியவற்றில் இடம்பெறும்.கலசம் அசைந்து அதன்மூலம் ஞானேஸ்வரர் அனுமதி கிடைத்தவுடன் வாராக்ரீ யாத்திரை தொடங்கி பண்டரியில் முடியும் அனைவரும் பண்டரிபுரத்தில் கூடுவார்கள்.ஏகாதசி முழுவதும் விரதமிருந்து, துவாதசியன்று காலை ஒரு பக்தருக்கு உணவளித்த பின்னரே உண்பார்கள். பெண்களும் பங்கேற்பார்கள். யாத்திரையில் பங்கேற்பவர்கள் “வாரி’ உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஆஷாட ஏகாதசி முடிந்த பின் பௌர்ணமியன்று கோபாலபுரியில் சோளப்பொரி, தயிர், மிளகாய் பொடி, மாதுளை, பெருங்காயம், சர்க்கரை, உலர்ந்த பழங்கள், உப்பு ஆகியவற்றைக் கலந்து பகவானுக்கு நிவேதித்து பிரசாதமாக விநியோகிக்கிறார்கள். இதற்கு “காலா” என்று பெயர். காலா பிரசாதம் பெற்றுக் கொள்வதோடு வாரகரி யாத்திரை பூர்த்தியாவதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

சந்திரபாக ஸ்நானம், ஷேத்ர பிரதட்சணம், பாண்டுரங்கதரிசனம், ஹரிகீர்த்தனம் ஆகிய நான்கும் பண்டரியில் செய்ய வேண்டிய சதுர்வித அனுஷ்டானங்களாகும். ஆஷாட ஏகாதசி “சயன ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. (மஹாவிஷ்ணு சயனிக்க ஆரம்பிக்கிற சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் வருகிற ஏகாதசி) இவ்வாண்டு, வட இந்திய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஆஷாட சுக்ல ஏகாதசி ஆகும்.

நாமமே பலம் நாமமே சாதனம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s