ௐ  உதாரதியே நமஹ

ஒரு மனிதன் வாழ்வு முழுவதும் உண்மையே பேசாமல், பொய் சொல்லிக் கொண்டே வாழ்ந்து வந்தான். ஒருநிலையில் அவன் மனம் திருந்தி, தனது தவறை உணர்ந்து, இனி பொய் கூற மாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு, திருமகளின் திருவடிகளிலும் திருமாலின் திருவடிகளிலும் தஞ்சமடைந்தான்.

பரந்தாமா…. நான் இதுவரை செய்த தவறுகளில் இருந்து  காத்து, தனக்கு முக்தியளிக்குமாறு திருமாலிடம் வேண்டினான்.அப்போது திருமால், “நீ நிறைய பொய் பேசி இருக்கிறாய். அதனால் அதற்குத் தண்டனையாக ஏழு பிறவிகள் மீனாகப் பிறக்க வேண்டும். அதன்பின் உனக்கு முக்தி அளிக்கிறேன்!” என்றார்.ஆனால் மகாலட்சுமியோ, “சுவாமி! இவன் இதுவரை தவறு செய்திருந்தாலும், இப்போது திருந்தி நீங்களே கதி என்று வந்துவிட்டான். இனி இவனைத் தண்டிப்பது முறையல்ல! உடனடியாக இவனுக்கு முக்தியளித்து விடுங்கள்!” என்று கருணையோடு கூறினாள்.

“இப்போதே இவனுக்கு முக்தியளித்தால், இவன் செய்த தவறுக்கென்று சாஸ்திரம் விதித்துள்ள தண்டனையை யார் அனுபவிப்பது?” என்று கேட்டார் திருமால்.அதற்கு மகாலட்சுமி, “இவன் ஏழு பிறவிகள் மீனாய்ப் பிறப்பதற்குப் பதிலாக நீங்களே ஒரு பெரிய மீனாக ஒரு அவதாரம் எடுத்து விட்டால், இவனது பாபத்துக்கான தண்டனை நிறைவேறி விடும். எனவே தாமதிக்காமல் இப்போதே இவனுக்கு முக்தியளியுங்கள்!” என்று தாய்ப்பாசத்தோடு கூறினாள்.அதனால் திருமால் மத்ஸ்யாவதாரம் எடுத்து அந்த பக்தனின் பாபங்களைத் தீர்த்தார். அந்த பக்தனும் விரைவில் முக்தியடைந்தான்.இவ்வாறு பக்தர்களின் பாபங்களைக் போக்குவதற்காகத் திருமாலையே மிருக வடிவங்களில் அவதரிக்க வைக்கிறாள் மகாலட்சுமி என்று புதிய கோணத்தில் விளக்கம் அளித்தார் வேதாந்த தேசிகன்.  

 பக்தர்களின் பாபங்களைத் தீர்ப்பதற்காகவும், பக்தர்கள் இனி பிறவாமல் காப்பதற்காகவும், திருமால் கருணையோடு பூமிக்கு இறங்கி வந்து மீன் போன்ற வடிவங்களில் அவதாரங்கள் எடுக்கிறார்.இத்தகைய அவதாரங்கள் செய்ய வேண்டுமென்றால், அந்த இறைவனுக்கு எவ்வளவு பரந்து விரிந்த கருணை இருக்க வேண்டும்? அதனால் தான் மத்ஸ்யமூர்த்தி ‘உதாரதீ:’  என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 219-வது திருநாமம்.

 ** ” 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s