ஸ்ரீ க்ஷீர ஸாகர நாராயணப் பெருமாள்

தஞ்சை மாவட்டம் சூரியனார்கோவில் திருத்தலத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள திருலோக்கி என்ற சிற்றூரில் சுதை மூர்த்தியாய் எழுந்தருளி ஸ்ரீ க்ஷீர ஸாகர நாராயணப் பெருமாள் அருள்பாலிக்கின்றார். திருப்பாற்கடலில் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியை எவ்வாறு அனைவரும் தரிசிக்கின்றார்களோ, அதே கோலத்தில் சுதை ரூப மூர்த்தியாக இறைவன் காட்சி அளிக்கின்ற தலம்.

தாம் அடிக்கடி திருமாலை. விட்டுப் பிரிய வேண்டிய நிலைகள் ஏற்படுவதை எண்ணி வருத்தமுற்ற திருமகளும் பூலோகத்திற்கு வந்து ஸ்ரீஅகஸ்தியரை நாடி, அவர்தம் அருளுரையின்படி தவமிருந்து ஸ்ரீ க்ஷீராப்தி நாதனின் பாற்கடல் சயனக் கோலத்தை இங்குதான் பெற்றாள். திருலோக்கி திருத்தலத்தில்தான் சர்வேஸ்வரனாம் ஸ்ரீசிவ பெருமானும் எப்போதும் தெய்வீகப் பிணைப்பில் தம்பதியர் ஒருமித்து இருப்பதற்கான நல்வரங்களைத் தந்தருள்கின்றார்.

திருலோக்கி சிவாலயத்தில் ரதி-மன்மதன் தம்பதியர் எழுந்தருளி உள்ள அரிய காட்சியைக் காணலாம். மன வேற்றுமை என்பதையே அறிந்திராத தம்பதியர் இவர்கள் மட்டுமே. கணவன்-மனைவி இருவருமே நல்ல ஒற்றுமையுடன், மனச் சாந்தியுடன் அமைதியாக இணைந்து வாழ்வதற்கு அருள்கின்றனர்.

கணவன் மனைவி பிரிந்திருந்தாலும் சரி, கோர்ட்டில் வழக்குகள் இருந்தாலும் சரி, இருவரும் தனித்தனியே வந்து வழிபட்டாலும் சரி. ஆழ்ந்த நம்பிக்கையோடு யார் வந்து தம்மை வணங்கினாலும் அவர்களுக்கு மகத்தான சாந்தி நிறைந்த குடும்ப வாழ்வினை அருள்கின்றனர்.

பல்வேறு பிரச்னைகள், துன்பங்கள் நிறைந்த இல்லற வாழிவு காரணமாக மன நிம்மதியின்றித் தவிப்போர் திருலோக்கி சிவாலயத்துக்கு வந்து ரதி-மன்மதன் தம்பதியரைத் தக்க அபிஷேக, ஆராதனைகளுடன் வணங்கித் துதித்து, கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதி வர, தங்கள் துயர் நீங்கி நலமுறுவர். 

யாதேவீ சர்வ பூதேஷூ ரதி மன்மத ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோநம:

பூலோகம், புவர் லோகம். சுவர் லோகம் ஆகிய மூன்று லோகங்களிலும் சஞ்சரிக்கும் வல்லமை வாய்ந்த த்ரயம்பகேஸ்வர சித்தர் பூலோகத்தில் எத்தனையோ கோடி சுயம்பு மூர்த்திகளை தரிசித்து வணங்கும். பாக்கியத்தைப் பெற்றார். பல கோடி யுக சஞ்சாரத்துக்குப் பின் இறுதியாக திருலோக்கி திருத்தலத்தில்தான் ஜோதி மயமாய்ப் பரமானந்த நிலை கொண்டார்.

ஸ்ரீநந்தியெம் பெருமானின்மீது இறைவனும், இறைவியும் ஒருசேர அமர்ந்து காட்சி தருகின்ற அரிய கோலத்தை இத்திருத்தலத்தில் மட்டுமே காணலாம். திருமகள் நிலைகொண்ட இடமாதலால், பணம், சொத்து, வியாபாரம் ஆகியவற்றை இழந்து வாடுவோர் அவற்றை நன்முறையிலே மீட்பதற்கு இத்திருத்தலம் வந்து முறையான வழிபாடுகளை இயற்ற வேண்டும். பல ஆண்டுகளாக ஒரே வியாபாரத்தில் இருந்து எவ்வித முன்னேற்றத்தையும் பெறாதோரும் வியாபார அபிவிருத்திக்குத் தக்க நல்வழிகளைப் பெறலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s