கால்நடைகளின் காவல் தெய்வம்

கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில், முருகனின் ஏழாவது படைவீடு என்று அழை க்கப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், காசிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.அவினா சி லிங்கேஸ்வரர் கோவில், பிரம்மா, சிவன், விஷ்ணு என மும்மூர்த்திகளுடன் காட்சி தரும் தி ரு மூர்த்திமலை அமணலிங்கேஸ் வரர் கோவில் என்று சொல்லிக் கொண்டே போகலாம். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடும்பம், நட்பு, சுற்றம் என்று மனிதர்களுக்காக வழிபாடு செய்வது வழக்கம். 

ஆனால் தங்கள் வீட்டு கால்நடைகள் நலமுடன்வாழ வேண்டுதல் செய்வதற்கு என்றே தமிழகத்தில் ஒரு கோவில் உள்ளது என்பது அதிசயம் தான்.திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சோமவாரப்பட்டியில் அமை ந்துள்ள ஆல்கொண்டமால் கோவில் கால்நடைகளின் காவல் தெய்வமாக விளங்கும் அதிசய திருத்தலம் ஆகும்.பரமபத நாதனாகிய பரந்தாமன் துவாபரயுகத்தில் ஆயர்பாடியில் நந்தகோபாலன்- யசோதை தம்பதி யிடம் மகனாக வளர்ந்து வந்தார். அவர் கறவை கணங்களை மேய்த்து வந்த காரணத்தால், வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கண் நீங்காத செல்வத்தை அளித்தன. 

கண்ணபிரானின் திருக்கண் பார் வையால் ஆயர்பாடியில் மக்களும், பசுக்களும் நோய் நொடியின்றி வாழ்ந்தனர்.அந்த கண்ணபிரான், உடுமலை – செஞ்சேரிமலை ரோட்டில் சோமவாரப்பட்டி கிராமத்தில் காட்டின் மத்தியில் கோவில் கொண்டுள்ளார். பண்டைய காலத்தில் ஆலம ரத்தூர் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, அ டர்ந்த காடாக இருந்தது. இங்கு விஷப்பாம்புகள் வாழும் ஒரு ஆல மரத்தின் கீழ் சிவ லிங்க வடிவில் புற்று ஒன்று இரு ந்தது. இந்த பகுதி யில் மேய்ந்த பசுக் கள் புற்றில் தாமாகவே பாலை சொரிந்து வந்தன. ஒரு நாள் பசு ஒன்றை, பாம்பு தீண்டியது. பாம்பின் நஞ்சு பாதிக்காமல், பசுவின் விஷத்தை மாயவன் உண்டு பசுவை காப்பாற்றினார். இதனால் அவர் ‘ஆல்கொண்டமால்’ என்று பெயர் பெற்றார். இங்கு ஆல மரத்தின் கீழ் அமர்ந்த திருமா லையும், ஆலன் உண்ட சிவபெருமானையும் ஒரே க டவுளாக எண்ணி வழிபடத் தொடங்கினர். இன்றும் அதே வழிபாட்டு முறை தொடர்கிறது.

*அவதார வடிவம்*

உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும், தீய சக்தியும், தலைதூ க்குகிறதோ அப்போதெல்லாம் விஷ்ணு பகவான் அவதரிப்பார் என்பது ஐதீகம். பெரும்பாலும் கோவில்களில் சிலைகள் உருவ வழிபாட்டுடன் காணப்படும். இங்கு ஆல்கொண்டமால் எனும் பெயரில் அமர்ந் திருக் கும் விஷ்ணுபகவானின் அவதாரங்கள் சில, சிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவே மூலவராக வணங்கப்படுகிறது. இந்த சிலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மேல்பாகத்தில் கிருஷ்ண பகவா னுக்கு இருமருங்கில் சூரியன், சந்திரன் உருவங்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன.ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 3,4,5 ஆகிய தேதிகளில், இங்கு தமிழர் திருநாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. 

இந்த திரு விழாவின் போது பக்தர்கள் தங்களது மாட்டு கறவைப் பாலை கொண்டு வந்து, ஆல்கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்து, திரு நீரும், தீர்த்தமும் பெற்றுச் செல்கிறார்கள். இவற்றை தங்கள் ஊரில் உள்ள பிற கால்நடைகள் மீது தெளிக்கின்றனர். இப்படிச் செய்தால், அவைகளுக்கு நோய்கள் வராது என்பது அவர்களது நம்பிக்கை. இந்தக் கோவிலில் உற்சவராக திருமால் இருந்தாலும், சிவாலயங்களில் இருப்பது போல நந்தி இருப்பது இந்தக் கோவிலின் தனி சிறப்பு.ஆல்கொண்டமால் கோவில் விழாவின் போது, பக்தர்கள் மண்ணால் செய்து வர்ணம் தீட்டப்பட்ட பசு, கன்றுகளின் உருவ பொம்மைகளை கோவில் வளாகத்தில் உள்ள கால்நடை சிலை களின் முன்வைக்கிறார்கள்.  தேங்காய் உடைத்து, தேங்காய் தண்ணீரை கொண்டு தாங்கள் கொண்டு வந்த உருவ பொம்மைகளுக்கு கண் திறந்து வழிபடுகின்றனர்.மாட்டுப்பொங்கல் அன்று ஈன்ற கன்றுகளை, கோவிலுக்கென்று அப்பகுதி விவசாயிகள் விட்டு விடுவார்கள். அந்த கன்றுகள் கிராமங் களில் தன்னிச்சையாக சுற்றித்திரியும். அதை ‘சலங்கை மாடு’ என்று அழைக்கிறார்கள்.

சலங்கை மாடு என்பதன் அடையாளத்துக்காக காதுகளை சூலாயு தம் போல் மாற்றி விடுவார்கள். பின்னர், மாடுகளை உருமி இசைக்கு ஆடும் வகையில் பயிற்சி அளிக்கின்றனர். அதன் முன்னே இரு நீள மூங்கில் கம்புகளை உயரத்தூக்கி கொண்டும், கால்களில் சலங்கை கட்டிக்கொண்டும் இசைக்கு தக்கவாறு ஆடுகின்றனர். இந்த வழி பாட்டு முறைகள் வேறு எங்கும் காணமுடியாத ஒன்று ஆகும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்தி ருக்கும்.

தங்கள் வீட்டு *கால்நடைகள் நலமுடன் வாழ* வேண்டுதல் செய்வதற்கு என்றே தமிழகத்தில் ஒரு கோவில் உள்ளது என்பது அதிசயம் தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s