சோளம்

உணவு தானியத்தில் வெண்சாமச் சோளம்  சிவப்பு சோளம் வெள்ளை சோளம் பழுப்பு நிற சோளம் என பல ரகங்கள் உண்டு.

அரிசியை விட பல மடங்கு  சத்துக்களைக் கொண்டுள்ளது.  உடலுக்கு தேவையான புரதம்  இரும்பு கால்ஷியம் கொழுப்பு நார் மாவு கரோடின் தயமின் ரிபோப்ப்ளோவின் நயசின் மெக்னீஷியம் பாஸ்பரஸ் பொட்டாஷியம் சோடியம் அஸ்கார்பிக் அமிலம் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.மக்கா சோளம் தான் பலருக்கு தெரிந்த உண்வுப் பொருள்   நம் நாட்டில் விளையும் வெள்ளைச் சோளம்பற்றி பலருக்குத் தெரியாது.

வெள்ளைச் சோளம்….

இதய ஆரோக்கியத்தை பேணும்.   அதிகபடியாக உள்ள நார்ச்சத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும்.  ரத்தத்தில் கெட்டக் கொழுப்பை அகற்றி மாரடைப்பு வராமல் தடுக்கும்.  எலும்புகளை பலப்படுத்தும்.  வயது முதிர்வால் ஏற்படும் மூட்டு வலி  எலும்பு தேய்மானத்தை நீக்கும்.  ரத்தத்தில் சர்க்கரை அலவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் வெள்ளை சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள கார்போஹைடிரேட் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் தடுக்கும்.  உடல் எடை குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவும்.

  நீண்டதூரம் பயணம் செய்பவர்கலுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உண்டு.  உடலில் வியர்வை அதிகம் தங்கி தோல் பாதிப்புக்கு உள்ளாவதால் ஒவ்வாமை என்ற அலர்ஜி ஏற்படும். இதனால் தோலில் அரிப்பு மற்றும் தோல் உரிந்து சிவப்பு நிறமாக காணப்படும்.  வெள்ளை சோளத்தை தினமும் உணவாக்கினால் இது போன்ற பாதிப்புக்களை தடுக்கலாம்.  இதில் போதுமான ஆண்டி ஆக்சிடென்ட் இருக்கிறது.  இதனால் வயிற்று வலி உடல் சோர்வு ஏற்படாமல் பாதுகாக்கிறது.  காலை உணவாக அடிக்கடி வெள்ளை சோளத்தை உண்டு நலமுடன் வாழ்வோம்.

தகவல் நன்றி    பா.  பரத்    சிறுவர் மலர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s