ஒரு தளிகையில்          ஒரு திவ்ய தேசம்

 

ஸ்ரீவைஷ்ணவரே!இன்று உமக்கான தளிகைஎங்கள் திருமாளிகையில்தான்!மறுக்காமல், மறக்காமல்ஆத்துக்காரியும் அழைச்சுண்டுஇன்று மதியம் எங்கள்அகத்திற்கு வாரும்!!பாகவத பிரசாதம்!மறுக்கத்தான் முடியுமா?

தன்னவளையும்தன்னுடன் அழைத்துக் கொண்டுஅழைத்தவர் வீட்டிற்குவிருந்துண்ணச் சென்றார் அந்த ஸ்ரீவைஷ்ணவர்!!நல்ல மரியாதை செய்துஇருவரையும் அமர வைத்துவிருந்துண்ணச் செய்தார்அழைத்த வைஷ்ணவர்!!

வயிறு நிரம்பியதா?ஸ்ரீவைஷ்ணவரே!மனதும் நிரம்பியது!வைஷ்ணவரே!விழுந்து விழுந்து கவனித்தஉம் பேரன்பிலே நாங்கள் விழுந்தே போனோம்!!எங்காத்துதளிகை எப்படி?

பகவானின் பிரசாதம் அது!வார்த்தைகளுக்குள் அடங்காதது!அருமை என்றஒற்றைச் சொல்லில்அதன் சுவையை நான்உணர்த்திவிட முடியாது!

கவியாகப் பாடட்டுமா?அத்தனைச் சிறப்பாய்இருந்ததா தளிகை?ஓய்! பொய்யொன்றும் இல்லையே?கவிதைக்கு பொய் அழகு!அதனை நானும் அறிந்துள்ளேன்!உம் கவியும் பொய்தானோ?அதில் பொய்யே இருக்காது!கேட்டுத்தான் பாருமே!

கண்ணமுது கோவில்!கறியமுது விண்ணகர்!அன்னமுதுவில்லிப்புத்தூர் ஆனதே!எண்ணும் சாற்றமுது மல்லை!குழம்புமது குருகூர்!பருப்பதனில்திருமலையே பார்!! அவரது திருவடிகளில்விழுந்து சேவித்தார்விருந்து  கொடுத்தவர்!எங்காத்து தளிகையில்இத்தனைத் திவ்யதேசமா?கண்களில் நீர் பனிக்கவந்தவர்களைவழியனுப்பி வைத்தார்!

அண்ணா!கோபிச்சுக்காதீங்கோ!கவி பாடும் அளவிற்காஅவாத்து தளிகை இருந்தது?நானும்தான் தினமும்எத்தனையோ செய்கிறேன்!ஒரு திவ்யதேசமும் காணோமே?அடியே மண்டு!நமக்கு நாமேபாராட்டிக் கொள்வதற்குபெயரா தாம்பத்யம்?என் சுவை நீயறிவாய்!உன் குறை நானறியேன்!அந்தப் பாட்டுக்கு உனக்குஅர்த்தம் புரியலையா?அந்த அளவுக்குஞானம் இருந்தால்உங்காத்துக்கு நான் ஏன்வாக்கப்பட போகிறேன்?

நான் மண்டுதான்!நீங்களே சொல்லுங்கோ!!கண்ணமுது கோவில்!கண்ணமுது என்றால் பாயசம்!கோவில் என்றால் ஸ்ரீரங்கம்!அரங்கன் கோயிலில் பாயசம்மண் சட்டியில்தான் வைப்பார்கள்!அதனால் பாயசம்சற்று அடிபிடிப்பது என்பது அங்கே தவிர்க்க முடியாத ஒன்று!இங்கேயும் பாயசம்அடிப்பிடித்து இருந்ததால்கண்ணமுது கோவில்!!

அப்படியா அண்ணா!அடுத்தது! அடுத்தது!!!!!கறியமுது விண்ணகர்!கறியமுது என்றால்காய்கறி வகைகள்!விண்ணகர் இருக்கும்ஒப்பில்லாத பெருமானுக்கு நைவேத்தியம் எதுவிலும்உப்பே சேர்க்க மாட்டார்கள்!இவாத்து கறியமுதிலும்இன்று உப்பில்லை!அதனால் கறியமுது விண்ணகர்!!அருமை அண்ணா!அப்புறம்… அப்புறம்…அன்னமது வில்லிபுத்தூர் ஆனதே!ரங்கமன்னாரின் கோயிலிலேஅன்னம் குழைந்தே இருக்குமாம்!இங்கேயும் சாதம்குழைந்தே இருந்ததனால்அன்னமது வில்லிபுத்தூர்!!இப்படியும் உண்டா?அடுத்தது… அடுத்தது…..சாற்றமுது மல்லை!சாற்றமுது என்றால் இரசம்!மல்லை என்றாலோ கடல்!கடல் நீரைப் போலஅவாத்து சாற்றமுதிலும்உப்பே அதிகம்!!

அண்ணா!கொஞ்சம் அதிகமாத்தான் போறீங்க!அடுத்தது என்ன?குழம்பது குருகூர்!குருகூரிலே எது பிரசித்தம்?நம் ஆழ்வான் இருந்தபுளியமரம்தானே!குருகூர் என்றாலே புளிதான்!அவாத்து குழம்பிலும்வெறும் புளிதான்!!கடைசியையும்சொல்லிவிடுங்கள்!!பருப்பதில் திருமலை!திருமலை முழுவதும் கல்தான்!அவாத்து பருப்புமுழுதும் கல்லும் இருந்ததே?அண்ணா!இப்படியா பாடிவிட்டு வருவீர்?

அர்த்தம் புரிந்தால்அவர்கள் தவறாக உம்மைஎண்ண மாட்டாரோ?அடியே!கட்டாயம் எண்ண மாட்டார்!பாகவத சேஷம் என்றுஅந்த உணவினைஅவர்கள் குடும்பம் முழுதும் இந்நேரம் உண்டிருப்பர்!அந்த உணவினில் அவர்கள்சுவைகளைக் கட்டாயம்கண்டிருக்க மாட்டார்கள்!நான் சொல்லி வந்ததிவ்ய தேசங்கள் மட்டுமேஅவர்கள் எண்ணத்தில் இருக்கும்!வெறும் சாதமல்ல அது!இந்நேரம் அதுபிரசாதமாய் மாறியிருக்கும்!!அண்ணா!என்னை மன்னித்து விடுங்கள்!ஒன்று கேட்கிறேன்!கட்டாயம் செய்வீர்களா?

கட்டாயம் செய்கிறேன்!என்ன வேண்டும் உனக்கு?நல்ல தமிழ் சொல்லித் தருகின்றஒரு ஆசான் வேண்டும்!நான் தமிழ் கற்க வேண்டும்!நாளை என் சமையலில்எந்தத் திவ்யதேசம்மறைந்து வருகிறது எனநானும் அறிய வேணடும்!!

#

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s