வாழ்வின் தூண்கள்

திசைகள் தோறும் பயணிக்க கால்களின் பயன்பாடு முக்கியம்.  வயது முதிரும் போது கால்கள் வலுவாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.  நீண்ட ஆயுளுக்கான அறிகுறிளை அமெரிக்க பத்திரிகையான பிரிவென்ஷன் நுட்பமாக பட்டியலிட்டுள்ளது.  அதில் வலுவான கால்கள் முதன்மை இடம் பெற்றுள்ளன.  ஆரோக்கிய வாழ்வுக்கு வலுவான கால்கள் முக்கியம்.

ஐரோப்பிய நாடான டென்மார்க் கோபஹேகன் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வு வித்தியாசமான முடிவை தெரிவித்துள்ளது.  அதாவது இரண்டு வாரங்கல் கால்கள் செயலற்று இருந்தால் தசை வலிமை குறைந்துவிடும்.  கடும் உடற்பயிற்சிகள் செய்தாலும் அதை மீட்டு பழைய நிலையை அடைவது கடினம்  என கண்டறியப்பட்டுள்ளது.

உடல் எடையை கால்கள்தான் தாங்குகின்றன. மனித உடலில் உள்ள எலும்பில் 50 சதவீதம் கால் பகுதியில் தான் உள்ளது.  மிகப்பெரிய வலுவான மூட்டுகளும் கால்களில் தான் உள்ளன.

உண்ணும் உணவில் கிடைக்கிஉம் ஆற்றலில் 70 சதவீதத்தை எரிக்கும் செயலை கால்களே செய்கின்றன. கலைல் மேல் பாகத்தில் இருப்பது தொடை.  ஓர் இளைஞரின் தொடை சிரிய வகை காரைத் தூக்கும் வலிமை கொண்டது.  காலைத் தாங்கும் பாதம் ஆரோக்கியமாக இருந்தால்தான் ரத்த ஓட்டம் சீராக அமையும்   வலிமையான இதயம்  நிச்சயம் அமைந்திருக்கும்  எனவே கால்களை வலுவாக பேணுங்கள்  அதற்கு 

தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும்.  மெல்லோட்ட பயிற்சியையும் தவறாது செய்யவும்.  இந்த பயிற்சிகள் வயது முதிர்வால் வரும் தொல்லைகளை குறைக்கும்.  மனம் கற்பனையுடன் பட்டாம்பூச்சி போல் சிறகடித்தபடியே இருக்கும்.  கால்களை தலையில் ஏந்தி மரியாதை செய்வோம்.

தகவல் நன்றி  சிறுவர் மலர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s