புழுவும் பட்டாம்பூச்சியும்

எண்ணம்தான் கடவுள்.  எண்ணத்தை உபாசித்தால் எண்ணியதைப் பெறலாம்  நம் லட்சியம் குறித்துத் தீவிரமாக எண்ணுவதிலும் அந்த எண்ணத்தைப் பராமரித்தி வளர்ப்பதிலும் அதை செயலாக்குவதிலும் அதற்கான கடின உழைப்பிலும் மட்டுமே நமது வெற்றி அடங்கி இருக்கிறது.  ஆம் மனம் என்ன நினைக்கிறதோ அதுவாகவே மனிதன் ஆகிறான்.  இதை அற்புதமான ஒரு கதையின் மூலம் விளக்குகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

தரையில் ஊர்ந்து செல்கிறது ஒரு புழு.  அந்தப் புழு ஆகாயத்தில் பறக்க ஆசைப்பட்டது.   கனவு காண்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா?  ஆனால் ஆச்சரியம்  அதன் ஆசை சாத்தியமானது ஒரு கூட்டைக் கட்டிக்கொனுட் உள்ளே குடியிருந்த புழு சிறிது காலத்தில் கூட்டை உடைத்துக்கொண்டு வண்ணமயமான சிறகுகளோடு பட்டாம்பூச்சியாக வெளியே பறந்து சென்றது  இது எப்படி நிகழ்ந்தது?

சுவாமி பரமஹம்சரே விளக்குகிறார்  அந்தப் புழு இரண்டு செயல்களைச் செய்தது.  ஒன்று   நான் பட்டாம்பூச்சி    நாம் பட்டாம்பூச்சி    என்று விடாமல் நினைத்துக்கொண்டே இருந்தது.   இன்னொன்று….. அந்த நினைப்பின் தீவிரத்தை வேறு எவரும் கெடுத்துவிடாமல் இருக்க தன்னைச் சுற்றி ஒரு கூட்டைக் கட்டிக்கொண்டது.    பிறகு என்ன…..  குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தான் நினைத்தபடியே வண்ணத்துப்பூச்சியாக ஆனந்தமாக விண்ணில் பறந்தது.

புழுவாக இருக்கும் நம்மில் பலரும் பட்டாம்பூச்சிகளாக மாற வேண்டாமா?  கூட்டுப்புழு தன்னைப் பட்டாம்பூச்சி என்று எப்படி விடாமல் சதா நேரமும் நினைத்துக்கொண்டு இருந்ததோ அதேபோல் நாமும் நாம் விரும்பிய துறையில் விரும்பியபடி முன்னேற முடியும் என்று ஓயாமல் நினைக்கவேண்டும்  அந்த நினைப்பை மற்றவர் தடை செய்யாத வகையில் ஒருமித்த சிந்தனையோடு அதே நினைப்பிலேயே உழைக்க வேண்டும்.  அப்போது வெற்றி நிச்சயம் தேடிவரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s