உலகை கலக்கும் சமூக வலைதளங்கள் பேஸ்புக் வாட்ஸ் அப் யுடியூப் டிவிட்டர் இவை குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.
பேஸ்புக்

உலகின் முதன்மையான வலைத்தளம் பேஸ்புக் தமிழில் முக நூல் என்பர் இதில் 15 வயதிற்கு மேற்பட்டோர் பெயரைப் பதிவு செய்து கருத்து பரிமாறலாம் நட்பு வட்டத்தை ஏற்படுத்தலாம். இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் இந்திய ஒப்பந்த சட்டப்படி இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைத்தளத்தில் உறுப்பினராக முடியாது. இது சிறார் பாதுகாப்பு கருதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முக நூலில் நாள் ஒன்றுக்கு 35 கோடி புகைப்படங்கல் அப்லோடு செய்யப்படுகின்றன. அமெரிக்கரான மார்க் சுகர்பெர்க் இந்த சமூக வலைத்தளத்தைத் துவங்கி நிர்வகிக்கிறார். இதன் தலைமையிடம் அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ளது.
வட அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகள் ஐரோப்பா ஆசியா பசிபிக் நாடுகளில் வசிப்போரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
யுடியூப்

வீடியோ என்ற காணொலி பதிவிடுவதற்கான வலைதளம் யுடியூப் அமெரிக்காவை சேர்ந்த சாத் ஹர்லே ஸ்டீவ் சென் ஜாவேத் கரிம் ஆகியோர் இணைந்து 2005 ல் துவங்கினர். கூகுள் நிருவனம் 2006ல் இதை வாங்கி நிர்வகித்து வருகிறது.
வாட்ஸ் ஆப்

உலகில் அதிகமாக விரும்பப்படும் கருத்ஹ்டுப்பரிமாற்ற தளம் வாட்ஸ் ஆப். அமெரிக்காவைச் சேர்ந்த பிரையான் ஆக்டன் ஜான் ஆகியோர் உருவாக்கினார். இப்போது பேஸ்புக் நிறுவனம் நிர்வகிக்கிறது. எழுத்துகளான செய்திகள் மட்டுமின்றி படம் புகைப்படம் ஒலிக்கோப்பு காணொலி மற்ற்ம் இருப்பிட அடையாளத்தையும் இதன் வழியாக பகிர்ந்து கொள்ளலாம்.
டிவிட்டர்

அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ நகரில் இயங்குகிறது டிவிட்டர் நிறுவனம். முக்கியமாக சமூக வலைத்தளங்களில் ஒன்று. இதில் 140 வரிகளில் குறுகிய செய்திகளை அனுப்பலாம். இது தொடர் குழு வலையமைப்புச் சேவை. இதில் பதிவு செய்யும் செய்தி டிவிட் எனப்படுகிறது. அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ நகரில் 2006ல் துவங்கப்பட்டது. ஜாக் டோர்சே நோவா கிளாஸ் பில் ஸ்டோன் இவான் வில்லியம் ஆகியோர் துவங்கினர். உலகில நாடுகளின் முக்கிய தலைவர்கள் இந்த வலைத்தளத்தில் கணக்கு துவங்கி கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.