நல்லா பேசுங்க நல்லதையே பேசுங்க

விவசாயி ஒருவரிடம் எழில் என்ற பெயரிடப்பட்ட குதிரை ஒன்று இருந்தது.  ஒரு நாள் மாலையில் அவரைத் தேடிக்கொண்டு ஒருவர் கசங்கிய ஆடையுடன் வந்தார்.  என்ன விஷயமா வந்தீங்க ……..கேட்டார் விவசாயி.   இது எனக்கு பழக்கமில்லாத பாதை   வழியில் கண்ட்ரோல் பண்ண முடியாம நான் வந்த கார் ஒரு பள்ளத்திலே விழுந்திடுச்சு.  அதை வெளியே எடுக்கணும்   உங்க கிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க………….அதைக் கொண்டு காரை வெளியே எடுக்கலாமுன்னு பக்கத்தில் சொன்னாங்க   அதான் உதவி கேட்டு வந்தேன் என்றார்.

நீங்க வந்தது பெரிய காரா……………..கேட்டார் விவசாய்.  இல்ல………….சின்ன கார் தான்யா என்றார் வந்தவர்.  கயிறு உட்பட உபகரணங்கலை எடுத்துக்கொண்டு தயாரானார் விவசாயி.  குதிரையின் கட்டை அவிழ்த்து அதைக் கையில் பிடித்தபடி நடந்தார்.   கார் விழுந்திருக்கும் பள்ளம்  அதன் நிலமை எல்லாவற்றையும் பார்த்தார்.  கார் சிறியதாகத்தான் இருந்தது.  ஆனால் அதை வெளியே எடுக்கும் போது குதிரைக்கு காயம் ஏற்படலாம் என அவருக்குத் தோன்றியது.  ஒரு கயிறை எடுத்து காரில் கட்டி குதிரையோடு இழுப்பதற்கு தோதாக பிணைத்தார்.  கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்றிருந்தார்.

பிற்கு எங்கடா பழனி ,,,,,,,,,,,,,,,,,,,, ஜோரா இழு  பார்ப்போம்  எனக் குரல் கொடுத்தார்.  குதிரை அசையாமல் நின்றிருந்தது.  பிறகு ஏண்டா  கந்தா இழுடா ராஜா என சத்தமாக சொன்னார்.  குதிரை அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை,  டேய் முருகா ……… வேகமாக இழு   மறுபடியும் உரத்த குரலில் சொன்னார்   குதிரை ஒரு அடி கூட  நகரவில்லை.   என் செல்லம்…. என் தங்கம்   ……..எழிலு நீயும் சேர்த்து இழுடா என்றார்.   அவ்வளவு தான்  குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது.   அடுத்த ஐந்து  நிமிடத்தில் கார் பள்ளத்திலிருந்து மேலே ஏறியது  நன்றி சொன்னார் வெளியூர்காரர்.

ஐயா………..நீங்க உங்க குதிரையை விதவிதமான பேரால கூப்பிட்டீங்களே அதான் ஏன்னு புரியலை.   என் எழிலுக்கு கண் தெரியாது.  இந்த கஷ்டமான வேலையை தான் மட்டும் தான் செய்யப்போறோம்ன்னு அது நினச்சுக்கக்கூடாது இல்லையா?  அதான் அது கூட இன்னும் மூணு குதிரைகள் இருக்கிறதா நம்ப வெச்சேன்.  அதற்கும் நம்பிக்கை வந்துடுச்சு.  சரசரவென காரை இழுத்துடுச்சு   அன்பான வார்த்தைகளை சொல்லுவதற்கு காசு பணம் தேவையில்ல   ஆனால் அவை நமக்கு சம்பாதிச்சு கொடுப்பதோ ஏராளம்     

தத்துவ மேதை பாஸ்கல்  வார்த்தைகளின் மகிமையோ அபாரமானது.    நல்ல நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும் போது கடுஞ்சொற்களை ஏன் பேச வேண்டும்  எனக் கூறியுள்ளார்.  இதையே திருவள்ளுவரும் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்கிறார்.  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s